இதுக்கு முன்னமே நான் கண்டெடுத்த புதையல்களை இங்கே போய் வாசிக்கவும்.
"தில்லானா மோகனாம்பாள்" படத்தில பப்பியம்மாவோட நாட்டியக்குழுவில முட்டைக் கண்களோட இருக்கும் அவரைப் பார்த்ததுமே எனக்குப் பிடிச்சிப் போச்சு.அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சு "சாது மிரண்டால்" அப்படின்னு ஒரு படத்தை ஒரு ஞாயிற்றுக்கிழமையில பார்த்ததும் அட இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு தாத்தா கிட்ட கேட்டேன்.அவர் பேரு டி.ஆர்.ராமச்சந்திரன்னு தாத்தா சொல்லித்தான் ரியவந்தது.வாழ்க்கை,சபாபதி,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,அடுத்த வீட்டுப்பெண்..அட...அட...ஒவ்வொரு படமும் ஒரு ரத்தினம் தான்எனக்குப் பிடித்த நடிகர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடிக்க இவருக்கும் ஜேக் நிக்கல்சனுக்கும் ரொம்ப நாளா சண்டை நடந்துட்டு இருக்கு.ஏ.வி.எம்மின் தயாரிப்பில் வந்த வாழ்க்கை திரைப்படம் தான் வைஜயந்திமாலா அவர்களின் முதல் படம்.அதில் எழுத்தாளர் அசோகன்(எ)நாதன் என்னும் ஒரு கதாபாத்திரத்தில் நம்ம சார்வாள் நடிச்சிருப்பார்.இதில் வரும் "உன் கண் உன்னை ஏமாற்றினால்" என்னும் பாட்டு தான் நான் சமீபத்தில் தேடிக் கிடைத்த புதையல்களில் முதல் மாணிக்கம்.ஒரு அற்புதமான துள்ளல் பாடல்.
மக்களே... ரொம்ப வருஷமா சபாபதி,வாழ்க்கை படங்களோட டி.வி.டி அல்லது வி.சி.டி. தேடிக்கிட்டி இருக்கோம்.எங்கே கிடைக்கும்னு யாராவது சொல்லமுடியுமா?
என்னது "அழகிய தமிழ் மகன்" படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில
பொன்மகள் வந்தால் பாடலை ரீ-மிக்ஸ் செஞ்சிட்டு இருக்காங்களா? இதத்தான் நம்ம இசை வசந்தம் பதினைஞ்சு,இருவது வருசத்துக்கு முன்னமேயே செஞ்சுட்டாரே.முதல்வசந்தத்தில் சிக்ஸர் அடிச்ச விக்ரமன் க்ளீன் போல்டான படம்
பெரும்புள்ளி.அந்தப் படத்துக்காக கே.ஜே.யேசுதாஸின் குரலில் இந்தப் பாடலை ரீ-மிக்ஸ் செஞ்சு கொடுத்தாரு நம்ம ராசகுமாரு அய்யா.இதுவும் சமீபத்தில நான் இணையத்தில் தேடி எடுத்த புதையல்.
படத்தோட பேரைக் கேட்ட உடனே ஏதோ நல்ல சண்டைக் காட்சிகள் நிறைந்த படம்னு பார்க்க ஆரம்பிச்சோம்.ஆனா படமோட காலங் காலமா நம்ம கிராமங்களில் இருந்து வரும் ஆண்டான் அடிமைப் பிரச்சினையை அடிப்படையா வந்த படம்.அந்த வயசில அந்தப் படம் ஈர்க்காமப் போனதென்னமோ உண்மை தான்.ஆனா இந்தப் படத்தில வரும் இந்தப் பாடல் என்னைக் கட்டிப்போட்டிடுச்சு.இளையராசாவின் அதிரடி இசையில் கே.ஜே.யேசுதாஸின் குரலில் வரும் அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் நரம்பில் ஒரு உத்வேகம் பிறக்கும்.அதுக்குப் பொறவால நெறையக் கட்சிக் கூட்டங்களில் மட்டுமே கேட்கக் கிடைத்த இப்பாடலை சமீபத்தில் இணையத்தில் கண்டெடுத்தேன்.
கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்திலிருந்து வருகிறது அந்தப் பாடல்.
6 Comments:
நல்ல புதையல் தான். சர்வர் சுந்தரம் கூட கிடைக்க மாட்டேங்குது. வாங்கியோ, இறக்கியோ வைங்க. வந்து வாங்கிக்கிறேன். எதுக்கும் நம்ம மயிலார் கிட்டே கேட்டுருங்க. அவர் கிட்ட இல்லாதததா?
// ILA(a)இளா said...
நல்ல புதையல் தான். சர்வர் சுந்தரம் கூட கிடைக்க மாட்டேங்குது. வாங்கியோ, இறக்கியோ வைங்க. வந்து வாங்கிக்கிறேன். எதுக்கும் நம்ம மயிலார் கிட்டே கேட்டுருங்க. அவர் கிட்ட இல்லாதததா? //
மயிலார் கிட்ட நெறைய இருக்கு. சமீபத்துல கூட வாங்கீருக்காரு. ஆனா இந்த மூனு படமும் இல்ல. மதுரைல சில சினிமா டிவிடிக் கம்பெனிகள் இருக்கு. அங்க எல்லாம் போய்த் தேடிப் பாத்தா கிடைக்கலாம். நானும் முடிஞ்ச வரைக்கும் படங்களைச் சேகரிச்சிக்கிட்டுதான் இருக்கேன்.
சர்வர் சுந்தரம் கிடைக்கும். எங்கிட்ட இல்ல. ஆனா கெடைக்க வாய்ப்பிருக்கு. எங்கயோ டிவிடி பாத்தேன். ஆனா வாங்கலை. சென்னைல ஏவிஎம் சவுண்டு..அதாங்க சங்கராஹால் பக்கத்துல இருக்கே. அங்க போய்ப் பாருங்க. நெறைய இருக்கு.
ஓமப்பொடியாரே,
மொதப் பாட்டு நல்லாருக்கு. முன்னாடியே கேட்டதுதான். ரெண்டாவது பாட்டு நல்லால்ல. ஏசுதாஸ் குரலுக்குப் பொருந்தி வரலை. பாலுவோ மலேசியாவோ பிச்சி உதறீருப்பாங்க. ஏசுதாஸ் குரலுக்குப் பொருத்தமான டி.எம்.எஸ் பாட்டுன்னா "பொன்னை விரும்பும் பூமியிலே" சொல்லலாம். மூனாவது பாட்டும் ரொம்ப அருமையான பாட்டு. அடடா அடடா அடடா டா!
அப்புறம் ஒரு வேண்டுகோள். இவ்ளோ பொதையல்கள எடுக்குறீங்க. எனக்கு ரெண்டு பொதையல் வேணும். தேடிக்குடுங்கய்யா.
1. என் இனிய பொன் நிலாவே - பாட்டில்ல. படம். பாலுமகேந்திரா இயக்கத்துல வந்த படம். பாண்டியராஜன் நடிச்சிருக்காரு. இதுக்கு மெல்லிசை மன்னரு இசைஞானியும் சேந்து இசையமைச்சிருக்காங்க. இந்தப் படத்துல இருக்குற எல்லாப் பாட்டும் எனக்கு வேணும். இந்தப் படத்துல எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியிருக்காங்க.
2. ஞாயிறும் திங்களும் - இந்தப் படம் வெளிவரலை. ஸ்ரீதர் இயக்கத்துல தொடங்கி நின்னு போன படம். சிவாஜி, தேவிகா, கே.பி.சுந்தராம்பாள் நடிக்க இருந்தது. ஆனா பாட்டெல்லாம் பதிவு செஞ்சு ரிலீசும் செஞ்சிட்டாங்களாம். 60களின் சம்பிரதாயம் மாறாம மெல்லிசை மன்னர்தான் இசை. இந்தப் படத்துல என்ன விசேசம்னா....மெல்லிசை மன்னர் இசைல கே.பி.எஸ் பாடி ரெண்டு பாட்டு இருக்கு. பாட்டத்தனையும் எழுதுனது கவியரசரு. இந்தப் படத்துல இருக்குற அத்தனை பாட்டுகளையும் தேடிக் குடுங்கய்யா.
இந்த ரெண்டு புதையல்களையும் கேக்க உதவி செஞ்சா...ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும். புள்ள குட்டியோட நல்லாருப்பீங்க.
இளா,
சர்வர் சுந்தரத்தில் என்ன பாடல் வேணுமின்னு சொல்லுங்க..தேடிப் பார்க்கறேன்...
ஜீரா:
மருதையில மட்டுமில்ல இப்போ மோசர்பெயர் வந்ததில் இருந்து எல்லா ஊர்களிலேயும் இந்த வட்டுகள் கிடைக்குதுன்னு நினைக்கிறேன்.
ஊர்ப்பக்கம் இருக்கறவங்க கிட்ட கேட்டு சொல்றேன்.
//ரெண்டாவது பாட்டு நல்லால்ல. ஏசுதாஸ் குரலுக்குப் பொருந்தி வரலை. பாலுவோ மலேசியாவோ பிச்சி உதறீருப்பாங்க. ஏசுதாஸ் குரலுக்குப் பொருத்தமான டி.எம்.எஸ் பாட்டுன்னா "பொன்னை விரும்பும் பூமியிலே" சொல்லலாம்.//
அப்படியா சொல்றீங்க?? எனக்கும் சில யேசுதாஸ் பாடல்கள் கேட்கும் போது இந்த உணர்வு தான் ஏற்படும்.
நீங்க கேட்ட படங்களைக் குறிச்சு வச்சிருக்கேன்.தேடிக் கிடைச்ச உடனே சொல்லியனுப்பறேன்.
Post a Comment