வினோத் பேசுகிறேன்:
நேற்று இரவு 11.30 மணி:
"ஆப்பரேஷன் சக்ஸஸ்,Fwded தலை'ஸ் மெயில் டூ பெர்சு" என்னும் குறுஞ்செய்தியை வாசித்ததும் செபியுடன் உடனே பேச வேண்டும் என்னும் ஆர்வம் மனத்தில் பீறிட்டுக் கிளம்பியது.இரவு 10 மணி வாக்கில் அனுப்பப்பட்ட தகவலானது என்னைச் சேர்ந்த நேரமோ மனி 11.15.இதற்கு மேல் அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம்;காலையில் அலுவலகத்தில் போய் பேசிக் கொள்ளலாம் எனத் தீர்மானித்து விட்டு உறங்கப் போனேன்.புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை.அது சரி இந்த நல்ல செய்திக்குத் தானே கடந்த 168 மணி நேரமாய்க் காத்துக் கொண்டிருந்தோம்.காரியம் நல்லபடியாய் முடிந்ததைக் கொண்டாடாமல் எப்படித் தூங்க முடியும்?
என்னடா இவன் ஓவராகப் பில்ட்-அப் கொடுக்கிறானே என்று பார்க்கிறீர்களா?
விஷயம் பெரிதாக ஒன்றுமில்லை.அடியேனுக்கும்,செபி அலையஸ் செபாஸ்டியனுக்கும் சமீபத்தில் நடந்து முடிந்த வருடாந்தர அப்ரெய்ஸலில் புதிதாக எங்களுக்கு வந்த மேனேஜர் அல்வா கிண்டி கொடுத்து விட்டார்(வழக்கம் போலவே).இதைவிடக் கேவலமான உத்யோக ரேட்டிங் கார்டை இதுவரை யாரும் வாங்கியிருக்கவே மாட்டார்கள்.
என்னதான் உயிரைக் கொடுத்து வேலை செய்தாலும்,மேலாளர்களுக்கு சோப்பு போடாத அவர்களைக் காக்காய் பிடிக்காத எல்லாருக்கும் கம்பெனி வேறுபாடின்றி நிகழ்வது தான் இது.என்னைப் பொறுத்தமட்டிலும் சோப்பு போடுவது என்பது பிடிக்காத,எனக்கு சுட்டுப் போட்டாலும் வராத ஒரு சமாச்சாரம்.
போன வருடமும் இதேபோல் இதற்கு முந்தைய மேனேஜரால் தரப்பட்ட மோசமான பின்னூட்டத்தினால் எனக்கு வரவிருந்த பணி உயர்வும் அது சார்ந்த சௌகர்யங்களும் பறி போனது.சரி அடுத்த முறை பார்த்துக் கொள்வோம் என்று ஒரு வருடம் இலவு காத்த கிளியாய் இருந்த எனக்கு இந்த முறையும் அதே அல்வாவை வேறு ஒருவர் அழகாய்க் கிண்டித் தந்தார்.செபியின் கதையைக் கேட்கவே வேண்டாம்.அவனுடைய காதலி இருக்கும் சென்னை கிளைக்கு மாற்றல் வேண்டி அனுப்பப்பட்ட விண்ணப்பத்தினை,ஏதோ சொத்தை காரணம் காட்டி நிறுத்திவிட்டார். எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் சித்தாந்தத்தின் படி நானும் செபியும் இத்தகைய ஒரு சூழலில் போட்ட ஆப்பரேஷன் தான் இது.
ஒரு வாரத்திற்கு முன்னால்,காலையில் 11.30 மணி:
"டேய் செபி,உண்மையாவா சொல்றே?"
"மொதல்ல அந்த மேட்ச் பாக்சை இப்படிக் கொடு.தல செல்ஃபோன்ல குசுகுன்னு யாரோ கன்சல்டன்ட் கிட்ட பேசினதக் கேட்டிட்டுத் தான் இருந்தேன்.சம்பளம் பத்தியும் ஓவரால் பெனிஃபிட்ஸ் பத்தியும் கேட்டது என் காதில ஸ்பஷ்டமா விழுந்தது.நான் பார்க்கறென்னு தெரிஞ்சதுமே யாரோ பேங்க் ஆளு கிட்ட பேசற மாதிரி மனுஷன் இன்ட்ரெஸ்ட் ரேட் பத்தி விசாரிக்க ஆரம்பிசிட்டான்.சரியான டகால்ட்டி டாக் அது.அப்புறம் நம்ம ரெட்டி கூட தலயை போன வாரம் "இன்னவேட்டர் பில்டிங்ல" ஃபுல் பார்மல்சில பார்த்ததா சொன்னான்.கிளையன்ட் மீட்டிங்குக்கே செப்பல்சில வர்ர ஆளு,அங்கே ஷூ எல்லாம் போட்டிட்டு என்ன பண்ணியிருப்பான்??"
"ஹூம்.நீ சொல்றத வச்சிப் பார்க்கும் போது பட்சி வெளியே பறக்கத் திட்டம் போடுதுன்னு நினைக்கிறேன்.பறந்து போறதுக்குள்ள அதுகிட்ட கொஞ்சம் வெளையாடிப் பார்த்தாத்தான் என்ன?செபி சேட்டா எனிக்கு ஒரு ஐடியா தோணுது"என்று உருவானது தான் இந்த ஆப்பரேஷன்.
என்ன ஜேம்ஸ்பாண்ட் பட எஃபெக்ட் கிடைக்கிறதா??(சரி..சரி...எனக்கே கொஞ்சம் ஓவராத் தான் இருக்கு)
மற்ற நண்பர்களைக் கலாய்ப்பதற்காக, செபி பல்வேறு பெயர்களில் மின்னஞ்சல் கணக்குகளைத் ஜீமெயிலில் துவக்கி வைத்திருப்பான்.அதில் ஒன்று தான் எங்கள் ஆப்பரேஷனுக்கு உதவப் போகும் ஒரு ஒரு தனியார் ஜாப் கன்சல்டன்டின் மின்னஞ்சல் முகவரி.
அந்த முகவரியிலிருந்து எங்கல் தலக்கு "வெளி நாட்டு வேலை வாய்ப்புகள்" பற்றிய ஒரு மயிலைத் தட்டி விட்டு அதற்கு தலயிடமிருந்து ரெஸ்பான்சினையும் கூடவே அதனுடைய பயோடேட்டாவினையும் பெறுவது தான் ஆப்பரேஷனின் முதல் இலக்கு.அப்படி தலயிடமிருந்துவந்த மயிலினை தலயின் தலையான பெரிசுக்கு அனுப்பி வைப்பதுதான் எங்கள் ஆப்பரேஷனின் இறுதி இலக்கு.
"வினோ.சரி நம்மோட மெயிலுக்கு மயங்கி தலையும் அவரோட CV-ய அனுப்பிடறாரு.அதை பெருசுக்கு forward பண்றதனால என்ன லாபம்?ஏதோ வயாக்ரா மாத்திரை,ஜேக்பாட் அடிச்சிடுச்சு அப்படின்னு தினமும் வர்ர ஸ்பேம் மெயில்கள்ள ஒண்ணுனு நினைச்சி டெலீட் செஞ்சிட்டார்னா?"
"செபி.இப்பெல்லாம் மேனேஜர் லெவல்ல வேலை மாற்றும் ஆளுங்களோட ப்ரொஃபைல் சரியாத்தான் இருக்கா இல்லை ஏதாவது மொள்ளமாரித்தனம் பண்றாங்களான்னு கண்டுபிடிக்க நெறைய பேக்கிரவுண்டு செக் செஞ்சிட்டு இருக்காங்க.அப்படி நம்ம தலையோட பேக்கிரவுண்ட் செக்குகாகத் தான் இந்த மயிலை அனுப்பறோம்னு தெளிவாச் சொல்லீடுவோம்.நாம பெருசுக்கு அனுப்பற மெயில்ல இந்த மாதிரி உங்க கம்பெனியில உங்க கீழ வேலை செய்யும் இவர்,புதிய வேலை தேடிக்கொண்டிருக்கிறார்.இவரோட ஃப்ரொபைலையும் அனுப்பியிருக்காரு.இது கரீக்டான்னு பார்த்துச் சொல்லௌங்களேன் அப்படின்னு ஒரு பிட்டைப் போடுவோம்"
நான் சொல்லி முடித்தது தான் தாமதம்.இதற்காகவே ஜென்ம ஜென்மங்களாய்க் காத்திருந்தது போலத் துள்ளிக் குதித்தான் செபி.
"அடிப்பொளி சேட்டா,சூப்பர் ஐடியா மச்சி,இது மட்டும் சக்ஸஸ் ஆச்சு உனக்கு ஒரு பெரிய ட்ரீட் தர்ரேன்".
"செபி.முதல் கட்ட நடவடிக்கையின் படி நம்ம தலைக்கு ஒரு ஜாப் கன்சல்டன்ட் கிட்ட இருந்து அனுப்பின மாதிரி ஒரு மெயில் ரெடி பண்ணு.நான் போய் ஒரு தம் போட்டிட்டு வந்திடரேன்".மனம் முழுக்க ஒரு சாதனையைச் செய்த நிறைவு.முழு சிகரெட்டினையும் இழுக்க முடியாமல் பாதியிலே திரும்ப செபியின் இருக்கைக்கு வந்தேன்.ட்ராஃப்ட் காப்பியுடன் தயாராக இருந்தான் செபி.
"சான்ஸே இல்லை.இந்த மாதிரி ஒரு மெயிலைப் பார்த்தா நம்ம தல மட்டும் இல்லை.நம்ம பெரிசுக்கே சபலம் வந்திடும்.சரி தலயோட பெர்சனல் ஐ.டி. தெரியுமா உனக்கு"
********@hotmail.com தானே??
"அத்தே தான்.ரெடி...ஒன் டூ த்ரீ...இப்போ சென்ட் பட்டனை அமுக்கு."
"அப்பாடா.ஒரு வழியா அனுப்பிட்டேன்.வினோ,இப்பவே கேன்டீன் போய் இந்த சந்தோஷத்தைக் கொண்டாடலாம்."
இன்று அலுவலகத்தில்,காலை 10 மணி:
"செபி, ஏன் இவ்ளோ லேட்டா வர்ரே?என்ன நைட்டு ஓவர் தண்ணியா??"
"வினோ,உனக்கே இதெல்லாம் ஓவராத் தெரியலை.நம்ம வாத்யாரோட ஜூனியருக்கு இன்னைக்குப் பிறந்த நாளாம்.சாயங்காலம் பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்கார்.கிஃப்ட் வாங்கப் போயிருந்தேன்.நேத்து கூட இதப் பத்தி பேசீட்டு இருந்தோமே..சரியான பட்ட்ர் நீ..."
"சரி...சரி.ரிலாக்ஸ் மேன்.எங்கே நம்ம தல கிட்ட வந்த மெயிலைக் காமி."
"இங்கே பாரு.இந்த மெயில் தான்.பயங்கர டெஸ்பரேட்டா வேலை தேடீட்டு இருக்கார் போலத் தோணுது.பாரேன்... முகம் தெரியாத ஒரு அனானிமஸ் மெயிலை நம்பி அவரோட முழு ப்ரொஃபைலையும் அனுப்பி இருக்கார்.சரி இந்த மெயிலை இப்போ என்ன பண்ணலாம் வினோ?"
"அப்படியே Fwd பட்டனை அமுக்கி நாம அன்னைக்கு முடிவு செஞ்சு வச்ச மாதிரி ஒரு மெயிலைத் தட்டி நம்ம பெரிசோட அஃபீஷியல் மெயில் ஐ.டிக்கு அனுப்ப வேண்டியதுதான்."
அப்படி அனுப்பிய நாற்பதாவது நிமிடத்தில் எங்கள் தல பெரிசின் அறைக்குள் சென்றது.அந்த நாற்பது நிமிடங்களும் எங்களுக்கு யுகங்களாய்க் கழிந்தது.
"வினோ.பெரிசு நாம அனுப்பின மெயிலை முழுசா நம்பிட்டார் போலத் தோணுது"
"எப்படிறா சொல்றே?"
"தல, பெருசு ரூமுக்குள்ளார போய் இருபது நிமிஷம் ஆச்சு..இன்னும் காணோமே" என்று சொல்லி முடிப்பதற்குள் வாயெல்லாம் பல்லாக வெளிப்பட்டார் எங்கள் தல.அதற்குப் பிறகு எங்களுக்குக் கையும் ஓடவில்லை;காலும் ஓடவில்லை.
பெரிசு கண்டிப்பாகக் கடித்துக் குதறி இருப்பாரே?கடி வாங்கிய பிறகும் மனிதர் சந்தோஷமாக இருக்கிறாரே???உள்ளே என்ன நடந்து இருக்கும்?
கடிக்க எனக்கு பன்னிரெண்டு நகங்கள் போதவில்லை....
(தொடரும்)
*************************************************************
உள்ளே அப்படி என்ன ஆச்சு???கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்....
*************************************************************
11 August 2006
ஆப்பரேஷன் "மொட்டைக் கடிதாசு"
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
அப்பு.. இந்த டெக்னிக்கை அடுத்தவங்களுக்கு பயன்படுத்தாம, நமக்கு நாமே பயன்படுத்தினா. 'வெளிய எல்லாம் போகாத ராசா'ன்னு தாவக்கட்டைய புடிச்சு கொஞ்சிட்டு கிண்டுன அல்வாவ திரும்ப வாங்கிட்டு, புது பேக்காஜ் குடுப்பாங்க, தெரியுமில்ல.. (சில நேரம் backfire ஆகும் தான்)..
அதை விட்டுட்டு பழிவாங்கிற கதையெல்லாம் செஞ்சுகிட்டு இன்னும் 70 - 80 'லயே இருக்கறயே கண்ணு.. நாங்கெல்லாம் 2000'க்கு வந்துட்டோம்.. போன அப்ரைசல்ல நம்மள மேல தூக்கி விட்டதே இந்தமாதிரி ஒரு கேப்மாரித்தனத்துல தான்..
சோப் போட வராதுங்கிறதால.. இந்த மாதிரி நிறையா 'சாணக்கிய'த்தனமெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கோம்..
இன்னும் டீடெயில் வேணும்னா
//நம்ம வாத்யாரோட ஜூனியருக்கு இன்னைக்குப் பிறந்த நாளாம்.சாயங்காலம் பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்கார்.// அங்க வரும் போது சொல்றேன் :)
வேறு வேலை தேட வேண்டாமெனச் சொல்லி சம்பள உயர்வுதான். வேறென்ன.
>>> அப்பு.. இந்த டெக்னிக்கை அடுத்தவங்களுக்கு பயன்படுத்தாம, நமக்கு நாமே பயன்படுத்தினா. 'வெளிய எல்லாம் போகாத ராசா'ன்னு தாவக்கட்டைய புடிச்சு கொஞ்சிட்டு கிண்டுன அல்வாவ திரும்ப வாங்கிட்டு, புது பேக்காஜ் குடுப்பாங்க, தெரியுமில்ல.. <<<<
:-)
nice one.
சுதர்சன்...
இந்த அப்ரைசல் எப்பவுமே நமக்கு "ஆப்பு"ரைசல் தான்!!
அதுக்காக நீங்க இப்படி வன்முறைல இறங்கலாமா??
மென்மையா அந்தப் பெரிச ரெண்டு "தட்டு" தட்ட வேண்டியதுதான?? :))
சரி அப்புறம் என்னாச்சு??
ராசா (Raasa) said...
//அப்பு.. இந்த டெக்னிக்கை அடுத்தவங்களுக்கு பயன்படுத்தாம, நமக்கு நாமே பயன்படுத்தினா. 'வெளிய எல்லாம் போகாத ராசா'ன்னு தாவக்கட்டைய புடிச்சு கொஞ்சிட்டு கிண்டுன அல்வாவ திரும்ப வாங்கிட்டு, புது பேக்காஜ் குடுப்பாங்க, தெரியுமில்ல.. (சில நேரம் backfire ஆகும் தான்)..//
ஓ...இப்படியெல்லாம் கூட இருக்கா?எல்லாம் புதுசு புதுசா இருக்கே.வீட்டில உக்கார்ந்து யோசிப்பீங்களோ??
//அதை விட்டுட்டு பழிவாங்கிற கதையெல்லாம் செஞ்சுகிட்டு இன்னும் 70 - 80 'லயே இருக்கறயே கண்ணு.. நாங்கெல்லாம் 2000'க்கு வந்துட்டோம்.//
இது தான் பின் *வீனத்துவம்ங்ணா..
//போன அப்ரைசல்ல நம்மள மேல தூக்கி விட்டதே இந்தமாதிரி ஒரு கேப்மாரித்தனத்துல தான்.சோப் போட வராதுங்கிறதால.. இந்த மாதிரி நிறையா 'சாணக்கிய'த்தனமெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கோம்.//
போலாம்...போலாம்..ரைட்..ரைட்...
--இன்னும் டீடெயில் வேணும்னா
//நம்ம வாத்யாரோட ஜூனியருக்கு இன்னைக்குப் பிறந்த நாளாம்.சாயங்காலம் பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்கார்.// அங்க வரும் போது சொல்றேன் :) ---
ஓக்கே..ஓக்கே...
வாங்க கொத்ஸ்...
இலவசக்கொத்தனார் said...
//வேறு வேலை தேட வேண்டாமெனச் சொல்லி சம்பள உயர்வுதான். வேறென்ன.//
இல்லையே...ஆனா கிட்டத்தட்ட அதே மாதிரிதான்..
ஸ்மைலியோட அமைதியாக முடித்த யாத்திரீகனுக்கு ஒரு "ஓ".
ஆமா,ஃபிரான்சிலயும் ஆகஸ்ட் 15லீவு போல.
பாராட்டிய வினையூக்கிக்கும்,"ஓ" போட்ட சிங்கை நாதனுக்கும் ஒரு பெரிய "ஓ"
அருட்பெருங்கோ said...
//இந்த அப்ரைசல் எப்பவுமே நமக்கு "ஆப்பு"ரைசல் தான்!!//
வீட்டுக்கு வீடு வாசப்படி தான் போல.
//அதுக்காக நீங்க இப்படி வன்முறைல இறங்கலாமா??மென்மையா அந்தப் பெரிச ரெண்டு "தட்டு" தட்ட வேண்டியதுதான?? :))//
அது சரி.
சரி அப்புறம் என்னாச்சு??
சுதர்சனம்....இதெல்லாம் வேலைக்காகாது. ஏன்னா யார் கிளம்புறாங்கன்னு பாத்து...அவங்க வேண்டப்பட்டவங்கன்னா நல்லது செய்யுறதும் வேண்டாதவங்கன்னா பழி வாங்கறதும் கம்பெனி கம்பெனியா நடக்குறதுதான.
என்ன அவர வேற ஒரு நல்ல புராஜெக்ட்ல தூக்கிப் போட்டுட்டாங்களா? இல்ல அவரு போக விரும்பிய ஊருக்கு அனுப்பிச்சிட்டாங்களா?
அப்ரைசல் பண்றது ரொம்பக் கஷ்டமான வேலை.ரெண்டு பேருக்கும் பொதுவா முடிக்கனும். அடிதடிகள்ள முடிஞ்ச அப்ரைசல்களும் உண்டு. ஆனா என்னைப் பொருத்த வரைக்கும் இதுவரைக்கும் நியாயமாத்தான் அடுத்தவங்களுக்கு அப்ரைசல் பண்றேன்னு நெனைக்கிறேன்.
எனக்கு நடந்த ஒரு கூத்தச் சொல்றேன்.
அதுக்கு முந்துன அப்ரைசல்ல ராகவன் நன்றாக உழைக்கக் கூடியவன். முதுகெலும்பு. சூப்பு வைக்கலாம் அது இதுன்னு ஒருத்தர் எழுதுனாரு. அடுத்த புராஜக்ட்ல ஒரு அக்கா...ராகவனுக்கு வெவரம் பத்தாது. இன்னும் ஒழுங்கா வேல பாக்கனும். சூப்பு வெச்சாலும் வெளங்காதுன்னு எழுதுனாங்க. அதுக்கு அடுத்த அப்ரைசல்ல இன்னொரு மேனேஜரு ராகவன் ரொம்பப் பிரமாதம். பதவி உயர்வு கொடுக்கிறேன்னு எழுதுனாரு. அதுக்கப்புறம் வந்த மேனேஜரு, என்னயக் கூப்புட்டு என்ன fill up பண்ணியிருக்க. நானே ஒனக்கு better rating கொடுத்திருக்கேன்னு பரவசப் படுத்துனாரு. அந்த மேனேஜரும் நானும் கொஞ்சம் நேர்மையா நடந்ததால சீனியர் மேனேஜருக்கு நாங்க ஆகாமப் போயிட்டோம். அந்த மேனேஜர் கெளம்பீட்டாரு. அடுத்து எனக்குக் கொடுக்க வெச்சிந்த best performer award-அ இன்னொரு பொண்ணுக்குக் குடுத்துட்டாங்க. நானும் கெளம்பி வந்துட்டேன். ஹி ஹி.
>> பிரான்சிலயும் 15லீவு போல <<
ஜஸ்ட் மிஸ்ங்கண்ணா... :-D
French Fries பிரான்ஸ்லருந்துதான் இருக்கனுமா ? ;-)
Post a Comment