26 July 2005

சந்திரமுகி - ஒரு ஸ்டாடிஸ்டிக்கல் அனாலிசிஸ்

23 சூலை 2005 - சந்திரமுகி 100 நாட்களை எட்டிப் பிடித்த நாள்.
திருட்டு VCD-க்கள்,மெகாசீரியல்கள்,டிக்கெட் கட்டண அதிகரிப்பு,திரையரங்குகளின் பராமரிப்புப் பிரிச்சனைகள்,சினிமாவை ஓரம் கட்டி விட்ட ஏராளமான பொழுதுபோக்கு விஷயங்கள் என்று ஆயிரம் தடைகளைத் தாண்டி 100 நாள் ஓடியிருப்பது ஒரு சாதனை தான்.ரஜினிகாந்தின் திரைப்படம் ஒரு தீம் பார்க்கினைப் போல.எப்போதல்லாம் அவரது படங்கள் வெளியிடப்படுகிறதோ,அப்போதெல்லாம் குடும்பத்துடன் வார இறுதியைக் களிக்க அவற்றைத் தேர்ந்தெடுப்பது என்பது காலம் காலமாக நடந்து வருவது.

கீழே தரப்பட்டுள்ள சந்திரமுகியின் சாதனை பல்வேறு ஊடகங்களினின்று தொகுக்கப்பட்டது.

1.மாயாஜாலில் 100 நாட்கள் ஓடிய முதல் படம்.

2.ஜூலு மற்றும் ஆஃப்ரிக்கானா மொழிகளில் டப் செய்யப்பட்ட முதல் படம்(ஜூலு - லான்ஸ் க்ளூஸ்னரின் தாய் மொழி,ஆஃப்ரிக்கானா- தென் ஆப்பிரிக்காவின் பிரதான மொழி)

3.இதன் மூலப் பிரதியின் மொழி பேசப்படும் கேரளாவில் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது.இதனுடன் வெளியான மோகன்லாலின் திரைப்படத்தையே ஓரம் கட்டிவிட்டது.

4.சுந்தரத் தெலுங்கிலும் சந்திரமுகியின் ராஜ்ஜியம் தான்.பத்துத் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிவிட்டது.

5.பொதுவாக,அமெரிக்காவில் இந்தியத் திரைப்படங்கள் இரு வாரங்களே ஓடும்;அதுவும் வார இறுதியில் 4 காட்சிகளும்,மற்ற நாட்களில் ஒரே காட்சியும் தான் காண்பிக்கப்படும்.ஆனால் சந்திரமுகி 5 வாரங்கள் ஓடியது அதுவும் தினசரி 5 காட்சிகளாக.

6.எல்லாவற்றிர்க்கும் மேலாயப் பல அனாலிஸ்களைப் பதிய வைத்துப் பல அனலிஸ்டுகளை உருவாக்கிய புண்ணியமும் இதற்குப் போய்ச் சேரும் :-)

7 Comments:

Vijayakumar said...

இத்தோ.... என் மூளைக்குள்ளும் ஒரு அனலிஸ்ட் உதித்துக் கொண்டிருக்கிறான்.

Raja said...

சுந்தர தெலுங்கில் 50 தியேட்டர் சாமியோவ். மும்பை யிலும் முதல் முறையாக 100 நாட்கள். தமிழனின் வெற்றி பரவட்டும் எட்டு திசைக்கும்

Anonymous said...

En karrupu thangam, oru singam, when the lion come out of the den very rarely it will return without a hunt.

enRenRum-anbudan.BALA said...

சுதர்சன் கோபால்,
Good post and Thanks for the info :)

Anonymous said...

I heard that it ran 100 days in Singapore too and the fans celebrated there too. Something unique!

Vetri Thirumalai said...

நீங்க குழலி பதிவில் போட்டிருந்த அந்த விளம்பரத்தை பார்த்துட்டுதான் இங்க வந்தேன்.
பதிவு நல்லாத்தான் இருக்குது ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் குசும்பு ஒவர்தான்(பின்னே அடுத்தவங்க பதிவை விளம்ப்ர ஹோர்டிங்கா மாத்தீட்டீங்களே!)

Sud Gopal said...

அல்வாசிட்டி.விஜய்,ராஜா ராமதாஸ்,கிருஷ்ண குமார்,பாலா,அனானிமஸ் அண்ணாத்தே,வெற்றி:-

கருத்துகளுக்கு நன்றி.