30 January 2007

என்ன படம் ? என்ன பாடல் ? #5

1)கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே அருகில் அருகில் நான் வரவா??

2)காதல் வழிச்சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை

3)மங்கையின் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழிமறந்தே வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி

4)நீ என்பது நீ மட்டுமல்ல
மூளையின் மூலையில் ஓர் குரல் கேட்கும்

5)தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்

6)குயிலிசை போதுமே;அட குயில் முகம் தேவையா?
உணர்வுகள் போதுமே;அதன் உருவமும் தேவையா?

7)உந்தன் மனதைக் கேள் அது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்

8)நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீ என் வாசலைத் தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி

9)மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
"வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க" என்றவர் பாடுகின்றார்

10)மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூரக் கள்ளூறுதே...

14 Comments:

Anonymous said...

//6.குயிலிசை போதுமே;அட குயில் முகம் தேவையா?
உணர்வுகள் போதுமே;அதன் உருவமும் தேவையா?//

துள்ளாத மனமும் துள்ளும்!

//8.நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீ என் வாசலைத் தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
//

சின்ன மாப்ளே!

//10)மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூரக் கள்ளூறுதே//

கருத்தம்மா!

Anonymous said...

3. மாலைப்பொழுதின் மயக்கத்திலே ..
6. இன்னிசை பாடிவரும் ..

ஹும்ம்ம் .. மத்தது மற்றவர்களுக்கு ;)

Sud Gopal said...

விக்கி,சிபி சொன்னது அம்புட்டும் கரீக்டு...

Anonymous said...

1. பாத காணிக்கை - பூஜைக்கு வந்த மலரே வா [அந்தக்கால Object oriented (பெயர்ச்சொல் - உரிச்சொல்) பாடல்)
2.
3. பாக்யலஷ்மி - மாலைப் பொழுதின் மயக்கத்திலே [trifecta தெரியாத நாயகி ; )]
4.
5. மூன்று முடிச்சு - வசந்த கால நதிகளிலே [இந்தப் பாடல் அமைந்த விதம் '****' எனப்படும்]
6. துள்ளாத மனமும் துள்ளும் - இன்னிசை பாடி வரும் [நிரந்தரத் தலைவி நடித்த படம் எனில் ஹீரோவைக் கண்டும் காணாமல் செல்க]
7.
8.
9. பச்சை விளக்கு - ஒளிமயமான எதிர்காலம் [எத்தனை தடவை ஒலியும் ஒளியும் போட்டிருப்பார்கள்]
10. கருத்தம்மா - தென்மேற்கு பருவக்காற்று [சன் டிவி போட்ட புதுசு; எத்தனை தடவை நனைய விட்டிருப்பார்கள்]

Anonymous said...

3. மாலைப் பொழுதின் மயக்கத்திலே
4. இதற்கு பெயர் தான் காதலா? பரத்வாஜ் முதல் படம்?
6. இன்னிசை பாடிவரும் - துள்ளாத மனமும் துள்ளும்
8. காதோரம் லோலாக்கு?
9. மலர்ந்தும் மலராத - பாசமலர்
10. தென்மேற்கு பருவக்காற்று - கருத்தம்மா

சேதுக்கரசி said...

3. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவுகண்டேன் தோழி

5. வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்

7. ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்

10. (இது ஒண்ணு தான் உருப்படியா தெரியும்!) தென்மேற்குப் பருவக்காற்று தேனிப் பக்கம் வீசுதம்மா சாரல் இன்பச்சாரல் (படம்: கருத்தம்மா)

Sud Gopal said...

பாபாஜீ:
முதல் வகுப்பில் தேறியமைக்கு வாழ்த்துகள்.

7க்கு விடை தெரியலையோ??

Sud Gopal said...

கலக்கல் கப்பி....

4ஆவது கேள்விக்கான விடையை கப்புன்னு புடிச்சீங்களே,எப்பிடி??

9வது பதில் தப்புங்கோவ்..

Sud Gopal said...

வாங்க சேதுக்கரசி...
மூணு பதில்கள் சரி.

மீதியும் முயற்சி செய்யலாமே??

பாலராஜன்கீதா said...

1. பூஜைக்கு வந்த மலர் / நிச்சய தாம்பூலம் ? - பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா (ப்பி.பி.ஸ்ரீனிவாஸ், சுசிலாம்மா)
3. பாக்யலக்ஷ்மி - மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி ( சுசிலாம்மா - சௌகார் )
5. மூன்று முடிச்சு - வசந்த கால நதியினிலே வைரமணி நீரலைகள் (ஜெயசந்திரன் - வாணி ஜெயராம் / கமல் ஸ்ரீதேவி ரஜினி)
6. துள்ளாத மனமும் துள்ளும் - இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை (ஹரிஹரன் / ??? - விஜய் / சிம்ரன்)
7. புதிய பறவை - பார்த்த ஞாபகம் இல்லையோ (சுசிலாம்மா / சரோஜாதேவி - சௌகார்)
9. பச்சை விளக்கு - ஒளிமயமான எதிர்காலம் ( டி.எம்.எஸ் - சிவாஜி )

Anonymous said...

3) மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவூ கண்டேன் தோழி
6) இன்னிசை பாடி வரும் ஒரு பாட்டுக்கு உருவமில்லை
8) காதோரம் லோலாக்கு கத சொல்லுதய்யா
10)தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம்

Anonymous said...

//4ஆவது கேள்விக்கான விடையை கப்புன்னு புடிச்சீங்களே,எப்பிடி??//

அதுவா வருதே ;)))

9.ஒளிமயமான எதிர்காலம்

aruppukottaiyan said...

1) Poojaikku vandha malarae vaa -- Police kaaran mahal

3) Maalai pozhuthin mayakkaththilae naan kanavu kandaen thozhi

5)vasantha kaala nathigalilae vaira mani neeralaigal -- Moondru mudichchu

6) Innisai paadivarum ilam katrukku uruvamillai -- Thullatha manamum thullum

7) Paartha nyabakam illaiyo paruva naatagam thollaiyo -- Puthiya paravai

8) kathoram lolaakku kathai solluthadi -- chinna mappillae

9)

லக்ஷ்மி said...

3. மாலைப்பொழுதின் மயக்கத்திலே - பாக்கியலக்ஷ்மி
4. இதற்கு பெயர்தான் காதலா - பூவேலி
5. வசந்த கால நதிகளிலே - மூன்று முடிச்சு
6. இன்னிசை பாடி வரும் - துள்ளாத மனமும் துள்ளும்
7. பார்த்த ஞாபகம் இல்லையோ - புதிய பறவை
8. காதோரம் லோலாக்கு - சின்ன மாப்பிள்ளை
9. ஒளிமயமான எதிர்காலம் - பச்சை விளக்கு
10. தென்மேற்கு பருவக்காற்று - கருத்தம்மா