31 July 2007

பில்லைக் கொல்லு

போஸ்டரில் உமா தர்மனைப் பார்த்ததும் ஏதோ விஜயசாந்தி டைப் படம்னு பயந்து போய் இந்தப் படத்துக்குப் போகாம இருந்தது எவ்வளவு தப்புன்னு இந்த வாரம் தான் தெரிஞ்சது.ரோம்-1ன் அடுத்த எபிசோடுக்காக ஆவலோட காத்துக்கிட்டு இருக்கும் போது,ஏதோ ஒரு குழப்படியின் விளைவா லவ்ஃபிலிம்ல இருந்து இந்தப் படத்தை அனுப்பிட்டாங்க.சரி...அப்படி என்ன தான் இருக்குன்னு படத்தை ஓட்ட ஆரம்பிச்ச பின்னாடி தான் தெரிஞ்சது என் கிட்ட இருக்கிறது படத்தோட ரெண்டாம் பாகம்னு.முதல் பாகத்தைப் பார்க்காம எப்படி ரெண்டாம் பாகம் பார்க்கிறது? உள்ளூர் நூலகத்தில் இருக்குமோன்னு ஒரு சந்தேகத்தோட போனா,பழம் நழுவி பாலில விழுந்த மாதிரி "இன்றைய ஸ்பெஷல்" லிஸ்டில மொத பாகம்.

பொதுவா ஒரு படம் வெற்றி அடைஞ்சிடுச்சுன்னா உடனே அதுக்கு பார்ட்1,பார்ட்2ன்னு எடுத்துத் தள்ளீடுவாங்க.ஆன இந்தப் படம் அதுல ஒரு விதிவிலக்கு.இந்தப் படம் ரெண்டு பாகங்களா வந்ததுன்னா அதுக்கு முக்கிய காரணம் படத்தின் நீளம் தான்.ரெண்டு பாகங்களையும் சேர்த்து படத்தோட ஓட்ட நேரம் கிட்டத்தட்ட நாலரை மணி நேரம்.உமா தர்மன் "the Bride" என்னும் கதாபாத்திரத்தில் நடிச்ச இந்தப் படத்தை எழுதி,இயக்கினது குவாண்டைன் டாரண்டினோ.

குவாண்டைன் டாரண்டினோ எடுத்த பல்ப் ஃபிக்ஷன்,ரிசர்வாயிர் டாக்ஸ் எல்லாம் முன்னாடியே பார்த்திருந்ததனால்,அவருடைய கதை சொல்லும் பாணி கொஞ்சம் பரிச்சயமாயிருந்தது.ரத்தம்,வன்முறை இல்லாம இருக்காது இவரோட படங்களில்.
இதுலயும் அப்படித்தான்,முதல் காட்சியே ஒரு ரத்தக்களரியோட ஆரம்பிக்குது.ஒரு கொலைகாரக் கும்பலில் இருக்கிற நம்ம கதாநாயகிய அவளோட கல்யாண ஒத்திகை அன்னைக்கு துவம்சம் செஞ்சிடறாங்க.எம லோகத்துக்குப் போயி திரும்பி வார கதாநாயகி தன்னைக் கொன்னவங்களைப் பழி வாங்குறது தான் கதை.யார் கொன்னது,ஏன் கொன்னது போன்ற கேள்விகள முதல் பகுதியிலும்,அதற்கான பதில்கள் ரெண்டாம் பகுதியிலும் இருக்கும்.இரண்டு பாகங்களில் மொத்தம் பத்து பகுதிகளாய ஒரு கதை சொல்லப்பட்டிருக்கு.

அட்டகாசமான சண்டைகாட்சிகள்,"lean-mean"ஹீரோயினி,டாப் கிளாசான திரைக்கதையோட வந்த இந்தப் படம் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.என்ன படத்தில் கொஞ்சம் ரத்தவாடை சாஸ்தி.
சண்டைப்படங்கள் உங்களுக்குப் பிடிக்குமின்னா,இது வரை இதைப் பார்க்கலைன்னா கட்டாயம் பாருங்க,Kill Bill.

எனக்குப் பிடிச்ச காட்சிகள்:
1)வர்னிதாவைக் கொல்லும் முன்னர் வரும் வசனங்கள் ஊடான ஒரு சண்டை
2)க்ரேசி-88 உடன் மோதும் காட்சி
3)திருமண ஒத்திகையின் போது,ஆசுவாசப்படுத்திக் கொள்ள சர்ச்சிலிருந்து வெளியே வரும் உமா,எங்கிருந்தோ காற்றில் வரும் பில்லின் புல்லாங்குழல் இசை கேட்டு உணர்ச்சிவசப்படுதல்
4)பாய் மேயுடனான குருகுலவாசம்
5)BBயுடன் டைனிங் டேபிளில் பேசும் தங்க மீன் பற்றிய வசனங்கள்
6)முத்தாய்ப்பான அந்த இறுதிக் கட்ட சண்டை...

17 Comments:

ILA (a) இளா said...

அட அப்படியா சங்கதி. பார்த்துட்டா போச்சு...

ilavanji said...

விமரிசனமெல்லாம் நல்லாத்தான் இருக்கு! தலைப்பு ஏன் இப்படி? நான் ஏதோ தெலுங்கு படமாக்கும் நினைச்சு வந்தேன்!

உமா தர்மனுக்காக பாக்கலாங்கறீரு? அப்ப சரி.

Anonymous said...

திரைப்பட ஆர்வலர்கள் நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய இரண்டு படங்கள். கதை சொல்லும் முறையும் காட்சி அமைப்புக்களும் வெவ்வேறு பாணிகளைப் பின்பற்றீயதாக இருக்கும். இப் பாணிகளை எவ்வாறு சுவாரஸ்யமாக ஒருங்கிணைக்கலாம் என்று கற்றுக்கொள்ளலாம்.

துளசி கோபால் said...

துருமன் தருமன் ஆனா(ரே)னே:-))))

Anonymous said...

Above all, the music is wonderful. Especially the songs with chinese music like 'bang bang..' are fabulous ones. I bought this movie only for the back ground music and the songs.

பெத்தராயுடு said...

எனக்கு முதல் பாகம் பிடிச்ச அளவுக்கு ரெண்டாம் பாகம் பிடிக்கல..

'Kung-fu hustle' பாத்திருக்கீங்களா?

இலவசக்கொத்தனார் said...

//எம லோகத்துக்குப் போயி திரும்பி வார கதாநாயகி தன்னைக் கொன்னவங்களைப் பழி வாங்குறது தான் கதை.//

அட தலைவர் படம்!! என்ன படம் சொல்லுங்கோ பார்க்கலாம். :))

Sud Gopal said...

நட்சத்திரம்,உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்.

வாத்யாரே,
உங்களுக்கு தெலுங்கை விட மலையாளப் படம் தானே புடிக்கும்.விசுவோட படங்களில் கதாநாயகியோட பேரு உமான்னு தான் வைப்பாரு.இந்த நெஜ உமாவை வைச்சு விசு ஒரு படம் எடுத்தா எப்படி இருக்கும்??

Sud Gopal said...

//கதை சொல்லும் முறையும் காட்சி அமைப்புக்களும் வெவ்வேறு பாணிகளைப் பின்பற்றீயதாக இருக்கும். இப் பாணிகளை எவ்வாறு சுவாரஸ்யமாக ஒருங்கிணைக்கலாம் என்று கற்றுக்கொள்ளலாம். //

அனானி,அதே..அதே...

இந்த உத்தியை பல்ப் ஃபிக்ஷனில் ஹாலிவுட்டுக்கு அறிமுகம் செஞ்சதே நம்ம டாரண்டினோ தான்.

Sud Gopal said...

துளசி அக்கா:
உமா தர்மன்னுதான் இண்டர்வியூவில எல்லாம் சொல்றாங்க??படம் பார்த்திருக்கீங்களா??

Sud Gopal said...

ஆமாம் அனானி.பின்னணி இசை ஏ ஒன் ஆக இருக்கும்.அந்த மூணு பேர் கொண்ட ராக் இசைக்குழுவோட பேரு "5.6.7.8's".

Sud Gopal said...

பெத்தராயுடு:
ரெண்டாம் பகுதியின் நீளமும்,காதில் பூச்சுற்றும் ஒரு சில சண்டைக் காட்சிகளும் கூட காரணமாய் இருந்திருக்கலாம்.

இல்லை..நீங்க சொன்ன படத்தை இன்னும் பார்க்கலை.நல்லா இருக்குமா??

Sud Gopal said...

கொத்ஸ்:
ஹி..ஹி..அதிசயப் பிறவியய்யா நீர்...

பெத்தராயுடு said...

//இல்லை..நீங்க சொன்ன படத்தை இன்னும் பார்க்கலை.நல்லா இருக்குமா?? //

Lucy Liu ஜப்பானில் லேடி டான்-ஆ வரும் பகுதிய ஒரு முழு நீளப்படமாக்கிப் பாருங்க. அப்படி ஒரு ஃபாண்டஸி படம்.

G.Ragavan said...

பில்லைக் கொல்லுங்குறதப் படிச்சதும் என்னடா இது புதுமையா இருக்கே. தெலுங்கோ மலையாளமோ கன்னடமோ மாராட்டியோ குஜாராத்தியோன்னு நெனச்சேன். பாத்தா ஆங்கிலம். கொல்லு பில்லை-ன்னு தலைப்பு வெச்சிருந்தா நான் புல்லரிச்சிருப்பேன். அதுனாலதான் நீங்க வைக்கலைன்னு நெனைக்கிறேன். நன்றி நன்றி.

Sud Gopal said...

பெத்தராயுடு கண்டிப்பாகப் பார்க்க முயற்சிக்கிறேன்.

ஜீரா,இந்தப் படம் பார்த்திருக்கீறா?

Prakash said...

Hi Sudharsan,

Nice reivew, but a small correction. The non linear timeline technique has been there for years ... some famous examples are - lawrence of arabia, the last emperror etc...But Quentin had a unique approach to that with some very interestng dialogues.

All the best and continue your good work.

Thanks,
Prakash