"சிவாஜியின் வருகையும் தில்லி அரசியலில் அதன் விளைவுகளும்" என்னும் தலைப்பில் சீஸனல் பதிவு ஒண்ணு போட்டு ஹிட் கவுண்டைக் கூட்டலாம்னு நினைச்சுட்டு இருந்த நேரத்தில் இப்போ நடந்திட்டு இருக்கிற எட்டு வெளையாட்டு ஆட காதல் முரசுவும்,தேவும் கூப்பிட்டு இருக்காங்க..
ஃப்ளேப்ஜாக் திங்க கூலியான்னுட்டு எழுத ஆரம்பிச்சேன்;எழுத ஆரம்பிச்சேன்;எழுதினேன்;எழுதினேன்;இன்னும் எழுதிட்டே இருக்கேன்.நம்ம சோம்பேறித்தனம் தான் உலகப்பிரசித்தி பெற்றதாச்சே...
சரி..சரி..விஷயத்துக்கு வருவோம்.
(1)முதல் கனவு: சின்னப் பையனா தாத்தா ஊரில வளர்ந்த போது,மாதம் ஒரு முறை என்னைக் கூட்டீட்டு தாத்தா சூலூர் வருவார்.பழனியில இருந்து உடுமலை வரும் வழியில் மடத்துக்குளத்துக்கு முன்னாடி ஒரு லெவல் கிராசிங் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட பஸ்ஸில ஏறினா,அந்த லெவல் கிராசிங் புண்ணியத்துல ரயில் பொட்டிகளைப் பார்க்கலாம்.எங்க தாத்தா என்னை அந்த பஸ்ஸுக்குத்தான் கூட்டிட்டி வருவாரு.எனக்கோ ரயில் பெட்டிகளை விட,இரண்டு பக்கமும் பல்வேறு வாகனங்களை நிறுத்தின லெவல் கிராசிங் கேட்டு மேல தான் ஒரு கண்ணு.நான் படிச்சு பெரியவன் ஆனவுடனே,அந்த லெவல் கிராசிங் கேட்மேனாகத் தான் வருவேன்னு கொஞ்ச காலம் சொல்லீட்டு இருந்தேனாம்.ரயில் அந்த ரூட்டில வரலேன்னா அந்த லெவல் கிராசிங்குக்கே வேலை இல்லைன்னு தெரிஞ்ச போது,அந்த ரயிலில் ட்ரைவராகவோ,கண்டக்டராவோ இல்லை க்ளீனராகவோ ஆகப் போறேன்னு சொல்ல ஆரம்பிச்சேன்.முதல் முறையா ரயிலில் பிரயாணம் செஞ்ச பிறகு,அந்த ரயிலில் டீ விற்பனை செய்யும் ஆளாக ஆகப்போறேன்னு சொன்னது இன்னும் நினைவுல இருக்கு.ஹூம்..கடைசியில் இப்போ இங்கே வந்து ஆணி புடுங்கணும்னு என்னோட தலையில எழுதியிருக்கிறதை மாத்த முடியுமா??
(2)வியாபார காந்தம்:இப்படியாகத் தானே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்த யாம் ஒரு சுபயோக சுப தினத்தில் சூலூர் மக்களின் மனக்கேதத்தினைத் தீர்க்கும் பொருட்டு,சூலூரில் எழுந்தருளினோம்.அடச்சீ...சொல்ல வந்த மேட்டரைச் சொல்லாம மொக்கை போடறானேன்னு திட்டறது கேக்குது. சூலூரில எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருந்த காலிவீட்டுல திடீர்னு செமையான கூட்டம்.யாரோ காமாட்சி பீடத்தின் ஆஸ்தான அடிகள் அந்த வீட்டுக்குக் குடி வந்ததனால் எங்க ஏரியாவுக்கே கொஞ்ச நாள் செம்ம மௌசு வந்திடுச்சு.முழுப் பரிச்சை லீவுக்கு என்ன செய்யலாம்னு நகத்தைக் கடிச்சிக்கிட்டு இருந்த சோக்காளிகளுக்கு என்னோட அந்த ஐடியா மொதல்ல கூமுட்டைத்தனமாத்தான் பட்டது.ஆனா வெயில் காலம்,வர்ர ஆளுங்களோட எண்ணிக்கை, சீப்பான ப்ரொடெக்ஷன் காஸ்ட்,அதிக லாபம், தவிரவும் வெட்டுப்பட்டான் குட்டையில நடக்கிற கிரிக்கெட்டு மேட்சுக்கு ட்ரிங்ஸ் ஸ்பான்ஸர் அப்படின்னு கலர் கலரா நான் சொன்னதை நம்பி ஆரம்பிக்கப்பட்டது தான் "சூலூர் கோலா". எலுமிச்சை சூசுக்கு நாங்க வச்ச பேரு அது தான்.நல்லாத்தேன் போச்சு.ஆனா எங்க கெட்ட நேரம் ...ஹும்..மீதிக் கதையை இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம். சப்ளை அண்ட் டிமாண்ட் அப்படின்னு பல ஜல்லிகள் தெரியாத அந்த நாளில் எனக்குள் தோணின அந்த ஐடியாவை செயல்முறைப்படுத்தி லாபமும் சம்பாரிச்சதை நெனச்சா இன்னைக்கும் புல்லரிக்குது.
(3)சுயமரியாதை: அட.இது டிடில மதியம் போடுற மெகா தொடரோட பேர் இல்லைங்க.நான் கொஞ்சம் கௌரவம் பார்க்கிற ஆளு.நண்பர்கள் கிட்டே பார்க்க மாட்டேன்.ஆனா சொந்தக் காரங்ககிட்டே அதிகம் பார்ப்பேன்.எனக்கு மண்டைக்கனம் ஜாஸ்தீன்னு இதனால் அவங்க சொல்லீட்டுப் போனாலும்,யாருக்காகவும் இதனை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.நம்மளை நாமளே மதிக்கலைன்னா யாரு மதிக்கப் போறாங்க சொல்லுங்க??
(4)சினிமா பைத்தியம்: தியெட்டரில் பார்த்த முதல் படமான"பயணங்கள் முடிவதில்லை"யில் ஆரம்பித்தது இந்தப் பைத்தியம்.மின்சாரக் கனவு வேண்டாம்டா, இருவர் போலாம்னு சொன்னப்போ எல்லாரும் என்னை மொறச்சதைச் சொல்லவா,இந்தியன் ஓப்பனிங் ஷோ பார்க்க டிக்கெட்டுக்கு அலைஞ்ச கதையைச் சொல்லவா,"Love actually"பார்த்திட்டு அதனோட திரைக்கதை format பத்தி மூணு மணிநேரம் செந்தில் கூட மொக்கை போட்டதைச் சொல்லவா.??அப்படி ஒரு சினிமா பைத்தியம் நான். ரசனைகளில் மாற்றம் வந்த போதும், கரகாட்டக்காரனை ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டியாவது பார்க்காம தூக்கம் வருவதில்லை.
(5)பொறுப்பான பையன்:எங்க அப்பாவோட அருமைச்சினேகிதர் ஒருவர் எப்போ பார்த்தாலும் என்னைப் பத்தி ஏதாவது நொணை நாயம் சொல்லீட்டே இருப்பார்.அப்படிப்பட்ட அவர்கிட்டயே "கலக்கீட்டயே தம்பீ..." அப்படின்னு பேர் வாங்கிற மாதிரி திட்டமிட்டு செஞ்ச உடம்பொறப்போட கல்யாணம்,மறக்கவே முடியாது.நிச்சயம் முடிஞ்சு இருபதாவது நாள் கல்யாணம்.பயங்கரமா பிளேன் செஞ்சு,பேக்கப் ஏற்பாடுகளைப் பத்தி தீவிரமா யோசிச்சு செஞ்ச நிகழ்வு இது.கல்யாணத்தன்னைக்கு எங்க அப்பா முகத்தில இருந்த அந்த சந்தோஷத்தயும்,எம் மகன் சாதிச்சுட்டான்கிற பெருமித உணர்வையும் பார்க்கிறப்போ இன்னுமொரு உடன்பிறப்பு இருந்திருக்கக் கூடாதுன்னு ஏக்கந்தான் வருது.
(6)கிச்சன் கில்லாடி:இன்னும் ஒரு மாசத்துல அட்டகாசமா சாம்பார் செஞ்சு காமிக்கறேன்னு போட்டீல குதிச்ச அப்புறம் தான் சமையல் இவ்வளவு கஷ்டமான விஷயமான்னே தெரிய வந்தது.எப்படியோ..முட்டி மோதி ஒரு வழியா சமையலும் கத்துக்கிட்டாச்சு.இப்போ சமையல் என்னோட பேஷன்(passion)னு டயலாக் அடிக்கற மாதிரி சமையலிலும் தேறியாச்சேய்.ஊருக்குப் போனா இப்போ அய்யா தான் டீ போடறது.என்னைக் கேட்டா சமையல் நல்லாச் செய்யிறவங்க, நல்ல பொறுமைசாலியா இருப்பாங்கன்னு தான் சொல்லுவேன்.பெங்களூரில் ஒரு சாப்பாட்டுக்கடை போடலாம்னு கொஞ்ச நாளா யோச்சிட்டு இருக்கோம்.
(7)அட்வைஸ் அண்ணாசாமீஸ்: "காதல்ங்கிறதெல்லாம் மாயை.பிராக்டிக்கலா யோசீ"அப்படீங்கற வசனத்தை எங்க காலேஜ் பக்கம் போன நூற்றாண்டில கேட்டிருந்தீங்கன்னா நீங்க கட்டாயம் அ.அண்ணாசாமிக்களைப் பார்த்திருக்கீங்கன்னு அர்த்தம்.அது வேற யாருமில்லை.அடியேனும் அடியேனோட நண்பர் குழாமும் தான்.பாலகுமாரனோட நாவல்கள் படிச்சிட்டு பசங்க மத்தியில டயலாக்கா அடிச்சு வுட்டுட்டு இருந்த காலம் அது.எந்தப் பையனாவது எந்தப் பொண்ணுக்காவது ரூட்டு வுடறான்னு தெரிஞ்ச உடனே,அவனைப் புடிச்சு இந்த மாதிரி ஒரு நாலஞ்சு வஜனத்தை அள்ளி விடாட்டி எங்க கும்பலுக்கே தின்ன சோறு சீரணம் ஆகாது.இப்படி நாங்க பிரிச்சு விட்ட ஜோடிகள் ஏராளம் . காதலிக்கத் தேவையான மன தைரியம் இல்லாத எங்களை ஐடியா அண்ணாசாமீஸ்னு கற்பனை செஞ்சிட்டு அட்வைஸ்ங்கிற பேர்ல நாங்க செஞ்ச அலப்பறையை எப்போ நினைச்சாலும் சிரிப்புதான் வரும்.
(8)அதீத ஞாபக சக்தி:மூணாம் வகுப்பில கணக்குப் பாடம் எடுத்த டீச்சரோட வீட்டுக்காரர் பேரில் இருந்து,ஸ்பீடு படம் இந்தியாவில வெளியிடும் போது ஸ்டார் நிறுவனம் வைச்ச போட்டியில் இருந்து,அழ.வள்ளியப்பா காலமாகும் போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் யார்ங்கிற வரைக்கும் குத்து மதிப்பா ஞாபகத்துக்கு இருக்கும்.ஆனா என்னோட யாஹீ மெயில் பாஸ்வேர்ட்,எங்க வீட்டு லேண்ட்லைன் நம்பர்,எங்க அப்பாவோட வண்டி நம்பர் போன்ற விஷயங்கள் தான் அடிக்கடி குழப்பும். எண்களை விட முகங்களும்,பெயர்களும் அவ்வளவு சீக்கிரமா மறந்திட மாட்டேன்.
இனி, நான் அழைக்க விரும்பும் எட்டு பேர்.
1)இளவஞ்சி
2)ஸ்ருசல்
3)யாத்ரீகன்
4)கேவீஆர்
5)ரம்யா நாகேஸ்வரன்
6)செல்வேந்திரன்
7)சந்திரவதனா
8)கோ.கணேஷ்
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
02 July 2007
என்னைப் பற்றி ஒரு எட்டு
குறிச்சொல் சொந்தக்கதை
Subscribe to:
Post Comments (Atom)
19 Comments:
அதீத ஞாபக சக்தி//
ஆமாங்க .. எனக்கும்தான். பாருங்க ஒரு தடவை ..அய்யோடா .. என்னமோ சொல்ல வந்து, சுத்தமா மறந்தே போச்சே... :(
//கரகாட்டக்காரனை ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டியாவது பார்க்காம தூக்கம் வருவதில்லை.//
ada nammaalu ;-)
// அதீத ஞாபக சக்தி//
அப்படித் தெரியலையே...ஒம்மள மொதல்ல எட்டு போடக் கூப்புட்டதே நானு. அப்புறந்தான கோவும் தேவும் வந்தாங்க ;)
//காதலிக்கத் தேவையான மன தைரியம் இல்லாத எங்களை ஐடியா அண்ணாசாமீஸ்னு கற்பனை செஞ்சிட்டு அட்வைஸ்ங்கிற பேர்ல நாங்க செஞ்ச அலப்பறையை எப்போ நினைச்சாலும் சிரிப்புதான் வரும்.//
அப்ஜக்சன் மை லார்ட்ட்ட்ட்!!!!
1. நான்கு குழந்தைகள் போதும் இதற்கு மேல் குழந்தை வேண்டாம் என்று தீர்மானித்த எனது பெற்றோர் ஒரு கிறித்துவ மிஷினரி மருத்துவமனையில் கருவைக் கலைக்க தீர்மானித்து சிகிச்சை எடுத்திருந்தனர். அதில் ஏதோ தவறு நேர்ந்து, இந்த பழுதடைந்த பூமியில் அவதரித்தது.
2. அமைதியான சுபாவமும், கூச்சமும் உள்ள பாரம்பரியம் மாறாத ஒரு குடும்பத்தில் ஒரு விநோத ஜந்தாக சிறுவயதிலிருந்தே கிரிக்கெட், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, சொற்பொழிவு, கவியரங்கம், பட்டிமன்றம், சிறுபத்திரிக்கை என சிறகுகளை விரித்தது.("உயர.. உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாதுடா" -அப்பா)
3. வறுமை, பிரச்சனைகள் என பள்ளிப்படிப்பே பாதியில் முடிந்தாலும், போராட்ட குணத்தோடு தொலைதூர கல்வியில் பட்டமும், கணிணி, தட்டச்சு இன்னபிற குமாஸ்தா சமாச்சாரங்களை கற்றுக்கொண்டது.
4. பதினைந்தாவது வயதிலிருந்தே சொந்த உழைப்பில் சாப்பிடுவதும், சாப்பாடு போடுவதும் (குடும்பத்திற்கு)
5. ஒப்பந்த ஊழியனாக தமிழகத்தின் முன்னனி ஊடகம் ஒன்றில் பணியில் சேர்ந்து இரண்டே ஆண்டுகளில் அதன் முக்கிய பொறுப்புகளில் ஒன்றினை வகிக்கும் அளவிற்கு உயர்ந்தது.
6. பணி ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பால் எண்ணற்ற ஆளுமைகளை, எழுத்தாளர்களை சந்திக்க முடிகிறது. எத்தனையோ ஊர்களுக்கு பயணிக்க முடிகிறது.
7. அழகாக இருப்பது.
8. நல்ல நண்பர்களை சம்பாதித்துக் கொண்டது.
மிக்க அன்புடன்
செல்வேந்திரன்.
அழைப்புக்கு நன்றி சுதர்சன்.
கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்.
விரைவில் பதிகிறேன்.
நல்லா சுத்திருக்கீங்க கொசுவர்த்திய...
உங்க எட்டு எல்லாமே ரசிச்சேன்ப்பா...
இன்னுமும் கரகாட்டக்காரனை ரசித்துப் பார்க்கும் கூட்டத்தில் அடியேனும் உண்டு :)
அட தருமி அய்யாவா..வரணும்.வரணும்...நல்ல ஞாபகசக்தி தான் உங்களுக்கு.
கானாபிரபா:
வாங்க.வாங்க.கல்லாப்பெட்டி சிங்காரம்,ராமராஜன்,செந்தில் மாதிரி இயல்பான கிராமத்து நடிப்பைத் தரும் நடிகர்கள் இந்தத் தலைமுறையில் யாருமே இல்லைங்கறது யாருமே மறுக்க முடியாத உண்மை.
ஜீரா..நீங்க கூப்பிட்டதா நினைவில்லையே??
அண்ணே..ஏண்ணே இப்பிடி?? என்ன ஆச்சு உங்களுக்கு?? என்ன மேட்டர்னு சொன்னீங்கன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்.
இப்பிடி மொட்டையா "அப்ஜெக்ஷன் மைலார்டு"ன்னு சொன்னா என்னன்னு நினைச்சுக்கறது?
அழைப்பு ஏற்று கௌரவப்படுத்திய செல்வேந்திரனுக்கு நன்றிகள் பல.
உங்களோட பல தகவல்கள் என்னோட நண்பனோட தகவல்களோட ஒத்திருக்கு.
அப்புறம் அண்ணே இதை நீங்க உங்க வலைப்பதிவில கூட எடுத்துப் போடலாமே?
வாங்க வதனா.சீக்கிரமே எட்டைப் போட்டுத் தாக்கிடுங்க.
வாங்க அருள்.மறுபடியும் ஹைதராபாத்தா??கரகாட்டக்காரனை ரீமேக் செஞ்சா ஹீரோயினா யாரைப் போடலாம்னு நினைக்கிறீங்க.
அண்ணாச்சி.. Tag பண்ணதும் அதிசயமா உடனே நிறைவேத்தியாச்சு ;-) .. மொக்கையா இருக்கு.. என்ன பண்றதுனே தெரியல :-D !!!!
கரகாட்டக்காரனா.. அந்த ஊரு விட்டு ஊர் வந்து பாட்டுக்காகவும், அதுல தலைவர் கவுன்டமணி போடுற டான்ஸ் ஸ்டெப்புக்காகவும் மறக்க முடியாது :-) , ஆனாலும் எப்படி பாஸ் திரும்பத்திரும்ப, திரும்பத்திரும்ப பாக்குறீங்க.. !!!
நீங்க அட்வைஸ் அண்ணாசாமீஸா காலேஜ்ல பண்ணதை அதுக்கப்புறம் பண்ணீட்டு திரிஞ்சது இங்க, அந்த பாவம் சுத்து சுத்தி, சூப்பர் ஸ்டார் மாதிரி அடிக்குது இப்போ ;-) , அங்க எப்படி ?
// அண்ணே..ஏண்ணே இப்பிடி?? என்ன ஆச்சு உங்களுக்கு?? என்ன மேட்டர்னு சொன்னீங்கன்னா கொஞ்சம் வசதியா இருக்கும். //
ராசா, கேட்டீங்களா?! தம்பிக்கு புரியலையாம்! நீங்க கேக்கறது என்னான்னு தெரியலையாம்! பாவம்! அஞ்சாப்புக்கு அப்பறம் தமிழ்ச் சமுதாயத்து பசங்களோடயே சேரலையாம்!
சுதர்சன் கோவாலு! கோடம்பாக்கத்துல சின்னத்தம்பி பார்ட் II க்கு ஆள் எடுக்கறாங்களாம்! ச்சும்மா! ஒரு Trivia தகவல்... உங்களுக்கு! :)))
// சுதர்சன்.கோபால் said...
ஜீரா..நீங்க கூப்பிட்டதா நினைவில்லையே?? //
அடடா! அப்ப எனக்குத்தான் நல்ல நினைவாற்றலா! :)
அதெல்லாம் இருக்கட்டும்..நான் கூப்புட்டுதான் நீங்க பதிவு போடனுமா!!! என்ன ஓம்பபொடியாரே இது! நீங்க பிழிஞ்ச எத்தன ஓமப்பொடிகளுக்கு நான் கடலமாவு கரைச்சுக் குடுத்திருப்பேன் :)))
//கரகாட்டக்காரனை ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டியாவது பார்க்காம தூக்கம் வருவதில்லை.//
//Kana Prabha :ada nammaalu ;-)//
நானும் : உள்ளேன் அய்யா.
சிவா.
sivaramang.wordpress.com
உங்கள் அழைப்புக்கு இணங்க எனக்கு எட்டிய எட்டுக்கள்.
சுதர்ஸன் கோபால், பின்னுட்டமாக மட்டுமே எட்டு போடுவது என ரத்தத்தில் அடித்து சத்தியம் செய்துள்ளேன். சூலூர்தான் சொந்த ஊரா? தற்போது இருப்பு எங்கே?
Post a Comment