09 August 2006

கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 3

குளம்படி ஓசைக் கவிதை

குதிரையின் கனைப்புக் கீதம்

வீசிடும் வாலே கொடிகள்

பொங்கிடும் நுரையே கடல்கள்

பிடரியின் வரைவே வயல்கள்

உருண்டிடும் விழியே சக்தி

குதிரையின் உடம்பே பூமி

சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு-இது

குதிரைகள் எனக்குச் சொன்ன

வேதத்தின் இரண்டாம் பாடம்

-- பாலகுமாரன் "இரும்பு குதிரைகள்"

------------------------------------------------------------------------------------------------

1975: ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய மிதிவண்டி உற்பத்தியாளர் ஆனது.1957ல் வெறும் ஒரு ஆண்டிற்கு 7500 மிதிவண்டிகள் என்று துவங்கிய இந்த நிறுவனத்தின் வருடாந்தர விற்பனை 2005-ல் 6.5 மில்லியனைத் தொட்டது.

1978: இந்தியாவின் முதல் மொபெட்டான "ஹீரோ மெஜஸ்டிக்"சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்டது.முதல் நான்கு வருடங்களில் இதன் வருடாந்தர உற்பத்தி 1 லட்சத்தைத் தொட்டது.

திசம்பர் 1983: முதல் மாருதி- 800 சாலையில் சீறிப்பாய்ந்த வருடம்.அறிமுகப்படுத்தப்பட்ட இரு வருடங்களிலேயே "மொபிலிட்டி"பற்றிய எண்ணங்களை மாற்றியமைத்த இந்த வண்டி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்னும் பெருமையினையும் பெற்றது

மே 1985: ஹீரோஹோண்டா நிறுவனத்திலிருந்து முதல் பைக்கான CD100 சந்தையில் காலடி எடுத்துவைத்தது.தடைகள் பல தகர்த்து எறிந்துவிட்டு 2001-ல் உலகில் மிக அதிகம் விற்பனையாகும் பைக் என்னும் சாதனைச் சிகரத்தை எட்டிப் பிடித்தது.

------------------------------------------------------------------------------------------------

ரெனால்ட்ஸ்-045 பால் பாயிண்ட் பேனாவினை(கருப்பு மை) ஓங்கித் தரையில் பதினெட்டு முறைகள் குத்திய பின்னரும் அதை உபயோகப்படுத்துவதில் பிரச்சினை இருக்காது.

பழைய ஒலினாடாவிலுள்ள சுருளினை சுமார் 1.04 மீட்டர் தூரம் வரை அறுந்து போகாமல் இழுத்துக் கொண்டு போகலாம்.

--பொழுது போகாத பூங்காவனம்.

8 Comments:

G.Ragavan said...

என்னய்யா இது தகவல் களஞ்சியமா இருக்கீங்க. சரி..ஓமப்பொடியோட அப்படியே லட்டு ஒன்னு மிக்சர் கொஞ்சம் ஒரு டம்ளர் காப்பி முடிஞ்சா பஜ்ஜி ரெண்டு கெட்டித் துவையலோட குடுத்தா ரொம்ப வசதி ஹி ஹி பெஞ்ச மழைக்கு வசதியா இருக்கும்.

Sivabalan said...

நிறைய தகவல் கொடுத்துள்ளீர்கள்..

நன்றி.

ILA (a) இளா said...

//குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாடம்//

பாலகுமாரன் ஒரு குதிரைப்பிரியர். அவருடைய கதைகளில் குதிரைகளி வைத்து உவமை நிறைய செய்திருப்பது அனைவருக்கு தெரிந்த விஷயமே.
அது சரி ஓமப்பொடிய முறுக்கிலபோட்டு புழிஞ்சுடுறாங்க, ஆனாலும் ஓமப்பொடி வாசம்தான் முறுக்குக்கே ஒரு வாசம் தருது. அதுமாதிரி...

கைப்புள்ள said...

இங்கு தாங்கள் கொடுத்துள்ள தகவல்கள் புதிதாகவும் உபயோகமுள்ளதாகவும் உள்ளன. நன்றி.

Sud Gopal said...

G.Ragavan said...
//சரி..ஓமப்பொடியோட அப்படியே லட்டு ஒன்னு மிக்சர் கொஞ்சம் ஒரு டம்ளர் காப்பி முடிஞ்சா பஜ்ஜி ரெண்டு கெட்டித் துவையலோட குடுத்தா ரொம்ப வசதி ஹி ஹி பெஞ்ச மழைக்கு வசதியா இருக்கும்.//

தோடா...ஆச தோச அப்பளம் வடை..

Sud Gopal said...

Sivabalan said...

//நிறைய தகவல் கொடுத்துள்ளீர்கள்..
நன்றி.//

தன்யனானேன் மகாப்பிரபூ...

Sud Gopal said...

ILA(a)இளா said...

//அது சரி ஓமப்பொடிய முறுக்கிலபோட்டு புழிஞ்சுடுறாங்க, ஆனாலும் ஓமப்பொடி வாசம்தான் முறுக்குக்கே ஒரு வாசம் தருது. அதுமாதிரி...//

தலையைச் சுத்துதுபா..ஜோடா ப்ளீஸ்...

Sud Gopal said...

கைப்புள்ள said...

//இங்கு தாங்கள் கொடுத்துள்ள தகவல்கள் புதிதாகவும் உபயோகமுள்ளதாகவும் உள்ளன.//

மிஸ்டர் கைப்பு,புதியது சரி...இந்த உபயோகமாக இருப்பது தான் இடிக்குதே???