07 August 2007

ஸ்டீவ் ஜாப்ஸூக்கே போலியாம்???

எந்த ஒரு புதிய விஷயம் வந்தாலும் அதன் விதிமுறைகளை மீறிச் செயல்பட முயற்சிப்பது என்பது தொன்று தொட்டு மனித குலத்தில் இருந்து வரும் ஒரு பழக்கம்.இணையம் கொடுத்திருக்கும் சுதந்திரம் கட்டற்றது.இணையத்திலும் இந்தமாதிரி விதிமுறைகள் மீறப்படுதல் வெவ்வேறு பெயர்களில்,வெவ்வேறு இலக்குகளை முன்னிறுத்தி நடந்து வருகிறது.

The Secret Diary of Steve Jobs என்னும் ஒரு பதிவானது ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸே எழுதுவது போன்ற ஒரு மாயையுடன் பல நாட்களாக நடத்தப்பட்டு வந்தது.தொழில்நுட்பம் சார்ந்த வாசகர்களால் ஆவலுடன் படிக்கப்பட்டு வருகிறது.அந்தப் பதிவுக்குச் சொந்தக்காரர் ஸ்டீவ் இல்லை;வணிகப் பத்திரிக்கையான ஃபோர்ப்ஸின் மூத்த எடிட்டரான டேனியல் ல்யான்ஸ் தான் அந்தப் பதிவின் சொந்தக்காரர் என்று நியூயார்க் டைம்ஸ் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறது.

லேரி எல்லிசன்,பில் கேட்ஸ்,எரிக் ஷ்மிட் போன்ற பல்வேறு தொழில்நுட்பப் பெருந்தலைகளை இந்தப் பதிவில் நையாண்டி செய்திருக்கிறார் டேனியல்.இந்தப் பதிவுக்கு உண்மையான ஸ்டீவ் ஜாப்ஸ்,பில் கேட்ஸ் போன்றவர்கள் நீண்ட நாளைய வாசகர்களாம்.

விரிவான செய்திக்கு இங்கே செல்லவும்.

4 Comments:

ILA (a) இளா said...

ஆப்பிளுக்கு ஆரஞ்சுன்னு ஏதாவது ஒன்ன ஆரம்பிச்சா நல்லா இருக்கும்

இலவசக்கொத்தனார் said...

நீங்கள் எழுதி இருப்பதைப் பார்த்தால் அது உண்மையான ஜாப்ஸின் தளம் என நினைத்ததாகவும் இப்பொழுதே அது போலி என தெரிய வந்ததது போலவும் இருக்கிறது.

ஆனால் அது உண்மையான ஜாப்ஸின் தளம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்ததே. அத்தளத்தின் முகவரியே - http://fakesteve.blogspot.com தான்.

யார் எழுதுவது எனத் தெரியாமல் இருந்ததே சுவாரசியம். அதுதான் இப்பொழுது தெரிய வந்துள்ளது.

Sud Gopal said...

அடக்கடவுளே...இதைத் தான் ஆர்வக்கோளாறுன்னு சொல்றதோ..

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி இ.கொ.

Anonymous said...

அது ரொம்ப பிரபலமான தளம். steve jobs கூட அதைப்படிப்பதாக பேட்டி அளித்துள்ளார். வேடிக்கையான விசயம், ஒரு பேட்டியின் போது Bill Gates 'அதை எழுதுவது நான் அல்ல' என்று சொல்லி உள்ளார். அந்த அளவிற்கு அது பிரபலம்