இந்த உலகம் ஒரு நாடக மேடை என்னும் கருத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள பெரும்பான்மையான தமிழர்களைப் பொருத்த மட்டிலும் நிழலும் நிஜமும் ஒன்றே.அப்படி நிழலிலும்,நிஜத்திலும் பேசப்பட்ட சில வசனங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
யார் சொன்னது?? எந்த சூழ்நிலையில் சொன்னது???
1)பி.பி.சி.க்கு பேட்டி வழங்கியது மகிழ்ச்சி தரும் அனுபவமில்லை
2)வெவரம் தெரியாதவனுக்கு பொண்டாட்டியா இருக்கிறதை விட,விவரம் தெரிஞ்சவனுக்கு வப்பாட்டியா இருக்கலாம்.
3)வேட்டைக்காரன் வர்ரான்..உஷாரா இருந்துக்கோங்க...
4)அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் எராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி பட்ட ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணத்தை தொடர்கிறேன்.
5)இவங்க மறுபடியும் ஆட்சிக்கு வந்தா அந்த ஆண்டவனால கூட தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியாது...
6)'நான் செத்ததுக்குப் பொறவு தான் இந்த கல்யாணம் நடக்கும்.'
'அது வரைக்கும் என்னால காத்திட்டிருக்க முடியாது'
7)இந்த உலகத்திலேயே ரொம்பவும் கொடுமையான விஷயம் எது தெரியுமா? மத்தவங்க நம்மளை மறந்து போறது தான்
பி.கு:- எனக்கு கேள்வியின் நாயகன் என்னும் பட்டம் தரப்போவதாகக் காத்து வாக்கில் உலவும் செய்தி பற்றி அனைவரும் இன்னேரம் அறிந்திருப்பீர்கள்.அந்தப் பட்டம் சூட்டும் விழாவில் எனக்குத் தரப்படும் பொற்கிழிக்காக உங்களது பங்களிப்பை நீங்கள் செய்ய விரும்பினால்,அணுக வேண்டிய முகவரி எது என்று உங்களுக்குக் தெரியும் தானே???
17 July 2007
சொன்னாங்க...சொன்னாங்க...
குறிச்சொல் குவிஸூ
Subscribe to:
Post Comments (Atom)
26 Comments:
1.ஜெயலலிதா
3. சுஜாதா
4. ரஜினி
2, ரெண்டுதடவையா இருக்கே
அப்போ 2-1எ வா?
3. Nallasivam(Anbe Sivam)
4. Thalaivar ;)
mathathuku yosichutu poravu varen..
3 - அன்பே சிவம்
4 - ஹாஹாஹா.....
6 - வயக்கம்போல தெரியுது ஆனா நியாபகம் வர்ல :-(
வாங்க கிஸான்.
ஒண்ணும் நாலும் சரி...
மூணுக்கான பதில் தப்பாச்சே..
அப்புறம் 2 நெம்பர் கேள்வியில் இருந்த அச்சுப்பிழையை நீக்கிட்டேனுங்.
வாங்க கப்பி.சொன்ன ரெண்டு பதில்களும் சரியே...
ரெண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்னு இருந்திராம சீக்கிரமா மத்ததையும் யோசிச்சு சொல்லுங்க.
யாத்ரீ தும்பீ..
4வது கேள்வியப் பார்த்து அப்படி என்னா சிரிப்பு வேண்டியிருக்கு??இது நல்லால்லை ஆமா...
இன்னொரு தபா கொஸ்டின்சைப் படிக்க சொல்லோ நாபகம் வந்தாலும் வரலாம்....
// அணுக வேண்டிய முகவரி எது என்று உங்களுக்குக் தெரியும் தானே???
இந்த கேள்விக்கு மட்டும்தான் எனக்கு பதில் தெரியும். எனக்கு பொற்கீழி உண்டா?! :)
இன்றைய சூடான கிஸ்கிஸ்:
வீட்டுக்கு அருகிலிள்ள உணவங்காடிகளில் இருந்து ஐட்டங்களை வரவழைத்து,கலர் கலராய்ப் படமெடுத்துத் தான் சமைத்ததாய்க் குறிப்புகளைத் தந்து கொண்டிருக்கும் ஒரு யங் ஜிங்சரின் வண்டவாளத்தைத் தண்டவாளம் ஏற்றிவிட வேண்டும் ஒரு புதிய கூட்டம் கிளம்பியிருக்கிறதாம்...
வாத்யார்...
உங்களுக்கு இல்லாத பொற்கீழியா??
யாரங்கே..யாரடா அங்கே....சமியல் குறிப்புகள் போட்டு அசத்தும் வாத்தியைக் கவனியுங்களடா...
அப்புறம் மேலே உள்ள கிஸ்கிஸூ யாரைப் பத்தின்னு ஏதாவது நினைவுக்கு வருதா ;-)
1)ஜெயராம் ஜெயலலிதா
2)ராதிகா சொன்னது ஜீன்ஸ் என்னும் தெரைக்காவியத்தில்
3)???
4)கமல்-அன்பே சிவம்
5)ரசினி காந்தம்
6)நாசர்-அர்விந்த்சாமி-என்ன படம்னு தெரியலையே
7)????
அடடே..நான் "அவன் இல்லை"காருவா..ரண்டி..ரண்டி...
அஞ்சு கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லியிருக்கீங்க...
2. ராதிகாவோட வசனம் ஜீன்ஸ் படத்துல
5. சூப்பர் ஸ்டார்தான் - தேர்தல் பிரச்சாரத்துல அம்மாக்கு எதிரா சவுண்ட் விட்டப்போ சொன்னது
6. பம்பாய் படத்துல நாசரும் அரவிந்த்சாமியும் பேசிக்கும் காட்சி
7. கண்டுகொண்டேனில் மம்முட்டி பேசும் வசனம்(அஜீத்கிட்டவோ இல்லை ஐஸ்கிட்டவோ, சரியா நினைவில்லை)
1. JJ
5. Rajni
6. Bombay (Naser & Aravind samy)
7. KKKK (Mamootty)
வாங்க.லக்ஷ்மி.
கலக்கல்....நான்கு பதில்களும் சரியே...
போ.பா..வாங்க....
நெத்தியடி அடிச்சுட்டீங்க...நான்குமே சரியான விடைகள் தான்.
நாலாவதுக்கு விடை தெரியலையா??
நாட்டுக்கொரு பூ வாசம் சேதி சொல்ல புறப்படும் நாகரீகக் கண்ணே கோமாளி நான் பூ வந்து வரைந்தால்...
இந்தக் குறிப்புகளை வச்சு தான் முயற்சி செஞ்சு பாருங்களேன்
2)கண்ணோடு அன்பே காண்பதெல்லாம் அன்பே தலைவா என்னைக் கண்களுக்கு கொல்லாத சொந்தமில்லை
6)பூவுக்கென்ன உயிரே பூட்டு உயிரே காற்றுக்கேது வந்து என்னோட ரூட்டில் கலந்துவிடு
1) ஜெ பேட்டி?
2) ராதிகா - ஜீன்ஸ்
3) ----
4) கமல் - அன்பே சிவம்
5) ----
6) அரவிந்த்சாமி - பம்பாய்
7) ---
8) முகவரி மட்டும் இல்ல நீங்க போட்ட சூப்பர் காபி கூட நல்லா இருக்கு :-)
மூன்றுக்கும் க்ளூ கொடுங்க சார்...
இரண்டும் நான்கும் இப்ப விளங்குது :D
யோவ் வெட்டுக்கிளி மீசைக்கரரே!
இதெல்லாம் நல்லதுகில்லை ஆமா... அடுத்தமுறை நீர் கொலைப்பட்டினிதான் சொல்லிட்டேன்!
கிஸ்கிஸ் போட வேண்டியதுதான்! ஆனா அதுல ஒரு கிளுகிளுப்பு இருக்க வேணாமா?! உம்ம மேட்டருல ரெண்டு வார்த்தைகளுக்கு பதிலா வெறும் **** மட்டும் போடறேன்! இப்ப படியும்! இப்படி இருந்தா வந்து படிக்கறவங்களுக்கும் என்னைப்பத்தி ஒரு கெத்தா இருக்குமில்ல?! :)))
=========
இன்றைய சூடான கிஸ்கிஸ்:
வீட்டுக்கு அருகிலிள்ள ********* இருந்து ஐட்டங்களை வரவழைத்து,கலர் கலராய்ப் படமெடுத்துத் தான் ********* குறிப்புகளைத் தந்து கொண்டிருக்கும் ஒரு யங் ஜிங்சரின் வண்டவாளத்தைத் தண்டவாளம் ஏற்றிவிட வேண்டும் ஒரு புதிய கூட்டம் கிளம்பியிருக்கிறதாம்...
=============
ப்ரகாஷ்..கரெக்டாப் புடிச்சிட்டீங்களே..சபாஷ்...
அப்புறம் காபி சாப்பிட்டுட்டு பில்லை செட்டில் செய்யாம போணா எப்படி??
போ.பா.
மூணுக்கான க்ளூ:-
தேவர் ஃபிலிம்ஸார் தயாரித்த இந்தப் படத்தில் சாவித்திரி கணேஷின் நாயகனாக நடித்த மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரனைப் பற்றி ஒரு அரசியல் மேடையில் சொல்லப்பட்ட வாசகம்.சொன்னவரது ஆட்சி தமிழகத்தில் விரைவில் அமையும் என்று சொல்வது கருப்பையா மூப்பனார் முதல் கிருஷ்ணசாமி வரை சொல்லியிருக்கிறார்கள்.
அப்பாடா..மூச்சு வாங்குது...ஜோடா ப்ளீஸ்....
ஆஹா..தன்யனானேன் வாத்யாரே...
எப்படி கிளுகிளுப்பாக கிஸ்கிஸ் எழுதுவது என்று பாடம் சொல்லித் தந்த வாத்யாருக்கு அடுத்து எழுதும் கிஸ்கிஸ் சமர்ப்பிக்கப்படும்...
கிட்டத்தட்ட ஆறு...
'நான் செத்ததுக்குப் பொறவு தான் இந்த கல்யாணம் நடக்கும்.'
'அது வரைக்கும் நான் காத்திட்டிருப்பேன்'
பரேஷ் ராவல் & தபு (சீனி கம்)
இதோ சரியான பதில்கள்:
1)ஜெ.ஜெயலலிதா
2)ராதிகா - ஜீன்ஸ்(பாலகுமாரன் எழுதிய வசனம்)
3)கர்மவீரர் காமராஜர் எம்.ஜி.ஆரைப் பற்றி
4)கமலஹாசன் - அன்பே சிவம்(மதன் எழுதிய வசனம்)
5)ரஜினிகாந்த் - 1996 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது
6)அர்விந்த்சாமி,நாசர் - பம்பாய்
7)மம்முட்டி - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்(சுஜாதா எழுதிய வசனம்)
முயற்சி செய்தவர்களுக்கு நன்றிகள்...
போ.பா.
ஒருவேளை பால்கி அவர்கள் பம்பாயைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி எழுதியிருப்பாரோ??
Post a Comment