1)சதிலீலாவதியில் இடம் பெற்ற "மாருகோ மாருகோ" பாடலானது இளையராஜா இசையில் வெளிவந்த 9 படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பாடல்களின் மெட்லீ ஆகும்.எங்கே அந்தப் பாடல்களையும்,அவை இடம் பெற்ற படங்களையும் கூறுங்கள் பார்ப்போம்?
2)இந்த அறுவர் கூட்டணி யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
3)ஆர்.கே.நாராயணனது ஆஸ்தான கதைக்களமான மால்குடியின் மூன்று முக்கிய லேண்ட்மார்க்குகளைக் குறிப்பிடவும்.
4)ஏப்ரல் 1999 - அப்போது பிரபல மாடலாக இருந்த சரிதாவைக் கை பிடிக்க ட்ராக்சூட் அணிந்து கொண்டு, லான்ட்க்ரூஸரில் சர்ச்சிற்குச் சென்றது இன்னமும் நினைவில் இருக்கிறது.நான் நடத்தும் உணவகத்தின் பெயர் "கர்ரி லீவ்ஸ்".எனது பழைய பொழுதுபோக்கு கிரிக்கெட் விளையாடுவது தான்.இப்போது சொல்லுங்கள்,நான் யார்?
5)டில்பெர்ட் நகைச்சுவைத் துணுக்குகளில் கொடூரமாகச் சித்தரிக்கப்படும் மனித வள மேம்பாட்டு(HR) இயக்குனரின் பெயர் என்ன?
எல்லோருக்கும் பிடித்த "எ.ப?எ.பா?"
1)நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா?
வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றிக்கொடி கட்டுங்கள்...
2)இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய், ஒதுக்கீடு கேட்கிறாய்
3)ஏரிக்கரையில் ஜோடிப் பறவைகள் எல்லா அழகும் ஆனந்தம்
ஆடும் கடலினில் ஓடும் படகுகள் அதிலே உலகம் ஆரம்பம்
4)புதுவெள்ளம் சேரும்போது வழியென்ன பாதை என்ன?
புதுக்காத்து வீசுறபோது திசை என்ன தேசம் என்ன?
மனசுக்கு தாள் போட்டு
நீ போ மயிலே, வேணாம் வெளையாட்டு
5)தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
பூமியிலே வெகு சமீபத்தில் தனது காலடித் தடம் பதித்த ஜூனியர் அத்யாபக்கிற்கும்,"எனக்கொரு மகன் பிறந்தான்" என்று பாடிப் பெருங்களிப்பில் ஆழ்ந்துள்ள சீனியர் அத்யாபக்கிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்....(பத்த வச்சிட்டியே பரட்டை....)
03 September 2007
Best of கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி
Subscribe to:
Post Comments (Atom)
17 Comments:
1)மாருகோ மாருகோ - வெற்றி விழா
சுந்தரி நீயும்-மை.ம.கா.ரா.
3)சரயூ நதி
4)சித்து??
பாடல்:
1)செந்தமிழ் தேன்மொழியாள் - குலேபகாவலி
2)ஒருத்தி ஒருவனை - சம்சாரம் அது மின்சாரம்
அப்புறம் அத்யாபக்குன்னா என்னாங்கோ??மைசூர் பாக்கு மாதிரி ஏதாவது ஐட்டமா?
1.
1.மாருகோ மாருகோ - வெற்றி விழா
2.ஆஹா வந்திருச்சி - கல்யாண ராமன்
3. வாடி என் கப்பக் கிழங்கே - அலைகள் ஓய்வதில்லை
4. நேத்து ராத்திரி தூக்கம்- சகலகலா வல்லவன்
5. இஞ்சி இடுப்பழகா - தேவர் மகன்
6. சுந்தரி நீயும் சுந்தரி நானும் - மைக்கேல் மதன் காமராஜன்
7. இளமை இதோ இதோ - சகலகலா வல்லவன்
8. நிலா காயுது - ???
9. என்னடி மீனாட்சி - சிம்லா எக்ஸ்பிரஸ்
10. தண்ணி கருத்திருச்சி- ??
11. போட்டு வைத்த காதல் திட்டம் - கலைஞன்
12. ராஜா கைய வச்சா - அபூர்வ சகோதரர்கள்
13. ரம்பம் ஆரம்பம் - மைக்கேல் மதன் காமராஜன்
14. பொன் மேனி உருகுதே - மூன்றாம் பிறை
=====
2. ஜெமினியின் வாரிசுகள்
3. அரவிந்தா டி சில்வா
எ.ப?எ.பா?
==========
1. படிக்காதவன் - ஒரு கூட்டுக் கிளியாக
/இந்த அறுவர் கூட்டணி யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்/
Actor Gemini Ganesan's daughters.
Rumya
2. காதல் மன்னன் ஜெமினி கணேசன் இல்லத்தினர் (மகள்கள் ?).
( மருத்துவர் கமலா செல்வராஜ், நடிகை ரேகா இருவர் தவிர மற்றவர் பெயர் தெரியவில்லை)
எ.ப.? எ.பா.?
5 - மூன்று முடிச்சு - வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள்
1 - 14 பாட்டுமா? கொஞ்சம் டைம் வேணும்
2 - ஜெமினி கணேசன் வாரிசுகள். இந்த கேள்வி ரிப்பீட்டோ?
3 -
4 -
5 - Dogbert :-)
2 - நீ ஆண்டவனா
மீதி எதுவும் தெரியல :-(
அட "நான் அவன் இல்லை" வாருமய்யா..
என்னாது "ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்" பாட்டு வந்த படம் "சம்சாரம் அது மின்சாரமா"???
நல்லா இருங்கைய்யா....
அடடே சவுண்ட்பார்ட்டீ...
என்னடி மீனாட்சி,போட்டு வைத்த காதல் திட்டம் படங்கள் தப்பாச்சுதே...
கலக்கலான முயற்சி :-)
வாங்க ரும்யா(RUMYA->ரும்யாவா இல்ல ரம்யாவா??)
இன்னாரோட வாரிசுகள்னு சொன்னது சரி..அவங்க பேர் சொல்லியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமே...
பாலராஜன்கீதா:
இரண்டு பதில்களும் சரியானவையே..
பிரகாஷ்:
எல்லாக் கேள்வியும் ரிப்பீட்டு தானுங்களே...தலைப்பைக் கொஞ்சம் இன்னொருவாட்டி படிச்சுத் தான் பாக்கறது :-D
நல்லவேளை..இந்த அத்யாபக் மேட்டர் இன்னான்னு யாரும் என் தலையை உருட்டலை...அதுவரைக்கும் பொழச்சேன் :-))))
//நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா?
வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றிக்கொடி கட்டுங்கள்...//
Film Padikathavan
Song oru kootu kizhiyaga
வாத்தி வீட்டுல்ல புது வரவா? ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் வாத்தியாரே....
2. எல்லோரும் ஜெமினியின் மகள்கள்:
1.கமலா செல்வராஜ்
2.ரேகா
3.சாவித்திரி மகள்
4.நாராயணி
5.கார்த்திக்குடன் ஒரேபடத்தில் நடித்துவிட்டு பின் டாக்டரானவர்
ரேகா தவிர்த்து மீதி எல்லோரையுமே டாக்டருக்கு படிக்கவைத்தார் ஜெமினின்னு கேள்விப்பட்டிருக்கேன்.
எ.ப? எ.பா?
1. பாட்டு: வெற்றிநிச்சயம் இது வேத சத்தியம் படம் :அண்ணாமலை
பாடல்: வைரமுத்து இசை: தேவா
மீதி எல்லா கேள்விகளும் அவுட் ஆஃப் சிலபஸ் (எனக்கு) :-))
ஹரிஹரன் நல்ல முயற்சி.கூகிள் இருக்கிறவரைக்கும் அவுட் ஆஃப் சிலபஸ் என்னும் பேச்சுக்கே இடமில்லையாமே?? நெசமாவா??
:-)
1. மாருகோ மாருகோ மாருகயீ - வெற்றி விழா
ஆகா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் - கல்யாணராமன்
வாடி எங்கப்பக் கெழங்கே - அலைகள் ஓய்வதில்லை
2. முதலில் ஜெமினி கணேசனின் மனைவியார். அடுத்து அவரது மகள்கள். கமலா செல்வராஜ், ரேக்கா, ஜிஜி தெரிகிறது. மற்ற பெயர்கள் தெரியாது.
3. பள்ளிக்கூடம், சரயூ நதிக்கரை, தோப்பு
எ.பா.எ.ப
1. படிக்காதவன் - ஒரு கூட்டுக்கிளியாக
3. நினைத்தாலே இனிக்கும் - யாதும் ஊரே யாவரும் கேளிர்
5. மூன்று முடிச்சு - வசந்தகால நதிகளிலே
நீ ஆண்டவனா... வானமே எல்லை (#2)
#3 - 'பச்சைக்கிளிகள் தோளோடு' என்று சொல்லியிருப்பேன்
//4)புதுவெள்ளம் சேரும்போது வழியென்ன பாதை என்ன?
புதுக்காத்து வீசுறபோது திசை என்ன தேசம் என்ன?
மனசுக்கு தாள் போட்டு
நீ போ மயிலே, வேணாம் வெளையாட்டு//
-சின்னப் பொண்ணு சேலை.....
-மலையூர் மம்பட்டியான்
அன்புடன்
விபின்
Senior adyapak - Ilavanji??
..Aadhi
Post a Comment