07 August 2006

கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 1

குதிரைகள் பசுக்கள் போல
வாய்விட்டுக் கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரைரூபம்
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்காகப் பணிந்து போகும்-இது
குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் முதலாம் பாடம்.

-- பாலகுமாரனின் "இரும்பு குதிரைகள்"

****************************************************************************

சதிலீலாவதியில் இடம் பெற்ற "மாருகோ மாருகோ" பாடலானது இளையராஜா இசையில் வெளிவந்த 9 படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பாடல்களின் மெட்லீ ஆகும்

1. மாருகோ மாருகோ (வெற்றி விழா)
2. ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன் (கல்யாணராமன்)
3. வாடி என் கப்பக் கிழங்கே (அலைகள் ஓய்வதில்லை)
4. நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடி (சகலகலா வல்லவன்)
5. இஞ்சி இடுப்பழகா (தேவர் மகன்)
6. சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் (மை.ம.கா.ரா)
7. இளமை இதோ இதோ (சகலகலா வல்லவன்)
8. நிலா காயுது (சகலகலா வல்லவன்)
9. என்னடி மீனாக்ஷி (இளமை ஊஞ்சல் ஆடுது)
10. தண்ணீர் கருத்துடுச்சு (இளமை ஊஞ்சல் ஆடுது)
11. போட்டு வைத்த காதல் திட்டம் (சிங்கார வேலன்)
12. ராஜா கைய வச்சா (அபூர்வ சதரர்கள்)
13. ரம் பம் பம் ஆரம்பம் (மை.ம.கா.ரா)
14. பொன்மேனீ உருகுதேய் (மூன்றாம் பிறை)

**********************************************************************************
1)300 மிலி பெப்ஸியை 95 மிலியாகப் பிரித்தால் மூன்று குவளைகள்(ஒவ்வொன்றும் 100மிலி கொள்ளளவு)தேவைப்படும்.

2)சன் தொலைக்காட்சியின் 8 மணி செய்திகளின் நேரத்திற்கும் இந்திய ரயில்வே நேரத்திற்கும் இரு நொடிகள் வித்தியாசம் அவ்வப்போது உள்ளது.

--பொழுது போகாத பூங்காவனம்

15 Comments:

யாத்ரீகன் said...

பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்..(கவனிக்க 'க்'ன்னா இருக்காது)... குதிரை கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று... ("தர்மத்தை சொல்ல, தடியோடா வருவார்.....") Not to mention காயத்ரி :-)

G.Ragavan said...

இதே மாதிரி கொஞ்ச நாள் முன்னாடி நான் தமிழ்மன்றத்துல ஒரு நண்பரின் பதிவுக்குப் பின்னூட்டம் இட்டது.

கடியோ இடியோ தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மன்றத்து அன்பர்களை இப்படிச் சோதிப்பது ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதுமோ இந்த இடமோ கூடுமோ அந்தச் சுகம் சுகமே ஏய் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று சேர்ந்த அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை தருமோ என் மேகமே மேகமே பால் போலவே வான் போலே வண்ணம் கொண்ட வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........

இதில் எத்தனை பாட்டுகள் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

துளசி கோபால் said...

முதல் வரியைப் படிச்சதும், இது பாலகுமாரனாச்சே'ன்னு தோணுச்சு.

கரெக்ட். இது ஒண்ணுதானே நான் வச்சுருக்கேன். ஒரு ஏழெட்டுமுறை படிச்சதாச்சே!

பாலசந்தர் கணேசன். said...

மெட்லீ என்றால் என்ன?

Sud Gopal said...

யாத்திரீகன்:
தகவலுக்கு நன்றி.சரி பண்ணியாச்.

ஜீரா:
எப்படி இப்படியெல்லாம்???!!!

பா.க:
மெட்லீ - பாடல்களின் கதம்பம்

டீச்சரக்கா:
கரெக்டா புடிச்சிட்டீங்களே??!!!

பொன்ஸ்~~Poorna said...

ராகவன், பத்து?

துபாய் ராஜா said...

கொறிக்க நல்லாயிருக்கு.கொஞ்சம் தாராளாமா "ஓ"மப்பொடி கொடுங்க.

கைப்புள்ள said...

கொறிக்க ஓமப்பொடி தந்ததுக்கு நன்றிங்க. நீங்க சொன்ன விஷயம் அத்தனையும் எனக்கு புதுசு. நன்றி.

அப்புறம் என்னிக்காச்சும் ஒரு கிண்ணத்துல ஓமப்பொடியைப் போட்டு ஒரு ரெண்டு கரண்டி சக்கரை போட்டு சாப்புட்டு பாருங்க. சுவை அருமையா இருக்கும்.
:)

உங்கள் நண்பன்(சரா) said...

ஓமப் பொடி அருமை, கொறிக்கிறதுக்கும் நல்ல இருக்கு,
"புது"மாப்ள ராசா சொன்ன மாதிரி கொஞ்சம் தாராளமா கொடுக்கலாம்...



அன்புடன்...
சரவணன்.

G.Ragavan said...

// சுதர்சன்.கோபால் said...
ஜீரா:
எப்படி இப்படியெல்லாம்???!!! //

ஹி ஹி அதுக்கெல்லாம் கிட்னிதாங்க காரணம்

// பொன்ஸ் said...
ராகவன், பத்து? //

தப்பு. ஒவ்வொன்னா பிரிச்சுப் போடறேன். எண்ணிக்கோங்க.

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை (இல்லை)
இல்லை என்று சொல்ல ஒரு கணம் (போதும்)
போதுமோ இந்த இடமோ கூடுமோ அந்தச் (சுகம்)
சுகம் சுகமே (ஏய்)
ஏய் பாடல் (ஒன்று)
ஒன்று எங்கள் ஜாதியே (ஒன்று)
ஒன்று சேர்ந்த (அன்பு)
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை (மழை)
மழை தருமோ என் (மேகம்)
மேகமே மேகமே (பால்)
பால் போலவே (வான்)
வான் போலே (வண்ணம்)
வண்ணம் கொண்ட (வெண்ணிலவே)
வெண்ணிலவே வெண்ணிலவே (விண்ணைத்)
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் (வெண்ணிலவே)
வெண்ணிலா (வானில்)
வானிலே மேடை அமைந்தது

அவ்வளவுதாங்க. இப்ப கணக்கு சொல்லுங்க பாப்போம்.

கைப்புள்ள said...

ராகவன் அண்ணாத்தே!
நீங்க எழுதுனது அந்தாதி பாடல்??? மொத்தம் 17. கரீட்டா?

Sud Gopal said...

ஜீராவின் புதிருக்கான விடையை மயிரிழையில் தவறவிட்ட பொன்ஸுக்கும்,கரீட்டாப் புட்ச்ச கைப்பு அண்ணணுக்கும் ஒரு பெரிய ஓ...

Sud Gopal said...

"ஓ"மப்பொடியினை ரசித்து ருசித்த துபாய் ராசாவுக்கும்,உங்கள் நண்பனுக்கும் ஒரு மெகா சைஸ் "ஓ"

Sud Gopal said...

கைப்புள்ளை:

//அப்புறம் என்னிக்காச்சும் ஒரு கிண்ணத்துல ஓமப்பொடியைப் போட்டு ஒரு ரெண்டு கரண்டி சக்கரை போட்டு சாப்புட்டு பாருங்க. சுவை அருமையா இருக்கும்.:)//

ஓ..இதுவரை இதைக் கேள்விப்பட்டதில்லை.முயற்சிக்கிறேன்.

Chandravathanaa said...

ஏதோ சமையற் குறிப்பாக்கும் என்று நினைத்தேன்.
கொறிக்க அருமையான வரிகள். நன்றி சுதர்சன்.