12 August 2006

"காணாமல் போனவர்கள்" ஸ்பெஷல்

தூர்தர்ஷன் கோலோச்சிக் கொண்டிருந்த காலமது.

எல்லா நாள் நிகழ்ச்சிகளினிடயே எதிர்பாராமல் வரும் "தடங்கலுக்கு வருந்துகிறோம்" என்ற் அறிவிப்புப் பலகையையும்,வெள்ளியன்று "ஒலியும் ஒளியும்" முன்னால் சிவபூசைக் கரடியாக வரும் "எதிரொலி" நிகழ்ச்சியினையும் வெறுக்காத ஆட்கள் இல்லை எனலாம்.இது போல் மறக்க முடியா இன்னுமொரு நிகழ்ச்சி "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு".எங்கள் வீட்டில் யாருக்குமே பிடிக்காத இந்த நிகழ்ச்சியானது சொல்லத்தெரியாத காரணங்களுக்காக எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

காணாமல் போன தினத்தில் கறுப்பு நிறக் கால்சட்டை அணிந்த சிறுவனின் ஒளிப்பட முகத்தில் தெரியும் மென் சோகம் என்னை என்னவோ செய்த நாட்களும் உண்டு."நான் காணாமப் போயிட்டா பழனீ விஜயா ஸ்டூடியோவில எடுத்த கலர் ஃபோட்டோ தான் TVக்கு தரணும்" என்று எத்தனை முறை சண்டையிட்டிருப்பேனோ எனக்கே தெரியாது?

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவியவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் "கண்டேன் சீதையை" என்று வந்த அனுமனுக்குத்தான் முதலிடம் தரப்பட வேண்டும்.இதில் தூர்தஷனுக்கும் அதில் வரும் கா.போ.ப.அறிவிப்புகளுக்கும் எத்தனையாவது இடம் வரும் என்று சத்தியமாக எனக்குத் தெரியாது.

சரி,,சரி,,விஷயத்துக்கு வருவோம்.

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான சிலர் கொஞ்ச நாளாய்க் காணாமல் போய்விட்டார்கள்.அவர்களைக் கண்டுபிடிக்கத் துப்பு கொடுப்பவர்களுக்கு மயில்ஜீயுடன் ஒரு "அதிரடிப் பரிசு"ம் உண்டு.

நபர்1 :- "மூலிகை பெட்ரோல் புகழ்" ராமர் பிள்ளை
மாற்று எரிபொருள் பற்றிய ஆராச்சியில் தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்தவர். 90களின் இறுதியில் இவரது கட்டுரை வாராத வாரப் பத்திரிக்கைகளே இல்லை
எனலாம்.ராஜபாளையத்தைச் சேர்ந்த இவர் காணாமல் போய் விட்டாரா இல்லை சிறை வாசம் முடித்துவிட்டு வந்து விட்டாரா என்று தெரியவில்லை.துப்பு கொடுப்பவர்களுக்கு "வைக்கோலில் இருந்து சாம்பலை உருவாக்குவது எப்படி" என்னும் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.(ஆமாம் இப்போ இவர் வளர்ப்பு குடும்பம் எப்படி இருக்கு??)

நபர் 2:- ஷ்ரீவித்யா

எம்.எல்.வி. என்னும் ஒரு மாபெரும் இசைக்கலைஞரின் மகளாய்ப் பிறந்து ஒரு நட்சத்திர இயக்குனரால் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிப் பல்வேறு கதாபாத்திரங்களை அனாயசமாக எற்று நடித்த இவரைக் கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழ் திரையில் காணவில்லை.கடைசியில் கண் பார்வை இழந்தவராக "லண்டன்" என்னும் படத்தில் பார்த்ததாய் ஞாபகம்.உச்ச நட்சத்திரத்திற்கு இணையாக,அக்காவாக,அம்மாவாக நடித்த இவர் அடுத்த படத்தில் பாட்டியாய் நடிக்கவிருக்கிறார் என்று ஒரு பேச்சு அடிபட்டது உண்மையாக இருக்குமோ(ஆமா,ஜெயேந்திரர் வழக்கில இவங்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்குதுன்னு பேசிக்கிறாங்களே.அது இன்னா மேட்டர்??)

நபர் 3:- அஜீத்ஜோகி
இந்திய ஆட்சியமைப்புத் துறையில் தாழ்த்தப்பட்டோர் கோட்டாவில் நுழைந்த இவர் அப்போதைய மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் அர்ஜூன் சிங்கின் ஆணைக்கேற்ப அரசுப்பணியினை விட்டு அரசியலில் நுழைந்தார்.மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிந்து சென்ற சட்டீஸ்கர் மாநிலத்தின் முதலாம் முதலமைச்சராய் பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்தார்.2003ல் நடந்த தேர்தலில் முதலமைச்சர் நாற்காலியைப் பறி கொடுத்த இவர் 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அரசியலில் நுழைந்தார்.அப்போது நடந்த ஒரு மோசமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பின்னர் இவரது சௌவுண்டை எங்கும் காணோம்.(அது சரி.சமீபத்தில 25 எம்பிக்களுடன் சேர்ந்து சோனியாதான் பிரதமராகணும்னு நீங்க அனுப்பின மனுவுக்குப் பின்னால உள் குத்து ஒண்ணும் இல்லையே??)

அடுத்து வருபவர்கள் "குத்துவிளக்கு" கோபாலகிருஷ்ணன்,"சின்ன சின்ன ஆசை" மின்மினி,"சிட்டிசன்" ஷரவண சுப்பையா.

வெளியே செல்லவிருப்பதால் "மறுமொழி மட்டுறுத்தல்" கொஞ்சம் தாமதமாவே நிகழும்.பொறுத்தருள்க :-)

12 Comments:

பெத்தராயுடு said...

ஸ்ரீவித்யா பற்றி "இத படிங்க மொதல்ல",

http://www.greatandhra.com/movies/gusagusalu/aug2006/sree_hubby.php

நவீன பாரதி said...

அப்படியே உண்மை ஜனநாயகத்தையும், கொஞ்சநஞ்சம் இருந்ததாகச் சொல்லப்படும் மனித நேயத்தையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

கைப்புள்ள said...

ஆஹா! இன்னுமொரு தூர்தர்ஷன் அபிமானி.

//."நான் காணாமப் போயிட்டா பழனீ விஜயா ஸ்டூடியோவில எடுத்த கலர் ஃபோட்டோ தான் TVக்கு தரணும்" என்று எத்தனை முறை சண்டையிட்டிருப்பேனோ எனக்கே தெரியாது?//
:))

ஏனோ தெரியலை. கா.போ.அறிவிப்புல சொல்லற முகவரி இன்னும் நல்லா நினைவிருக்கு.
காவல் துறை கண்காணிப்பாளர்
காவல் துறை கட்டுப்பாட்டு அறை
எழும்பூர்
சென்னை - 600 008
தொலைபேசி எண்: 825 3375

நீங்க சொல்றதை எல்லாம் படிச்சா என்ன தோணுதுன்னா "Public Memory is poor". இதை மாதிரி கொஞ்ச காலத்துக்கு முன்னாடி(recent past)பிரபலமா இருந்து இப்ப மறந்து போக பட்டவர்கள் பட்டியல் பெருசா இருக்கும்னு தான் தோணுது. என்னமோ இந்த மாதிரி பழைய கொசுவர்த்தி சுத்தும் போது ஒரே ஃபீலிங்ஸா போயிடுது.

நாமக்கல் சிபி said...

கைப்புள்ளை,
உங்க பேருதான் ஏற்கனவே அறிவிச்சிருக்கோம்ல!

Sud Gopal said...

ராயுடு சார்,

படிச்சேன்.இது உண்மையா என்ன?

Sud Gopal said...

முண்டாசுக்கவியே,
வாங்க.

//அப்படியே உண்மை ஜனநாயகத்தையும், கொஞ்சநஞ்சம் இருந்ததாகச் சொல்லப்படும் மனித நேயத்தையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்!//

சத்தியமான உண்மை.அதிலே தனிமனித ஒழுக்கத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Sud Gopal said...

கைப்பு...வாங்க..வாங்க.

//ஆஹா! இன்னுமொரு தூர்தர்ஷன் அபிமானி.//

அப்போ நீங்களும் நம்ம கட்சி தானா?

அட்ரஸ் எல்லாம் கரீட்டாச் சொல்றீங்களே?வல்லாரை அதிகமாச் சாப்பிடுவீங்களோ?

//நீங்க சொல்றதை எல்லாம் படிச்சா என்ன தோணுதுன்னா "Public Memory is poor". இதை மாதிரி கொஞ்ச காலத்துக்கு முன்னாடி(recent past)பிரபலமா இருந்து இப்ப மறந்து போக பட்டவர்கள் பட்டியல் பெருசா இருக்கும்னு தான் தோணுது.//

அதே..அதே..சபாபதே..

//என்னமோ இந்த மாதிரி பழைய கொசுவர்த்தி சுத்தும் போது ஒரே ஃபீலிங்ஸா போயிடுது.//

நோ சில்லி ஃபீலிங்ஸ்,ஐ சே..

Anu said...

Really nice one..infact when we were young we used to play seeing that kanamal ponavar patria arivuppu
andha photova pattu age guess panra game..
anda madiri vilayudumbodu ammavum appavum nalla tittitu TV off panniduvanga
ippa nenaccha guiltya irukku.

சிவமுருகன் said...

//ஆஹா! இன்னுமொரு தூர்தர்ஷன் அபிமானி.

//."நான் காணாமப் போயிட்டா பழனீ விஜயா ஸ்டூடியோவில எடுத்த கலர் ஃபோட்டோ தான் TVக்கு தரணும்" என்று எத்தனை முறை சண்டையிட்டிருப்பேனோ எனக்கே தெரியாது?//
:))

ஏனோ தெரியலை. கா.போ.அறிவிப்புல சொல்லற முகவரி இன்னும் நல்லா நினைவிருக்கு.
காவல் துறை கண்காணிப்பாளர்
காவல் துறை கட்டுப்பாட்டு அறை
எழும்பூர்
சென்னை - 600 008
தொலைபேசி எண்: 825 3375

நீங்க சொல்றதை எல்லாம் படிச்சா என்ன தோணுதுன்னா "Public Memory is poor". இதை மாதிரி கொஞ்ச காலத்துக்கு முன்னாடி(recent past)பிரபலமா இருந்து இப்ப மறந்து போக பட்டவர்கள் பட்டியல் பெருசா இருக்கும்னு தான் தோணுது. என்னமோ இந்த மாதிரி பழைய கொசுவர்த்தி சுத்தும் போது ஒரே ஃபீலிங்ஸா போயிடுது.//

இங்கயும் அதே கதை தான்.

எனக்கும் முகவரி இன்னும் நல்லா நினைவிருக்கு.

இனியாள் said...

Romba nalla irukku.
Dhoorshanai niraiya miss pannura jeevarasinga IT field la niraiya irukkanga. Munnurai arumai.
Srividhya uyiroda thaan irukkangala.......Thodarnthu ezhuthunga arumai.

Iniyal.

ilavanji said...

யோவ் சுட்ஜீ,

"காணமல் போனவர்கள்" பட்டியலில் முதல்ல மேல கொட்டை எழுத்துல உம்ம பெயரை போடைய்யா!!!

கானா பிரபா said...

//Srividhya uyiroda thaan irukkangala//

ஓமப்பொடியாரே

சிறீவித்யா இறந்து ஒரு வருஷம் கழிச்சு மறுமொழி மட்டுறுத்தல் பண்றீரே உமக்கே நல்லாயிருக்கா ஓய்