பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னா அது உண்மையாக மாறிடும்னு சொல்றாங்க.இது உண்மையா பொய்யான்னு எனக்குத் தெரியாது.ஆனா பாடல்களுக்கு இது பொருந்தும்.முதலில் புடிக்கலைன்னாலும் திரும்பத் திரும்பக் கேட்டா,நம்மளுக்கு தெரியாமலேயே மனசில ஒட்டிக்கும்.அதிலையும் பதின்ம வயசில கேட்ட பாடல்களுக்கு இருக்கிற மவுசே தனிதான்.ராமநாதபுரம் கருப்புசாமிகிட்ட கணக்கு டூசனுக்கு, மப்சல் வண்டிகளில் போன காலத்தில ரெகுலராக் கேட்ட சில பாடல்களைப் புதையல்கள்னு சொல்ல முடியுமா?
உங்களுக்கு எப்படியோ..இந்தப் பாட்டுக எனக்குப் புதையல்கள் தான்.பின்னே இந்தப் பாட்டுகளை இணையத்திலே பிடிக்க நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா??இந்தப் பாடல்கள் வந்த காலத்தில எம்.பி3 ஒலி வடிவம் இல்லை;இசையமைச்ச ஆளுங்க பிரபலமாகதவங்க;படங்க எல்லாம் சுமாரா ஓடின படங்க தான் அப்படின்னு பல காரணம் இருக்கலாம் என்னோட தொடர் தோல்விகளுக்கு.தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராத விக்கிரமாதித்த மகாராசா மாதிரி,ரெண்டு வருஷம் பட்ட பாட்டுக்குக் கொஞ்ச நாள் முன்னாடி தான் பலன் கிடைச்சது.எது எப்படியோ..தேடிக்கிடைத்த புதையல்களை உங்க கூட பகிர்ந்துக்கிறேன்.கேட்டுப்பார்த்திட்டு சொல்லுங்க...
புதையல்:
கோவை செழியனோட தயாரிப்பில செல்வா இயக்கத்தில மம்முட்டி,அர்விந்த்சாமி,கவுண்டபெல்,ஆம்னி,சாக்ஷி நடிப்பில வெளிவந்த படம் தான் புதையல்.அர்விந்த்சாமிக்கு காமெடி கூட வரும்னு நிரூபித்த படம்.வைரமுத்துவோட பாடல்களுக்கு இசையமைச்சது வித்யாசாகர்.மின்சாரக்கனவு வந்த கொஞ்ச நாளிலே ரிலீசாகி ஃபிளாப் ஆன இந்தப் படத்திலே இருக்கிற பாட்டுக எல்லாம் டாப் டக்கர்.இதில இருந்து ரெண்டு பாட்டு கொடுத்திருக்கேன்.கேட்டுப்பார்த்திட்டு சொல்லுங்க.
ஒச்சம்மா..ஒச்சம்மா:
ராக்கம்மா,பொன்னம்மா வரிசையில நம்ம பாடலாசிரியருக வித்தியாசமாக் கற்பனை செஞ்சு புடிச்ச பேருன்னு நினைக்கிறேன்.இரண்டு கதாநாயகர்களும் பாடும் இந்த டூயட்டைப் பாடியிருப்பது எஸ்.பி.பியும் உன்னி மேனனும்.கிளைமேக்சுக்கு முன்னால வரும் பாடல்.
பூத்திருக்கும் மனமே: மீசையில்லாத மம்முட்டியை இந்தப் பாட்டில் பார்க்கலாம்.உமா ரமணன் குரலில் வந்திருக்கும் மற்றுமொரு இனிமையான காதல் பாடல்.
மதுரை அழகரோ: புதையல் அளவுக்கு இந்தப் படம் நஷ்டம் ஆகலைன்னாலும்,அப்போ வெளிவந்த காதல் கோட்டை கூட இதனால தாக்குப்பிடிக்க முடியலைங்கறது தான் உண்மை.சிற்பி இசையில சித்ராவின் குரலில் வந்த இந்தப் பாடலின் நடுவே லிவிங்ஸ்டன் அவரோட ஸ்டைலில் நடந்து வருவார் பாருங்க.தியேட்டர்ல அப்போ கிளாப்ஸ் அள்ளுச்சு.இந்தப் படத்தில எல்லாப் பாட்டும் நல்லா இருக்கும்.வெண்ணிலா வெண்ணிலா,கெட்டப்பை மாத்தி,அப்புறமா அந்த டைட்டில் பாடல் - இதெல்லாம் யார் கிட்டயாவது இருந்து கொஞ்சம் பகிர்ந்துக்க முடியுமா?
10 Comments:
அட ஓம்பபொடியாரே, இந்தப் பாட்டுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டீரு? ஜி.ரா கிட்டே இந்த மாதிரி ஒரு குறுந்தட்டு குடுத்து இருக்கேன், வாங்க முடிஞ்சா பாருங்க. அந்த குறுந்தட்டின் பேரு "என் கண்மணி"
// ILA(a)இளா said...
அட ஓம்பபொடியாரே, இந்தப் பாட்டுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டீரு? ஜி.ரா கிட்டே இந்த மாதிரி ஒரு குறுந்தட்டு குடுத்து இருக்கேன், வாங்க முடிஞ்சா பாருங்க. அந்த குறுந்தட்டின் பேரு "என் கண்மணி" //
என் கண்மணி தான....பாட்டு இசையரசி வலைப்பூவுல போட்டிருக்கோமே. கேக்கலையா? ஹி ஹி...
குறுந்தட்டெல்லாம் வேணும்னா ஆம்ஸ்டர்டாம் வரனும்...அப்பத்தான்...
---லிவிங்ஸ்டன் அவரோட ஸ்டைலில் நடந்து வருவார் பாருங்க---
:)
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தவை. (படமும்தான்)
'நீ கவுந்து படுக்க திண்ணையெதுக்கு'
'அய்யாவ திட்டிப் பாடுங்கடா'
நல்ல பாடல்கள்!! :-)
பதிவிட்டதற்கு நன்றி!! :-)
சுந்தர புருஷனில் எனக்கு மிகவும் பிடித்தது "செட்டப்ப மாத்தி".
இந்தப் பாடல்களைத் தேடினீர்களா? என் காதில் போட்டு வைத்திருக்கலாமே ;-)
பூத்திருக்கும் பாடல் வெளிவந்து 10 ஆண்டுக்குப் பிறகும் இன்றைய புதுப்பாடல்கள் தரும் அதே புத்துணர்வு இருக்கிறது.
கொசுறு செய்தி: பூத்திருக்கும் மனமே பாட்டு முழுவதும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட பாடல்!
இளா:
புதையல் பாடல்களை இந்தியாவில் இருந்தப்பவே உங்க கேட்ட ஞாபகம்.சரி ஜீரா கிட்ட இருந்து உங்க கண்மணிய அபேஸ் பண்ணீட்டாப் போச்சு...
ஜீரா:
அக்டோபர்ல வந்து உங்க கண்மணியை அபேஸ் பண்ணலாம்னு இருக்கேன்..
போ.பா:
வரணும்...படத்தின் வெற்றிக்கு வடிவேலுவோட நகைச்சுவையும் ஒரு காரணம் இல்லையா??
புதையல் பாட்டுகளைக் கேட்டிருக்கீங்களா??
CVR:
பாராட்டுகளுக்கு நன்னீ...
பிரபா:
வித்யாசாகரோட தனிச்சிறப்பே அது தான்.கர்ணா,பசும்பொன் எல்லாம் என்னைக்கு வேணும்னாலும் கேக்கலாம்..
1)கெட்டப்ப மாத்தி
2)வெண்ணிலா வெண்ணிலா
3)டைட்டில் பாடல்
4)பொன்விலங்கு படத்தில் - ஒரு கோலக்கிளி சொன்னதே
5)ராசாமகன் பாடல்கள்
6)எங்க தம்பி- பாடல்கள்
இதெல்லாம் வச்சிருக்கீங்களா??
பிரகாஷ்:
தகவலுக்கு நன்றீ...
நீங்க கேட்ட பாட்டு எல்லாமே இருக்கு, பிரச்சனை என்னவென்றால் உடனேயே என் சீடி பெட்டியில் தேடி எடுத்துத் தரத் தாமதம் வரும் ;-)
Post a Comment