1987ல் ஆலிவர் ஸ்டோன் இயக்கத்தில் வெளியான "வால் ஸ்ட்ரீட்",மைக்கேல் டக்ளஸின் நடிப்புக்குத் தீனி போடும் விதமாய் அமைந்தது.பங்கு வர்த்தகம் பற்றிய ஆவணங்களில் இந்தப் படத்திற்கென்று ஒரு முக்கியமான இடத்தையும் பிடித்துள்ளது."எல்லோரும் பேராசைப்படுங்கள்" என்னும் அர்த்தம் தொனிக்கும் வசனக் காட்சி மிகவும் பிரபலமான ஒன்று.
கார்டன் கெக்கோவாக மைக்கேல் டக்ளஸ் திரும்பவும் வருகிறாராமே???
Gordon Gekko:
The new law of evolution in corporate America seems to be survival of the unfittest. Well, in my book you either do it right or you get eliminated. In the last seven deals that I've been involved with, there were 2.5 million stockholders who have made a pretax profit of 12 billion dollars. Thank you.
I am not a destroyer of companies. I am a liberator of them! The point is, ladies and gentleman, that greed, for lack of a better word, is good. Greed is right, greed works. Greed clarifies, cuts through, and captures the essence of the evolutionary spirit. Greed, in all of its forms; greed for life, for money, for love, knowledge has marked the upward surge of mankind. And greed, you mark my words, will not only save Teldar Paper, but that other malfunctioning corporation called the USA. Thank you very much.
PS:-காளையின் முரட்டு ஓட்டத்தினால் பில் கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகின் பணக்காரர்கள் வரிசையில் முதலாம் இடத்தைப் பிடித்த முகேஷ் அம்பானிக்கு வாழ்த்துகள்.
30 October 2007
[+/-] |
காசேதான் கடவுளடா... |
28 October 2007
[+/-] |
ஒரு கிழட்டுச் சிங்கத்தின் கர்ஜனை |
1993ல் வெளியான "A few good men"ல் இருந்து,எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காட்சி ஒன்று.
ஜேக் நிக்கல்சன் என்னுமொரு மகாநடிகனின் திறமைக்கு ஒரு பருக்கை உதாரணம்.
Col. Nathan R. Jessep: You want answers?!
Lt. Daniel Kaffee: I want the truth!
Col. Nathan R. Jessep: You can't handle the truth! Son, we live in a world that has walls, and those walls have to be guarded by men with guns. Who's gonna do it? You?! You, Lieutenant Weinberg?! I have a greater responsibility than you can possibly fathom. You weep for Santiago and you curse the Marines. You have that luxury. You have the luxury of not knowing what I know: that Santiago's death, while tragic, probably saved lives. And my existence, while grotesque and incomprehensible to you, saves lives! You don't want the truth because deep down in places you don't talk about at parties, you want me on that wall! You need me on that wall! We use words like honor, code, loyalty. We use these words as the backbone of a life spent defending something. You use them as a punchline! I have neither the time nor the inclination to explain myself to a man who rises and sleeps under the blanket of the very freedom that I provide, and then questions the manner in which I provide it! I would rather you just said, "Thank you," and went on your way. Otherwise, I suggest you pick up a weapon and stand a post. Either way, I don't give a damn what you think you are entitled to!
Lt. Daniel Kaffee: Did you order the Code Red?
Col. Nathan R. Jessep: I did the job I was sent to do--
Lt. Daniel Kaffee: Did you order the Code Red?!
Col. Nathan R. Jessep: YOU'RE GODDAMN RIGHT I DID!!!
24 October 2007
[+/-] |
சுப்பு & ருக்கு - 3 |
சுப்பு & ருக்கு - பாகம் 1
சுப்பு & ருக்கு - பாகம் 2
சுப்பு: நோ..ருக்கு...நான் பாத்ரூம் போயிட்டு வர்ரதுக்குள்ளே டி.வி. சானலை மாத்தாட்டி என்ன?(சே..இந்த S.S.Music வர்ர ஃபிகர்களைப் பார்க்கலாம்னா விட மாட்டாளே..சிவ பூஜையில டில்லி எருமை புகுந்த மாதிரி)
ருக்கு:ஆமாம்.எப்போ பார்த்தாலும் சினிமா,சினிமா,சினிமா.நான் இப்போ CNN-IBN "Face the Nation"பார்த்திட்டு இருக்கேன்.என்னைத் தொந்தரவு பண்ணாதே.ஆஹா..ரேணுகா சௌத்ரி என்னமா வெளுத்து வாங்கீட்டு இருக்காங்க.அசப்பிலே பார்க்க எங்க சாரதா சித்தி மாதிரியே இருக்காங்க.அவங்க கட்டியிருக்கிற மாதிரி ஒரு செட்டிநாடு காட்டன் சாரீ எங்க அம்மாவுக்கு தீபாவளிக்கு வாங்கித் தரணும்.இதெல்லாம் நீ எங்க பார்க்கப் போறே..
சுப்பு:இந்த டாக் ஷோவெல்லாம் சுத்த பேத்தல்.எல்லாமே ஒரு செட் அப் தான்.இவங்க இந்த ஷோவில பிச்சு உதறுனா அடுத்த ஷோவில இவங்களோட எதிர் கட்சி பிச்சு உதறும். எல்லாமே டி.ஆர்.பி.ரேட்டிங்கை ஏத்த மீடியா செய்யும் நாடகம் தான். உன்னை மாதிரிக் கொஞ்சம் பேரு இருக்கறவரைக்கும் இவங்க காட்டில மழை தான்.
நல்ல வேளை,இவர்களது பிரச்சினையைத் தீர்க்கும் விதமாக மின்சாரம் நின்றிவிடுகிறது...
ருக்கு:அடச்சே..மழைக் காலம் வந்தாலும் வந்தது.இந்த எலக்ட்ரிசிட்டி பாடு பெரும் பாடா இருக்கு.சுப்பு...அப்படியே கிச்சன் பக்கம் போய் ரெண்டு மெழுகுவர்த்தி எடுத்துட்டு வாயேன்.வரும் போது பாலை எடுத்து ஃபிரிஜ்ஜுக்குள்ள வச்சிட்டு எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தன்ணி எடுத்திட்டு வா...
சுப்பு:(அடச்சே.மனுஷியா..இவ...)அவ்வளவு தானா?? இல்லை இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா??
முணுமுணுத்துக் கொண்டே சுப்பு எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டுத் தண்ணீர் கொண்டு வந்து தருகிறான்..
ருக்கு:..உண்மையைச் சொல்லு சுப்பு.உன்னோட ஆர்குட் ப்ரொஃபைல்ல எனக்குத் தெரியாத ரெண்டு மூணு பொண்ணுங்க லிஸ்டில இருக்காங்களே?? யாரு அவங்க???
சுப்பு:(அடப்பாவி..இது எப்பப் பார்த்தா??)அது வந்து ருக்கு.ஜீஜீ எங்க பிசினெஸ் யூனிட்டில புதுசா டிராவல் டிபார்ட்மெண்ட் இன்சார்ஜா போன வாரத்திலெ இருந்து வந்திருக்கா.மத்த ரெண்டு பொண்ணுங்களையும் போன வாரம் கொங்கு எக்ஸ்பிரசில மீட் செஞ்சேன்.அவங்க ஆறு மாசமா இங்க தான் காலேஜ் ப்ரோஜெக்ட் செஞ்சிட்டு இருக்காங்களாம்.
ருக்கு:ஹூம்..சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகலை.அதுக்குள்ளே ஆர்குட்டில இருக்கிற ஃப்ரண்ட்ஸ் லிஸ்டில வந்திட்டாளா அந்த ஜீஜீ??ஆமா உன்னோட டீம்ல பல வருஷமா இருக்கிற குள்ள வாத்து கருப்பி,ஒத்தைக் கண்ணு !@#! இவங்க எல்லாம் எப்படி உன்னோட ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டில வராமப் போனாங்க??
சுப்பு:(அடப்பாவி..என்னோட ஆர்குட் லிஸ்டைப் பார்க்கறதைத் தவிர இவளுக்கு வேற வேலையே இல்லையோ?? ஆனாலும் "சமீபத்தில் பார்வையிட்டவர்கள்"லிஸ்டில இவ பேர் வரவே இல்லையே..எப்படி??)அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை ருக்கு.அப்படிப் பார்த்தா என்னோட ஆல்டர் ஈகோ கோந்து,நம்ம விக்கி இவங்க எல்லாம் கூட என்னோட ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டில இல்லை.ஏன் நீ கூட என்னோட ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டில இல்லையே?? (அப்பாடா எஸ்கேப் ஆகிட்டேன்..)
ருக்கு:ஹூம்..அது சரி...உன்னோட டேமேஜர் புளிமூட்டை ராமசாமி என்ன செஞ்சிருக்கு தெரியுமா??இன்னைக்கு மத்தியானம் என்னோட ஆர்குட் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டில சேர்த்துக்கச் சொல்லி மெயில் அனுப்புச்சு..சே..என்ன மனுஷனோ...அந்த ஆளை மாதிரி ஒரு டகால்ட்டியை நான் பார்த்ததே கிடையாது.அவனோட ஆர்குட் ப்ரொஃபைல்ல என்னமாப் புளுகி வச்சிருக்கான்.பிடிச்ச படங்க லிஸ்டில போட்டிருக்கிற ஒரு படமாவது இவன் பார்த்திருப்பானா?என்னைக்காவது மெக்ஸிக்கன் சாப்பாடு டேஸ்ட் செஞ்சிருப்பானா?? இந்த லட்சணத்தில உங்க டீம் தண்டத் தீவட்டிக அவனுக்கு டெஸ்டிமோனியல் குடுத்திருக்கறானுங்க.நீ மட்டும் அவனோட டெஸ்டிமோனியல் எழுதியிருந்தியோ,செத்தே போயிருப்பே..
சுப்பு:(அப்பாடா..வண்டி ட்ராக் மாறிடுச்சு..)அந்த ஆள் கிடக்கறான் விட்டுத் தள்ளும்மா.டீம் மீட்டிங் நடந்திட்டு இருக்கும் போதே ஆர்குட்டில தான் மேஞ்சிட்டு இருப்பான்.யாரோட லிஸ்டில யார் இருக்காங்கன்னு அவனைக் கேட்டாலே போதும்.அப்பாடா..ஒரு வழியாக் கரண்ட் வந்திடுச்சு.ருக்கு..ரிமோட் உங்கிட்டே தானே இருக்கு.அந்த டீவியைக் கொஞ்சம் ஆன் பண்ணேன் ப்ளீஸ்?? கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்.
ருக்கு:குட்..வெரி குட்.ஐ லைக் தட்...கரண்ட் வந்தாப் போதும் உடனே நான் பேசறத நிறுத்திட்டு நீ சொல்லறதைக் கேட்டுக்கிட்டு நல்ல பிள்ளை மாதிரி டீ.வி.பார்க்க ஆரம்பிச்சுடணும் இல்லே??.நீ திருந்தவே மாட்டியா,சுப்பு???
சுப்பு:அய்யோ...தெய்வமே...மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா???
-தொடரலாம்
09 October 2007
[+/-] |
தேடிக் கிடைத்த புதையல்கள் - 2 |
இதுக்கு முன்னமே நான் கண்டெடுத்த புதையல்களை இங்கே போய் வாசிக்கவும்.
"தில்லானா மோகனாம்பாள்" படத்தில பப்பியம்மாவோட நாட்டியக்குழுவில முட்டைக் கண்களோட இருக்கும் அவரைப் பார்த்ததுமே எனக்குப் பிடிச்சிப் போச்சு.அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சு "சாது மிரண்டால்" அப்படின்னு ஒரு படத்தை ஒரு ஞாயிற்றுக்கிழமையில பார்த்ததும் அட இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு தாத்தா கிட்ட கேட்டேன்.அவர் பேரு டி.ஆர்.ராமச்சந்திரன்னு தாத்தா சொல்லித்தான் ரியவந்தது.வாழ்க்கை,சபாபதி,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,அடுத்த வீட்டுப்பெண்..அட...அட...ஒவ்வொரு படமும் ஒரு ரத்தினம் தான்எனக்குப் பிடித்த நடிகர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடிக்க இவருக்கும் ஜேக் நிக்கல்சனுக்கும் ரொம்ப நாளா சண்டை நடந்துட்டு இருக்கு.ஏ.வி.எம்மின் தயாரிப்பில் வந்த வாழ்க்கை திரைப்படம் தான் வைஜயந்திமாலா அவர்களின் முதல் படம்.அதில் எழுத்தாளர் அசோகன்(எ)நாதன் என்னும் ஒரு கதாபாத்திரத்தில் நம்ம சார்வாள் நடிச்சிருப்பார்.இதில் வரும் "உன் கண் உன்னை ஏமாற்றினால்" என்னும் பாட்டு தான் நான் சமீபத்தில் தேடிக் கிடைத்த புதையல்களில் முதல் மாணிக்கம்.ஒரு அற்புதமான துள்ளல் பாடல்.
மக்களே... ரொம்ப வருஷமா சபாபதி,வாழ்க்கை படங்களோட டி.வி.டி அல்லது வி.சி.டி. தேடிக்கிட்டி இருக்கோம்.எங்கே கிடைக்கும்னு யாராவது சொல்லமுடியுமா?
|
என்னது "அழகிய தமிழ் மகன்" படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில பொன்மகள் வந்தால் பாடலை ரீ-மிக்ஸ் செஞ்சிட்டு இருக்காங்களா? இதத்தான் நம்ம இசை வசந்தம் பதினைஞ்சு,இருவது வருசத்துக்கு முன்னமேயே செஞ்சுட்டாரே.முதல்வசந்தத்தில் சிக்ஸர் அடிச்ச விக்ரமன் க்ளீன் போல்டான படம் பெரும்புள்ளி.அந்தப் படத்துக்காக கே.ஜே.யேசுதாஸின் குரலில் இந்தப் பாடலை ரீ-மிக்ஸ் செஞ்சு கொடுத்தாரு நம்ம ராசகுமாரு அய்யா.இதுவும் சமீபத்தில நான் இணையத்தில் தேடி எடுத்த புதையல்.
|
படத்தோட பேரைக் கேட்ட உடனே ஏதோ நல்ல சண்டைக் காட்சிகள் நிறைந்த படம்னு பார்க்க ஆரம்பிச்சோம்.ஆனா படமோட காலங் காலமா நம்ம கிராமங்களில் இருந்து வரும் ஆண்டான் அடிமைப் பிரச்சினையை அடிப்படையா வந்த படம்.அந்த வயசில அந்தப் படம் ஈர்க்காமப் போனதென்னமோ உண்மை தான்.ஆனா இந்தப் படத்தில வரும் இந்தப் பாடல் என்னைக் கட்டிப்போட்டிடுச்சு.இளையராசாவின் அதிரடி இசையில் கே.ஜே.யேசுதாஸின் குரலில் வரும் அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் நரம்பில் ஒரு உத்வேகம் பிறக்கும்.அதுக்குப் பொறவால நெறையக் கட்சிக் கூட்டங்களில் மட்டுமே கேட்கக் கிடைத்த இப்பாடலை சமீபத்தில் இணையத்தில் கண்டெடுத்தேன்.கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்திலிருந்து வருகிறது அந்தப் பாடல்.
|
03 September 2007
[+/-] |
Best of கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி |
1)சதிலீலாவதியில் இடம் பெற்ற "மாருகோ மாருகோ" பாடலானது இளையராஜா இசையில் வெளிவந்த 9 படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பாடல்களின் மெட்லீ ஆகும்.எங்கே அந்தப் பாடல்களையும்,அவை இடம் பெற்ற படங்களையும் கூறுங்கள் பார்ப்போம்?
2)இந்த அறுவர் கூட்டணி யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
3)ஆர்.கே.நாராயணனது ஆஸ்தான கதைக்களமான மால்குடியின் மூன்று முக்கிய லேண்ட்மார்க்குகளைக் குறிப்பிடவும்.
4)ஏப்ரல் 1999 - அப்போது பிரபல மாடலாக இருந்த சரிதாவைக் கை பிடிக்க ட்ராக்சூட் அணிந்து கொண்டு, லான்ட்க்ரூஸரில் சர்ச்சிற்குச் சென்றது இன்னமும் நினைவில் இருக்கிறது.நான் நடத்தும் உணவகத்தின் பெயர் "கர்ரி லீவ்ஸ்".எனது பழைய பொழுதுபோக்கு கிரிக்கெட் விளையாடுவது தான்.இப்போது சொல்லுங்கள்,நான் யார்?
5)டில்பெர்ட் நகைச்சுவைத் துணுக்குகளில் கொடூரமாகச் சித்தரிக்கப்படும் மனித வள மேம்பாட்டு(HR) இயக்குனரின் பெயர் என்ன?
எல்லோருக்கும் பிடித்த "எ.ப?எ.பா?"
1)நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா?
வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றிக்கொடி கட்டுங்கள்...
2)இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய், ஒதுக்கீடு கேட்கிறாய்
3)ஏரிக்கரையில் ஜோடிப் பறவைகள் எல்லா அழகும் ஆனந்தம்
ஆடும் கடலினில் ஓடும் படகுகள் அதிலே உலகம் ஆரம்பம்
4)புதுவெள்ளம் சேரும்போது வழியென்ன பாதை என்ன?
புதுக்காத்து வீசுறபோது திசை என்ன தேசம் என்ன?
மனசுக்கு தாள் போட்டு
நீ போ மயிலே, வேணாம் வெளையாட்டு
5)தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
பூமியிலே வெகு சமீபத்தில் தனது காலடித் தடம் பதித்த ஜூனியர் அத்யாபக்கிற்கும்,"எனக்கொரு மகன் பிறந்தான்" என்று பாடிப் பெருங்களிப்பில் ஆழ்ந்துள்ள சீனியர் அத்யாபக்கிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்....(பத்த வச்சிட்டியே பரட்டை....)
21 August 2007
[+/-] |
சென்னை குறித்த சில கேள்விகள் |
வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு நாளை பிறந்த நாளாம்.இருந்தது என்னமோ இருபது மாதங்கள் என்றாலும்,சென்னை மீதான காதல் இன்னும் குறையவில்லை.
ஹூம் என்று என்னைப் போலவே பெருமூச்சு விடும் புண்ணியவான்களே அப்படியே என்னுடைய கேள்விகளுக்குப் பதிலையும் தாருங்களேன்.....
1.கீழ்க்கண்ட இடங்களது பெயர்களை விரிவு படுத்தவும்.
Ex:T.நகர் - தியாகராய நகர்
G.N.செட்டி தெரு -
K.K.நகர் -
T.T.K.சாலை -
2.சென்னையின் புறநகர்ப் பகுதியிலுள்ள இந்தக் கட்டிடம் கட்டுமானத்தில் பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளது.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தங்களது கட்டுமானத்திறமையை வெளிப்படுத்தவே அந்தக் கட்டிடத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் அந்தக் கட்டிடத்தைக் கட்டியதாம்.
3.பொருத்துக.
வானவில் FM - 98.3
அண்ணா பல்கலை FM - 92.7
பிக் FM - 101.4
ஆஹா FM - 90.4
ரேடியோ மிர்ச்சி FM - 91.9
4.கோடம்பாக்கத்திற்கும்,பல்லாவரத்திற்க்கும் இடைப்பட்ட தொடர்வண்டி நிலையங்களைக் கூறுக.
5.கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றைப் பிரிக்கவும்.
ராசி சில்க் எம்போரியம்
சென்னை சில்க்ஸ்
குமரன் சில்க்ஸ்
நல்லி 100
6.சென்னைத் தமிழைத் திரையில் பாடிப் பிரபலமாக்கிய பாடல்கள் மூன்று சொல்லவும்.
7.மேற்கு மாம்பலம் இருப்பதைப் போலவே கிழக்கு மாம்பலம் என்று ஒன்று உண்டா?
8.தி.நகர் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பெரியார் சிலைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.அது என்ன?
9.சுப்பு சென்னைக்கு வருவது அது தான் முதல் முறை.சுப்பு இருப்பதோ தி.நகர் மேன்ஷனில்.சுப்புவின் தோழி ருக்கு இருப்பதோ ஈக்காடுதாங்கலில்.ருக்குவைப் பார்க்க ஆட்டோவில் செல்லும் சுப்புவை ஆட்டோ ஓட்டுநர்கள் ஊர் சுற்றிக் காண்பித்து ஏமாற்றாமல் இருக்குமாறு அவனுக்கான ரூட் மேப்பினைத் தந்து உதவமுடியுமா?
10.மகாத்மா காந்தி எத்தனை முறை சென்னை வந்திருக்கிறார்?
13 August 2007
[+/-] |
புரட்டாசி விரதங்கள் |
"அம்மா,இன்னும் எத்தனை நாள் பாக்கி இருக்குதும்மா..?" கணேசு இந்தக் கேள்வியைக் காலையில இருந்து அஞ்சு வாட்டி கேட்டுட்டான்.
"கண்ணூ.பொரட்டாசி முடிய இன்னும் ஒம்போது நாள் பாக்கி இருக்கு.அய்யன்,மில்லு விட்டு வார நேரம் ஆச்சு.வெரசலா ராமாத்தக்கா கடைக்குப் போயி மைலா மாவு கால் கிலோவும்,தீப்பெட்டி ஒண்ணும் வாங்கியா.இந்தா நாலு ரூவா..."
"ஐய்யா..ராத்திரிக்கு சாப்பிட மைலா தோசையா???....டுர்...டுர்ர்..."
ஹூம்...கணேசைப் பார்த்தீங்கன்னா இந்தப் பையன் அஞ்சாம்பு படிக்கறானான்னு கேப்பீங்க.கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாத குறையா வீட்டுக்காரர் வாங்கற சம்பளம் முச்சூடும் வாங்குன கடனோட வட்டிக்கே போயிடுது.ஏதோ நானும் கூலி வேலைக்குப் போயிட்டு இருக்கிறதால் அரை வயித்துக் கஞ்சியாவது குடிக்க முடியுது.கருவேப்பிலக் கொத்து மாதிரி இருக்கிற ஒத்தைப் பையனுக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப் போட முடியலயேன்னு நெனச்சா,நெம்பக் கஷ்டமாத்தான் இருக்கு.
அதுவும் இந்த சனி,ஞாயிறு ஸ்கூலு லீவு விடறதை நெனச்சாலே கவலை கொஞ்சம் கூடச் சேர்ந்துக்கும்.ஸ்கூல் இருக்கிற நாளுன்னாக் கூட மதியானம் ஒரு வேளையாச்சும் வயிறார சாப்பிட சத்துணவு கிடைக்கும்.
"தேனு..தேனு...வூட்டில யாரும் இல்லையா??"
"அட..பாப்பாத்தியக்கா..வாங்க..வாங்க. இப்படி பாயில.உக்காருங்க"
"தேனு.எனக்கு உட்கார்ந்து,நாயம் பேசறதுக்கெல்லாம் நேரமில்லை.நம்ம பிரசிடெண்டம்மாவோட கச்சி, டவுனுல ஒரு பேரணி நடத்துறாங்க.காலைல டிஃபனு,மத்தியானம் சிக்கன் பிரியாணி,கட்சி பார்டர் போட்ட புது சேலையோட தலைக்கு 200 ரூபாய் தாராங்களாம்.எப்பயும் போல நீயும் வந்திடு...காலைல ஏழு மணிக்கு வீட்டுக்கே வேன் வந்திடும்.சாயங்காலம் வீட்டுக்கே கொண்டு வந்து விட்டுடுவாங்க.நீ போன மாசம் என் கிட்ட வாங்கின கைமாத்துக்கு அந்த 200 ரூபாயக் கழிச்சுக்கறேன்.அடியே..இது மகளிர் அணி நடத்துற பேரணியாம்.பொம்பளையாளுக மட்டும் தான் வரணும்..ஞாபகத்தில வச்சிக்கோ..."
"சரீக்கா.அப்புறம் வந்து... இந்தக் கூட்டம் ஐப்பசி மாசம் தான நடக்குது? பொரட்டாசி மாசம் நாங்க கவிச்சி சாப்பிடக் கூடாது.அதனால தான் கேக்கறேன்"
"இத பார்ரா...சாப்பாட்டுக்கே தாளம் போட்டுட்டு இருக்கீங்க,இதுல பொரட்டாசியும்,ஐப்பசியும் பார்த்தா முடியுமாடீ??? அட..உடனே மூஞ்சிய சிறுசா வச்சிக்கணுமா.ஐப்பசி மாசம் தான் பேரணி.இன்னும் கொஞ்சம் பேரைப் பார்க்கோணும்.நான் கெளம்பறேன்.அடுத்த சனிக்கிழமை வாரேன்."
பாப்பாத்தியக்கா எப்பவுமே இப்படித்தான்.லொட லொடன்னு பேசும்.அவங்க சொன்னதிலயும் நியாயம் இருக்குது.இங்க நல்ல சாப்பாட்டுக்கே வழியில்லை.இதுல போயி புரட்டாசி,ஐப்பசின்னு பார்த்துட்டு இருக்கிறோம்."இந்த மாசம் சத்துணவுல போடற முட்டை கூட சாப்பிடக் கூடாதாப்பா?" அப்படின்னு கணேசு கேட்ட கேள்விக்கு இன்னும் அவுங்க அய்யன் கிட்ட இருந்து பதில் ஒண்ணும் வரல்லை.மூணுவேளை வயிறார சாப்பிட்ட காலத்தில ஆரம்பிச்ச வழக்கத்தை இன்னும் கட்டீட்டு அழுகறதில என்ன பிரயோசனம்னு எனக்குத் தெரியலை.மொதல்ல மனுசன் வயித்துக்கு சோறு வேணும்.அப்புறம் தான் நாமம் போடற சாமியும்,பட்டை போடற சாமியும்....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்படி,இப்படின்னு எப்படியோ பல்லைக் கடிச்சிக்கிட்டு புரட்டாசி மாசம் ஓடிப்போச்சு.இன்னைக்குக் கச்சிக் கூட்டமும் முடிஞ்சி போச்சு.என்னமோ முப்பத்து மூணு சதவாதம்னு கத்தச் சொன்னாங்க.வாங்குன காசுக்கு சத்தம் போட்டுட்டு பிரியாணியோட வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன்.சிக்கன் பிரியாணி எப்படி இருக்கும்மான்னு கணேசு இருவது வாட்டியாவது கேட்டிருப்பான்.இன்னைக்கு அவனுக்கு ஸ்கூல்ல முட்டை வேற தரப்போறாங்களாம்.கணேசோட அப்பத்தா வேற இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துக்கிட்டு கிடக்கு.தீவாளி நோம்பிக்குள்ள போயி சேர்ந்திடுச்சுன்னா,நல்லாத் தான் இருக்கும்.இல்லைன்னா பட்டாசு,புதுத்துணின்னு ஊறப்பட்ட செலவு இருக்கே...
"தேனு..ஊட்டுக்குப் பக்கம் வந்திட்டோம்.இதுக்கு மேலே வேன் போகாதாம்.இங்கேயே இறங்கிக்குவோம்"
சீக்கிரம் வீட்டுக்குப் போயிடணும்.எப்போ செஞ்ச பிரியாணியோ கெட்டுப் போயிடுச்சுன்னா?? பாவம் கணேசு...வீடு வந்திடுச்சி...இதோ கணேசோட அய்யனே இருக்காக.
"கூட்டம் எல்லாம் முடிஞ்சுதா??தேனு..உன் கிட்ட ஒரு விசயம் கேக்கணும்.ஆத்தாவுக்கு பிரியாணி சாப்பிடணும் போல இருக்காம்.வள்ளியாத்தா கிட்ட சொல்லியிருக்கு.நீ கொண்டு வந்த அந்தப் பிரியாணியை ஆத்தாவுக்குக் கொடுத்திடலாம்.படுக்கையில கெடக்கிற கிழவிக்குக் கொடுத்தா புண்ணியமாவது வரும்.கணேசுக்கு நான் சனிக்கெழமை கொத்து புரோட்டா வாங்கியாந்துடறேன்."
இதுக்கு மேல நான் என்ன சொல்ல முடியும்??ஹூம்ம்ம்..அய்யோ கணேசு கேட்டா என்ன பதில் சொல்வேன்??
"டுர்..டுர்..டுர்ர்..பீம்..பீம்ம்."
"அம்மா..எப்பம்மா வந்தே??உன் கிட்ட ஒரு விசயம் சொல்லணும்.இன்னைக்கு சத்துணவில எங்களுக்கு ரெண்டு முட்டை கொடுத்தாங்க.என் கூடப் படிக்கிற மயில்சாமியோட அக்காவுக்கு ஒடம்பு குணம் ஆகணும்னா முட்டை நெறைய சாப்பிடணும்னு டாக்டர் சொன்னாராம்.அதனால என்னோட ரெண்டு முட்டையையும் அவன் கிட்டே கொடுத்து அனுப்பிட்டேன்..அவனுக்கு ரொம்ப சந்தோசமாப் போச்சு.எனக்கும் சந்தோசமா இருக்கு.இப்போ எனக்குப் பசியே இல்லை.பிரியாணி கூட வேணாம்"
09 August 2007
[+/-] |
The Shawshank Redemption |
சிறைச்சாலை என்னும் ஒரு இடத்தைப் பற்றிய எனது முதல் நினைவு இன்னும் பசுமையாகவே இருக்கிறது.மிசா காலத்தில் கைதாகி சிறையில் என் மாமா இருந்த பிரதாபங்களைச் சிறு வயதில் கேட்டு,என்னை அங்கே கூட்டிப்போனால் தான் ஆச்சு என்று அழத் தொடங்கிவிட்டேனாம்.அதற்குப் பிறகு கவிதா தியேட்டரில் மேட்னி ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு அருகில் உள்ள மத்தியசிறையை அப்பா காண்பித்தது இன்னும் கண்ணிலேயே நிற்கிறது.கைதி கண்ணாயிரம்,உதய கீதம் மாதிரியான படங்களைப் பார்த்து வெளியே இருக்கிறதை விட உள்ளே இருக்கிற வாழ்க்கை நல்லா தான் இருக்கும் போல;அப்புறம் ஏன் உள்ளே போகறதுக்கு எல்லாரும் இவ்வளவு வருத்தப்படறாங்க என்று நினைத்ததுண்டு.மகாநதியைப் பார்த்த பின்புதான் ஜெயிலுக்குள் இருக்கும் இன்னொரு உலகம் கொஞ்சம் கொஞ்சம் பிடிபடத் துவங்கியது.
ஏறத்தாழ அதே காலகட்டத்தில் வெளிவந்த ஹாலிவுட் படம் தான் "ஷாஷங்க் ரிடெம்ப்ட்ஷன்".டிம் ராபின்ஸ்,மார்கன் ஃப்ரீமேன் நடிப்பில் ஃப்ராங்க் டரோபண்ட் என்னும் இயக்குநரின் இயக்கத்தில் 1994ல் வெளியானது இந்தப் படம்.நிறைய உரையாடல்கள் உள்ள படம்.கதாநாயகி கிடையாது.காதல் காட்சிகள் கிடையாது.எல்லா காட்சிகளும்,படு யதார்த்தமாய் கவிதை மாதிரி செதுக்கியிருக்கிறார்கள்.இந்த படம் முழுவதும் ஷாஷங்க் என்னும் பெயர் போன ஒரு சிறைச்சாலையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே ஆகும்.
ஷாஷங்க் சிறை கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனது.கைதிகள் யாராவது வாயைத் திறந்தால் என்ன நடக்கும் என்பதை உங்களது கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.மனைவியையும்,அவளது கள்ளக் காதலனையும் சுட்டு விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குள் வரும் வங்கி அதிகாரி,ஆண்டியாக டிம் ராபின்ஸ்.அதே சிறைக்குள்,இருபது வருடங்களாக வாழ்ந்து,சிறைக்குள் எந்தப் பொருளையும் கொண்டு வருவதற்கு சக்தி படைத்த குற்றவாளி,ரெட்டாக மார்கன் ஃப்ரீமேன்.இந்த இரு முக்கியமான கதாபாத்திரங்களையும் வைத்துதான் கதை பின்னப்பட்டிருக்கிறது.
உலகில் நம்பிக்கையை விட மேலான விஷயம் ஒன்றுமில்லை.இதனை மையமாகக் கொண்டு சம்பவங்களால் கதை நகருகிறது.பல திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் இருப்பதால் மேற்கொண்டு கதையை விவரிக்க இயலவில்லல.
எனக்குப் பிடித்த காட்சிகள்:
1)குற்றவாளிகள் கடினமான வேலை செய்ய வைக்கப்படும் போது,தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆண்டி பீர் வாங்கிக் கொடுத்தல்.
2)உள்ளேயே நீண்ட காலம் இருந்ததால்,விடுதலை ஆன பின்னரும் இந்த உலகில் வாழ முடியாமல் ப்ரூக்ஸ் எடுக்கும் முடிவு
3)பல வருடங்களாக விடாமல் அனுப்பபடும் ஆண்டியின் மனுக்களின் பலனாக சிறைச்சாலை நூலகத்துக்கு அரசாங்கத்திடமிருந்து மானியம் கிடைக்கும் காட்சி
4)"முதலில் இந்த சிறைச்சாலையை வெறுப்போம்.பிறகு அதற்கு பழகிக் கொள்வோம்.கொஞ்ச நாளில் அதைச் சார்ந்து வாழ ஆரம்பித்து விடுவோம்" என்பதாய்ச் செல்லும் ரெட்டின் சொல்லாடல்
5)ரெட்டுக்கு பாரோல் கிடைப்பதற்கு முன்னால் நடக்கும் நேர்காணல் காட்சி.
உங்களையும் அறியாமல் ஒன்றிப் போய்விடும் சுவாரசியமான அனுபவத்தைப் பெற வேண்டுமானால் கட்டாயம் பாருங்கள்.
07 August 2007
[+/-] |
ஸ்டீவ் ஜாப்ஸூக்கே போலியாம்??? |
எந்த ஒரு புதிய விஷயம் வந்தாலும் அதன் விதிமுறைகளை மீறிச் செயல்பட முயற்சிப்பது என்பது தொன்று தொட்டு மனித குலத்தில் இருந்து வரும் ஒரு பழக்கம்.இணையம் கொடுத்திருக்கும் சுதந்திரம் கட்டற்றது.இணையத்திலும் இந்தமாதிரி விதிமுறைகள் மீறப்படுதல் வெவ்வேறு பெயர்களில்,வெவ்வேறு இலக்குகளை முன்னிறுத்தி நடந்து வருகிறது.
The Secret Diary of Steve Jobs என்னும் ஒரு பதிவானது ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸே எழுதுவது போன்ற ஒரு மாயையுடன் பல நாட்களாக நடத்தப்பட்டு வந்தது.தொழில்நுட்பம் சார்ந்த வாசகர்களால் ஆவலுடன் படிக்கப்பட்டு வருகிறது.அந்தப் பதிவுக்குச் சொந்தக்காரர் ஸ்டீவ் இல்லை;வணிகப் பத்திரிக்கையான ஃபோர்ப்ஸின் மூத்த எடிட்டரான டேனியல் ல்யான்ஸ் தான் அந்தப் பதிவின் சொந்தக்காரர் என்று நியூயார்க் டைம்ஸ் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறது.
லேரி எல்லிசன்,பில் கேட்ஸ்,எரிக் ஷ்மிட் போன்ற பல்வேறு தொழில்நுட்பப் பெருந்தலைகளை இந்தப் பதிவில் நையாண்டி செய்திருக்கிறார் டேனியல்.இந்தப் பதிவுக்கு உண்மையான ஸ்டீவ் ஜாப்ஸ்,பில் கேட்ஸ் போன்றவர்கள் நீண்ட நாளைய வாசகர்களாம்.
விரிவான செய்திக்கு இங்கே செல்லவும்.
05 August 2007
[+/-] |
சுப்பு & ருக்கு - 2 |
சுப்பு & ருக்கு -1 படிக்க
சுப்புவுக்கும்,ருக்குவுக்கும் திருமணம் ஆவதற்கு முந்தைய காலகட்டம்.சுப்பு,ருக்குவுடன் ஒரே கல்லூரியில் படித்த ஜிக்குவின்(ருக்குவின் மாமா பெண்)திருமணத்திற்கு சுப்புவும் வந்திருக்கிறான்..
ருக்கு:சுப்பு.இவங்க என்னோட மாமா.ஜிக்குவோட பெரியப்பா.மாமா இது எங்க கிளாஸ் மேட் சுப்பு.
சுப்பு:(பார்த்தா அந்தக் காலத்து மனுஷங்களாத் தெரியறாங்க.கை குடுத்தா தப்பா நெனச்சுக்குவாங்களோ??சேஃபா வணக்கம் போட்டு வைப்போம்.) வணக்கம் சார்.
ருக்குவின் மாமா:ஓ..வணக்கம்.வணக்கம்.தம்பி சாப்டாச்சா??.டிஃபன் எல்லாம் எப்படி இருந்தது?
சுப்பு:(ஹுக்கும்.இது ஒண்ணு தான் குறைச்சல்.வாயிலையே வைக்க முடியலை)ரொம்ப நல்லா இருந்தது சார்.அதுவும் அந்த மில்க் ஸ்வீட் பின்னிடுச்சி..
மாமா:(கஷ்டகாலம்.மில்க் ஸ்வீட்டுக்கும் மக்கன் பேடாவுக்கும் வித்தியாசம் தெரியாததுங்களை என்ன செய்யலாம்??)ஆமா.சிதம்பரத்தோட சமையல்னா சும்மாவா.ஆமாம்,தம்பி எங்கே உத்யோகம் பாக்கறீங்க??
சுப்பு:(ரொம்ப முக்கியம்.)நான் TI-ல வேலை பாக்குறேன்
மாமா:என்னது TI-யா??கம்ப்யூட்டர் சைன்ஸ் படிச்சுட்டு எதுக்கு TI சைக்கிள்சில வேலை பார்க்கணும்??(பாவம் இவங்க கிளாசிலேயே உருப்படாத கேசுன்னு தோணுது).
சுப்பு:இல்லை சார்.அது டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்னு ஒரு M.N.C
மாமா:(மன்னார் அண்ட் கோ மாதிரி எதாவது உப்புமா கம்பெனியா இருக்கும் போல)ஓஹோ..அப்படியா..நீ என்ன ஜாவாவிலேயா வேலை பாக்குறே??
சுப்பு:(ஆஹா..ஆரம்பிச்சுட்டாங்களா..)இல்லை சார்.நான் வந்து ஹார்ட்வேர் சைட் வேலை பார்க்குறேன்.நாங்க ஜாவாவில ப்ரோக்கிராம் பண்ண மாட்டோம்..
மாமா:(ஹூக்கும்.கம்பியூட்டரைப் பிரிச்சு மேயுற வேலையா...)ஓ...அது சரி..நீ இன்ஃபோ$$,வி$ப்ரோ,$சிஎஸ் மாதிரி சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல வேலைக்கு ட்ரை செய்யலாமே?? எனக்குத் தெரிஞ்ச பசங்க நிறையப் பேரு இருக்காங்க.நான் வேணும்னா சிபாரிசு பண்ணச்சொல்றேன்...நல்ல சம்பளம் தருவாங்க...
இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த சுப்புவைக் காப்பாற்றும் ருக்கு அவனைத் தனது சித்திக்கு அறிமுகப்படுத்திவிட்டு செல்கிறாள்.
ருக்குவின் சித்தி:அப்புறம் சொல்லுப்பா.நீ விசா வாங்கிட்டியா?
சுப்பு:(ஆஹா..கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா...)ஆண்ட்டி,இப்போ நான் எங்கேயும் போகலை.அதனால விசா வாங்கத் தேவையில்லை.
சித்தி:ஓ மை காட்.எங்க கார்த்தி எஞ்சினீயரிங் தேர்ட் இயர் தான் படிக்கறான்.இப்பவே அவன் விசா வாங்கி வச்சுட்டான்.விசா இல்லாம நீ இந்தியாவோட சிட்டிஸன்னு எப்படி நிரூபணம் செய்வே...???(சரியான தத்திப் புண்ணாக்கா இருக்கானே...)
சுப்பு:(ஸ்சப்பா..இப்பவே கண்ணைக் கட்டுதே..)அது விசா இல்லை ஆண்ட்டி.அதுக்குப் பேரு பாஸ்போர்ட்.அது காலேஜில இருக்கும் போதே நான் வாங்கி வச்சுட்டேன்.
சித்தி:(மண்ணை உதறிக்கொண்டே..)ஓ..அப்படியா...நீ எந்த பிளாட்பாரத்திலே வேலை பார்க்கறே?எந்த ஊரு கிளையண்ட்??ஆன்சைட் ஏதாவது போயிருக்கியா??கார்த்தியோட சீனியர் அவனை மெயின்ஃப்ரேம் படிக்கச் சொல்லியிருக்கார்.கோர்ஸ் முடிச்ச உடனே வேலை உடனே கேரண்டியாம்.வேலைக்கு சேர்ந்த ஆறாவது மாசமே அமெரிக்கா அனுப்புவாங்களாம்.
சுப்பு:(ஹூம்..செண்ட்ரல் ஸ்டேஷன் மூணாவது பிளாட்ஃபாரத்தில வேலை பார்க்கறேன்.கடவுளே....)#$%##$$%$####$$%
-தொடரலாம்
04 August 2007
[+/-] |
செல்ஃபோன் பேட்டரி சக்தியை சேமிக்க... |
நான் பொறியியல் படிச்சிக்கிட்டு இருந்தப்போ அப்பாவோட தோஸ்து கிட்ட என்னோட ஸ்பெஷலைசேஷனை சொன்ன உடனே அவர் கேட்ட கேள்வி எங்க வீட்டு டீ.வி.,டெலிஃபோனு புட்டுக்கிச்சுன்னா ரிப்பேர் செஞ்சு தர முடியுமான்னு தான். லேப்பில சால்டரிங் வைக்கவே கை ஆடும் இந்த லட்சணத்தில நானாவது,டீ.வி ரிப்பேர் பண்றதாவதுன்னு மனசில நெனச்சிட்டே குத்து மதிப்பா தலையாட்டி வைப்பேன்.ஆனா காலேஜ் முடிக்கற வரைக்கும் அவரோட வீட்டில எந்தப் பிரச்சினையும் வரலைங்கறதால நான் எப்படியோ பொழச்சுட்டேன்.
இப்போ பொட்டி தட்ட வந்திட்டதால் அவர் பழைய குப்பைகளை எல்லாம் கிளறுவதில்லை.திடீர்னு கொஞ்ச நாள் முன்னாடி,"நீயும் தான் அஞ்சாறு வருசமா செல்ஃபோன்ல குப்பையக் கொட்டிட்டு இருக்கறியே.என்னோட ஃபோன்ல ஒரு பிரச்சினை.சரி செஞ்சு கொடுக்க முடியுமான்னு" கேட்டார்.வந்தவர் ஃபோனையும் கையோடு கொண்டு வந்திருந்தார். அவரோட செல்ஃபோன்ல அட்ரஸ்புக்கை ஓப்பன் செய்யவே முடியலை.என்ன பிரச்சினைன்னே இந்த மரமண்டைக்கு எட்டலை.சரி கடைசியா விண்டோஸ் ஃபார்முலாப்படி ரீஸ்டார்ட் செஞ்சு பார்ப்போமேன்னு அவர் கிட்ட விஷயத்தை சொல்லாம ஃபோனை ரீஸ்டார்ட் செஞ்சேன்..
அடடா....ஃபோன் சும்மா நச்சுன்னு வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு.தொழில் ரகசியத்தை அவருக்கு சொல்லலை.இல்லேன்னா இன்னேரம் என்பேரு ரிப்பேராப் போயிருக்கும்.ஆனா செல்ஃபோன் உபயோகப்படுத்தறவங்க தங்களோட பேட்டரி சக்தியை நீண்ட நாட்களுக்கு இருப்பில் வைக்க சில டிப்ஸைக் கீழே கொடுத்திருக்கேன்.செயல் படுத்திப்பார்த்துட்டுக் கைமேல பலன் இருந்ததுன்னா உங்களுடைய நன்கொடைகளை அனுப்ப வேண்டிய இடம் எதுன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்...
1)உங்களோட செல்ஃபோனில் பேக்ரவுண்ட் இமேஜ் இல்லாம வைக்கலாம்.
2)ப்ளுடூத் வசதியை நிறுத்தி வைக்கலாம்.தேவையான போது செட்டிங்க்ஸ் போயி அதை ஆன் செஞ்சுக்கலாம்.
3)உங்களோட இருப்பிடத்தைத் தெரிவிக்கும் வசதியை நிறுத்தி வைக்கலாம்.(எப்படியும் முக்காவாசி நேரம் சரியான இடத்தை நம்ம ஊரு ப்ரொவைடர்ஸ் சொல்றது கிடையாது)
4)ஃப்ரீ கால் கிடைச்ச குசியில கால நேரம் தெரியாம அடுத்தவங்களை ஃபோன் போட்டு டார்ச்சர் பண்ணாம இருக்கலாம்.
மீதி இன்னொரு நாளைக்கு...
03 August 2007
[+/-] |
தேடிக்கிடைத்த புதையல்கள் |
பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னா அது உண்மையாக மாறிடும்னு சொல்றாங்க.இது உண்மையா பொய்யான்னு எனக்குத் தெரியாது.ஆனா பாடல்களுக்கு இது பொருந்தும்.முதலில் புடிக்கலைன்னாலும் திரும்பத் திரும்பக் கேட்டா,நம்மளுக்கு தெரியாமலேயே மனசில ஒட்டிக்கும்.அதிலையும் பதின்ம வயசில கேட்ட பாடல்களுக்கு இருக்கிற மவுசே தனிதான்.ராமநாதபுரம் கருப்புசாமிகிட்ட கணக்கு டூசனுக்கு, மப்சல் வண்டிகளில் போன காலத்தில ரெகுலராக் கேட்ட சில பாடல்களைப் புதையல்கள்னு சொல்ல முடியுமா?
உங்களுக்கு எப்படியோ..இந்தப் பாட்டுக எனக்குப் புதையல்கள் தான்.பின்னே இந்தப் பாட்டுகளை இணையத்திலே பிடிக்க நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா??இந்தப் பாடல்கள் வந்த காலத்தில எம்.பி3 ஒலி வடிவம் இல்லை;இசையமைச்ச ஆளுங்க பிரபலமாகதவங்க;படங்க எல்லாம் சுமாரா ஓடின படங்க தான் அப்படின்னு பல காரணம் இருக்கலாம் என்னோட தொடர் தோல்விகளுக்கு.தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராத விக்கிரமாதித்த மகாராசா மாதிரி,ரெண்டு வருஷம் பட்ட பாட்டுக்குக் கொஞ்ச நாள் முன்னாடி தான் பலன் கிடைச்சது.எது எப்படியோ..தேடிக்கிடைத்த புதையல்களை உங்க கூட பகிர்ந்துக்கிறேன்.கேட்டுப்பார்த்திட்டு சொல்லுங்க...
புதையல்:
கோவை செழியனோட தயாரிப்பில செல்வா இயக்கத்தில மம்முட்டி,அர்விந்த்சாமி,கவுண்டபெல்,ஆம்னி,சாக்ஷி நடிப்பில வெளிவந்த படம் தான் புதையல்.அர்விந்த்சாமிக்கு காமெடி கூட வரும்னு நிரூபித்த படம்.வைரமுத்துவோட பாடல்களுக்கு இசையமைச்சது வித்யாசாகர்.மின்சாரக்கனவு வந்த கொஞ்ச நாளிலே ரிலீசாகி ஃபிளாப் ஆன இந்தப் படத்திலே இருக்கிற பாட்டுக எல்லாம் டாப் டக்கர்.இதில இருந்து ரெண்டு பாட்டு கொடுத்திருக்கேன்.கேட்டுப்பார்த்திட்டு சொல்லுங்க.
ஒச்சம்மா..ஒச்சம்மா:
ராக்கம்மா,பொன்னம்மா வரிசையில நம்ம பாடலாசிரியருக வித்தியாசமாக் கற்பனை செஞ்சு புடிச்ச பேருன்னு நினைக்கிறேன்.இரண்டு கதாநாயகர்களும் பாடும் இந்த டூயட்டைப் பாடியிருப்பது எஸ்.பி.பியும் உன்னி மேனனும்.கிளைமேக்சுக்கு முன்னால வரும் பாடல்.
|
பூத்திருக்கும் மனமே:
மீசையில்லாத மம்முட்டியை இந்தப் பாட்டில் பார்க்கலாம்.உமா ரமணன் குரலில் வந்திருக்கும் மற்றுமொரு இனிமையான காதல் பாடல்.
|
மதுரை அழகரோ:
புதையல் அளவுக்கு இந்தப் படம் நஷ்டம் ஆகலைன்னாலும்,அப்போ வெளிவந்த காதல் கோட்டை கூட இதனால தாக்குப்பிடிக்க முடியலைங்கறது தான் உண்மை.சிற்பி இசையில சித்ராவின் குரலில் வந்த இந்தப் பாடலின் நடுவே லிவிங்ஸ்டன் அவரோட ஸ்டைலில் நடந்து வருவார் பாருங்க.தியேட்டர்ல அப்போ கிளாப்ஸ் அள்ளுச்சு.இந்தப் படத்தில எல்லாப் பாட்டும் நல்லா இருக்கும்.வெண்ணிலா வெண்ணிலா,கெட்டப்பை மாத்தி,அப்புறமா அந்த டைட்டில் பாடல் - இதெல்லாம் யார் கிட்டயாவது இருந்து கொஞ்சம் பகிர்ந்துக்க முடியுமா?
|
[+/-] |
ஆடிப்பெருக்கு |
ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள்
அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.
--"ஆடித்திருநாள்" பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி
01 August 2007
[+/-] |
முதல் மாபெரும் ரயில் கொள்ளை |
என்ன தான் பல வருடங்கள் பயணம் செய்து கொண்டிருந்தாலும் ரயில் என்னவோ எனக்கு இன்னமும் ஒரு அன்னிய ஜந்துவாகத்தான் இருக்கிறது. ஓடும் போது பேருந்து போல நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் இறங்கவும் ஏறவும் முடியாது என்பது ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம். தவறான கம்பார்ட்மென்டில் ஏறிவிட்டால், நமது இடத்திற்குப் போய்ச்சேருவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.போகிகள் இணைக்காமல் இருந்தால் அதோ கதிதான். மயக்க பிஸ்கெட் கொள்ளைக்காரர்கள்,தூக்கம் வராமல் தவிப்பது தெரிந்தும் விளக்கை அணைக்க அழிச்சாட்டியம் செய்யும் சக பயணிகள் என்று ஒரு சங்கிலித் தொடர் போல இன்னமும் இருக்கிறது ரயிலின் மேல் பிடிப்பு வராமல் இருக்க ஆயிரத்தெட்டு காரணங்கள்.
ரயில் பெட்டிகளுக்குள் நடக்கவே நாம் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பெட்டிகளின் மீதேறி எப்படி சண்டை போட முடிகிறது என்பது எனக்கு இன்னும் விளங்காத புதிராகவே உள்ளது. அதுவும் ரயில் பயணிக்கும் திசைக்கு எதிராக ஓடி தேச துரோகிகளைப் பின்னிப் பெடலெடுக்கும் கேப்டன், ஆந்திர பாலைய்யா பிரதாபங்களைப் பார்க்கையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இதெல்லாம் என்ன பிரமாதம்?
முன்னாளைய பாண்டு ஷான் கானரி நடித்த இந்தப் படத்தைப் பார் என்று ஒரு நட்புவட்டாரத்திலிருந்து வந்த வேண்டுகோளை ஏற்று பார்த்த படம்தான் "முதல் மாபெரும் ரயில் கொள்ளை "(The First Great Train Robbery) மைக்கேல் கிரிக்டனின் எழுத்து, இயக்கத்தில் ஷான் கானரி, டொனால்ட் சுதர்லேண்ட், லெஸ்லீ-அன்னே டௌண் நடித்து 1979ல் வெளியானது இந்தப்படம்.
1885ன் இங்கிலாந்தில் நடப்பதாக இருக்கிறது கதையின் பின்னணி.அப்போது இங்கிலாந்து, ஃப்ரான்சுடன் கூட்டு சேர்ந்து ரஷ்யாவுக்கெதிராக க்ரைமியா என்ற இடத்தில் யுத்தம் செய்து வந்தன. இங்கிலாந்து வீரர்களுக்கு மாதாந்திர சம்பளமாகத் தங்கம் பட்டுவாடா செய்யப்பட்ட காலம் அது. லண்டனின் ஒரு முக்கிய வங்கியிலிருந்து, மாதம் ஒரு முறை 25,000 பவுண்டுகள் தங்கம், போக்ஸ்டென் ட்ரெயினின் சரக்குவேன் மூலமாகக் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கப்பல்கள் வாயிலாகக் க்ரைமியாவுக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாயிருந்தது.
இவ்வளவு தங்கத்தை எடுத்துச் செல்லும்போது அதற்குரிய பந்தோபஸ்து இல்லாமல் போகுமா?
தங்கப்பாளங்களை எடுத்துச் செல்லும் பெட்டி ஒவ்வொன்றும் 550 பவுண்டுகள் எடையுடன் தலா இரு பூட்டுகள் கொண்டிருந்தது. பெட்டிக்கு இரண்டு என்ற கணக்கில் மொத்தம் நாலு சாவிகள். ஆக இந்தத் தங்கத்தைக் களாவாட வேண்டுமென்றால் இந்த நாலு சாவிகளுக்கும் பிரதி எடுக்க வேண்டும். அது சரி, இந்த நாலு சாவிகளும் ஒரே ஆளிடத்தில் இருக்குமா என்றால், அதுதான் இல்லை. 2 சாவிகள் அந்த ட்ரெயினின் சரக்குகள் டிஸ்பேட்ச் செய்யும் அலுவலரிடமும், மூன்றாவது சாவி தங்கப்பாளங்களை அனுப்பும் வங்கியின் பிரசிடென்டிடமும், நான்காவது சாவி அந்த வங்கிக் கிளையின் மேலாளரிடமும் இருக்கின்றன.
இப்படியாக பலத்த காவலுடன் ட்ரெயினில் மாதாமாதம் ஒரு பெருஞ்செல்வம் சென்று கொண்டிருப்பதை அறிந்த கள்வர் கூட்டம் சும்மா இருக்குமா என்ன?
நமது கதாநாயகனுக்கு இந்தத் தங்கத்தின் மீது நீண்ட நாட்களாக ஒரு கண். நான்கு சாவிகளையும் அடையாமல் தங்கத்தைப் பற்றி சிந்திப்பது முட்டாள்தனம், கால விரயம் என்பதை அறிந்து கள்ளச்சாவிகள் உருவாக்குவதில் வல்லவனான ஒருவனோடு கூடு சேர்கிறான். தனது புத்திசாலித்தனம், கூட்டாளியின் தொழில் திறமை, காதலியின் அழகு, மனிதர்களுக்கிடையே மண்டிக்கிடக்கும் பலவீனங்கள், தேர்ந்த திட்டமிடல், கடுமையான பயிற்சிகள், தீவிர ஒத்திகை போன்றவற்றின் மூலமாக நான்கு சாவிகளையும் கைப்பற்றும் கதாநாயகனுக்கு இறுதிக்கட்டத்தில் வருகிறது சோதனை.
அதனையும் சமாளித்து வெற்றிகரமாகத் தங்கத்தைக் கொள்ளையடித்தும் விடுகின்றான். அப்பாடா எல்லாம் முடிந்தது என்று நினைத்திருக்கும் வேளையில் காவல்துறை அவனைக் கைது செய்கிறது. கோர்ட் விசாரணை முடிவில் 20 ஆண்டுகள் சிறைவாசம் கிடைக்கும் என்று அனைவரும் பேசி வருகின்றனர். ஆனால் உண்மையில் அதுவா நடந்தது என்னும் கேள்விக்கான விடையினை வெண் திரையிலோ, சின்னத் திரையிலோ காண்க.
ஷான் கானரி நடிப்பில் திரையரங்கில் நான் முதன் முதலில் பார்த்த படம் "என்ட்ராப்மென்ட்" தான். அதுவும் தீபாவளி மலருடன் ஓசியாய் வரும் சீயக்காய்த் தூளைப் போல காத்ரீனாவைப் பார்க்கப் போய் இவரைப் பற்றி அறியலானேன். வயதான போதும் இந்த கிழவருக்கு அந்தப் படத்தில் என்ன ஒரு ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் என்று வியக்காத நாட்கள் இல்லை. பிறகு பார்த்த ஜேம்ஸ்பாண்ட் படங்கள் அவர் மீதான அபிமானத்தை அதிகப்படுத்தியது. பாண்ட் படங்களில் கேட்ஜெட்டுகள் துணை கொண்டு தனது திட்டத்தினை நிறைவேற்றும் ஷான் இந்தப் படத்தில் கத்தியைத் தீட்டாமல் தனது புத்தியைத் தீட்டி இருக்கிறார்.
"குரு" என்று எண்பதுகளில் வெளியான ஒரு தமிழ் மசாலாவில் கமல் வைரத்தையோ அல்லது வேறு ஏதோ ஒரு மண்ணாங்கட்டியினையோ பலத்த காவலுக்கு இடையே சென்று எந்த இடையூறுமின்றி வெற்றிகரமாய் பாட்டி சித்தி தலையில் பேன் பார்ப்பது போல எளிதாக எடுத்து வருவதைப் பார்த்து கொள்ளை அடிப்பது என்பது மிகவும் எளிதான செயல் என்றும், நினைத்த நேரத்தில் முடித்து விடலாம் என்றும் நினைத்திருந்தேன். அது தவறு. கொள்ளையடிப்பதற்குத் தகுந்த திட்டமிடுதலும், தீவிர பயிற்சியும் தேவை என்பதைப் பாட்டியின் சுருக்குப்பையில் இருந்து பணம் களவாண்ட போது அறிந்துகொண்டேன்.
படத்தில் முதலிரண்டு சாவிகளைப் பிரதியெடுக்கும் காரியத்தை, அந்தச் சாவிகள் இருக்கும் ரயில்வே அலுவலகத்தைக் காவல் காக்கும் இரவுக்காவலன் உச்சா போய் விட்டு வரும் அந்த 75 நொடிக்குள் முடித்தாக வேண்டும்.இதனைச் சாதிக்க ஷான் போடும் திட்டமும்,அதற்கு அந்தக் குழு மேற்கொள்ளும் பயிற்சிகளும் அற்புதம். அப்புறமாக ரிஸ்க் மிடிகேஷனுக்கு உதாரணமாய் அமையும் அந்த கிளைமாக்ஸ் காட்சி இன்னமும் என் கண் முன்னால் இருக்கிறது.
மற்றபடி வங்கி பிரசிடென்டின் இரண்டாம் தாரத்துடன் ஷான் குஜால்சாகப் பேசுவது, ஷானின் காதலி துணை கொண்டு வங்கி மேலாளரை வீழ்த்துவது, அதிக உரையாடல்கள் இல்லாமல் காட்சிகளின் துணை கொண்டு கதையை நகர்த்துதல் என்று வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் ஜல்லி அடித்திருக்கிறார்கள். தங்கத்தைக் கொள்ளையடிக்க ஷான் ரயில் பெட்டிகளின் மீதேறி வரும் காட்சியமைப்புகளில் காமிராவும், இசையமைப்பாளரும் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். மொத்தத்தில் ஒரு அருமையான மசாலா படம்.
ஜேம்ஸ்பாண்டு படம் பிடிக்குமுன்னா,கண்டிப்பாகப் பார்க்கலாம்...
31 July 2007
[+/-] |
பில்லைக் கொல்லு |
போஸ்டரில் உமா தர்மனைப் பார்த்ததும் ஏதோ விஜயசாந்தி டைப் படம்னு பயந்து போய் இந்தப் படத்துக்குப் போகாம இருந்தது எவ்வளவு தப்புன்னு இந்த வாரம் தான் தெரிஞ்சது.ரோம்-1ன் அடுத்த எபிசோடுக்காக ஆவலோட காத்துக்கிட்டு இருக்கும் போது,ஏதோ ஒரு குழப்படியின் விளைவா லவ்ஃபிலிம்ல இருந்து இந்தப் படத்தை அனுப்பிட்டாங்க.சரி...அப்படி என்ன தான் இருக்குன்னு படத்தை ஓட்ட ஆரம்பிச்ச பின்னாடி தான் தெரிஞ்சது என் கிட்ட இருக்கிறது படத்தோட ரெண்டாம் பாகம்னு.முதல் பாகத்தைப் பார்க்காம எப்படி ரெண்டாம் பாகம் பார்க்கிறது? உள்ளூர் நூலகத்தில் இருக்குமோன்னு ஒரு சந்தேகத்தோட போனா,பழம் நழுவி பாலில விழுந்த மாதிரி "இன்றைய ஸ்பெஷல்" லிஸ்டில மொத பாகம்.
பொதுவா ஒரு படம் வெற்றி அடைஞ்சிடுச்சுன்னா உடனே அதுக்கு பார்ட்1,பார்ட்2ன்னு எடுத்துத் தள்ளீடுவாங்க.ஆன இந்தப் படம் அதுல ஒரு விதிவிலக்கு.இந்தப் படம் ரெண்டு பாகங்களா வந்ததுன்னா அதுக்கு முக்கிய காரணம் படத்தின் நீளம் தான்.ரெண்டு பாகங்களையும் சேர்த்து படத்தோட ஓட்ட நேரம் கிட்டத்தட்ட நாலரை மணி நேரம்.உமா தர்மன் "the Bride" என்னும் கதாபாத்திரத்தில் நடிச்ச இந்தப் படத்தை எழுதி,இயக்கினது குவாண்டைன் டாரண்டினோ.
குவாண்டைன் டாரண்டினோ எடுத்த பல்ப் ஃபிக்ஷன்,ரிசர்வாயிர் டாக்ஸ் எல்லாம் முன்னாடியே பார்த்திருந்ததனால்,அவருடைய கதை சொல்லும் பாணி கொஞ்சம் பரிச்சயமாயிருந்தது.ரத்தம்,வன்முறை இல்லாம இருக்காது இவரோட படங்களில்.
இதுலயும் அப்படித்தான்,முதல் காட்சியே ஒரு ரத்தக்களரியோட ஆரம்பிக்குது.ஒரு கொலைகாரக் கும்பலில் இருக்கிற நம்ம கதாநாயகிய அவளோட கல்யாண ஒத்திகை அன்னைக்கு துவம்சம் செஞ்சிடறாங்க.எம லோகத்துக்குப் போயி திரும்பி வார கதாநாயகி தன்னைக் கொன்னவங்களைப் பழி வாங்குறது தான் கதை.யார் கொன்னது,ஏன் கொன்னது போன்ற கேள்விகள முதல் பகுதியிலும்,அதற்கான பதில்கள் ரெண்டாம் பகுதியிலும் இருக்கும்.இரண்டு பாகங்களில் மொத்தம் பத்து பகுதிகளாய ஒரு கதை சொல்லப்பட்டிருக்கு.
அட்டகாசமான சண்டைகாட்சிகள்,"lean-mean"ஹீரோயினி,டாப் கிளாசான திரைக்கதையோட வந்த இந்தப் படம் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.என்ன படத்தில் கொஞ்சம் ரத்தவாடை சாஸ்தி.
சண்டைப்படங்கள் உங்களுக்குப் பிடிக்குமின்னா,இது வரை இதைப் பார்க்கலைன்னா கட்டாயம் பாருங்க,Kill Bill.
எனக்குப் பிடிச்ச காட்சிகள்:
1)வர்னிதாவைக் கொல்லும் முன்னர் வரும் வசனங்கள் ஊடான ஒரு சண்டை
2)க்ரேசி-88 உடன் மோதும் காட்சி
3)திருமண ஒத்திகையின் போது,ஆசுவாசப்படுத்திக் கொள்ள சர்ச்சிலிருந்து வெளியே வரும் உமா,எங்கிருந்தோ காற்றில் வரும் பில்லின் புல்லாங்குழல் இசை கேட்டு உணர்ச்சிவசப்படுதல்
4)பாய் மேயுடனான குருகுலவாசம்
5)BBயுடன் டைனிங் டேபிளில் பேசும் தங்க மீன் பற்றிய வசனங்கள்
6)முத்தாய்ப்பான அந்த இறுதிக் கட்ட சண்டை...
25 July 2007
[+/-] |
பிரசன்னா - சினேகா - அருண் வைத்தியநாதன் |
அகரதூரிகை என்னும் தமிழ் வலைப்பதிவுக்குச் சொந்தக்காரரும்,பல்வேறு குறும்படங்கள் இயக்கியவருமான அருண் வைத்தியநாதன் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைப்பார் போல.
பிரசன்னா-சினேகா-அருண்-எஸ்.பி.பி.சரண்-ப்ரேம்ஜி அமரன் -தாமரை கூட்டணியில் வரும் "அச்சமுண்டு அச்சமுண்டு" வெற்றிபெற உளமார்ந்த வாழ்த்துகள்...
(இது அந்த அருணான்னு தெரியலை..ஆனால் இண்டியாக்ளிட்ஸ் சொல்லும் குறிப்புகளுடன் ஒத்துபோகிறவர் இவர் தான்னு நினைச்சதால் இந்தப் பதிவு)
21 July 2007
[+/-] |
சுப்பு & ருக்கு - 1 |
கடந்த ஏழு மாதங்களாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் சுப்புவும் ருக்குவும் தங்களது முதலாமாண்டு கல்யாண நினைவுநாளை வெகு விரைவில் கொண்டாடவிருக்கின்றனர்.
சுப்பு: அது வந்து....சொல்லும்மா...இப்போ என்னோட வாட்சில மணி 10.02
ருக்கு:அதெல்லாம் கரெக்டா சொல்லு.9.28க்கு ஒரு தடவை கால் செஞ்சேன்.பிஸின்னு வந்தது.9.5க்கு கால் செஞ்சேன்.மறுபடியும் பிசி.உடனே 9.53க்கு ஒரு மெயில் அனுப்பினேன்.இன்னும் அதை நீ ஓப்பன் கூட செஞ்சு பார்க்கலை.யார் கூட காபிக்கு போனே?கிளியோபாட்ராவா இல்லை அந்த மூக்கழகியா?
சுப்பு:இது கொஞ்சம் ஓவர் ருக்கு.எனக்கு இன்னைக்கு 9-10 ஆன்ஷோர் டீமோட மீட்டிங் இருக்குன்னு நேத்தே சொன்னேன் இல்லை..அதை முடிச்சுட்டு இப்போ நேரா சீட்டுக்கு தான் வரேன்.ஆமா ஏதாவது சீரியசான மேட்டரா??
ருக்கு:bugல்லாம code எழுதத் துப்பில்லை.இதில ஆன்ஷோர் டீம் மீட்டிங் வேற.நேத்து உன்னை ஒரு module கொடுத்து code பண்ணச் சொன்னேனே,அதை எனக்கு அனுப்பும் முன்னாடி test செஞ்சியா??
சுப்பு:ஆங்...அது வந்து... ஒண்ணுக்கு ரெண்டு test வாட்டி செஞ்சேனே ருக்கு.அந்தக் கோடில ஏதாவது பிராப்ளமா??(இந்த கூகிள் கடங்காரன் காலை வாரிவிட்டுட்டான் போல இருக்கு..இப்போ மேட்டரை ஓரம் கட்டணுமே..எப்படி???)
ருக்கு:நீ கொடுத்த கோடில நாலு bug இருக்குன்னு மெயில் வந்திருக்கு.உருப்படியா நாலு வரி code எழுத வராது;இதில பேர் மட்டும் பெரிசா பிஸினெஸ் அனலிஸ்டுன்னு.ஏதோ என்னோட லீட் லீவில போனதால சமாளிச்சுட்டேன்.அது சரி..நீ வீட்டை விட்டு வர்ரச்சே கேஸ் எல்லாம் பார்த்து ஆஃப் செஞ்சிட்டு வந்தியா??
சுப்பு:அதெல்லாம் கரெக்டா செஞ்சிட்டேண்டா.(உஷ்..அப்பாடா.விஷயம் வேற ட்ராக்குக்கு மாறுது.)
ருக்கு:நான் வாஷிங்மெஷின்ல போட்டிருந்த என்னோட துணிகளை எல்லாம் காயப்போட்டியா??பாலை எடுத்து மறுபடியும் ஃப்ரிட்ஜுக்குள்ள வச்சுட்டியா??
சுப்பு:(அய்யய்யோ..இந்த துணி மேட்டர் சுத்தமா மறந்து போச்சே.ஹூம்...அந்த நேரம் பார்த்துதானா சன் ம்யூசிக்ல "நிலவைக்கொண்டு வா..கட்டிலில் கட்டிவை" போடணும்)ஆச்சு..எல்லாம் செஞ்சிட்டுதாண்டா வீட்டை விட்டுக் கிளம்பினேன்...எதுக்கு வீணா நீ டென்ஷன் ஆகறே?? ஆமாம்.நீயே டிசைன் செஞ்ச சுடிதாரை இன்னைக்குப் போட்டுட்டுப் போனியே.அதை பத்தி தான் இன்னைக்கு உங்க ஆஃபிஸில ஒரே பேச்சாமே??
ருக்கு:அய்யோ....ஆமாம்பா....இது உனக்கு எப்படித் தெரிஞ்சது???டோரிக் கண்ணு வெங்கி கூட இன்னைக்கு இதைப் பார்த்து வொண்டர்ஃபுல்லுன்னு சொல்லுச்சி.இன் ஃபாக்ட் எங்க டீமில புதுசா சேர்ந்திருக்கிற ஃப்ரஷர்ஸ் இதுக்காக என்னை ட்ரீட் தரச் சொல்லியிருக்காங்க.நானும் வர சனிக்கிழமை அவங்களை வீட்டுக்குக் கூப்டிருக்கேன்.பாவம் பசங்க.புது ஊர்.புது மனுஷங்க.அவங்களுக்கும் ஒரு சேஞ்ச் வேணும் தானே??
சுப்பு:(அப்பாடா..ஒரு வழியா ட்ராக்கை மாத்தியாச்சு...)ஆமாம் ருக்கு.you are very correct, as always. நம்ம ரிஷப்சனுக்கு முதலில் நீ எடுத்த சேலை கூட இந்த ராமர் ப்ளூ கலர் தானே?
ருக்கு:சுப்பூ...கொஞ்சம் கூட உனக்கு கலர் சென்ஸே இல்லை.First of all இன்னைக்கு நான் போட்டுட்டு வந்த சுடிதார் கலர் ராமர் ப்ளூ இல்லை.அது ராமர் க்ரீன்.Secondly ரிஷப்சனுக்கு முதல்ல எடுத்த சேலை கலர் ஆலிவ் க்ரீன்.ஒரு வருஷம் கூட ஆகலை.அதுக்குள்ள எல்லாமே மறந்திடுச்சி உனக்கு.....
சுப்பு:(அய்யயோ..இதென்ன புதுக்கதை....ஏதாவது சொல்லி சமாளிடா...)ஆங்...அது வந்து..எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.உனக்கு மறந்திடுச்சான்னு டெஸ்ட் பண்ணிப்பார்த்தேன்.ஹி...ஹி....அப்புறம் உங்க பாலு மாமா தசரா லீவுக்கு இங்கே ஃபேமிலியோட வரார்னு சொன்னேல்லியா? ஏதாவது டூர் பிளான் செய்யட்டுமா??(ஹூம்.சூப்பராப் பாயிண்டைப் புடிச்சுட்டியேடா...)
ருக்கு:அடப்பாவி.போன சண்டே தானே அவரோட மாமனாருக்கு KMCH ல பைபாஸ் செய்யணும்னு ஃபோன் பண்ணி சொன்னாரு.நீ கூட உன்னோட ஸ்கூல் மேட் பிபின் அந்த ஹாஸ்பிடல்ல தான் இருக்கான்னு சொல்லீட்டு இருந்தியே??அப்போ அதெல்லாம் ரீலா?? சரியான டுபாக்கூர் பார்ட்டி நீ...get lost....
சுப்பு:(சோதனை மேல் சோதனை..போதுமடா சாமி)ருக்கு..ருக்கு..ப்ளீஸ்..அது ரீல் எல்லாம் இல்லை..ருக்கு...லைனைக் கட் செஞ்சிட்டியா???ஹூம்....
(தொடரலாம்)
[+/-] |
நம்ம ஊரு,நல்ல ஊரு - 1 |
அது என்ன அவ்வளவு பிரபலமான ஊரா என்று யாரிடமாவது கேட்டால் போதும், ஜீ.டி.நாயுடு, சிறுவாணித் தண்ணீர், PSGCTCIT செட்டுகள், சிறுதுளி திட்டம், செழிய, சிவகுமார, மணிவண்ண, சத்ய சுந்தர பாக்கிய ராஜ வகையறாக்கள்,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா, நரைன் கார்த்திகேயன், குர்லா எக்ஸ்பிரஸ், பிளாக் தண்டர் என்று சங்கிலித் தொடர் போலே நீளும் பதில்கள்.
நம் ஊரைப் பத்தி நம்மளோட கருத்துகளும், மதிப்பீடுகளும் எப்பவுமே ஒரு தலைப் பட்சமாகவே இருக்கும்.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சும்மாவா சொன்னாங்க.கோயமுத்தூரைப் பத்தி வெளியூர்க்காரங்க என்ன தான் சொல்றாங்கன்னு பார்ப்போம்
ஐகாரஸ் பிரகாஷின் பார்வையில்:வகை தொகையில்லாமல், மானாவாரியாக கெட்ட வார்த்தைகளை - அதன் நிஜ அர்த்தம் தெரியாமலேயே - அள்ளித்தெளிக்கும் கூவாங்கரையில் பிறந்த வளர்ந்த ஒருவனுக்கு,கோயமுத்தூர் தரும் தரும் அதிர்ச்சிகள், இன்பமானவை. அந்த அதிர்ச்சிகளை நானும் அனுபவித்திருக்கிறேன்.என்னமோ, எனக்கு கோவை என்று சுருக்கமாகச் சொல்வதைவிட, கோயமுத்தூர் என்று நீட்டி முழக்கிச் சொல்வதுதான் பிடித்திருக்கிறது.
கோயமுத்தூர் என்றவுடன் சட்டென்றுநினைவுக்கு வருவது என்ன? லக்ஷ்மி மில்ஸ் வளாகம்? மருதலைக் கோயில்? சுகுணா மோட்டார் கம்பெனி ? நிர்மலா காலேஜ் பெண்கள் ? அங்கண்ணன் கடை ? டேக் ஓவர் டைக்கூன் பி.ஆர்.ராஜரத்தினம் ?கோக்குமாக்கானவடிவத்தில் இருக்கும் ஃப்ளைஓவர் ? அநியாயமாக விமான விபத்தில் செத்துப் போன கரிவரதன் ? ராஜ்யஸ்ரீ பதி ? சிறுவாணி ? இல்லை... இதல்லாம் பிறகுதான்... முதலில் நினைவுக்கு வருவது அந்த ஊர் மக்களும், அவர்கள் பேசும் கொங்குத் தமிழும் தான்.
பாரதியார் பல்கலை எம்பிஏ நுழைவுத் தேர்வு எழுதச் சென்று, கேள்வித் தாளுக்காக காத்திருக்கும் போது என்ன வரும்? ஒழுங்காகத் தேர்வு எழுதி சீட்டு கிடைக்குமா என்ற நடுக்கம் வரும் அல்லது RAC டிக்கட் கன்ஃபர்ம் ஆகுமா யோசனை வரும். எனக்கு தூக்கம் தான் வந்தது. (இரவில் பன்னிரண்டு மணி நேர பேருந்துப் பயணம் + கௌரிஷங்கரில் 'பாத்தி கட்டி அடித்ததன்' விளைவு). கேள்வித் தாள் விநியோகம் செய்து கொண்டு வந்த நுழைவுத் தேர்வு பொறுப்பாளர், தட்டி எழுப்பி, "பரீட்சை ஆரம்பிச்சுடுச்சுங்க, பயணக் களைப்புங்களா? மொகம் கழுவிக்கிட்டு வந்து எழுதறீங்களா ?" என்று எந்த விதமான நக்கல்/கிண்டலுமில்லாமல் சாதாரணமாகக் கேட்டவர், கோயமுத்தூர் மக்கள்ஸின் ஒரு ரெப்ரசெண்டேடிவ் சாம்பிள் என்று தான் தோன்றுகிறது. வாங்க, போங்க என்று மரியாதையுடன் அழைக்கும் ஆட்டோ ஓட்டுநர்களையும், தமிழில் பேசும் bartender களையும் அங்கே தான் ஒரு சேரப் பார்க்கலாம்.
கேஜி வளாகத்தின் அருகே இருக்கும் பழமுதிர்ச்சோலையின் கிளை ஒன்று, சென்னையில் சாலிக்கிராமத்தில் துவங்கப்பட்டிருக்கிறது. சரி, போய்தான் பார்ப்போமே என்று உள்ளே நுழைந்தவுடன், வரவேற்பு, "வா சார், இன்னா வோணும்?"
பூவோடு சேர்ந்த நார், மணக்குமா அல்லது நாறுமா என்பதை யார் சொல்ல முடியும்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே...??? (பின்னூட்டங்களின் வாயிலாகவோ அல்லது தனிமடல் மூலமாகவோ).
17 July 2007
[+/-] |
சொன்னாங்க...சொன்னாங்க... |
இந்த உலகம் ஒரு நாடக மேடை என்னும் கருத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள பெரும்பான்மையான தமிழர்களைப் பொருத்த மட்டிலும் நிழலும் நிஜமும் ஒன்றே.அப்படி நிழலிலும்,நிஜத்திலும் பேசப்பட்ட சில வசனங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
யார் சொன்னது?? எந்த சூழ்நிலையில் சொன்னது???
1)பி.பி.சி.க்கு பேட்டி வழங்கியது மகிழ்ச்சி தரும் அனுபவமில்லை
2)வெவரம் தெரியாதவனுக்கு பொண்டாட்டியா இருக்கிறதை விட,விவரம் தெரிஞ்சவனுக்கு வப்பாட்டியா இருக்கலாம்.
3)வேட்டைக்காரன் வர்ரான்..உஷாரா இருந்துக்கோங்க...
4)அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் எராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி பட்ட ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணத்தை தொடர்கிறேன்.
5)இவங்க மறுபடியும் ஆட்சிக்கு வந்தா அந்த ஆண்டவனால கூட தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியாது...
6)'நான் செத்ததுக்குப் பொறவு தான் இந்த கல்யாணம் நடக்கும்.'
'அது வரைக்கும் என்னால காத்திட்டிருக்க முடியாது'
7)இந்த உலகத்திலேயே ரொம்பவும் கொடுமையான விஷயம் எது தெரியுமா? மத்தவங்க நம்மளை மறந்து போறது தான்
பி.கு:- எனக்கு கேள்வியின் நாயகன் என்னும் பட்டம் தரப்போவதாகக் காத்து வாக்கில் உலவும் செய்தி பற்றி அனைவரும் இன்னேரம் அறிந்திருப்பீர்கள்.அந்தப் பட்டம் சூட்டும் விழாவில் எனக்குத் தரப்படும் பொற்கிழிக்காக உங்களது பங்களிப்பை நீங்கள் செய்ய விரும்பினால்,அணுக வேண்டிய முகவரி எது என்று உங்களுக்குக் தெரியும் தானே???
09 July 2007
[+/-] |
நான் யார்? நான் யார்? நான் யார்? |
1)என்னோட அண்ணாவும் தன்னோட ஆரம்பகால வாழ்க்கையை மீடியா துறையில தான் ஆரம்பிச்சார்.எங்க அப்பாவுக்கு இருந்த செல்வாக்கு,அரசியல் பலம்,வியாபார நெளிவுசுளிவுகள் காரணமா எங்கோ இருந்த நாங்க இன்னைக்கு இருக்கிற இடத்தை நினைச்சுக் கூட பார்க்க முடியலை.நாளைக்கு அழிவில்லைல வந்த எலியட் கார்வர் கதாபாத்திரம் எங்க அப்பாவைத் தாக்கி இருக்குன்னு எங்கோ படிச்ச ஞாபகம்.அப்புறம்,2003ல நான் பதவிக்கு வந்தப்போ இருந்த சர்ச்சை இப்போ சுத்தமாக் குறைஞ்சிருச்சு.
2)1982ல் வெளியாகி உலக புகழ்வாய்ந்த அந்தப் படத்திலே நடிக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.என்னோட படத்தைப் பத்தி வேட்டையாடு விளையாடுவில ஜோதிகா ஏதோ சொல்லியிருக்காங்களாமே,அது நிஜமா? நாலு குழந்தைகளுக்கு அப்பாவான என்னோட இயற்பெயர் கிருஷ்ணா பான்ஜி.
3)மார்ச் 1976ல் இருந்து ராஜ்யசபா எம்.பி.ஆன போதிலும் எனக்கு அமைச்சர் பதவி கிடைச்சதென்னமோ 29 ஜனவரி 2006ல் தான்.நான் 1943ல் லாகூர்ல பிறந்தேன்.உங்க ஊர்ல கூட என் பேர்ல ஒரு நடிகை எண்பதுகளில் கலக்கிட்டு இருந்தாங்களாமே,உண்மையா?
4)இந்த அம்மா குச்சிப்புடி,பரதம் நல்லா ஆடுவாங்கன்னு என்னைப் பத்தி எழுதறவங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் நான் IIM-A அலுமினி என்பது.காலேஜில பசங்க பேப்பர்ல விட்டுக்கிட்டு இருக்கிற அந்த விஷயத்தை நம்ம இந்தியாவில சாதிக்கக் காரணமாக இருந்த அந்த நிறுவனத்தை உருவாக்கினதில எங்க அப்பாவுக்கு ஒரு பெரும்பங்கு இருக்கு.என்னது..?நரேந்திர மோடியா...ஆளைவிடுங்கப்பா...
5)ஜாக்கிசான் 80நாட்களில் உலகம் சுற்றிய பயணத்தின் போது நான் தான் ஹாட் ஏர் பலூன் ஓட்டுனர்.உங்க ஊர் தினத்தந்தி சிந்துபாதுக்கும் எனக்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கு.2006ல் நான் ஆரம்பிச்ச அந்த காமிக்ஸ் நிறுவனத்தில் சேகர்கபூர் சித்திரக்காரராய் இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா?
05 July 2007
02 July 2007
[+/-] |
என்னைப் பற்றி ஒரு எட்டு |
"சிவாஜியின் வருகையும் தில்லி அரசியலில் அதன் விளைவுகளும்" என்னும் தலைப்பில் சீஸனல் பதிவு ஒண்ணு போட்டு ஹிட் கவுண்டைக் கூட்டலாம்னு நினைச்சுட்டு இருந்த நேரத்தில் இப்போ நடந்திட்டு இருக்கிற எட்டு வெளையாட்டு ஆட காதல் முரசுவும்,தேவும் கூப்பிட்டு இருக்காங்க..
ஃப்ளேப்ஜாக் திங்க கூலியான்னுட்டு எழுத ஆரம்பிச்சேன்;எழுத ஆரம்பிச்சேன்;எழுதினேன்;எழுதினேன்;இன்னும் எழுதிட்டே இருக்கேன்.நம்ம சோம்பேறித்தனம் தான் உலகப்பிரசித்தி பெற்றதாச்சே...
சரி..சரி..விஷயத்துக்கு வருவோம்.
(1)முதல் கனவு: சின்னப் பையனா தாத்தா ஊரில வளர்ந்த போது,மாதம் ஒரு முறை என்னைக் கூட்டீட்டு தாத்தா சூலூர் வருவார்.பழனியில இருந்து உடுமலை வரும் வழியில் மடத்துக்குளத்துக்கு முன்னாடி ஒரு லெவல் கிராசிங் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட பஸ்ஸில ஏறினா,அந்த லெவல் கிராசிங் புண்ணியத்துல ரயில் பொட்டிகளைப் பார்க்கலாம்.எங்க தாத்தா என்னை அந்த பஸ்ஸுக்குத்தான் கூட்டிட்டி வருவாரு.எனக்கோ ரயில் பெட்டிகளை விட,இரண்டு பக்கமும் பல்வேறு வாகனங்களை நிறுத்தின லெவல் கிராசிங் கேட்டு மேல தான் ஒரு கண்ணு.நான் படிச்சு பெரியவன் ஆனவுடனே,அந்த லெவல் கிராசிங் கேட்மேனாகத் தான் வருவேன்னு கொஞ்ச காலம் சொல்லீட்டு இருந்தேனாம்.ரயில் அந்த ரூட்டில வரலேன்னா அந்த லெவல் கிராசிங்குக்கே வேலை இல்லைன்னு தெரிஞ்ச போது,அந்த ரயிலில் ட்ரைவராகவோ,கண்டக்டராவோ இல்லை க்ளீனராகவோ ஆகப் போறேன்னு சொல்ல ஆரம்பிச்சேன்.முதல் முறையா ரயிலில் பிரயாணம் செஞ்ச பிறகு,அந்த ரயிலில் டீ விற்பனை செய்யும் ஆளாக ஆகப்போறேன்னு சொன்னது இன்னும் நினைவுல இருக்கு.ஹூம்..கடைசியில் இப்போ இங்கே வந்து ஆணி புடுங்கணும்னு என்னோட தலையில எழுதியிருக்கிறதை மாத்த முடியுமா??
(2)வியாபார காந்தம்:இப்படியாகத் தானே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்த யாம் ஒரு சுபயோக சுப தினத்தில் சூலூர் மக்களின் மனக்கேதத்தினைத் தீர்க்கும் பொருட்டு,சூலூரில் எழுந்தருளினோம்.அடச்சீ...சொல்ல வந்த மேட்டரைச் சொல்லாம மொக்கை போடறானேன்னு திட்டறது கேக்குது. சூலூரில எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருந்த காலிவீட்டுல திடீர்னு செமையான கூட்டம்.யாரோ காமாட்சி பீடத்தின் ஆஸ்தான அடிகள் அந்த வீட்டுக்குக் குடி வந்ததனால் எங்க ஏரியாவுக்கே கொஞ்ச நாள் செம்ம மௌசு வந்திடுச்சு.முழுப் பரிச்சை லீவுக்கு என்ன செய்யலாம்னு நகத்தைக் கடிச்சிக்கிட்டு இருந்த சோக்காளிகளுக்கு என்னோட அந்த ஐடியா மொதல்ல கூமுட்டைத்தனமாத்தான் பட்டது.ஆனா வெயில் காலம்,வர்ர ஆளுங்களோட எண்ணிக்கை, சீப்பான ப்ரொடெக்ஷன் காஸ்ட்,அதிக லாபம், தவிரவும் வெட்டுப்பட்டான் குட்டையில நடக்கிற கிரிக்கெட்டு மேட்சுக்கு ட்ரிங்ஸ் ஸ்பான்ஸர் அப்படின்னு கலர் கலரா நான் சொன்னதை நம்பி ஆரம்பிக்கப்பட்டது தான் "சூலூர் கோலா". எலுமிச்சை சூசுக்கு நாங்க வச்ச பேரு அது தான்.நல்லாத்தேன் போச்சு.ஆனா எங்க கெட்ட நேரம் ...ஹும்..மீதிக் கதையை இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம். சப்ளை அண்ட் டிமாண்ட் அப்படின்னு பல ஜல்லிகள் தெரியாத அந்த நாளில் எனக்குள் தோணின அந்த ஐடியாவை செயல்முறைப்படுத்தி லாபமும் சம்பாரிச்சதை நெனச்சா இன்னைக்கும் புல்லரிக்குது.
(3)சுயமரியாதை: அட.இது டிடில மதியம் போடுற மெகா தொடரோட பேர் இல்லைங்க.நான் கொஞ்சம் கௌரவம் பார்க்கிற ஆளு.நண்பர்கள் கிட்டே பார்க்க மாட்டேன்.ஆனா சொந்தக் காரங்ககிட்டே அதிகம் பார்ப்பேன்.எனக்கு மண்டைக்கனம் ஜாஸ்தீன்னு இதனால் அவங்க சொல்லீட்டுப் போனாலும்,யாருக்காகவும் இதனை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.நம்மளை நாமளே மதிக்கலைன்னா யாரு மதிக்கப் போறாங்க சொல்லுங்க??
(4)சினிமா பைத்தியம்: தியெட்டரில் பார்த்த முதல் படமான"பயணங்கள் முடிவதில்லை"யில் ஆரம்பித்தது இந்தப் பைத்தியம்.மின்சாரக் கனவு வேண்டாம்டா, இருவர் போலாம்னு சொன்னப்போ எல்லாரும் என்னை மொறச்சதைச் சொல்லவா,இந்தியன் ஓப்பனிங் ஷோ பார்க்க டிக்கெட்டுக்கு அலைஞ்ச கதையைச் சொல்லவா,"Love actually"பார்த்திட்டு அதனோட திரைக்கதை format பத்தி மூணு மணிநேரம் செந்தில் கூட மொக்கை போட்டதைச் சொல்லவா.??அப்படி ஒரு சினிமா பைத்தியம் நான். ரசனைகளில் மாற்றம் வந்த போதும், கரகாட்டக்காரனை ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டியாவது பார்க்காம தூக்கம் வருவதில்லை.
(5)பொறுப்பான பையன்:எங்க அப்பாவோட அருமைச்சினேகிதர் ஒருவர் எப்போ பார்த்தாலும் என்னைப் பத்தி ஏதாவது நொணை நாயம் சொல்லீட்டே இருப்பார்.அப்படிப்பட்ட அவர்கிட்டயே "கலக்கீட்டயே தம்பீ..." அப்படின்னு பேர் வாங்கிற மாதிரி திட்டமிட்டு செஞ்ச உடம்பொறப்போட கல்யாணம்,மறக்கவே முடியாது.நிச்சயம் முடிஞ்சு இருபதாவது நாள் கல்யாணம்.பயங்கரமா பிளேன் செஞ்சு,பேக்கப் ஏற்பாடுகளைப் பத்தி தீவிரமா யோசிச்சு செஞ்ச நிகழ்வு இது.கல்யாணத்தன்னைக்கு எங்க அப்பா முகத்தில இருந்த அந்த சந்தோஷத்தயும்,எம் மகன் சாதிச்சுட்டான்கிற பெருமித உணர்வையும் பார்க்கிறப்போ இன்னுமொரு உடன்பிறப்பு இருந்திருக்கக் கூடாதுன்னு ஏக்கந்தான் வருது.
(6)கிச்சன் கில்லாடி:இன்னும் ஒரு மாசத்துல அட்டகாசமா சாம்பார் செஞ்சு காமிக்கறேன்னு போட்டீல குதிச்ச அப்புறம் தான் சமையல் இவ்வளவு கஷ்டமான விஷயமான்னே தெரிய வந்தது.எப்படியோ..முட்டி மோதி ஒரு வழியா சமையலும் கத்துக்கிட்டாச்சு.இப்போ சமையல் என்னோட பேஷன்(passion)னு டயலாக் அடிக்கற மாதிரி சமையலிலும் தேறியாச்சேய்.ஊருக்குப் போனா இப்போ அய்யா தான் டீ போடறது.என்னைக் கேட்டா சமையல் நல்லாச் செய்யிறவங்க, நல்ல பொறுமைசாலியா இருப்பாங்கன்னு தான் சொல்லுவேன்.பெங்களூரில் ஒரு சாப்பாட்டுக்கடை போடலாம்னு கொஞ்ச நாளா யோச்சிட்டு இருக்கோம்.
(7)அட்வைஸ் அண்ணாசாமீஸ்: "காதல்ங்கிறதெல்லாம் மாயை.பிராக்டிக்கலா யோசீ"அப்படீங்கற வசனத்தை எங்க காலேஜ் பக்கம் போன நூற்றாண்டில கேட்டிருந்தீங்கன்னா நீங்க கட்டாயம் அ.அண்ணாசாமிக்களைப் பார்த்திருக்கீங்கன்னு அர்த்தம்.அது வேற யாருமில்லை.அடியேனும் அடியேனோட நண்பர் குழாமும் தான்.பாலகுமாரனோட நாவல்கள் படிச்சிட்டு பசங்க மத்தியில டயலாக்கா அடிச்சு வுட்டுட்டு இருந்த காலம் அது.எந்தப் பையனாவது எந்தப் பொண்ணுக்காவது ரூட்டு வுடறான்னு தெரிஞ்ச உடனே,அவனைப் புடிச்சு இந்த மாதிரி ஒரு நாலஞ்சு வஜனத்தை அள்ளி விடாட்டி எங்க கும்பலுக்கே தின்ன சோறு சீரணம் ஆகாது.இப்படி நாங்க பிரிச்சு விட்ட ஜோடிகள் ஏராளம் . காதலிக்கத் தேவையான மன தைரியம் இல்லாத எங்களை ஐடியா அண்ணாசாமீஸ்னு கற்பனை செஞ்சிட்டு அட்வைஸ்ங்கிற பேர்ல நாங்க செஞ்ச அலப்பறையை எப்போ நினைச்சாலும் சிரிப்புதான் வரும்.
(8)அதீத ஞாபக சக்தி:மூணாம் வகுப்பில கணக்குப் பாடம் எடுத்த டீச்சரோட வீட்டுக்காரர் பேரில் இருந்து,ஸ்பீடு படம் இந்தியாவில வெளியிடும் போது ஸ்டார் நிறுவனம் வைச்ச போட்டியில் இருந்து,அழ.வள்ளியப்பா காலமாகும் போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் யார்ங்கிற வரைக்கும் குத்து மதிப்பா ஞாபகத்துக்கு இருக்கும்.ஆனா என்னோட யாஹீ மெயில் பாஸ்வேர்ட்,எங்க வீட்டு லேண்ட்லைன் நம்பர்,எங்க அப்பாவோட வண்டி நம்பர் போன்ற விஷயங்கள் தான் அடிக்கடி குழப்பும். எண்களை விட முகங்களும்,பெயர்களும் அவ்வளவு சீக்கிரமா மறந்திட மாட்டேன்.
இனி, நான் அழைக்க விரும்பும் எட்டு பேர்.
1)இளவஞ்சி
2)ஸ்ருசல்
3)யாத்ரீகன்
4)கேவீஆர்
5)ரம்யா நாகேஸ்வரன்
6)செல்வேந்திரன்
7)சந்திரவதனா
8)கோ.கணேஷ்
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
24 June 2007
[+/-] |
என்ன படம்? என்ன பாடல்? #6 |
1)ஏலா.. முத்தம்மா உம்மனசு எங்கிட்டு
எங்கிட்டதான் சொல்லுடி அம்மா
2)ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கைய்யில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கின்று
3)நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா
நிம்மதி இருக்காது அய்யா நிம்மதி இருக்காது
4)வான் இங்கே..நீலம் அங்கே...
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ??
5)காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
6)நீ உண்டு உண்டு என்றபோதும்
நீ இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமய்யா..
7)இந்த மேக கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோகநாத ராகம்
இந்த ஏழை பாடும் வேதம்
8)தாய்க்கொரு பிழை நேர்ந்தால் மகற்கில்லையோ...
அன்னைத் தமிழுக்கு பிழை நேர்ந்தால் உனக்கில்லையோ...
9)ஒருவன் இதயம் உறங்கும் நிலையில்
அறியாக் குழந்தை நீ வாழ்க...
10)நான் மூணு மெத்தை மாடி கட்டி
மாடி மேல உன்னை வச்சு
பார்க்காமல் போவேனோ சம்போ...
[+/-] |
ஞாயிறு செய்திகள் |
ஞாயிற்றுக்கிழமையில் எந்த ஊரில் இருந்தாலும் செய்தித் தாள் வாசிக்காமல் எனக்கு சோறு இறங்காது.எங்கள் ஏரியாவில் சில கழுதைகளின் ஜீவனம்,எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாங்கும் செய்தித்தாள்களை நம்பியே ஓடிக்கொண்டிருக்கிறது என்று அம்மா சொல்வது உண்மையோ..என்னவோ??.தினமணி,தினமலர்,தினகரன்,இந்து,இண்டியன் எக்ஸ்பிரஸ்,விஜய் டைம்ஸ்,டெக்கான் ஹெரால்ட் என்று சங்கிலித்தொடர் போலே நீளும் எங்களது ஞாயிற்றுக்கிழமைகளின் செய்தித்தாள் பட்டியல்.
மற்றநாட்களில் மருந்துக்கும் தொட்டுப்பார்க்காத இண்டியன் எக்ஸ்பிரசை உச்சி முதல் உள்ளங்கால் வரை புரட்டுவது ஞாயிற்றுக்கிழமையில் தான்.பரத்வாஜ் ரங்கனின் சினிமா விமர்சனம்,எல்.சுரேஷின் முக்கிய கட்டுரை,வாணி கணபதியின் டீன் அட்வைசுகள்,படிக்க சுவாரசியமாக இருக்கும் மேட்ரிமோனியல் விளம்பரங்கள் என்று ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொல்லி வைத்தார்கள்.இங்கே வந்தபிறகும் இந்த ஞாயிறு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் போகவில்லை.இந்தப் பத்திரிக்கை வாங்கினால் இந்த டிவிடி இலவசம்;இது வாங்கினால் இந்தப் புத்தகம் இலவசம்;இது வாங்கினால் இந்த வாலெட் இலவசம் என்று மூன்று பவுண்டுகளுக்கு செய்தித் தாள்களையும்,10 பவுண்டுகள் மதிப்புள்ள இலவச இணைப்புகளையும் வாங்கிய பின்னர் ஏற்படும் பரவச நிலை இருக்கிறதே..ஹூம்..அதெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது ஓய்...
அப்படி இன்றைக்கு வாங்கிய செய்தித் தாள்களில் இருந்து சில சுவாரசியமான செய்திகளைக் கீழே தந்துள்ளேன்.
வரும் புதன்கிழமையன்று பதவிலிருந்து செல்லவிருக்கும் டோனி பிளேர் அடுத்து என்ன செய்யப்போகிறார்,என்ன செய்யலாம் என்று ஆள் ஆளுக்கு கருத்துகளை அள்ளித்தெளித்திருக்கிறார்கள்.அதே போல் அன்று பதவியேற்கவிருக்கும் கார்டன் பிரௌனின் அமைச்சரவையில் இளம்ரத்தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.இப்போதுள்ள 23 பேர் அமைச்சரவையில் இருந்து குறைந்த பட்சம் 9 பேராவது நீக்கப்படுவது உறுதி என்ற செய்தி அனைத்து செய்தித்தாள்களிலும் முதல்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பதின்ம வயதினரிடையே கிறித்துவ மதக்கொள்கையைப் பரப்பும் வகையில் "Mixing it up with the Simpsons"என்ற ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளதாம்.இது மிகவும் பிரபலமான சிம்ஸன்ஸ் என்னும் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் மூலம் கொள்கைகளைப் பரப்பும் முயற்சியாகும்.பல பெருந்தலைகள் இந்த முயற்சியினை வரவேற்று பேட்டி கொடுத்துள்ளார்கள்.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி எந்த ஒரு செய்தித்தாளிலும் செய்தி வரவில்லை.மாறாக 2010ல் புதுதில்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு அங்குள்ள பிச்சைக்காரர்களை சிறையில் அடைக்கும் திட்டம் பற்றி ஒரு பெரிய கட்டுரையே வந்துள்ளது;ஒரு பிச்சைக்காரரின் முழு வண்ணப்படத்துடன்.
நாளை துவங்கவிருக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள்,அடுத்த மாதம் இங்கே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணியின் தற்போதைய நிலைமை போன்ற விளையாட்டு செய்திகள் ஏறத்தாழ எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்துள்ளன.
இப்போதெல்லாம் செய்தித்தாள்களின் விற்பனையினை செய்திகளின் நம்பகத்தன்மையை விட அவை எவ்வாறு பேக்கேஜ் செய்யப்படுகின்றன என்பதே தீர்மானிக்கிறது என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.அங்கிங்கெனாதபடி இந்தக் கூற்று எல்லா இடங்களுக்கும் பொருந்துகிறது.
17 June 2007
[+/-] |
கொட்டும் மழையும் தொட்டுக்க சூடான ஒரு காதல் கதையும் |
மழை வரும் போது நிழலுக்காக டீக் கடையைத் தவிர்த்து எங்கே வேண்டுமானாலும் ஒதுங்கலாம்.அதுவும் சூடான பருப்புவடை,போண்டா போடும் கடைகளை அறவே தவிர்க்க வேண்டும்.பாடி மாஸ் இன்டெக்ஸ்,ஒபேசிட்டி என்று ஜல்லியடிப்பவர்கள் மழைக்குப் பயந்து எங்கேயும் ஒதுங்கக் கூடாது.திரு,திருவென முழிக்காமல் கீழே தொடரவும்.
"அடச்சே,என்ன மழைப்பா??சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்களேன்"என்ற அந்த சிவப்புச்சட்டை ஆசாமியின் குரல் கேட்டு தான் நான் இந்தப் பூவுலகிற்கு மறுபடியும் திரும்பினேன்.
"குடை எடுத்திட்டு வரும்போதெல்லாம் மழை பெய்யறதேயில்லை.இன்னைக்கு மறந்து குடைய வெச்சுட்டு வந்தனோ போச்சு மழ கொட்டிட்டு இருக்கு" என்று அவர் பாட்டுக்கு மழைக்கு தன்னுடன் ஒதுங்கிய சக மனிதர்களுடன் பேச ஆரம்பித்து விட்டார்.நாங்கள் அனைவரும் ஒதுங்கிய இடம் "அஜீத் டீ-இஷ்டால்".அவருக்கு இடம் தந்துவிட்டு கடைக்குள் இருந்து வந்த வடை சுடும் வாசனையின் உபயத்தால் சொர்க்கலோகத்திற்கு மறுபடியும் பயணிக்க ஆரம்பித்தேன்.
வெளியே மழை பாட்டுக்கு வெளுத்துக் கொட்டிக்கொண்டிருந்தது.
"ஹூம்.ஆஹா....அட வடையில் இஞ்சி,கொத்தமல்லித் தழை எல்லாம் போட்டிருக்காங்க போலிருக்கு.இது வெங்காய பக்கொடா பொரிச்செடுக்கும் சத்தம் தான்.அய்யோ..இந்த போண்டா எல்லாம் குண்டு,குண்டா பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு" என்று எனது ஐம்புலன்கள் தகவல்களைச் சேகரித்து தந்த வண்ணம் இருந்தன.
"முழுவதும் வறுக்கப்பட்ட பொருட்களை நீ சுத்தமாத் தவிர்க்கணும்.குறிப்ப உனக்குப் பிடிச்ச நொறுக்குத் தீனிகளான வடை,சிப்ஸ்,பக்கோடா.அப்புறமா,நார்ச்சத்து இருக்கிற பொருளா நிறைய சாப்பிடணும்.என்ன தான் உன்னோட பாடி மாஸ் இன்டெக்ஸ் படி கரெக்டான வெயிட்னாலும்,ஜெனடிக்கலா உங்க வீட்ல அம்மா சைட் எல்லாருமே ஒபீஸ் தான்.ஹல்லோ நான் உன் கிட்ட தான் சொல்லீட்டு இருக்கேன்"என்ற மேடத்தினது அறிவுரை ஒரு மின்னலாய் வெட்டிச் சென்றது.அவளைச் சந்தித்தது முதல் என்னால் நிம்மதியா சாப்பிட முடியலை.அது சரி.. ஒரு நியூட்ரீஷியனிடம் வேறு என்னவிதமான சம்பாஷணை செய்ய முடியும்.
"சார்,ஒரு வடை எடுத்துக்கோங்க"என்ற சிவப்புச் சட்டை ஆசாமியின் தாராள மனப்பான்மைக்கு நன்றி சொல்லி வடையைக் கவனமாய்த் தவிர்த்தேன்.
"என்ன ஆயில் உபயோகிக்கறாங்களோ?எப்பத்த மாவோ?வடை போடற ஆசாமி சுத்த பத்தமாத் தான் சுடுவானா?இந்தப் பாத்திரங்களைப் பார்த்தா இதெல்லாம் குளிச்சே மாமாங்கமாயிருக்கும் போல இருக்கே?ஹூம்...வாசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு.ஆனா,மேடமோட வார்த்தைகளை மெமரியில ஏத்திக்கோ"என்றது எனது மனசாட்சி.பார்வையை மழையின் பக்கம் திருப்பினேன்.இன்னமும் சோவென ஊற்றிக்கொண்டிருந்தது.
"நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியுது சார்.பொது இடத்தில வந்திட்டா நாமும் சோதியில ஐக்கியம் ஆயிடணும்.தவிர,இது நான் ரெகுலராச் சாப்பிடற கடை தான்.சுத்தம் பத்தி எல்லாம் கவலப்படாம ரெண்டு வடய உள்ள தள்ளுங்க.உங்க வயசுக்கு கல்லு,மண்ணு சாப்பிட்டாக் கூட செரிமானம் ஆயிடும்.தங்கம், அந்தச் சட்டினியைக் கொஞ்சம் இங்கே தள்ளு"என்று வடையினை வதம் செய்ய ஆரம்பித்தார் சிவப்புச்சட்டை ஆசாமி.
"அவர் சொல்றதிலும் நியாயம் இருக்கு.வடை போட்ற ஆள் கூட நல்ல துணி தான் போட்டிருக்கான்.முகத்தையும் ஷேவ் பண்ணியிருக்கான்.அவன அசப்பில பாத்தா அல்ட்டிமேட் இஷ்டார் மாதிரிக் கூட இருக்கான்."என்று மனதில் நினைத்துக் கொண்டே தட்டின் மேல் ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்த வடைகளின் மேலே பார்வையை மையப்படுத்தினேன்.
"உங்க ஃபேமிலியில ஹார்ட் டிசீசஸ் வந்து மண்டையப் போட்டவங்க கவுன்ட் இதுவரைக்கும் நாலு.இதுக்கு அவங்களோட உணவு முறைகளும் சரியா உடலை மெயின்டெயின் செய்யாததும் தான் காரணும்னு உனக்கு நல்லாவே தெரியும் தான.இவ்ளோ ஏன் உங்க ராஜியக்காவுக்கு கல்யாணம் தள்ளிப் போறதுக்கு முக்கியக் காரணம் ஷீ இஸ் fat.அதனால நீ வந்து....."ஒரு மின்னல் இடியாய் முழங்கியது நினைவுக்கு வந்து தொலைத்தது.
"வடை சுடுறது மாதிரி அதை அரைக்கிறதும் ஒரு கலை தான்.முழுசா அரைபடாத பருப்பு பல்லுல பட்டுக் கடிபடும் போது இருக்கிற சுகம் இருக்கே.அட.அட.அதுவும் இந்தப் பருப்பு வடை கூடச் சின்ன வெங்காயச் சட்னி தொட்டுட்டு சாப்டா...ஆஹா...இத விட பெங்களூர் பக்கம் மத்தூர் வடைன்னு ஒண்ணு செய்வான் பாரு.அந்த வடையோட டேஸ்டுக்கு நம்ம சொத்தே எழுதிக் கொடுத்தாலும் தகும்"எனது ஆர்வமின்மையை உணர்ந்த சிவப்புச்சட்டை தற்போது பக்கத்திலிருந்த மற்றுமொரு வடைப் பிரியரிடம் உரையாடக் கொண்டிருந்தார்.வெளியே மழையின் வேகம் சற்றுத் தணிந்திருந்தது.
"சே.பாவம் இந்தக் கடைக்காரர்.மழை வந்ததனால சனங்க யாரும் வூட்டை வுட்டு வெளியே வரவே இல்லை.அதனால சரியாக் கூட்டமும் இல்லை;வியாபாரமும் இல்லை.இப்படி மழைக்கு ஒதுங்கினவங்களை நம்பித்தான் இவரோட இன்னத்த பொழப்பே இருக்கு.சுத்தம்,சுகாதாரம்,பி.எம்.ஐ,ஒபேசிட்டி,இன்டர்சிட்டின்னு கண்டதையும் போட்டுக் குழப்பாம ரெண்டு வடைய வாங்கி உள்ள தள்ளுவியா.."என்றது மனசின் குரல்.
"சரி ரெண்டு வடையச் சாப்பிட்டுடு நாளக் காலையில ஜாக்கிங்க்ல ஒரு ரெண்டு ரவுண்டு கூட்டிக்குவோம்.ஆனால்,இந்த சிவப்புச் சட்டைக்கு முன்னால வடை வாங்கிச் சாப்பிடரது நல்லா இருக்காது"என எண்ணிக்கொண்டே மௌனமாய் இருந்தேன்.மெல்லத் தூறலும் நிற்க ஆரம்பித்தது.சிவப்புச்சட்டையும் தனது சகாக்களுடன் கிளம்பியது.
"கிளம்பீட்டாங்கய்யா...கிளம்பீட்டாங்க"என்று மனசில் கூவிக்கொண்டே "ரெண்டு பருப்பு வடை,நிறையச் சட்னியோட குடுங்க"என்றேன்.
"வடையெல்லாம் ஆகிப் போச்சு."
"என்னது......???"
"வடையெல்லாம் தீர்ந்து போச்சு சார்.நல்ல மழக்காலம் பாருங்க.எல்லாம் சூடு ஆறரதுக்கு முந்தியே வித்துப் போகுது.வேற ஏதாவது வேணுமின்னாக் கேளுங்க"என்றும் முழக்கமிட்டவாரே பால் பாக்கெட்டைப் பிரிக்க ஆரம்பித்தார் கடைக்காரர்.
"அப்பாடா...நல்ல வேளை, வடை தீர்ந்திடுச்சு.எந்த எண்ணைல சுட்டதோ??எந்த மாவில சுட்டதோ?சன்டே-அன்னைக்குக் காலையில சீக்கிரம் எழுந்து ஓடரதே பெரிசு.இதில ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ராவா??தப்பிச்சேன்"என்று எச்சிலை விழுங்கியவாறே வடைச்சட்டியை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினேன்.
ஆகவே அன்பர்களே,மறுபடியும் இந்தக் கட்டுரையின் முதல் பாரவைப் படிக்கவும்.
[+/-] |
மீண்டும்... |
வீட்டில் நடந்த ஒரு மகிழ்வு தரும் நிகழ்வு,வெளியூர்ப் பிரயாணம் என்று பம்பரமாய்ச் சுழன்றதில் மாதங்கள் போனதே தெரியவில்லை.
கோடைகாலம் முடிந்த நிலையில் தமிழகத்தில், முதல் மழைக்காலம் வெகு விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறது.புதிதாய்ப் பள்ளி,கல்லூரிகளில் சேர்ந்திருக்கும்/சேரவிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
கடந்த இரண்டு மாதங்களாக சுதந்திரக் காற்றை அனுபவித்து வந்த சிறார் பட்டாளம்,புத்தக மூட்டைகளைச் சுமந்த நிலையில் மீண்டும் கைதிகளாய்.இது எப்போது மாறும் என்று தெரியவில்லை??
தென்மேற்குப் பருவக்காற்று தரவிருக்கும் முதல் துளியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் மக்களது எதிர்பார்ப்பை,இயற்கை நிறைவேற்றட்டும் என்று பிரார்த்திப்போம்.எழுத நிறைய விஷயங்களும்,நேரமும் இருக்கிறது என்பதால் இனிக் கிறுக்கித் தள்ளப்போகிறேன்.
பொறுத்தருள்க...
30 January 2007
[+/-] |
என்ன படம் ? என்ன பாடல் ? #5 |
1)கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே அருகில் அருகில் நான் வரவா??
2)காதல் வழிச்சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை
3)மங்கையின் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழிமறந்தே வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி
4)நீ என்பது நீ மட்டுமல்ல
மூளையின் மூலையில் ஓர் குரல் கேட்கும்
5)தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
6)குயிலிசை போதுமே;அட குயில் முகம் தேவையா?
உணர்வுகள் போதுமே;அதன் உருவமும் தேவையா?
7)உந்தன் மனதைக் கேள் அது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்
8)நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீ என் வாசலைத் தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
9)மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
"வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க" என்றவர் பாடுகின்றார்
10)மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூரக் கள்ளூறுதே...
19 January 2007
[+/-] |
என்ன படம் ? என்ன பாடல் ? #4 (Reloaded) |
1)நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
மலர் கள் ஊறும் வண்ணம் என்று ஓஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா...
2)கண்ணே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளித் தாவும் மான் குட்டி சொல்லிச் சொல்லி தாலாட்டும்
3)கொடியரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைத் தேடும்
மலரே நீ பெண்ணல்லவோ....
4)காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே....
5)சென்ற இடம் காணேன்;சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
6)காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் தாலாட்ட, அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ
7)ஆம்பளையே சேராம பிள்ளை பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்கே குடும்பம் நடத்துது
பொய்யும் சத்தியம் செய்யும்
இந்த பூமி எப்படி உய்யும்
8)நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித்திங்கள் 20ஆம் நாள் திருவளர்செல்வன் சிவராமனுக்கும்,திருவளர் செல்வி ராஜேஸ்வரிக்கும் நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம்சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்.
9)பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பாடும் பறவைகள் ஆனோம்
பசியெடுத்தால் இசையை உண்டு திசைகள் தேடிப்போவோம்
ஒரு தெய்வம் இங்கே வந்து உறவைச் சொல்லு துணையாச்சு
10)தன் பிடிவாதம் விடாது
என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது
நம்மையும் பேச விடாது.
12 January 2007
11 January 2007
[+/-] |
என்ன படம் ? என்ன பாடல் ? #3 |
1)அடி மானே.....
கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சுக்கணும்
ஒரு நூலு அறுந்தாலும் உருண்டோடுமே...
2)கண்ணுக்குள்ளே மின்னும் மையி
உள்ளுக்குள்ளே எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு
3)வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு
வீணாகிப் போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு
வேய்ங்குழல் பாடுது வீணையொடு
4)பருவக்குயில் தவிக்கிறதே...
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்
இளம்வயது தடுக்கிறதே....
5)ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே
அதில் வீணாக விழாதே
நீ விழாதே....
6)சன்மார்க்கங்களும் சப்ததீர்த்தங்களும்
அஷ்டயோகங்களும் நவயாகங்களும்
தொழும் பூங்கழலே மலைமாமகளே
7)வாங்கி வந்த மல்லிகைப்பூ
வாசமின்னும் போகலியே
நட்டுவச்ச பந்தக்காலும்
பள்ளமின்னும் மூடலியே
8) புதுவெள்ளம் சேரும்போது வழியென்ன பாதை என்ன?
புதுக்காத்து வீசுறபோது திசை என்ன தேசம் என்ன?
மனசுக்கு தாள் போட்டு
நீ போ மயிலே, வேணாம் வெளையாட்டு
9)ஆயிரம் பிச்சிப்பூவும் அரும்பரும்பா பூத்தாலும்..
வாசமுள்ள பிச்சியெனக்கு வாய்க்காது எக்காலும்...
10) ஓடை நீரோடை, இந்த உலகம் அது போல...
ஓடும் அது ஓடும் ஒரு நிலையா நில்லாம...