1)நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
மலர் கள் ஊறும் வண்ணம் என்று ஓஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா...
2)கண்ணே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளித் தாவும் மான் குட்டி சொல்லிச் சொல்லி தாலாட்டும்
3)கொடியரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைத் தேடும்
மலரே நீ பெண்ணல்லவோ....
4)காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே....
5)சென்ற இடம் காணேன்;சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
6)காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் தாலாட்ட, அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ
7)ஆம்பளையே சேராம பிள்ளை பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்கே குடும்பம் நடத்துது
பொய்யும் சத்தியம் செய்யும்
இந்த பூமி எப்படி உய்யும்
8)நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித்திங்கள் 20ஆம் நாள் திருவளர்செல்வன் சிவராமனுக்கும்,திருவளர் செல்வி ராஜேஸ்வரிக்கும் நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம்சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்.
9)பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பாடும் பறவைகள் ஆனோம்
பசியெடுத்தால் இசையை உண்டு திசைகள் தேடிப்போவோம்
ஒரு தெய்வம் இங்கே வந்து உறவைச் சொல்லு துணையாச்சு
10)தன் பிடிவாதம் விடாது
என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது
நம்மையும் பேச விடாது.
19 January 2007
என்ன படம் ? என்ன பாடல் ? #4 (Reloaded)
Subscribe to:
Post Comments (Atom)
31 Comments:
1. நினைத்தேன் வந்தாய் நூறு வயது. ஏழிசை வேந்தரும் இசையரசியும் பாடியது. மெல்லிசை மன்னர் இசையில். மிகவும் துள்ளலான காதல் பாட்டு.
3. மலரே குறிஞ்சி மலரே.
ஏசுதாசும் ஜானகியும் பாடியது. மெல்லிசை மன்னர் இசையில். டாக்டர் சிவா படத்திற்காக. கவியரசர் கவிதை.
6. சொல்லத்தான் நினைக்கிறேன்...பாட்டும் அதுதான். படமும் அதுதான். மெல்லிசை மன்னரும் ஜானகியும் பாடியது.
8. பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி
நெஞ்சிருக்கும் வரை படத்திற்காக மெல்லிசை மன்னரின் இசையில் கவியரசரின் பாடல் ஏழிசை வேந்தரின் குரலில். இந்தப் படத்தில் நடித்த யாருக்கும் ஒப்பனை கிடையாது.
10. மிஸ்ஸியம்மா...பாட்டோட தொடக்கம் வர மாட்டேங்குதே...சதி பதி விரோதம் மிகவே.....
7. காலம் கலிகாலம் ஆகி போச்சுடா - அமர்க்களம்
அவுட் ஆஃப் பார்மிலிருந்து மீண்டு வந்து ஐந்து ஓட்டங்கள் எடுத்திருக்கும் ஜீரா..சபாஷ்....
மத்த கேள்விகளையும் முயற்சி செய்யலாமே??
10. வாராயோ வெண்ணிலாவே. ஏ.எம்.ராஜா, பி.லீலா பாடியது.
2. மான்குட்டி இப்போது என் கையிலே பாட்டு மாதிரி இருக்கு. ஆனா உறுதியாச் சொல்ல முடியலை.
மத்ததெல்லாம் கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு. இதுகளுக்கெல்லாம் பொதுப்பிணைப்பு எதுவும் இருக்கா?
சவுண்ட் பார்ட்டீ,முதல் தவணை ஓக்கே..
மீதி எப்போ??
இன்னா டேமேஜர் சார்,இன்னைக்கு ஃப்ரீயா இருக்கேள் போல??
பொதுப்பிணை எல்லாம் இல்லை.அஞ்சாவது பாட்டை மறக்கலாமோ???
சுந்தரகாண்டத்துடன் தொடர்புடைய பாட்டாச்சே அது....
7) அமர்க்களம் படத்துல மகா கணபதி
9) புது வசந்தம் படத்துல பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
வாங்கய்யா...பெரகாசரே....ரெண்டு வடையச் சரியா சுட்டுட்டேள் போலிருக்கே?
1)திருக்குறல்
2)கலித்தொகை
3)ஜீவக சிந்தாமணி
4)கீமாயணம்
அண்ணே, கீழ்க்கண்டவை தவிர வேறெதுவும் தெரியலீங்களே... இப்படிச் செய்யலாமா நீங்க... இந்த தடவை எல்லாம் பழைய பாட்டாப் போட்டுத் தாக்கிட்டீங்களே... என்னமோ போங்க...
2)கண்ணே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளித் தாவும் மான் குட்டி சொல்லிச் சொல்லி தாலாட்டும்
-- அஞ்சலி அஞ்சலி/அஞ்சலி/இசைஞானி/பவதாரிணி-கார்த்திக் ராஜா-யுவன் - குழுவினர்
3)கொடியரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைத் தேடும்
மலரே நீ பெண்ணல்லவோ....
-- மலரே குறிஞ்சி/டாக்டர் சிவா/மெல்லிசை மன்னர்/டீயெம்மெஸ்-ஜானகி
5)சென்ற இடம் காணேன்;சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
--கண்கள் இரண்டும்/மன்னாதி மன்னன்
7)ஆம்பளையே சேராம பிள்ளை பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்கே குடும்பம் நடத்துது
பொய்யும் சத்தியம் செய்யும்
இந்த பூமி எப்படி உய்யும்
-- காலம் கலிகாலம்/அமர்க்களம்/பரத்வாஜ்/ஸ்ரீனிவாஸ்
8)நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித்திங்கள் 20ஆம் நாள் திருவளர்செல்வன் சிவராமனுக்கும்,திருவளர் செல்வி ராஜேஸ்வரிக்கும் நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம்சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்.
-- பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி/நெஞ்சிருக்கும் வரை/திரையிசைத் திலகம்/டீயெம்மெஸ்
10)தன் பிடிவாதம் விடாது
என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது
நம்மையும் பேச விடாது.
-வாராயோ வெண்ணிலாவே/மிஸ்ஸியம்மா/ராஜேஸ்வர ராவ்/ஏ எம் ராஜா - லீலா
வாம்மா...ஜில்லூ....
என்ன ஆட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும் போல?
வாங்க அப்பனே...
ஆறு பாட்டை கப்புன்னு புடிச்சுட்டு பழைய பாட்டாப் போட்டுட்டேன்னு கோவிக்கலாமா,பெரதீப்பூ??
முத்துகுமரன்,கப்பி பய,பாலராஜன்கீதா,கைப்புள்ள,சேதுக்கரசி..
கடையைத் தொறந்து ஆறு மணி நேரம் ஆச்சு...என்ன ஒருத்தரையும் இன்னும் போணி பண்ணக் காணோமோ??
சுதர்சன்,
முதல் பாட்டு...காவல்காரன் படம்
நினைத்தேன் வந்தாய்,
சுதர்சன்,
3வது பாடல் மலரே--டாக்டர் சிவா
4வது.......
5ஆவது கண்கள் இரண்டும்'
மன்னாதிமன்னன்
6வதுசொல்லத்தான் நினைக்கிறேன்....
படம் பாடல்
7ஆவதுஅமர்க்களம் படம்
மஹா கணபதி---பாடல்
8 ஆவது...
நெஞ்சிருக்கும் வரை படம்
பூ முடிப்பாள்...
10ஆவது
மிஸ்ஸியம்மா
வாராயோ வெண்ணிலாவே.
நிறிய பிடித்த போட்டி.
என்னாலேயும் பதில் சொல்ல முடிந்ததால்.-
வாங்க வல்லி சிம்ஹன்...கலக்கல் 70% சரியான பதில்கள்...வாழ்த்துகள்...
#2 அஞ்சலி
#3 மலரே குறிஞ்சி மலரே - டாக்டர் சிவா
#5 கண்கள் இரண்டும் - மன்னதி மன்னன்
#6 சொல்லத்தான் நினைக்கிறேன்
#8 பூமுடித்தாள் இந்தப் பூங்குழலி
#9 அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள் - பாண்டவர் பூமி
10 வாராயோ வெண்ணிலாவே - மிஸ்ஸியம்மா
உள்ளேன் ஐயா :-)
1. காவல்காரன் - நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது (TMS, P சுசிலாம்மா, - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா)
2. அஞ்சலி - அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்னக் கண்மணி கண்மணி கண்மணி (ஆழ்வார் மச்சினி ஷாம்லி, ரேவதி, ரகுவரன், பிரபு, விகேயார், பூர்ணம் விஸ்வநாதன், ஜனகராஜ், பானுப்ரியா தங்கை நிஷா ? )
3. Dr.சிவா - மலரே குறிஞ்சி மலரே (K J யேசுதாஸ், S ஜானகி - சிவாஜி, உஷா நந்தினியா இல்லை மஞ்சுளாவா ? )
5. மன்னாதிமன்னன் - கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ ? காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ ? ( P சுசிலாம்மா - வித்தியாசமான இணை - மக்கள் திலகம் எம்ஜிஆர்- நாட்டியப்பேரொளி பத்மினி)
6. சொல்லத்தான் நினைக்கிறேன் - சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் (பாடியவர் இசையமைப்பாளர் விஸ்வநாதன் - நடித்தவர்கள் - ஜோ மாமனார் சிவகுமார், ஸ்ரீவித்யா, ஜெயசித்ரா, கமல் :-)))
8. நெஞ்சிருக்கும்வரை - பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி சிறு சீர் பெறுவாள் எந்தன் பேரெழுதி (TMS - சிவாஜி, முத்துராமன் ?, K R விஜயா ? )
9. புது வசந்தம் - பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவைக் கேட்டு (சித்தாரா, முரளி, சார்லி, ஆனந்த்பாபு, ராஜா ? , சுரேஷ் )
10. மிஸ்ஸியம்மா - வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை (A M ராஜா - p சுசிலாம்மா - காதல் மன்னன் ஜெமினி கணேசன், சாவித்ரி)
//கடையைத் தொறந்து ஆறு மணி நேரம் ஆச்சு...என்ன ஒருத்தரையும் இன்னும் போணி பண்ணக் காணோமோ??//
நீங்க கடைதிறந்த மறுநிமிசமே வந்தேன்.. ஞாபகமறதியில கதவை உள்பக்கமா பூட்டிட்டீங்க போலிருக்கு, திறந்தும் திறக்காம இருந்தது!!
2. மிகவும் பரிச்சயமான பாடல், சட்டென்று நினைவுக்கு வரவில்லை :(
3. மலரே குறிஞ்சி மலரே (படம்: டாக்டர் சிவா)
10. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே (படம்: மீண்ட சொர்க்கம்) மிகவும் அழகிய பாடல். கண்ணதாசன் எழுதியது. பாடலும் ஊடலும் (:-)) இசையும் அருமையாயிருக்கும்.
3) Malarae kurinji malarae - Dr.Siva
5) Kankal irandum endru unnaikkandu saeruma -- Mannathi mannan
6)Sollaththan ninaikkiraen sollaththan thudikkiraen
8)Poo mudippal indha poonguzhali -- Sumathi en sundhari (i guess)
10)Vaarayo vennilava kaelaaya enthan kathaiyai - Missiamma
வாங்க பாபா.முயற்சி செய்த ஏழில் ஆறு சரியே??
இன்னா தல,"லலாலலலலா..." புகழ் இசை வசந்தம் மீண்டு வந்த படம் நினைவுக்கு வரலியா??
ஆஹா..பாலராஜன்கீதா.தன்யனானேன்...
சரியான பதில்களுடன்,தகவல்களையும் அள்ளித் தெளிச்சிருக்கீங்க.கலக்கல் தான்...
4ம்,7ம் சமீபத்திய படங்கள் என்பதால் நினைவுக்கு வரலியா??
வாங்க சேதுக்கரசி...கேள்விகள் கொஞ்சம் கடினமோ???
மீண்ட சொர்க்கமா அது??
மொத தபா வந்து,ஐந்து சரியான பதில்கள் தந்திருக்கும் அருப்புக்கோட்டையானுக்கு வாழ்த்துகள்...
4ஆவது கேள்வியை யாருமே முயற்சி செய்யாத காரணத்தால்,கொஞ்சம் குறிப்புகள் தருகிறேன்.
தென்காசி பாலகுமாரன்+சரிதா+ரம்யா கிருஷ்ணா+விஜய் யேசுதாஸ்
3)malarae kuRinji - ?
4)enakku pidittha paadal - Jule Ganapathy (my favourite. Didn't need ur clue)
7)kaalam kalikaalam - AmarkkaLam
8) ? - Galaatta kalyaaNam?
9)paattu oNNu - Pudhu vasantham
10)vaaraayo veNNilaavae - Missiyamma
என்னோட குறிப்பு தேவைப்படாத நிலையில் நான்காம் கேள்விக்கு விடையினை சரியாகக் கண்டுபிடித்த வித்யாசாகரனுக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்....
இதோ சரியான பதில்கள்:
1. காவல்காரன் - நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது
2. அஞ்சலி - அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்னக் கண்மணி கண்மணி கண்மணி
3. Dr.சிவா - மலரே குறிஞ்சி மலரே
4. ஜூலி கணபதி - எனக்குப் பிடித்த பாடல்
5. மன்னாதிமன்னன் - கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ?
6. சொல்லத்தான் நினைக்கிறேன் - சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
7.அமர்க்களம் - காலம் கலிகாலம் ஆகி போச்சுடா
8. நெஞ்சிருக்கும்வரை - பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி சிறு சீர் பெறுவாள் எந்தன் பேரெழுதி
9. புது வசந்தம் - பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவைக் கேட்டு
10. மிஸ்ஸியம்மா - வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை
8 கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கண்டுபிடித்துச் சொன்ன பாலராஜன்கீதாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
நன்றி.
Post a Comment