21 July 2007

சுப்பு & ருக்கு - 1

கடந்த ஏழு மாதங்களாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் சுப்புவும் ருக்குவும் தங்களது முதலாமாண்டு கல்யாண நினைவுநாளை வெகு விரைவில் கொண்டாடவிருக்கின்றனர்.

சுப்பு: அது வந்து....சொல்லும்மா...இப்போ என்னோட வாட்சில மணி 10.02

ருக்கு:அதெல்லாம் கரெக்டா சொல்லு.9.28க்கு ஒரு தடவை கால் செஞ்சேன்.பிஸின்னு வந்தது.9.5க்கு கால் செஞ்சேன்.மறுபடியும் பிசி.உடனே 9.53க்கு ஒரு மெயில் அனுப்பினேன்.இன்னும் அதை நீ ஓப்பன் கூட செஞ்சு பார்க்கலை.யார் கூட காபிக்கு போனே?கிளியோபாட்ராவா இல்லை அந்த மூக்கழகியா?



சுப்பு:இது கொஞ்சம் ஓவர் ருக்கு.எனக்கு இன்னைக்கு 9-10 ஆன்ஷோர் டீமோட மீட்டிங் இருக்குன்னு நேத்தே சொன்னேன் இல்லை..அதை முடிச்சுட்டு இப்போ நேரா சீட்டுக்கு தான் வரேன்.ஆமா ஏதாவது சீரியசான மேட்டரா??

ருக்கு:bugல்லாம code எழுதத் துப்பில்லை.இதில ஆன்ஷோர் டீம் மீட்டிங் வேற.நேத்து உன்னை ஒரு module கொடுத்து code பண்ணச் சொன்னேனே,அதை எனக்கு அனுப்பும் முன்னாடி test செஞ்சியா??

சுப்பு:ஆங்...அது வந்து... ஒண்ணுக்கு ரெண்டு test வாட்டி செஞ்சேனே ருக்கு.அந்தக் கோடில ஏதாவது பிராப்ளமா??(இந்த கூகிள் கடங்காரன் காலை வாரிவிட்டுட்டான் போல இருக்கு..இப்போ மேட்டரை ஓரம் கட்டணுமே..எப்படி???)

ருக்கு:நீ கொடுத்த கோடில நாலு bug இருக்குன்னு மெயில் வந்திருக்கு.உருப்படியா நாலு வரி code எழுத வராது;இதில பேர் மட்டும் பெரிசா பிஸினெஸ் அனலிஸ்டுன்னு.ஏதோ என்னோட லீட் லீவில போனதால சமாளிச்சுட்டேன்.அது சரி..நீ வீட்டை விட்டு வர்ரச்சே கேஸ் எல்லாம் பார்த்து ஆஃப் செஞ்சிட்டு வந்தியா??

சுப்பு:அதெல்லாம் கரெக்டா செஞ்சிட்டேண்டா.(உஷ்..அப்பாடா.விஷயம் வேற ட்ராக்குக்கு மாறுது.)

ருக்கு:நான் வாஷிங்மெஷின்ல போட்டிருந்த என்னோட துணிகளை எல்லாம் காயப்போட்டியா??பாலை எடுத்து மறுபடியும் ஃப்ரிட்ஜுக்குள்ள வச்சுட்டியா??

சுப்பு:(அய்யய்யோ..இந்த துணி மேட்டர் சுத்தமா மறந்து போச்சே.ஹூம்...அந்த நேரம் பார்த்துதானா சன் ம்யூசிக்ல "நிலவைக்கொண்டு வா..கட்டிலில் கட்டிவை" போடணும்)ஆச்சு..எல்லாம் செஞ்சிட்டுதாண்டா வீட்டை விட்டுக் கிளம்பினேன்...எதுக்கு வீணா நீ டென்ஷன் ஆகறே?? ஆமாம்.நீயே டிசைன் செஞ்ச சுடிதாரை இன்னைக்குப் போட்டுட்டுப் போனியே.அதை பத்தி தான் இன்னைக்கு உங்க ஆஃபிஸில ஒரே பேச்சாமே??

ருக்கு:அய்யோ....ஆமாம்பா....இது உனக்கு எப்படித் தெரிஞ்சது???டோரிக் கண்ணு வெங்கி கூட இன்னைக்கு இதைப் பார்த்து வொண்டர்ஃபுல்லுன்னு சொல்லுச்சி.இன் ஃபாக்ட் எங்க டீமில புதுசா சேர்ந்திருக்கிற ஃப்ரஷர்ஸ் இதுக்காக என்னை ட்ரீட் தரச் சொல்லியிருக்காங்க.நானும் வர சனிக்கிழமை அவங்களை வீட்டுக்குக் கூப்டிருக்கேன்.பாவம் பசங்க.புது ஊர்.புது மனுஷங்க.அவங்களுக்கும் ஒரு சேஞ்ச் வேணும் தானே??

சுப்பு:(அப்பாடா..ஒரு வழியா ட்ராக்கை மாத்தியாச்சு...)ஆமாம் ருக்கு.you are very correct, as always. நம்ம ரிஷப்சனுக்கு முதலில் நீ எடுத்த சேலை கூட இந்த ராமர் ப்ளூ கலர் தானே?

ருக்கு:சுப்பூ...கொஞ்சம் கூட உனக்கு கலர் சென்ஸே இல்லை.First of all இன்னைக்கு நான் போட்டுட்டு வந்த சுடிதார் கலர் ராமர் ப்ளூ இல்லை.அது ராமர் க்ரீன்.Secondly ரிஷப்சனுக்கு முதல்ல எடுத்த சேலை கலர் ஆலிவ் க்ரீன்.ஒரு வருஷம் கூட ஆகலை.அதுக்குள்ள எல்லாமே மறந்திடுச்சி உனக்கு.....

சுப்பு:(அய்யயோ..இதென்ன புதுக்கதை....ஏதாவது சொல்லி சமாளிடா...)ஆங்...அது வந்து..எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.உனக்கு மறந்திடுச்சான்னு டெஸ்ட் பண்ணிப்பார்த்தேன்.ஹி...ஹி....அப்புறம் உங்க பாலு மாமா தசரா லீவுக்கு இங்கே ஃபேமிலியோட வரார்னு சொன்னேல்லியா? ஏதாவது டூர் பிளான் செய்யட்டுமா??(ஹூம்.சூப்பராப் பாயிண்டைப் புடிச்சுட்டியேடா...)

ருக்கு:அடப்பாவி.போன சண்டே தானே அவரோட மாமனாருக்கு KMCH ல பைபாஸ் செய்யணும்னு ஃபோன் பண்ணி சொன்னாரு.நீ கூட உன்னோட ஸ்கூல் மேட் பிபின் அந்த ஹாஸ்பிடல்ல தான் இருக்கான்னு சொல்லீட்டு இருந்தியே??அப்போ அதெல்லாம் ரீலா?? சரியான டுபாக்கூர் பார்ட்டி நீ...get lost....

சுப்பு:(சோதனை மேல் சோதனை..போதுமடா சாமி)ருக்கு..ருக்கு..ப்ளீஸ்..அது ரீல் எல்லாம் இல்லை..ருக்கு...லைனைக் கட் செஞ்சிட்டியா???ஹூம்....

(தொடரலாம்)

14 Comments:

Anonymous said...

:-)

ரசித்துப் படித்தேன்..ராமர் பச்சை அப்படின்னு ஒரு கலர் இருக்கா?

ilavanji said...

சுட்.ஜி,

எப்படியா இப்படியெல்லாம்?

நெஜமாகவே உமக்கு கல்யாணம் ஆகலைதானே?! :)

ramachandranusha(உஷா) said...

கடந்த ஏழு மாதங்களாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் சுப்புவும் ருக்குவும் தங்களது முதலாமாண்டு கல்யாண நினைவுநாளை வெகு விரைவில் கொண்டாடவிருக்கின்றனர்.//

என்னபா கணக்கு உதைக்குது? இல்லே முதல் அஞ்சு மாசம் சண்டையே போடலையா? நாங்க எல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆன மறு நாளில் இருந்து சண்டைப் போட்டுக்கிட்டு இருக்கோமே????

Sud Gopal said...

வாங்க "நான் அவன் இல்லை".
ஆமாம்...ராமர் பச்சைன்னு ஒரு கலர் இருக்கு..

Sud Gopal said...

வாத்யார்:
நெசமா இன்னும் ஒரு வாட்டி கூட எனக்கு கண்ணாலம் ஆவலை ;-)

Sud Gopal said...

அட..உஷாஜீயா.வாங்க..வாங்க...

//என்னபா கணக்கு உதைக்குது? இல்லே முதல் அஞ்சு மாசம் சண்டையே போடலையா? நாங்க எல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆன மறு நாளில் இருந்து சண்டைப் போட்டுக்கிட்டு இருக்கோமே????//

எல்லா சுப்புக்களும் கணக்கில் வீக்கானவர்கள(எழுதின சுப்புவையும் சேர்த்தே)் என்பதை உணர்த்தவே யாம் அப்படி எழுதினோம்...(ஒரு வழியா சமாளிச்சுட்டேனோ??)

Anonymous said...

ஹா.ஹா.ஹா..

வாங்க வேண்டியவங்க கிட்ட முறையா அனுமதி வாங்கியாச்சா??

Pavals said...

ரூட் வேற க்ளியர் ஆயாச்சு... ம்ம் இப்படி எல்லாம் எழுதி தயாராக வேண்டியது தான் :)

selventhiran said...

போட்டியில் கலந்துகொள்ளும்படித் தங்களை அன்போடு அழைக்கிறேன். http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_24.html

ILA (a) இளா said...

ரமணி Vs ரமணி பார்த்தா மாதிரியே இருக்குங்க. சூப்பர்

ரவி said...

படித்தேன்....ரசித்தேன்...

Sud Gopal said...

அனானி:
ஹி..ஹி...அனுமதி வாங்காம எழுத முடியுமா??

ராசா:
போலாம்.போலாம்..ரை...

செல்வேந்திரன்:
மன்னிக்கவும்.

இளா:
என்ன பழைய ஞாபகம் எல்லாம் வந்துபோச்சா?

தழல்:
_/\_

G.Ragavan said...

:))))))))))))))))))

சூப்பராருக்கு சூப்பராருக்கு சுப்புருக்கு

மங்களூர் சிவா said...

//
கடந்த ஏழு மாதங்களாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் சுப்புவும் ருக்குவும் தங்களது முதலாமாண்டு கல்யாண நினைவுநாளை வெகு விரைவில் கொண்டாடவிருக்கின்றனர்.//

என்னபா கணக்கு உதைக்குது? இல்லே முதல் அஞ்சு மாசம் சண்டையே போடலையா?
//
ரிப்பீட்டேய்

//ramachandranusha said...
நாங்க எல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆன மறு நாளில் இருந்து சண்டைப் போட்டுக்கிட்டு இருக்கோமே????
//
உஷா அக்கா, பாவங்க அந்த தெய்வ மச்சான்.