வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு நாளை பிறந்த நாளாம்.இருந்தது என்னமோ இருபது மாதங்கள் என்றாலும்,சென்னை மீதான காதல் இன்னும் குறையவில்லை.
ஹூம் என்று என்னைப் போலவே பெருமூச்சு விடும் புண்ணியவான்களே அப்படியே என்னுடைய கேள்விகளுக்குப் பதிலையும் தாருங்களேன்.....
1.கீழ்க்கண்ட இடங்களது பெயர்களை விரிவு படுத்தவும்.
Ex:T.நகர் - தியாகராய நகர்
G.N.செட்டி தெரு -
K.K.நகர் -
T.T.K.சாலை -
2.சென்னையின் புறநகர்ப் பகுதியிலுள்ள இந்தக் கட்டிடம் கட்டுமானத்தில் பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளது.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தங்களது கட்டுமானத்திறமையை வெளிப்படுத்தவே அந்தக் கட்டிடத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் அந்தக் கட்டிடத்தைக் கட்டியதாம்.
3.பொருத்துக.
வானவில் FM - 98.3
அண்ணா பல்கலை FM - 92.7
பிக் FM - 101.4
ஆஹா FM - 90.4
ரேடியோ மிர்ச்சி FM - 91.9
4.கோடம்பாக்கத்திற்கும்,பல்லாவரத்திற்க்கும் இடைப்பட்ட தொடர்வண்டி நிலையங்களைக் கூறுக.
5.கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றைப் பிரிக்கவும்.
ராசி சில்க் எம்போரியம்
சென்னை சில்க்ஸ்
குமரன் சில்க்ஸ்
நல்லி 100
6.சென்னைத் தமிழைத் திரையில் பாடிப் பிரபலமாக்கிய பாடல்கள் மூன்று சொல்லவும்.
7.மேற்கு மாம்பலம் இருப்பதைப் போலவே கிழக்கு மாம்பலம் என்று ஒன்று உண்டா?
8.தி.நகர் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பெரியார் சிலைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.அது என்ன?
9.சுப்பு சென்னைக்கு வருவது அது தான் முதல் முறை.சுப்பு இருப்பதோ தி.நகர் மேன்ஷனில்.சுப்புவின் தோழி ருக்கு இருப்பதோ ஈக்காடுதாங்கலில்.ருக்குவைப் பார்க்க ஆட்டோவில் செல்லும் சுப்புவை ஆட்டோ ஓட்டுநர்கள் ஊர் சுற்றிக் காண்பித்து ஏமாற்றாமல் இருக்குமாறு அவனுக்கான ரூட் மேப்பினைத் தந்து உதவமுடியுமா?
10.மகாத்மா காந்தி எத்தனை முறை சென்னை வந்திருக்கிறார்?
21 August 2007
சென்னை குறித்த சில கேள்விகள்
குறிச்சொல் குவிஸு
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
G.N. CHETTY - கோவிந்தப்ப நாயக்கன்
K.K NAGAR - கலைஞர் கருணாநிதி
T.T.K -கிருஷ்னமாச்சாரி
4. கோடம்பாக்கம்
,நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம், மாம்பலம், சைதாபேட், கிண்டி,
தாமஸ் மலை,பல்லாவரம்!
6.மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
, கண்மணி என்
காதலி (தேனாம்பேட்டை சூப்பர் மார்கெட் இறங்கு), ஜாம்பஜார் ஜக்கு (மனேரமா)
வாங்க அனானி.சொன்ன மூணு பதில்களும் சரியே...
மத்த கேள்விகள் எல்லாம் கஷ்டமா இருக்கோ??
நானும் ஏற்கனவே ஒரு சென்னை பிறந்த நாள் என்று பதிவு போட்டாச்சு!
ஆமாம் உங்கள் கேள்விகளின் நோக்கம் என்ன,?
answers for your questions:
1)
a)G.N chetti st- கோபதி நாரயணன் செட்டி தெரு
b)k.k nagar கலைஞர் கருணானிதி நகர்
c)T.T.K road- டி.டி.கிருஷ்ணாமாச்சாரி சாலை(பழைய பெயர் மவ்பரிஸ் சாலை )
2)எல்& டீ நிறுவன அலுவலகம், நந்தம்பாக்கம்.
3)இந்த எப்.எம் அலைவரிசையை சொல்ல முடியும் ஆனால் அவை தொலைக்காட்சிகளை போல கொல்வதால் சொல்ல விரும்பவில்லை!
4)தி.நகர், சைதை, கிண்டி, பழவந்தாங்கள், திரிசூலம்,பல்லாவரம்
5)ராசி சில்க் எம்போரியம் , அது தி.நகரில் இல்லை.(கோடம்பாக்கம்?)
6)
1) வா வாத்தியாரே ஊட்டாண்ட வராங்காட்டியும் விட மாட்டேன்,
2)நீ சால்ட் கோட்டை நான் சைதா பேட்டை...
3)அண்ணா நகர் ஆண்டாளு அயனாவரம் கோபாலு ...
7)ஓல்ட் மாம்பலம் என்று உண்டு அதில் இருந்து வேறு படுத்த தான் வெஸ்ட் மாம்பலம்.(இன்றும் சைதா பேட்டையில் ஓல்ட் மாம்பலம் சாலைனு ஒன்று இருக்கு)
8)அண்ண அவர்கள் வைத்த சிலையா அது!
9)தி நகரில் எந்த இடம் என்று சொல்லவில்லை. தி நகர் - கண்ணம்மா பேட்டை- மேட்டுப்பாளையம் , அஷோக் நகர் - ஜாபர்கான் கான் பேட்டை - ஈக்காட்டு தாங்கல்
10)இரண்டு முறை காந்தி சென்னை வந்துள்ளார் என நினைக்கிறேன்.
அஞ்சு கேள்விகளுக்குக் கரீட்டா பதில் சொல்லியிருக்கீங்க வவ்வால்.
வெளியூர் போன பின்னரும் சென்னையை மறக்காமல் என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் இருக்காங்க என்பதைத் தெரிந்து கொள்வது தான் இந்தக் கேள்விகளின் நோக்கம்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க??? :-))))
சென்னைவிட்டுப் போய் இருபத்து மூணு வருடமாச்சு!
எப்படி இருந்த சென்னை எப்படி ஆயிடுச்சோ!:-)
1.கீழ்க்கண்ட இடங்களது பெயர்களை விரிவு படுத்தவும்.
Ex:T.நகர் - தியாகராய நகர்
G.N.செட்டி தெரு -Gopathi chetty street
K.K.நகர் -kalangar karunanidhi
T.T.K.சாலை -t.t. krishnama(chari)st
2.சென்னையின் புறநகர்ப் பகுதியிலுள்ள இந்தக் கட்டிடம் கட்டுமானத்தில் பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளது.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தங்களது கட்டுமானத்திறமையை வெளிப்படுத்தவே அந்தக் கட்டிடத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் அந்தக் கட்டிடத்தைக் கட்டியதாம். L&T
4.கோடம்பாக்கத்திற்கும்,பல்லாவரத்திற்க்கும் இடைப்பட்ட தொடர்வண்டி நிலையங்களைக் கூறுக. mambalam, saidapet, guindy, trisoolam(new airport)
5.கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றைப் பிரிக்கவும்.
ராசி சில்க் எம்போரியம் *****
சென்னை சில்க்ஸ்
குமரன் சில்க்ஸ்
நல்லி 100
6.சென்னைத் தமிழைத் திரையில் பாடிப் பிரபலமாக்கிய பாடல்கள் மூன்று சொல்லவும்.
vadivel in kadalan (betarap),
7.மேற்கு மாம்பலம் இருப்பதைப் போலவே கிழக்கு மாம்பலம் என்று ஒன்று உண்டா? no
10.மகாத்மா காந்தி எத்தனை முறை சென்னை வந்திருக்கிறார்? 5
வாங்க அனானி நெ2..
சொன்ன பதில்களில் பாதிப் பாதி சரியானவை...
50-50 உங்களுக்குப் பிடிச்ச பிஸ்கட்டோ?? :-))))
1)அ - தெரியலை
ஆ - கலைஞர் கருணாநிதி
இ - TT க்ருஷ்ணமாச்சாரி
2) L&T
3) தெரியலையேப்பா
4) கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம்
5) ராசி - கிளை ஒன்று மவுண்ட் ரோடில் உண்டு
6) வா வாத்யாரே வூட்டாண்ட,
7) மாம்பலம் என உண்டு. இப்பொழுது தி.நகர், சி.ஐ.டி நகர் என அழைக்கப்படும் ஏரியாதான் அது.
8) தி.நகர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரே சிலை! (தெரியலை அப்படிங்கறத சொல்ல இன்னும் ஒரு வழி!)
9) எப்படி இருந்தாலும் ஏமாத்தப் போறாங்க. ஒரு பிக்ஸ்ட் ரேட் பேசிக்கச் சொல்லுங்க. சந்து பொந்து எல்லாம் நுழைஞ்சு ஷார்ட் ரூட்டா போவாங்க.
10) தெரியலையே...
வாங்க இ.கொ.
நாலு கேள்விக்கு சரியா பதில் சொல்லியிருக்கீங்க...
சென்னை ஆட்டோவில ஃபிக்ஸட் ரேட்டா??? கஷ்டம் தான்...
Post a Comment