04 August 2007

செல்ஃபோன் பேட்டரி சக்தியை சேமிக்க...

நான் பொறியியல் படிச்சிக்கிட்டு இருந்தப்போ அப்பாவோட தோஸ்து கிட்ட என்னோட ஸ்பெஷலைசேஷனை சொன்ன உடனே அவர் கேட்ட கேள்வி எங்க வீட்டு டீ.வி.,டெலிஃபோனு புட்டுக்கிச்சுன்னா ரிப்பேர் செஞ்சு தர முடியுமான்னு தான். லேப்பில சால்டரிங் வைக்கவே கை ஆடும் இந்த லட்சணத்தில நானாவது,டீ.வி ரிப்பேர் பண்றதாவதுன்னு மனசில நெனச்சிட்டே குத்து மதிப்பா தலையாட்டி வைப்பேன்.ஆனா காலேஜ் முடிக்கற வரைக்கும் அவரோட வீட்டில எந்தப் பிரச்சினையும் வரலைங்கறதால நான் எப்படியோ பொழச்சுட்டேன்.

இப்போ பொட்டி தட்ட வந்திட்டதால் அவர் பழைய குப்பைகளை எல்லாம் கிளறுவதில்லை.திடீர்னு கொஞ்ச நாள் முன்னாடி,"நீயும் தான் அஞ்சாறு வருசமா செல்ஃபோன்ல குப்பையக் கொட்டிட்டு இருக்கறியே.என்னோட ஃபோன்ல ஒரு பிரச்சினை.சரி செஞ்சு கொடுக்க முடியுமான்னு" கேட்டார்.வந்தவர் ஃபோனையும் கையோடு கொண்டு வந்திருந்தார். அவரோட செல்ஃபோன்ல அட்ரஸ்புக்கை ஓப்பன் செய்யவே முடியலை.என்ன பிரச்சினைன்னே இந்த மரமண்டைக்கு எட்டலை.சரி கடைசியா விண்டோஸ் ஃபார்முலாப்படி ரீஸ்டார்ட் செஞ்சு பார்ப்போமேன்னு அவர் கிட்ட விஷயத்தை சொல்லாம ஃபோனை ரீஸ்டார்ட் செஞ்சேன்..

அடடா....ஃபோன் சும்மா நச்சுன்னு வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு.தொழில் ரகசியத்தை அவருக்கு சொல்லலை.இல்லேன்னா இன்னேரம் என்பேரு ரிப்பேராப் போயிருக்கும்.ஆனா செல்ஃபோன் உபயோகப்படுத்தறவங்க தங்களோட பேட்டரி சக்தியை நீண்ட நாட்களுக்கு இருப்பில் வைக்க சில டிப்ஸைக் கீழே கொடுத்திருக்கேன்.செயல் படுத்திப்பார்த்துட்டுக் கைமேல பலன் இருந்ததுன்னா உங்களுடைய நன்கொடைகளை அனுப்ப வேண்டிய இடம் எதுன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்...

1)உங்களோட செல்ஃபோனில் பேக்ரவுண்ட் இமேஜ் இல்லாம வைக்கலாம்.
2)ப்ளுடூத் வசதியை நிறுத்தி வைக்கலாம்.தேவையான போது செட்டிங்க்ஸ் போயி அதை ஆன் செஞ்சுக்கலாம்.
3)உங்களோட இருப்பிடத்தைத் தெரிவிக்கும் வசதியை நிறுத்தி வைக்கலாம்.(எப்படியும் முக்காவாசி நேரம் சரியான இடத்தை நம்ம ஊரு ப்ரொவைடர்ஸ் சொல்றது கிடையாது)
4)ஃப்ரீ கால் கிடைச்ச குசியில கால நேரம் தெரியாம அடுத்தவங்களை ஃபோன் போட்டு டார்ச்சர் பண்ணாம இருக்கலாம்.

மீதி இன்னொரு நாளைக்கு...

6 Comments:

jeevagv said...

:-)
இனிது!
:-)

வவ்வால் said...

மிச்சம் மீதிய எல்லாம் நானே சொல்லிடுறேன்!

*அலைபேசியை முழுதும் அணைத்து வைக்கலாம்.

* அப்படியே பேசித்தான் ஆக வேண்டும் என்றால் நமக்கு அழைப்பு வந்தாலும் நண்பர்களின் அலைப்பேசி எண்ணை வாங்கி இந்த எண்ணுக்கு இப்போ அழை பேசிக்கலாம் என அருகில் இருக்கும் நண்பரின் தலையை தடவலாம்!

* ரொம்பவும் மின்கலத்தின் சக்தியை சேமிக்க வேண்டும் என்றால் ... வீட்டிலேயே அலைபேசியை வைத்து விட்டு வரலாம்.

* அலைப்பேசி பயன்படுத்துவதையே விட்டொழிக்கலாம். காசும் மிச்சம் ஆகும்!

Unknown said...

்முக்கியமான டிப்ஸ மறந்துட்டீங்களே...

செல்போன ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிடலாம் :)

Subramanian said...

ராத்திரி படுக்கப் போகும்போது ஆஃப் பண்ணி வைக்கலாம்.

தருமி said...

இருக்கிற செல்போனை கிடப்பில போடணும்னா, அதில இருக்கிற செல்லை எப்படி உயிரோடு வச்சிக்கிறதுன்னு சொல்லுங்களேன்...

ILA (a) இளா said...

அட இன்னொரு வழி இருக்குங்க. இதுக்கு பக்கத்துல கண்டிப்பா ஒரு நீரோடை வேணும். இல்லாட்டி இந்தப் பின்னூட்டத்தை படிக்க வேணாம். நேரா ஆறோ குளமோ அங்கே போய் நின்னுட்டு, கையில் அலைபேசிய எடுத்துக்குங்க. உங்க தலை பேசியால மூனுதடவை சுத்தி தூன்னு துப்பி தூக்கி எறிஞ்சுருங்க. அவ்ளோதான். இதுக்கு என் மொபைல் கேட்க கூடாது, ஏன்னா அதை இப்போ உபயோகப்படுத்துற பழக்கம் இல்லே.ஹிஹி