வீட்டில் நடந்த ஒரு மகிழ்வு தரும் நிகழ்வு,வெளியூர்ப் பிரயாணம் என்று பம்பரமாய்ச் சுழன்றதில் மாதங்கள் போனதே தெரியவில்லை.
கோடைகாலம் முடிந்த நிலையில் தமிழகத்தில், முதல் மழைக்காலம் வெகு விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறது.புதிதாய்ப் பள்ளி,கல்லூரிகளில் சேர்ந்திருக்கும்/சேரவிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
கடந்த இரண்டு மாதங்களாக சுதந்திரக் காற்றை அனுபவித்து வந்த சிறார் பட்டாளம்,புத்தக மூட்டைகளைச் சுமந்த நிலையில் மீண்டும் கைதிகளாய்.இது எப்போது மாறும் என்று தெரியவில்லை??
தென்மேற்குப் பருவக்காற்று தரவிருக்கும் முதல் துளியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் மக்களது எதிர்பார்ப்பை,இயற்கை நிறைவேற்றட்டும் என்று பிரார்த்திப்போம்.எழுத நிறைய விஷயங்களும்,நேரமும் இருக்கிறது என்பதால் இனிக் கிறுக்கித் தள்ளப்போகிறேன்.
பொறுத்தருள்க...
17 June 2007
மீண்டும்...
Subscribe to:
Post Comments (Atom)
13 Comments:
வாங்கைய்யா வாங்க!
// ஓ 2.0 // ஓ.....
Bug எல்லாம் கண்டுபிடிச்சு நீக்கிட்டீரா இல்ல இன்னும் பீட்டாவா :)))
ஆஃபாவோ, பீட்டாவோ எதுவா இருந்தாலும் பரவாயில்லே ஆனா இந்த டெம்பிளேட் வேணாம். செம பிளைனா இருக்கு.
காதை குடும்யா, நமக்கு ஒரு பொது எதிரி வந்து இருக்காரு. யாருன்னு தெரியுதா? ஜி.ராஆஆஆ
மீண்டும் ஓமப் பொடியா??? வாங்க வாங்க... :)
வாங்கய்யா...ஓமப்பொடி ஐயா
வரவேற்க வந்தோமய்யா!
மீண்டும் மீண்டும் வா...
பதிவு வேண்டும் வேண்டும் தா
// ILA(a)இளா said...
காதை குடும்யா, நமக்கு ஒரு பொது எதிரி வந்து இருக்காரு. யாருன்னு தெரியுதா? ஜி.ராஆஆஆ //
எதுருல வந்து நின்னுக்கு எதிரின்னா பேசுறீங்க....எச்சரிக்கை...உதிரி உதிரியா உதுத்துருவம்ல... :)
வாங்கப்பு. எம்புட்டு நாளாச்சி.
பீட்டான்னு தான் நினைக்கிறேன்.இன்னும் கொஞ்சம் களையெடுப்பு பாக்கியிருக்கு வாத்யாரே...
விவ்...
டெம்பிளேட் தானே..மாத்தீட்டாப் போச்சு...
அது சரி இப்படி ராணுவ ரகசியத்தை எல்லாம் பொதுவில போட்டு உடைச்சா எப்படீ??
ராயல்,வாழ்த்துக்கு நன்னீ...
குத்து வசனம் என்ன...கோரஸ் பாட்டு என்ன...ஜீரா...கலக்கீட்டேள் போங்கோ...
வாங்க பிரகாசரே..
வாழ்த்துக்கு நன்னீ.அப்புறம் வீட்டில இன்னா விசேஷம்??
//எதுருல வந்து நின்னுக்கு எதிரின்னா பேசுறீங்க....எச்சரிக்கை...உதிரி உதிரியா உதுத்துருவம்ல... :)//
ரஜினிதான் சிவாஜியில குத்து(அதாங்க Punch Dialogue) வசனம் பேசலைங்கிற குறையை ஜி.ரா தீர்த்து வெப்பாரு போல இருக்காரு
welcome :)
Post a Comment