இன்றைக்குக் கொறிக்க, "பெங்களூரு" பற்றிய சில தகவல்களும் கேள்விகளும்:
தகவல்கள்:
1)இந்தியாவில் முதன்முதலில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்ட நகரம் பெங்களூர் ஆகும்.வந்த ஆண்டு 1905.
2)அந்தமானில் 1872ல் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலான மேயோவின் நினைவாகக் கட்டப்பட்டதே எம்.ஜீ.ரோட்டிலுள்ள மேயோ ஹால் ஆகும்.பொது மக்கள் உதவியுடன் கட்டப்பட்ட இது 1883 ஆம் ஆண்டில் அப்போதைய நகராட்சியின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
3)மெஜஸ்டிக் என்று அழைக்கப்படும் இடத்தின் உண்மையான பெயர் காந்திநகர் ஆகும்.அந்த இடத்தில் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த மெஜஸ்டிக் டாக்கீஸால் இந்த இடத்திற்கு இப்பெயர் வந்தது.
4)1760-ல் ஹைதர் அலியால் உருவாக்கப்பட்ட "லால் பாக்கின்" நிஜப் பெயர் என்ன தெரியுமா?
"மேங்கோ டோப் & சைப்ரஸ் கார்டன்"
கேள்விகள்:
1)70களின் பிற்பகுதியில்,பெங்களூரின் இந்தக் குறிப்பிட்ட பகுதியானது ஆசியாவிலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகக் குறிப்பிடப்பட்டது.அது எந்தப் பகுதி?
2)BTM மற்றும் HSR லே-அவுட்டுகளை விரிவு படுத்துக.
3)பெங்களூரு ஏரிகளினால் ஆன நகரம்....இல்லை.இல்லை. நகரமாக இருந்தது.இப்போது முக்கால்வாசி ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவை இருந்த இடங்களில் காங்க்ரீட் கட்டிடங்கள் தான் இருக்கின்றன.கீழே கொடுக்கப்பட்ட ஏரிகளின் மீது தற்போது காணப்படும் பெயர் பெற்ற கட்டிடங்கள் என்ன என்று கண்டுபிடிக்க முடியுமா?
சம்பங்கி ஏரி,தரமம்புடி ஏரி.
4)நான் குறிப்பிடும் இந்த மனிதர் பெங்களூரில் சில காலம் மல்லேஸ்வரத்திற்கும்,பசவன்குடிக்கும் இடையே செல்லும் 14ஆம் நம்பர் அரசுப் பேருந்தில் வேலை பார்த்து வந்தார்.இவரது விசில் ஊதும் அழகைப் பார்க்கவே கூட்டம் இவரது பேருந்தில் அள்ளுமாம்.இவர் யார்??
12 August 2006
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 6
Subscribe to:
Post Comments (Atom)
13 Comments:
4. ரஜினிகாந்த்
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. ஜெயநகர்.
1. ஜெய நகர.
2. பைரசந்த்திர தாவரேகரே மடிவாலா - BTM
3. சம்பங்கி ஏரி - கண்டீரவா ஸ்டேடியம்.
தரமம்புடி ஏரி - மெஜெஸ்டிக் பஸ் ஸ்டேண்ட்
4. சூப்பர் ஸ்டார்
Hosur Sarjapur Raste Layout !
1) Electronic City???
2) BTM - Bannerghatta thaarakare Madivala
HSR - Hosur Sarjapur Rasthe
3) Sampangi Lake - Kanteerava Stadium
Dharmampudhi Lake - Kempe Gowda Bus Terminal
4) Super star
தெரியலைன்னு சொல்றதுக்கும் ஒரு தைரியம் வேணுமாம். அது நமக்கு நிறையவே இருக்கு
பெங்களூரப் பத்தி இவ்வளவு விஷயமாகப் போட்டிருக்கீங்க. சரி நானும் எம் பங்குக்கு...
பெங்களூரி கடந்த நான்கு ஆண்டுகளாகக் கட்டப்பட்டு இந்த ஐந்தாம் ஆண்டில் முடிக்கப் படப் போகும் மேம்பாலம் எந்த ஏரியாவில் உள்ளது? அதிலிருந்து 2கிமி தொலைவில் ஒரு வலைப்பதிவர் வீடு உள்ளது. ஹி ஹி. அது யார்?
டோண்டு சார்,கரீட்டாப் புட்சுட்டீங்களே.
ஆமா நீங்க பெங்களூர்ல எப்பவாவது அலுவலக நிமித்தமா தங்கியிருந்தீங்களா?அந்த அனுபவத்தைப் பதிய முடியுமா??
ஒரே அடின்னானுலும் நெத்தியடி அடிச்ச நம்ம ராயுடுக்கு ஒரு "ஓ" பார்சல்...
கிட்டத்தட்ட எல்லா வடைகளையும் சரியாய் சுட்ட...அடச்சீ...எல்லா விடைகளையும் சரியாக சொன்ன உதய்க்கு ஒரு பெரிய "ஓ" ஏர் சர்வீஸில அனுப்பி வைக்கப்படும்.
அப்புறம் அந்த வெடக்கோழி சமாச்சாரம் சூப்பரப்பு....
ஒரு விடை சொன்ன பிரகாசுக்கும்,உண்மையை ஒத்துக்கொண்ட இளாவுக்கும் ஸ்பெஷல் "ஓ".
வெட்டிப் பயல் அண்ணே:-
மொத விடையத் தவிர மத்தது எல்லாம் கரீட்டு.ஆமாம் ஸ்பினாக்கில வடை சுட்டா எப்படி இருக்கும்??
ஜீரா:
//பெங்களூரி கடந்த நான்கு ஆண்டுகளாகக் கட்டப்பட்டு இந்த ஐந்தாம் ஆண்டில் முடிக்கப் படப் போகும் மேம்பாலம் எந்த ஏரியாவில் உள்ளது?//
எந்த லோகத்திலய்யா இருக்கிறீர்??
இது இப்போ fully functional.
//அதிலிருந்து 2கிமி தொலைவில் ஒரு வலைப்பதிவர் வீடு உள்ளது. ஹி ஹி. அது யார்?//
அது சரி...
Post a Comment