14 August 2006

முன்னாள் நட்சத்திரத்தின் நன்றிகள்

பத்தாயிரத்து எண்பது நிமிஷங்கள்...

இரண்டாயிரத்து சொச்சம் ஹிட்டுகள்...

சிலருக்குக் கொஞ்ச நேர இளைப்பாறல்கள்...

என்று எனது நடத்திர வாரம் ஒரு வழியாய் நிறைவுக்கு வந்துவிட்டது.

இந்தியா விடுதலை அடையும் சமயத்தில் எனது பதிவுகளினின்று உங்களுக்கும் விடுதலை கிட்டியிருக்கிறது.இந்த மின்மினி திரும்ப தனது பழைய கூட்டிற்கு செல்லவிருக்கிறது.திடீரென முளைத்த அலுவலக சிக்கல்களினால் திட்டமிட்ட படி சில பதிவுகளைப் போட முடியவில்லை.

கல்யாண சமையலில் ஆரம்பித்த வாரம், காணாமல் போனவர்களில் நிறைவு பெறுகிறது.இதில் சில பதிவுகளை மீண்டும் பின்னர் தொடர்வதாய் இருக்கிறேன்.தினப்படி எனது பதிவுகளைப் படித்த, பின்னூட்டமிட்டு என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.வாய்ப்பளித்த மதி கந்தசாமிக்கும் காசி ஆறுமுகத்திற்கும் நன்றி பல.அடுத்து வரும் நட்சத்திரங்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்.

அன்புடன்,
சுதர்சன்.கோபால்

"உங்கள் அனைவருக்கும் எனது இந்திய விடுதலை நாள் வாழ்த்துகள்!"

3 Comments:

G.Ragavan said...

நட்சத்திர வாரம் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இனிமையாக இருந்தது. மிக்க நன்றி. நட்சத்திர வாரம் முடிஞ்சிருச்சேன்னு சும்மாயிருக்காம பதிவுகளக் குடுங்க. சரியா?

Sud Gopal said...

ஜீரா,மௌல்ஸ் கண்டிப்பாத் தொடர்வேன்.

பாராட்டுகளுக்கு தன்யனானேன்...

Unknown said...

என்னங்க சுதர்சன்,

நட்சத்திர வாரம் முடிஞ்சதும் பெரி.....ய ஓய்வுக்குப் போயிட்டீங்களா???

புதுப் பதிவு ஒன்னும் காணோமே???