09 August 2007

The Shawshank Redemption

சிறைச்சாலை என்னும் ஒரு இடத்தைப் பற்றிய எனது முதல் நினைவு இன்னும் பசுமையாகவே இருக்கிறது.மிசா காலத்தில் கைதாகி சிறையில் என் மாமா இருந்த பிரதாபங்களைச் சிறு வயதில் கேட்டு,என்னை அங்கே கூட்டிப்போனால் தான் ஆச்சு என்று அழத் தொடங்கிவிட்டேனாம்.அதற்குப் பிறகு கவிதா தியேட்டரில் மேட்னி ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு அருகில் உள்ள மத்தியசிறையை அப்பா காண்பித்தது இன்னும் கண்ணிலேயே நிற்கிறது.Photo Sharing and Video Hosting at Photobucketகைதி கண்ணாயிரம்,உதய கீதம் மாதிரியான படங்களைப் பார்த்து வெளியே இருக்கிறதை விட உள்ளே இருக்கிற வாழ்க்கை நல்லா தான் இருக்கும் போல;அப்புறம் ஏன் உள்ளே போகறதுக்கு எல்லாரும் இவ்வளவு வருத்தப்படறாங்க என்று நினைத்ததுண்டு.மகாநதியைப் பார்த்த பின்புதான் ஜெயிலுக்குள் இருக்கும் இன்னொரு உலகம் கொஞ்சம் கொஞ்சம் பிடிபடத் துவங்கியது.

ஏறத்தாழ அதே காலகட்டத்தில் வெளிவந்த ஹாலிவுட் படம் தான் "ஷாஷங்க் ரிடெம்ப்ட்ஷன்".டிம் ராபின்ஸ்,மார்கன் ஃப்ரீமேன் நடிப்பில் ஃப்ராங்க் டரோபண்ட் என்னும் இயக்குநரின் இயக்கத்தில் 1994ல் வெளியானது இந்தப் படம்.நிறைய உரையாடல்கள் உள்ள படம்.கதாநாயகி கிடையாது.காதல் காட்சிகள் கிடையாது.எல்லா காட்சிகளும்,படு யதார்த்தமாய் கவிதை மாதிரி செதுக்கியிருக்கிறார்கள்.இந்த படம் முழுவதும் ஷாஷங்க் என்னும் பெயர் போன ஒரு சிறைச்சாலையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே ஆகும்.

ஷாஷங்க் சிறை கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனது.கைதிகள் யாராவது வாயைத் திறந்தால் என்ன நடக்கும் என்பதை உங்களது கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.மனைவியையும்,அவளது கள்ளக் காதலனையும் சுட்டு விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குள் வரும் வங்கி அதிகாரி,ஆண்டியாக டிம் ராபின்ஸ்.அதே சிறைக்குள்,இருபது வருடங்களாக வாழ்ந்து,சிறைக்குள் எந்தப் பொருளையும் கொண்டு வருவதற்கு சக்தி படைத்த குற்றவாளி,ரெட்டாக மார்கன் ஃப்ரீமேன்.இந்த இரு முக்கியமான கதாபாத்திரங்களையும் வைத்துதான் கதை பின்னப்பட்டிருக்கிறது.

உலகில் நம்பிக்கையை விட மேலான விஷயம் ஒன்றுமில்லை.இதனை மையமாகக் கொண்டு சம்பவங்களால் கதை நகருகிறது.பல திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் இருப்பதால் மேற்கொண்டு கதையை விவரிக்க இயலவில்லல.

எனக்குப் பிடித்த காட்சிகள்:
1)குற்றவாளிகள் கடினமான வேலை செய்ய வைக்கப்படும் போது,தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆண்டி பீர் வாங்கிக் கொடுத்தல்.
2)உள்ளேயே நீண்ட காலம் இருந்ததால்,விடுதலை ஆன பின்னரும் இந்த உலகில் வாழ முடியாமல் ப்ரூக்ஸ் எடுக்கும் முடிவு
3)பல வருடங்களாக விடாமல் அனுப்பபடும் ஆண்டியின் மனுக்களின் பலனாக சிறைச்சாலை நூலகத்துக்கு அரசாங்கத்திடமிருந்து மானியம் கிடைக்கும் காட்சி
4)"முதலில் இந்த சிறைச்சாலையை வெறுப்போம்.பிறகு அதற்கு பழகிக் கொள்வோம்.கொஞ்ச நாளில் அதைச் சார்ந்து வாழ ஆரம்பித்து விடுவோம்" என்பதாய்ச் செல்லும் ரெட்டின் சொல்லாடல்
5)ரெட்டுக்கு பாரோல் கிடைப்பதற்கு முன்னால் நடக்கும் நேர்காணல் காட்சி.

உங்களையும் அறியாமல் ஒன்றிப் போய்விடும் சுவாரசியமான அனுபவத்தைப் பெற வேண்டுமானால் கட்டாயம் பாருங்கள்.

13 Comments:

ILA (a) இளா said...

//அனுபவத்தைப் பெற வேண்டுமானால் கட்டாயம் பாருங்கள்.//
Yes Sure

G.Ragavan said...

நல்ல வெமர்சனம். பாக்குறோம். ஆனா அதுக்கு லிங்குசாமி...வேணுமே...

jeevagv said...

சுவையாக இருந்தது விமர்சனம்!

Anonymous said...

மூணுதடவை பாத்திருப்பேன் இந்தப்படத்தை. பேரரசு மாதிரி ஆளுங்கள தினமும் பாக்க சொல்லணுங்க.

Anonymous said...

இதுல நடிச்சதுக்கு மோர்கன் ஃபிரீமன்னுக்கு அகாடமி விருது குடுத்ததா ஞாபகம்.
"அலெக்ஸாண்டர் டம் ஆஸ்" விழுந்து விழுந்து சிரிச்சிருக்கேன்.

SurveySan said...

yep. ரொம்ப நல்ல படம் இது.

நம்ம கிட்ட டி.வி.டி இருக்கு. வருஷத்துக்கு ஒரு தரம் பாத்துடரது :)

Anonymous said...

This is a bit old film yet being discussed. In the last couple of weeks itself i saw two or three blogs on this film.

Needless to say a wonderful one. I like the punch line: "Andy crawled to freedom through five hundred yards of shit-smelling foulness I can't even imagine. Or maybe I just don't want to. Five hundred yards. That's the length of five football fields, just shy of half a mile."

You might like this page:
http://en.wikiquote.org/wiki/The_Shawshank_Redemption

கப்பி | Kappi said...

ரொம்ப நல்ல படம் தல!

//உள்ளேயே நீண்ட காலம் இருந்ததால்,விடுதலை ஆன பின்னரும் இந்த உலகில் வாழ முடியாமல் ப்ரூக்ஸ் எடுக்கும் முடிவு//

ரொம்பவே நெகிழவைத்த சீன் அது...இது போல் படம் முழுக்க நம்மை கட்டிப்போட்டுவிடுவார்கள்!

பெத்தராயுடு said...

அருமையான படம். சொந்த dvd பிரதி வச்சிருக்கம்ல.

//மூணுதடவை பாத்திருப்பேன் இந்தப்படத்தை. பேரரசு மாதிரி ஆளுங்கள தினமும் பாக்க சொல்லணுங்க//

தினமும் பாத்தா அவுங்கல்லாம் சேது ஆயிடுவாங்க. நமக்கு நல்ல காலம் பொறக்கும்.

@ஜீரா,

லிங்குசாமி இங்கன கீறார்..

http://www.mininova.org/search/shawshank/4

Sud Gopal said...

கிஸான்,
இப்படித்தான் ஒவ்வொரு பட விமர்சனத்துக்கும் சொல்றீங்க.இதில எத்தனை படங்க இதிவரைக்கும் பார்த்து முடிச்சிருக்கீங்க??

ஜீரா:
புது ஃபோட்டோ,புது டீ ஷர்ட்..கலக்குறேள் போங்கோ ;-)

லிங்குசாமியை நம்ம பெத்தராயுடு கொடுத்திருக்கிறார் பார்த்திக்கிடுங்க.

Sud Gopal said...

ஜீவா:
_/\_

சின்ன அம்மிணி:
பேரரசுவா?? வெளங்கிடும்ம்ம்...தகவலுக்கு நன்னீ...

சர்வேசன்:
இந்தப் படத்தை நம்மூர்ல(ஏதோ ஒரு மொழியில்) எடுத்தா ஓடுமா,ஓடாதான்னு ஒரு சர்வே வைக்கப்படாதா?

Sud Gopal said...

ஸ்ரீகாந்த்,கப்பி,பெத்தராயுடு வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி.

அடுத்த ரிலீஸ் வால் ஸ்ட்ரீட் ஆகவோ இல்லை த பிக் ஃபேட் க்ரீக் வெட்டிங்காகவோ இருக்கலாம்னு பட்சி சொல்லுது :-D

Anonymous said...

ஆஹா ஆஹா ... நான் மிகவும் ரசித்த பல படங்களுள் ஒன்று. அதுவும் என் அபிமான நடிகர்களுள் ஒருவரான மார்கன் ஃப்ரீமேன் படம் வேறு. போர் அடிக்கும்போதெல்லாம் Cassette-ஐ சுழலவிடுவேன்.

நான் ரசித்த வசனங்கள் "Certain birds are not meant to be caged" மற்றும் "Outside I was innocent, straight as an arrow and I had to come to the jail to become a crook" ('குற்றவாளிகள் உருவாவதில்லை' என்ற நமது வாக்கியத்தை நினைவுபடுத்தியது)

காட்சிகள் : மார்கன் ஃப்ரீமேன் பரோலில் இருக்கையில் ஆண்டி சொன்ன இடத்துக்கு சென்று கடிதமும் பணமும் இருக்கும் கவரை கண்டுபிடிக்கும் இடம். சுற்றிலும் பச்சையும், பூக்களும் பூச்சிகளுமாய் அருமையான லொக்கேஷன். ஆண்டி சொல்வதுபோலவே Robert Frost கவிதையில் வருவது போல ...

மற்றும் ஜீஹாட்டனேயோ-வில் தன்னந்தனியே கடற்கரையில் உடைந்துபோன படகை ஆண்டி செப்பனிட்டுக்கொண்டிருக்கும் காட்சி ... நல்லதொரு தொடக்கத்திற்கு வித்திடும் அழகான allegory. (உடைந்த படகை 20 வருடங்களாக வீணாக கழிந்த அவனது வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்)

அன்புடன்
முத்துக்குமார்.