தாத்தாவின் வைப்பாட்டி வீடு
சாயக்காரர் தெருவில்
கண்கள் நிறைய மை
மூக்கில் இருபுறமும் மூக்குத்திகள்
எப்போதும் வாயில் வெற்றிலை
அவள்வீட்டுக்குப் போய் வருவதென்றால்
எங்களுக்கு சொர்க்கம் போல
என்னை அவளுக்கு மிகவும் பிடிக்கும்
"மொதலாளிகளோட சின்னவுக பிள்ளை"
அக்கம்பக்கம் என்னை அறிமுகம் செய்வாள்
அஞ்சாம் வகுப்புப்பையன் நான்
வாங்க ராசா என்பாள்
தாத்தா இருக்கும் போது
போகக்கூடாது யாரும்
"இங்க என்னடா ஒனக்கு ஜோலி"
என விரட்டுவார்
"என்னைப் பார்க்க வந்திருக்கு பிள்ளை
இருக்கட்டுமேயே"யென்று இழுத்துக் கொள்வாள்
மீன் குழம்பு ஊற்றி
சோறு பிசைந்தது தருவாள்
"கோழி அடிச்சிருக்கேன் பாட்டிக்கு
கொண்டு போறீகளா" என்பாள்
என் எதிரிலேயே சேலை மாற்றுவாள்
வெட்கப்படும் என் குஞ்சு தொட்டு
கேலி பண்ணிச் சிரிப்பாள்
திடீரென்று ஒருனாள் யாரும்
அவள் வீட்டுக்குப் போகக்கூடாது என்றார்கள்
தாத்தாவும் போகாமல் இருந்தார்
எனக்குப் போய்
அவள் வீட்டு ஊஞ்சலில்
ஆடவேண்டும் போலிருந்தது
யாருக்கும் தெரியாமல் போனேன்
எவரோ ஒருவர் படுத்திருக்க
அவள் விசிறிக் கொண்டிருந்தாள்
"வாங்க என் சின்னராசா"
எப்போதும் போல் அழைத்தாள்
வெறித்துப் பார்த்தேன் பின்
வெறுப்புடன் வெளியில் ஓடினேன்
பலதெரு தாண்டினேன்
ஒருமுனையில் நின்றேன்
மூத்திரம் கழித்தேன் வெகுநேரம்.
-- ஸ்டெல்லாபுரூஸின் "வீட்டுக்குள் ஒரு கல்வெட்டு"
------------------------------------------------------------------------------------------------
இந்த அறுவர் கூட்டணி யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
10 August 2006
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 4
Subscribe to:
Post Comments (Atom)
11 Comments:
அறுவர் கூட்டணி?
ஜெமினி கணேசனின் மகள்கள்.
( இதுக்கு மட்டும் முந்திக்கிட்டேன்னு யாரும் சொல்ல மாட்டாங்கதானே? )
//மூத்திரம் கழித்தேன் வெகுநேரம்//
நல்லா முடிச்சு இருக்காருப்பா.
படம்: "காதல் மன்னன்" குடும்பம்
ACTOR LATE GEMINI GANESAN'S DAUGHTERS
KRISH
ஸ்டெல்லா புருஸின் எழுத்துக்கள் மிக எதார்த்தமான நடையில் வித்தியாசமான பார்வை கொண்ட படைப்புகள்.. ஆனந்தவிகடன் மூலமாக அறிமுகமானார்... மேலே தந்த அவர் படைப்புக்கு நன்றி சுதர்சன்...
'ஓ'மப்பொடிகளோடு, பதிவுகளும்.. கருத்து கந்தசாமி மாதிரி.. புள்ளிவிவரம் புண்ணியகோடியாய் இருக்கு... பொழுதுபோகாத பூங்காவனத்து பங்கு.. வித்தியாசமான நட்சத்திர வாரம்.... :-)
Photobucket site blocked out here
ஜெமினி கணேசனோட பொண்ணுங்க என்பது சரிதான் :-)
இடமிருந்து வலமோ,வலமிருந்து இடமோ எல்லாருடைய பெயர்களையும் சொல்லுங்க பார்ப்போம்.
இடமிருந்து வலம்.
1, ஜெமிமினியின் முதல் மகள்,
2, சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீச்வரி,
3,கமலா செல்வராஜ்,
4 ரேகா
5, இன்னொருமகள்,
6 ஜிஜி. ஜயச்ரி ச்ரீதர்.
சரியா/?
வள்ளி,முக்கால்வாசி சரி.
'ஓ'மப்பொடிகளில் அருமையான கவிதைகளை சுவைக்க தருவதற்கு நன்றி சுதர்சன்..
கமலா செல்வராஜ்,ரேகா மட்டும் தான் தெரியுது..
'நினைவெல்லாம் நித்யா' நாயகி வலப்பக்கம் கடைசியில் இருப்பவரா? அல்லது வடமிருந்து இரண்டாவது இருப்பவரா?
ஜெமினியின் மகள்கள்.
இடமிருந்து முதலாமவர் ஒரு டாக்டர்(?), இரண்டாமவர் ஒரு பத்திரிகையாளர்(?), மூன்றாமவர் டாக்டர் கமலா செல்வராஜ், நான்காமவர் நடிகை ரேகா, ஐந்தாமவர் சாவித்திரியின் மகள்(?) , ஆறாமவர் 'நினைவெல்லாம் நித்யா'வில் நடித்த ஜிஜி.
எதார்த்தமாக எழுதும் ஸ்டெல்லா புருஸின் எழுத்துக்கள் எனக்கும் ஆனந்த விகடன் மூலமாகவே பரிச்சயம்,
அவரின் கவிதை அருமை,
கமலா செல்வராஜ்,மற்றும் ரேகா மட்டும் தான் எனக்கும் தெரியுது..
அன்புடன்...
சரவணன்.
இடமிருந்து வலம்:
Dr ரேவதி ஸ்வாமினாதன், நாராயணி கணேசன், Dr கமலா செல்வராஜ், ரேகா, விஜயா சாமுண்டேஸ்வரி மற்றும் Dr ஜெயா ஷ்ரீதர். ஜெமினி கணேசனின் மொத்த மகள்கள் எழுவரில் ஆறு பேர் இங்கே.இந்தப் புகைப்படத்தில் இல்லாதவர் ரேகாவின் சகோதரியான ராதா.ரேகாவின் வலது பக்கம் நிற்பவர் சாவித்திரி கணேசனின் மகள்.இவருக்கு சதீஷ் குமார்(ஜெமினியின் ஒரே மகனான)என்னும் ஒரு சகோதரரும் இருக்கிறார்.
Post a Comment