சுப்பு & ருக்கு -1 படிக்க
சுப்புவுக்கும்,ருக்குவுக்கும் திருமணம் ஆவதற்கு முந்தைய காலகட்டம்.சுப்பு,ருக்குவுடன் ஒரே கல்லூரியில் படித்த ஜிக்குவின்(ருக்குவின் மாமா பெண்)திருமணத்திற்கு சுப்புவும் வந்திருக்கிறான்..
ருக்கு:சுப்பு.இவங்க என்னோட மாமா.ஜிக்குவோட பெரியப்பா.மாமா இது எங்க கிளாஸ் மேட் சுப்பு.
சுப்பு:(பார்த்தா அந்தக் காலத்து மனுஷங்களாத் தெரியறாங்க.கை குடுத்தா தப்பா நெனச்சுக்குவாங்களோ??சேஃபா வணக்கம் போட்டு வைப்போம்.) வணக்கம் சார்.
ருக்குவின் மாமா:ஓ..வணக்கம்.வணக்கம்.தம்பி சாப்டாச்சா??.டிஃபன் எல்லாம் எப்படி இருந்தது?
சுப்பு:(ஹுக்கும்.இது ஒண்ணு தான் குறைச்சல்.வாயிலையே வைக்க முடியலை)ரொம்ப நல்லா இருந்தது சார்.அதுவும் அந்த மில்க் ஸ்வீட் பின்னிடுச்சி..
மாமா:(கஷ்டகாலம்.மில்க் ஸ்வீட்டுக்கும் மக்கன் பேடாவுக்கும் வித்தியாசம் தெரியாததுங்களை என்ன செய்யலாம்??)ஆமா.சிதம்பரத்தோட சமையல்னா சும்மாவா.ஆமாம்,தம்பி எங்கே உத்யோகம் பாக்கறீங்க??
சுப்பு:(ரொம்ப முக்கியம்.)நான் TI-ல வேலை பாக்குறேன்
மாமா:என்னது TI-யா??கம்ப்யூட்டர் சைன்ஸ் படிச்சுட்டு எதுக்கு TI சைக்கிள்சில வேலை பார்க்கணும்??(பாவம் இவங்க கிளாசிலேயே உருப்படாத கேசுன்னு தோணுது).
சுப்பு:இல்லை சார்.அது டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்னு ஒரு M.N.C
மாமா:(மன்னார் அண்ட் கோ மாதிரி எதாவது உப்புமா கம்பெனியா இருக்கும் போல)ஓஹோ..அப்படியா..நீ என்ன ஜாவாவிலேயா வேலை பாக்குறே??
சுப்பு:(ஆஹா..ஆரம்பிச்சுட்டாங்களா..)இல்லை சார்.நான் வந்து ஹார்ட்வேர் சைட் வேலை பார்க்குறேன்.நாங்க ஜாவாவில ப்ரோக்கிராம் பண்ண மாட்டோம்..
மாமா:(ஹூக்கும்.கம்பியூட்டரைப் பிரிச்சு மேயுற வேலையா...)ஓ...அது சரி..நீ இன்ஃபோ$$,வி$ப்ரோ,$சிஎஸ் மாதிரி சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல வேலைக்கு ட்ரை செய்யலாமே?? எனக்குத் தெரிஞ்ச பசங்க நிறையப் பேரு இருக்காங்க.நான் வேணும்னா சிபாரிசு பண்ணச்சொல்றேன்...நல்ல சம்பளம் தருவாங்க...
இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த சுப்புவைக் காப்பாற்றும் ருக்கு அவனைத் தனது சித்திக்கு அறிமுகப்படுத்திவிட்டு செல்கிறாள்.
ருக்குவின் சித்தி:அப்புறம் சொல்லுப்பா.நீ விசா வாங்கிட்டியா?
சுப்பு:(ஆஹா..கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா...)ஆண்ட்டி,இப்போ நான் எங்கேயும் போகலை.அதனால விசா வாங்கத் தேவையில்லை.
சித்தி:ஓ மை காட்.எங்க கார்த்தி எஞ்சினீயரிங் தேர்ட் இயர் தான் படிக்கறான்.இப்பவே அவன் விசா வாங்கி வச்சுட்டான்.விசா இல்லாம நீ இந்தியாவோட சிட்டிஸன்னு எப்படி நிரூபணம் செய்வே...???(சரியான தத்திப் புண்ணாக்கா இருக்கானே...)
சுப்பு:(ஸ்சப்பா..இப்பவே கண்ணைக் கட்டுதே..)அது விசா இல்லை ஆண்ட்டி.அதுக்குப் பேரு பாஸ்போர்ட்.அது காலேஜில இருக்கும் போதே நான் வாங்கி வச்சுட்டேன்.
சித்தி:(மண்ணை உதறிக்கொண்டே..)ஓ..அப்படியா...நீ எந்த பிளாட்பாரத்திலே வேலை பார்க்கறே?எந்த ஊரு கிளையண்ட்??ஆன்சைட் ஏதாவது போயிருக்கியா??கார்த்தியோட சீனியர் அவனை மெயின்ஃப்ரேம் படிக்கச் சொல்லியிருக்கார்.கோர்ஸ் முடிச்ச உடனே வேலை உடனே கேரண்டியாம்.வேலைக்கு சேர்ந்த ஆறாவது மாசமே அமெரிக்கா அனுப்புவாங்களாம்.
சுப்பு:(ஹூம்..செண்ட்ரல் ஸ்டேஷன் மூணாவது பிளாட்ஃபாரத்தில வேலை பார்க்கறேன்.கடவுளே....)#$%##$$%$####$$%
-தொடரலாம்
05 August 2007
சுப்பு & ருக்கு - 2
குறிச்சொல் சுப்பு/ருக்கு
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
எங்கானம், கல்யாணமே ஆவலை அதுக்குள்ளே, அனுபவத்தை கொட்றேள்?
ஓ...அது சரி..நீ இன்ஃபோ$$,வி$ப்ரோ,$சிஎஸ் மாதிரி சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல வேலைக்கு ட்ரை செய்யலாமே?? எனக்குத் தெரிஞ்ச பசங்க நிறையப் பேரு இருக்காங்க.நான் வேணும்னா சிபாரிசு பண்ணச்சொல்றேன்...நல்ல சம்பளம் தருவாங்க...//
ஒவ்வொரு தடவையும் எதாவது விசேஷம் நோம்பின்னு போறப்ப எல்லாம் இந்த கேள்விய கேட்டிருவாங்க.. வர வர இந்த கேள்வி கேக்கிற பெருசுகள ஓங்கி பொடனி மேல போட்டுறலாமான்னு பயங்கிற வெறியாகுது..
இவுங்களுக்காகவே ஊர்நாட்டுல எந்த குக்கிராமத்து காதுகுத்தா இருந்தாலும் ரில்-கார்டு மாட்டுன தொடைப்பெட்டிய தூக்கிட்டு போயி சீன காட்ட வேண்டி இருக்கு.. இல்லாட்டி வந்து நம்ம பையன் 'இன்ஃபோ$$ /வி$ப்ரோ /$சிஎஸ''ல இருக்கான்.. நீ வேண்ம்னா அவங்கிட்ட பேசிப்பாரேன்னு ஆரம்பிச்சிடுறாங்க. :(
இளா:
ஹி..ஹி...நோ கொமெண்ட்ஸ்.
ராசா:
சேம் பிளட்...
பொட்டிதட்டற வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா!
எங்க காலனில மாமிங்க பேசிக்கறதே பாஸ்டன்ல மழையாமே? LAல வீட்டுவாடகை எவ்வளவுன்னுதான்!
// இந்த கேள்வி கேக்கிற பெருசுகள ஓங்கி பொடனி மேல போட்டுறலாமான்னு பயங்கிற வெறியாகுது.. // ராசா.. ஒரு தடவை போடுங்க! அப்பறம் எல்லாம் சரியாப்பூடும்! :)))
ஆகா..இந்தக் கொடுமைய நீங்களும் அனுபவிச்சீங்களா...என்னோட பழைய கம்பெனியில வேலை செய்யும் போது...நான் ஏன் வீப்புரோல வேலை செய்யலைன்னு கேக்காத ஊர்ப்பெருசுக இல்ல. இப்பத்தான் நான் ஏதோ பெரிய கம்பெனியில வேலை செய்றதா நெனைக்கிறாங்க.
சுப்பு ருக்கு நல்லாருக்கு. ரெண்டாவது பாகம் சரி. மொதப் பாகம் எங்க?
//சுப்பு ருக்கு நல்லாருக்கு. ரெண்டாவது பாகம் சரி. மொதப் பாகம் எங்க?//
அதானே
//
ஓ...அது சரி..நீ இன்ஃபோ$$,வி$ப்ரோ,$சிஎஸ் மாதிரி சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல வேலைக்கு ட்ரை செய்யலாமே?? எனக்குத் தெரிஞ்ச பசங்க நிறையப் பேரு இருக்காங்க.நான் வேணும்னா சிபாரிசு பண்ணச்சொல்றேன்...நல்ல சம்பளம் தருவாங்க...//
நல்ல காமெடி
TI பத்தி கொஞ்சம் விலாவாரியா எடுத்து சொல்லவேண்டியதுதானே.
Post a Comment