1)விஸ்வனாதன் - ராமமூர்த்தி இணை பிரிந்ததும் இருவரும் தனித்தனியாக இசையமைத்த படங்கள் எவை?
2)"உள்ளத்தை அள்ளித்தா" - ஒரு பழையபடத்தின் டிட்டோ காப்பி ஆகும்.அந்த ஒரிஜினல் படம் எது?
3)"ராசாத்தி,என் உசிரு என்னுதில்லை" திருடா-திருடாவில் இடம் பெற்ற இந்தப் பாடலின் சிறப்பம்சம் என்ன?
4)தஞ்சைப் பெரியகோவிலைப் பற்றிய நீண்ட காலம் மக்களிடையே பேசப்பட்டு வந்த ஒரு விஷயம்,பொய்யான ஒன்று அறிஞர் பெருமக்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.நான் எதை பற்றிக் குறிப்பிடுகிறேன்?
5)ஜெயலலிதா நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் எது?
---------------------------------------------------------------------------------------------------
சொன்னாங்க...சொன்னாங்க
1) " My plight is like Draupadi's.Everyone watched her being disrobed but no one helped."
--- 1998 மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட்டு மறுக்கப்பட்ட நிலையில் P.V.நரசிம்மராவ்
2) " The wife has not won.I have handed her husband back to her on a golden platter."
--- அமிதாப்,ஜெயா பச்சன் தம்பதியர் பற்றி ரேகா 1987-ல்
3) "The Rashtrapathi bhavan should not be treated like a nursing home.Of late,it has unfortunately became a den of the retiring old."
--- ராம் ஜெத்மலானி 1992-ல்
4) " From a buffalo's back I have landed into a helicopter. This is real democracy"
--- 1993ல் பீகார் முதல்வரான பின் லாலூ யாதவ்
10 Comments:
2.சபாஷ் மீனா
1. எங்கிருந்தோ வந்தான்
2. சபாஷ் மீனா
3. இசைக்கருவிகள் இல்லாமல் குரலைப் பின்னணியாக வைத்தமைந்த பாடல்
4. நிழல் விழுவதைச் சொல்கிறீர்களா?
5. அ-ல தொடங்கும். சரத்பாபு கூட ஜோடீன்னு நெனைக்கிறேன்.
//1. எங்கிருந்தோ வந்தான்// ராகவன்.. கேள்விய இன்னொரு தடவை படிங்க..
தப்புத்தான் ராசா தப்புத்தான்.
1. விஸ்வநாதன் - பெற்றால்தான் பிள்ளையா
2.ராமமூர்த்தி - மறக்க முடியுமா?
ராகவன், அ வில் தொடங்காது. ந வில் தொடங்கும். மொத்தம் பன்னிரண்டு எழுத்துக்கள். தவிக்குது தயங்குது ஒரு மனது.. பாட்டு ஞாபகம் இருக்கோ?
5. Bhuvana oru kelvi kuri
ஜெயலலிதா சரத்பாபு நடித்த அந்தப் படம் நதியைத் தேடிவந்த கடல். தவிக்குது தயங்குது என்ற நல்ல பாட்டுக்கு புரட்சித் தலைவி ஆட்டம் போட்டிருக்காங்க
ஜெ கடைசிபடம் 'நதி ஒன்று கரை இரண்டு"
நிழல் நிஜமில்லையா!
ஜெமினியின் வாரிசல்லவா![ரேகா]
இனிய சுதர்சன்.கோபால், ஜி.ராகவன், பிரகாஷ்ஜீ,
1.
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பிரிவுக்குப்பின் இருவரும் தனித்தனியாக இசையமைத்த படங்கள்,
அ. கலங்கரை விளக்கம் (வி)
ஆ. மறக்க முடியுமா (ரா)
சரிதானா...
2.
ஜெ நடித்து கடைசியாக வெளிவந்த படம், ந. தே. வ. க. :) மகரிஷியின் நாவல்தானே.
அல்லது
'யாருக்கும் வெட்கமில்லை'யா
சந்தேகமாகவே இருக்கிறது.
அன்புடன்
ஆசாத்
விடைகளை வெளிக் கொணர்ந்த
ஜோ,ஜீரா,ராசா,இகாரஸ்,அனானி,கானாபிரபா,சித்தன்,ஆசாத்,ஹரன்பிரசன்னா
நன்றி....நன்றி....நன்றி
Post a Comment