11 January 2007

என்ன படம் ? என்ன பாடல் ? #3

1)அடி மானே.....
கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சுக்கணும்
ஒரு நூலு அறுந்தாலும் உருண்டோடுமே...

2)கண்ணுக்குள்ளே மின்னும் மையி
உள்ளுக்குள்ளே எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு

3)வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு
வீணாகிப் போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு
வேய்ங்குழல் பாடுது வீணையொடு

4)பருவக்குயில் தவிக்கிறதே...
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்
இளம்வயது தடுக்கிறதே....

5)ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே
அதில் வீணாக விழாதே
நீ விழாதே....

6)சன்மார்க்கங்களும் சப்ததீர்த்தங்களும்
அஷ்டயோகங்களும் நவயாகங்களும்
தொழும் பூங்கழலே மலைமாமகளே

7)வாங்கி வந்த மல்லிகைப்பூ
வாசமின்னும் போகலியே
நட்டுவச்ச பந்தக்காலும்
பள்ளமின்னும் மூடலியே

8) புதுவெள்ளம் சேரும்போது வழியென்ன பாதை என்ன?
புதுக்காத்து வீசுறபோது திசை என்ன தேசம் என்ன?
மனசுக்கு தாள் போட்டு
நீ போ மயிலே, வேணாம் வெளையாட்டு

9)ஆயிரம் பிச்சிப்பூவும் அரும்பரும்பா பூத்தாலும்..
வாசமுள்ள பிச்சியெனக்கு வாய்க்காது எக்காலும்...

10) ஓடை நீரோடை, இந்த உலகம் அது போல...
ஓடும் அது ஓடும் ஒரு நிலையா நில்லாம...

36 Comments:

கப்பி | Kappi said...

பார்த்தவுடனே ஞாபகம் வந்தது இந்த மூனு தான்

4. நான் தேடும் செவ்வந்தி பூவிது?

6. ஜனனி ஜனனி

10.தென்றல் வந்து தீண்டும்போது

முத்துகுமரன் said...

1.எம்பாட்டு எம்பாட்டு -பூமணி
3. உன் குத்தமா என் குத்தமா - அழகி
4.நான் தேடும் செவ்வந்தி பூவிது - தர்மபத்தினி
6.ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ - தாய் மூகாம்பிகை
7. சோலைப் பசுங்கிளியே சொந்தமுள்ள - என் ராசாவின் மனசிலே
8- சின்ன பொண்ணு சேலை செண்பகப்பூ போல - மலையூர் மம்முட்டியான்
10. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில - அவதாரம்

வல்லிசிம்ஹன் said...

10,
அவதாரம் ..படம்

பாட்டு...தென்றல் வந்து தீண்டும்போது.

இன்னும் ஒரு பாடல்
ஜனனி ஜனனி ஜகம் நீ...
படம் ...தாய் மூகாம்பிகை

Anonymous said...

10. Avatharam, thendral vanthu theendum pothu...

பாலராஜன்கீதா said...

2. முதல் வசந்தம் - ஆறு அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல ஆழமிது ஐயா இந்தப் பொம்பள மனசு

3. அழகி - உன் குத்தமா என் குத்தமா யாரைன்னு குத்தம் சொல்ல

4. தர்ம பத்தினி - நான் தேடும் செவ்வந்திப்பூவிது (தனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று இளையராசாவே சொல்லியிருக்கிறாராம்)

6. தாய் மூகாம்பிகை - ஜனனி ஜனனி ஜகத்காரணி

7. என் ராசாவின் மனசிலே ?

Anonymous said...

/)வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு
வீணாகிப் போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு
வேய்ங்குழல் பாடுது வீணையொடு/

உங்குத்தமா... எங்குத்தமா... (அழகி)

கப்பி | Kappi said...

1.என் பாட்டு என் பாட்டு நெஞ்சில் நிக்கும் பூங்காத்து

3. உன் குத்தமா என் குத்தமா

சேதுக்கரசி said...

4) நான் தேடும் செவ்வந்திப்பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது (தர்மபத்தினி)

6) ஜனனீ ஜனனீ ஜகம் நீ அகம் நீ ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ (தாய் மூகாம்பிகை)

Anonymous said...

3) உல்லாசம் - யாரோ யார் யாரோ

மீதி எல்லாம் யோசிச்சு சொல்லறேன்

Sud Gopal said...

கப்பி,இரண்டு தவணையா வந்து பதில் சொல்லி 50% மார்க் வாங்கியிருக்கீங்க.
வாழ்த்துகள்.

Sud Gopal said...

70% சரியா சொல்லி அசத்தியிருக்கீங்க முத்துகுமரன்.வாழ்த்துகள்...

அப்புறம் நீங்க சத்யராஜ்+சுஹாசினி நடிப்பில வந்த அந்த படத்தைப் பார்க்கல போல??

Sud Gopal said...

முதல் முறையா வந்திருக்கீங்க வல்லி சிம்ஹன்..வாங்க..வாங்க...

மீதி எட்டையும் யோசிச்சு சொல்லக் கூடாதா?

Sud Gopal said...

சவுண்ட் பார்ட்டீ,மீதி பதில் எங்கே??

Sud Gopal said...

வழக்கம் போல புதிய தகவல்களுடன் பாலராஜன்கீதா.

உங்களுக்கு "ஃபிஃப்டி ஃபிஃப்டி" ரொம்பப் பிடிச்ச பிஸ்கெட்டோ??

Sud Gopal said...

காதல் முரசு..உங்களுக்குப் பொருத்தமான மூணாவது பாட்டை சரியாச் சொல்லீட்டீங்களே...

Sud Gopal said...

வாங்க சேதுக்கரசி...ரெட்டைப்படை எண்கள் மேல உங்களுக்கு மிகவும் நாட்டமோ??

4,6வது கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லியிருக்கீங்களே,அத வச்சுக் கேட்டேன்..

Sud Gopal said...

அப்பா..5வது பாட்டைக் கப்புன்னு புடிச்சாரய்யா நம்ம பெரகாசு...

Anonymous said...

3. உன் குத்தமா என் குத்தமா - அழகி
6. ஜனனி ஜனனி ஜெகம் நீ..
7. சோலையம்மா, ராசாவின் மனசிலே.
10. தென்றல் வந்து தீண்டும் போது, அவதாரம்

G.Ragavan said...

4. தரும பத்தினி - நான் தேடும் செவ்வந்திப் பூவிது

6. ஜனனீ ஜகனீ ஜகம் நீ அகம் நீ - தாய் மூகாம்பிகை - இந்தப் பாட்டுல கோரஸ் பாடியதே தீபன் சக்கரவர்த்தியும் இன்னொரு பாடகரும். இந்தப் படத்துல இளையராஜா இசையில் விஸ்வநாதன் பாடிய பாடலும் உண்டு.

இவ்வளவுதாங்க நமக்குத் தெரிஞ்சது.

G.Ragavan said...

4. தரும பத்தினி - நான் தேடும் செவ்வந்திப் பூவிது

6. ஜனனீ ஜகனீ ஜகம் நீ அகம் நீ - தாய் மூகாம்பிகை - இந்தப் பாட்டுல கோரஸ் பாடியதே தீபன் சக்கரவர்த்தியும் இன்னொரு பாடகரும். இந்தப் படத்துல இளையராஜா இசையில் விஸ்வநாதன் பாடிய பாடலும் உண்டு.

இவ்வளவுதாங்க நமக்குத் தெரிஞ்சது.

Sud Gopal said...

சவுண்ட் பார்ட்டீ,இன்னும் தூங்கப் போகலியா??

Sud Gopal said...

ஷேவாக் மாதிரி அவுட் ஆஃப் பார்ம் ஆகியிருக்கும் ஜீரா,மத்த கேள்விகளையும் முயற்சி செய்து தான் பாக்குறது???

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

6) ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

7) உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி

இன்னா இது நிறைய பாட்டு ஒரே சோகமா இருக்கற மாதிரி கீது?

கைப்புள்ள said...

1.
2. முதல் வசந்தம் - ஆறும் அது ஆழம் இல்லை...
3. அழகி - உன் குத்தமா என் குத்தமா...
4.
5.
6. தாய் மூகாம்பிகை - ஜனனி ஜனனி...
7. என் ராசாவின் மனசிலே - குயில் பாட்டு...
8. மலையூர் மம்பட்டியான் - சின்னப் பொண்ணு சேலை...
9.
10. அவதாரம் - தென்றல் வந்து தீண்டும் போது...

Sud Gopal said...

"அவள் பறந்து போனாளே...என்னை மறந்து போனாளே"

செந்திலாரே இப்போ திருப்பதியா உமக்கு???

அது சரி யாரு அந்த உச்சி வகுந்தெடுத்த கிளி???

Sud Gopal said...

கைப்ஸ்,கலக்கல் போங்க.

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துகள்.

Anonymous said...

சுதர்சன்... எல்லாமே இசைஞானி பாடிய பாடல்கள் இல்லையா??? ஏதோ என்னாலான முயற்சி... ஒண்ணே ஒண்ணு மட்டும் என்ன பண்ணியும் மாட்ட மாட்டேங்குதுங்க... :(

1)அடி மானே.....
கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சுக்கணும்
ஒரு நூலு அறுந்தாலும் உருண்டோடுமே...

எம்பாட்டு எம்பாட்டு - பூமணி

2)கண்ணுக்குள்ளே மின்னும் மையி
உள்ளுக்குள்ளே எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு

ஆறும் அது ஆழமில்லை - முதல் வசந்தம்

3)வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு
வீணாகிப் போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு
வேய்ங்குழல் பாடுது வீணையொடு

உன் குத்தமா - அழகி

4)பருவக்குயில் தவிக்கிறதே...
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்
இளம்வயது தடுக்கிறதே....

நான் தேடும் செவ்வந்தி - தர்ம பத்தினி

5)ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே
அதில் வீணாக விழாதே
நீ விழாதே....

யாரோ யார் யாரோ - உல்லாசம் (கார்த்திக் ராஜா)

6)சன்மார்க்கங்களும் சப்ததீர்த்தங்களும்
அஷ்டயோகங்களும் நவயாகங்களும்
தொழும் பூங்கழலே மலைமாமகளே

ஜனனி ஜனனி - தாய் மூகாம்பிகை

7)வாங்கி வந்த மல்லிகைப்பூ
வாசமின்னும் போகலியே
நட்டுவச்ச பந்தக்காலும்
பள்ளமின்னும் மூடலியே

சோலைப் பசுங்கிளியே - என் ராசாவின் மனசிலே

8) புதுவெள்ளம் சேரும்போது வழியென்ன பாதை என்ன?
புதுக்காத்து வீசுறபோது திசை என்ன தேசம் என்ன?
மனசுக்கு தாள் போட்டு
நீ போ மயிலே, வேணாம் வெளையாட்டு

9)ஆயிரம் பிச்சிப்பூவும் அரும்பரும்பா பூத்தாலும்..
வாசமுள்ள பிச்சியெனக்கு வாய்க்காது எக்காலும்...

கண்ணே நவமணியே - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
(குறிப்பு கொடுத்த உங்களுக்கும், தூண்டிய முத்துக் குமரனுக்கும் நன்றி!!!)

10) ஓடை நீரோடை, இந்த உலகம் அது போல...
ஓடும் அது ஓடும் ஒரு நிலையா நில்லாம...

தென்றல் வந்து - அவதாரம்

Sud Gopal said...

பிரதீப்..

எப்படி...??இப்படி....???

கலக்கல்...90%

ரவி said...

இது மதுரையில மட்டும் விளையாடும் விளையாட்டுன்னு நினைச்சேன். கோயம்புத்தூரிலும் இருக்கா ?

Anonymous said...

1)அடி மானே.....
கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சுக்கணும்
ஒரு நூலு அறுந்தாலும் உருண்டோடுமே...

2)கண்ணுக்குள்ளே மின்னும் மையி
உள்ளுக்குள்ளே எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு

ஆறும் அது ஆழமில்ல.. அது சேரும் கடலும் ஆழமில்ல



3)வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு
வீணாகிப் போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு
வேய்ங்குழல் பாடுது வீணையொடு

4)பருவக்குயில் தவிக்கிறதே...
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்
இளம்வயது தடுக்கிறதே....

5)ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே
அதில் வீணாக விழாதே
நீ விழாதே....

6)சன்மார்க்கங்களும் சப்ததீர்த்தங்களும்
அஷ்டயோகங்களும் நவயாகங்களும்
தொழும் பூங்கழலே மலைமாமகளே

ஜனனி ஜனனி.. ஜகம் நீ அகம் நீ

7)வாங்கி வந்த மல்லிகைப்பூ
வாசமின்னும் போகலியே
நட்டுவச்ச பந்தக்காலும்
பள்ளமின்னும் மூடலியே

சோலைப் பசுங்கிளியே.. சொந்தமுள்ள பூங்கிளியே

8) புதுவெள்ளம் சேரும்போது வழியென்ன பாதை என்ன?
புதுக்காத்து வீசுறபோது திசை என்ன தேசம் என்ன?
மனசுக்கு தாள் போட்டு
நீ போ மயிலே, வேணாம் வெளையாட்டு

9)ஆயிரம் பிச்சிப்பூவும் அரும்பரும்பா பூத்தாலும்..
வாசமுள்ள பிச்சியெனக்கு வாய்க்காது எக்காலும்...

10) ஓடை நீரோடை, இந்த உலகம் அது போல...
ஓடும் அது ஓடும் ஒரு நிலையா நில்லாம...

கைப்புள்ள said...

4. தர்மபத்தினி - நான் தேடும் செவ்வந்திப்பூவிது...

Sud Gopal said...

செந்தமிழ் மணி சார்,
ஒன்னுமே பிரியலையே???

Sud Gopal said...

வேழம் வாங்க.வாங்க..

ரெண்டு வடைகளை சரியா சுட்டிருக்கீங்க...

Anonymous said...

மூனு சரியா சொன்னேனாக்கும் :"> ஒரு வடையை நீங்க சாப்ட்டேளா ?

முத்துகுமரன் said...

9.kannee en - en bommukutti ammavukku

No ekalappai :-)

Sud Gopal said...

எட்டு கேள்விகளுக்கு சரியான பதில்கள் தந்த முத்துகுமரனுக்கும்,ஒன்பது கேள்விகளுக்கு சரியான பதில்கள் தந்த பிரதீப்புக்கும் பாராட்டுகள்.

முயற்சி செய்த அனைவருக்கும் நன்றிகள்.

1)பூமணி - என்பாட்டு என்பாட்டு

2)முதல் வசந்தம் -ஆறு அது ஆழமில்லை

3)அழகி -உன் குத்தமா என் குத்தமா

4)தர்மபத்தினி - நான் தேடும் செவ்வந்திப்பூவிது

5)உல்லாசம் - யாரோ யார் யாரோ

6)தாய் மூகாம்பிகை -ஜனனீ ஜனனீ

7)என் ராசாவின் மனசிலே - சோலைப் பசுங்கிளியே

8)மலையூர் மம்பட்டியான் - சின்ன பொண்ணு சேலை செண்பகப்பூ போல

9)கண்ணே நவமணியே - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

10)அவதாரம் - தென்றல் வந்து தீண்டும்போது

அடுத்த வாரம் பழைய பாடல்களின் தொகுப்போடு சந்திக்கிறேன்.