1)என்னோட அண்ணாவும் தன்னோட ஆரம்பகால வாழ்க்கையை மீடியா துறையில தான் ஆரம்பிச்சார்.எங்க அப்பாவுக்கு இருந்த செல்வாக்கு,அரசியல் பலம்,வியாபார நெளிவுசுளிவுகள் காரணமா எங்கோ இருந்த நாங்க இன்னைக்கு இருக்கிற இடத்தை நினைச்சுக் கூட பார்க்க முடியலை.நாளைக்கு அழிவில்லைல வந்த எலியட் கார்வர் கதாபாத்திரம் எங்க அப்பாவைத் தாக்கி இருக்குன்னு எங்கோ படிச்ச ஞாபகம்.அப்புறம்,2003ல நான் பதவிக்கு வந்தப்போ இருந்த சர்ச்சை இப்போ சுத்தமாக் குறைஞ்சிருச்சு.
2)1982ல் வெளியாகி உலக புகழ்வாய்ந்த அந்தப் படத்திலே நடிக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.என்னோட படத்தைப் பத்தி வேட்டையாடு விளையாடுவில ஜோதிகா ஏதோ சொல்லியிருக்காங்களாமே,அது நிஜமா? நாலு குழந்தைகளுக்கு அப்பாவான என்னோட இயற்பெயர் கிருஷ்ணா பான்ஜி.
3)மார்ச் 1976ல் இருந்து ராஜ்யசபா எம்.பி.ஆன போதிலும் எனக்கு அமைச்சர் பதவி கிடைச்சதென்னமோ 29 ஜனவரி 2006ல் தான்.நான் 1943ல் லாகூர்ல பிறந்தேன்.உங்க ஊர்ல கூட என் பேர்ல ஒரு நடிகை எண்பதுகளில் கலக்கிட்டு இருந்தாங்களாமே,உண்மையா?
4)இந்த அம்மா குச்சிப்புடி,பரதம் நல்லா ஆடுவாங்கன்னு என்னைப் பத்தி எழுதறவங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் நான் IIM-A அலுமினி என்பது.காலேஜில பசங்க பேப்பர்ல விட்டுக்கிட்டு இருக்கிற அந்த விஷயத்தை நம்ம இந்தியாவில சாதிக்கக் காரணமாக இருந்த அந்த நிறுவனத்தை உருவாக்கினதில எங்க அப்பாவுக்கு ஒரு பெரும்பங்கு இருக்கு.என்னது..?நரேந்திர மோடியா...ஆளைவிடுங்கப்பா...
5)ஜாக்கிசான் 80நாட்களில் உலகம் சுற்றிய பயணத்தின் போது நான் தான் ஹாட் ஏர் பலூன் ஓட்டுனர்.உங்க ஊர் தினத்தந்தி சிந்துபாதுக்கும் எனக்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கு.2006ல் நான் ஆரம்பிச்ச அந்த காமிக்ஸ் நிறுவனத்தில் சேகர்கபூர் சித்திரக்காரராய் இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா?
09 July 2007
நான் யார்? நான் யார்? நான் யார்?
குறிச்சொல் குவிஸு
Subscribe to:
Post Comments (Atom)
20 Comments:
1.
2. காந்தியா நடிச்ச கிங் பென்ஸ்லி
3.மணி சங்கர் ஐயர்
4.மல்லிகா சாராபாய்(என் கேள்வி காப்பி அடிச்சுட்டீங்க.
5.Richard Charles Nicholas Branson ???
1. தயாநிதி மாறன்
2. கமல் (சரியா??)
3. அத்வானி
4. பாஸ்
5. பாஸ்
வாங்க அனுசுயா...
3)உங்க ஊர்ல கூட என் பேர்ல ஒரு நடிகை எண்பதுகளில் கலக்கிட்டு இருந்தாங்களாமே,உண்மையா??
முயற்சிக்கு நன்றிகள்..
விவ்..சபாஷ்...
மூணு கேள்விக்கு சரியா பதில் சொல்லியிருக்கீங்க..
மூணாவது கேள்விக்கு மேலே அனுசுயாவுக்குக் கொடுத்த குறிப்பைப் பயன்படுத்திப் பாருங்க.
1)மாறன் சகோதரர்கள்
2)பென் கிங்ஸ்லீ...
3)எண்பதுகளில் கலக்கிய நடிகை வடிவுக்கரசியா?
4)தெரியலையே??
5)ஆங்..கன்னித்தீவு..ரிச்சர்ட் பிரான்சனா?
திருவாளர்."நான் அவன் இல்லை" அவர்களே,
நீங்க சொன்னதில இரண்டு பதில் சரியே...
இந்த மாதிரி பேர் வைக்க ரூம் போட்டு யோசிப்பாங்களோ??
1) சாய்ஸ்ல விட்டுட்டேன் ;-)
2) பென் கிங்ஸ்லி
3) அம்பிகா சோனி
4)மல்லிகா சாராபாய்
5) ரிச்சர்ட் பிரான்சன்
அட..பிரகாஷ்..வாங்க..வாங்க..
கலக்கல்.80 சதவீதம் எடுத்திருக்கீங்க...
1. தெரியாது
2. தெரியாது
3. தெரியாது
4. தெரியாது
5. தெரியாது
6. தெரியாது
7. தெரியாது
8. தெரியாது
9. தெரியாது
10. தெரியாது
தெரியாதுன்னு உண்மையை ஒத்துக்க ஒரு தகிரியம் வேணும்.ஜீரா..அது உங்களுக்கு நெறையவே இருக்கு...
1) தயாநிதி மாறன்?!
2) பென் கிங்ஸ்லி - காந்தி
3) அம்பிகா சோனி(சுற்றுலாத் துறை)
4) தெரியவில்லை
5) தெரியவில்லை
5.ரிச்சர்ட் பிரான்ஸன் - வர்ஜின் காமிக்ஸ்
தவணை முறையில் இரண்டு கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லியிருக்காரு யோசிப்பவரு..
சரியான பதில்கள் நாளை பதிக்கப்படும்...
இரண்டா?
பென் கிங்ஸ்லி, அம்பிகா சோனி, ரிச்சர்ட் பிரான்ஸன் - மூன்றும் கண்டிப்பாக சரியென்பதில் எனக்கு சந்தேகமில்லை. என்ன விளையாடுகிறீர்களா? ஆதாரங்கள் வைத்திருக்கிறேனாக்கும்!!!;-)
1. Rupert Murdoch
2. Ben Kingsley
3, Ambika Soni
5. deepak chopra
அய்யோ..தப்பு நடந்து போச்சு..யோசிப்பவர் மூணு பதில் சரியா சொல்லியிருக்காரு.
அனானி:
ரெண்டும்,மூணும் சரி. ஒண்ணும் அஞ்சும் பாதிக்கிணறு தாண்டிட்டீங்க...
1)ஊடக தாதாவான ராபர்ட் முர்டாக்கின் மகன் ஜேம்ஸ் முர்டாக்
2)பென் கிங்ஸ்லி
3)அம்பிகா சோனி
4)மல்லிகா சாராபாய்
5)ரிச்சர்ட் பிரான்சன்
முயற்சி செய்த அனைவருக்கும் நன்றிகள்...
ஒன்னா ரெண்டா அஞ்சுமே தப்பா. இதுக்கு பேசாம வாய மூடிட்டு இருந்திருக்கலாம் :)
முடியலை
Post a Comment