டெல்லி மெட்ரோவினைப் பற்றி அறிந்தவர்கள் மறக்கமுடியாத பெயர் E.ஸ்ரீதரன்.டெல்லி மெட்ரோவின் மேனேஜிங் டைரக்டரான இவரது உழைப்பு,திட்டமிடல்,அர்ப்பணிப்பு காரணாமாகவே மிக்குறைந்த காலகட்டத்தில் அந்தத் திட்டம் வெற்றிகரமாய்ச் செயல்படத் துவங்கியுள்ளது.1932ல் பாலக்காட்டில் பிறந்த இவர் இந்திய ரயில்வேயில் புரிந்த பல்வேறு சாதனைகள் காரணமாக 2003 ஆம் ஆண்டின் ஆசியாவின் கதாநாயகர்களில் ஒருவராக "டைம்" பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவரைப் பற்றி அனைவரும் அறிந்திராத ஒரு விஷயம்,முன்னாள் தேர்தல் ஆணையர் T.N.சேஷன் இவரது கிளாஸ்மேட் என்பது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தூர்தஷனில் 78 பகுதிகளாக வந்த இராமாயணம் பகுதி - 1,மண்டி ஹவுசுக்கு 18ரூ கோடி வருமானத்தை ஈட்டித் தந்தது.இதற்குப் பின்னால் ஒளிபரப்பட்ட பி.ஆர்.சோப்ராவின் மகாபாரத்திற்குப் பார்வையாளரிடையே இருந்த அமோக ஆதரவு காரணமாய் தூர்தஷனின் 10 நொடி ஸ்லாட்டுக்கு விளம்பரதாரர்களிடையே வசூலித்துவந்த தொகை ரூ65,000. அப்போது இது மிகப் பெரிய தொகை.
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு மனுஷனுக்கும் மனுஷிக்கும் இடையில் சம்பவிக்க முடிவது காதல் மட்டும் தானா?எந்தப் பதில் புன்னகையும் எதிர்பாராமல்,எந்தப் பூச்செண்டுகளும் பரிமாறாமல் இந்த உலகில் எதிரும் புதிருமாக எத்தனை பேர் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறோம்.ஒரு காலமும் பேசவே போவதில்லை என்று அறிந்தும்,எத்தனை பேருடன் பேசத் தோன்றுகிறது நமக்கு.
விலைச்சீட்டுப் போல் பெயர் தொங்கவிடப்படாத ஓர் ஆண் ஆண் எனவும்,ஒரு பெண் பெண் எனவும், அவரவர் மேல் உள்ள அதிகபட்ச சினேகிதத்துடனும் மரியாதயுடனும் சந்தித்து,அப்பால் போய் மறுபடி சந்திக்க முடிகிற அல்லது முடியாமலே போய் விடுகிற நல்ல உறவுகளுக்கு என்ன பெயரிடுவது?அந்தக் கவிதைத் தொகுப்புப் போல காதலைக் காதல் என்றும் சொல்லலாம்.சொல்லாமலே கூட இருக்கலாம்.இப்படிச் சொல்லாமலே என்னையும் யாரேனும் நினைத்திருப்பார்கள்.நானும் யாரையேனும் நினைத்திருக்கத்தான் செய்வேன்.
ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்ததாம் - இருக்கும்.பூக்கத்தானே செடி. "பூக்கவும் தானே" என்பது இன்னும் சரியாக இருக்குமோ?
---வண்ணதாசனின் "பரிமாறாத பூச்செண்டுகள்" கட்டுரையில் இருந்து

10 Comments:
ரொம்ப 'ஓ'மம் போடுவீரு போல இருக்கு.. ம்ம் நல்லாத்தான் இருக்கு..
அப்புறம் அந்த வண்ணதாசன் புஸ்தகம்.. கையில வச்சிருக்கீரா?
அருமையான துணுக்குகள் சுதர். அதுயாருங்க வண்ணதாசன். ஆவலை கிளப்பிவிடறிங்களே..
எனக்கு ஓமப்பொடி புடிக்கும்! உங்க பொடிப் பொடிச் செய்தியும் பிடிக்குது.
யோகன் பாரிஸ்
ramayna and baratham in DD.adhu oru alkiyae nila kaalam.DD did the job of grandpas and mas to children.Now DD and grandpas are getting same treatment isn't it?
துணுக்குகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
ராசா (Raasa) said...
//அப்புறம் அந்த வண்ணதாசன் புஸ்தகம்.. கையில வச்சிருக்கீரா?//
இல்லையே ராசா..
Mouls said...
//சார்,அந்த வண்ணதாசன் பத்தி கொஜம் சொல்லுங்க...நல்லாத்தான் இருக்கும் பொல.//
சார்,மோர் எல்லாம் வேண்டாமே.மீண்டும் ஒரு சமயம் அவரைப் பற்றி எழுதறேனே...
ILA(a)இளா said...
//அருமையான துணுக்குகள் சுதர். அதுயாருங்க வண்ணதாசன். ஆவலை கிளப்பிவிடறிங்களே.. //
ஹூம்.ஒரு அற்புதமான மனிதர் அவர் இளா.
யோகன் பாரிஸ் மற்றும் துபாய் "ராசா"
வாழ்த்துக்கு வணங்குகிறேன்.
//Now DD and grandpas are getting same treatment isn't it?//
Bulls eye anony...
Post a Comment