20 July 2005

ஆட்டுக்குத் தாடி எதற்கு???

ஆண்டவனின் படைப்பே விசித்திரமானது.எத்தனையோ வகை உயிரினங்களையும் படைத்துள்ளான்.அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விசித்திரமான தோற்றத்தை அளித்திருக்கிறான்.எந்த உறுப்பும் வீணாகப் படைக்கப்படவில்லை.

ஆடுகளுக்கு வால் மட்டுமின்றி தாடி கூட இருக்கிறது.ஆட்டுத் தாடியின் உபயோகம் பற்றிப் பல பேருக்குப் பல முறை சந்தேகம் வந்திருக்கும்.நம் தமிழ்நாட்டில் சிலர் அதனை ஒரு குறிப்பிட்ட பதவியுடன் ஒப்பிட்டு முனைவர் பட்டம் கூட வாங்கிருக்கின்றனர்.

சென்ற பிறவியில் ஆடாக இருந்து இப்பிறவியில் ஒரு எருமை மாடாய் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் எனது ஒரு சகாவிடம் இருந்து நான் பெற்ற ஆட்டுத் தாடி பற்றிய விளக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அதாகப்பட்டது,முதலில் தோன்றிய ஆட்டுக் கூட்டத்தில் எந்த ஒரு ஆட்டிற்கும் தாடி இல்லை.இந்த ஓநாய் இருக்கிறதே,அதற்கு எப்போதும் ஆடு பற்றிய நினைப்புத்தான்.ஒரு கொட்டாயில் சில ஆடுகளும் அவற்றின் குட்டிகளும் வசித்து வந்தன.தாய் ஆடு வெளியில் செல்லும் போது அதன் கதவை மூடிவிட்டுச் சென்றுவிடும்.குட்டிகள் கதவை உள் தாளிட்டுக்கொள்ளும்.தாய் ஆடு வந்து கதவைத் தட்டினால்தான் குட்டிகள் திறக்கும்இந்த ஆட்டுக்குட்டிகளை ஏமாற்றி இரையாக்கத் தீர்மானித்தது ஓநாய்.அதன்படி தாய் ஆடு இல்லாத சமயம் பார்த்துச் சென்று கதவைத் தட்டியது.ஆட்டுக்குட்டிகள் கதவை உடனே திறக்கவில்லை.

சற்று நேரம் தாமதித்தன.ஓநாய் தந்திரமாகக் குரலை மாற்றி,"இந்த ஓநாய்களின் தொல்லை பெரிசா இருக்கு!ஓநாய்கள் தொலைந்தால்தான் நிம்மதி.சீக்கிரமாய் கதவைத் திறங்கள்"என்றது.இந்த வார்த்தைகள் தாய் ஆடு அடிக்கடி சொல்லக்கூடியது.இதை அறிந்து வைத்திருந்த ஓநாய் இந்தத் தந்திரத்தைக் கையாண்டது.ஆட்டுக்குட்டிகள் நம்பி ஏமாந்து போயின.உண்மையினை அறிந்த தாய் ஆடு ஆண்டவனிடம் முறையிட்டதன் பேரில்,இறைவன் அவற்றின் முகத்தில் புதிதாய் ஒரு உறுப்பான தாடியினைப் படைத்தான்.அதோடு ஓநாயினால் விழுங்கப்பட்ட குட்டி ஆடுகளுக்கும் உயிர் கொடுத்தான்.

சில மாதங்கட்குப் பிறகு அந்த ஆடுகளைத் தாடியுடன் பார்த்த ஓநாய் நினைத்தது.ஆடுகளுக்கு தாடி எதற்காக?அதனால் எந்தப் பயனுமில்லையே!வேடிக்கைக்காக இருக்குமோ என்றெல்லாம் கற்பனை செய்தது.அதற்கு சிரிப்புதான் வந்தது.வழக்கம் போல் தாய் ஆடு இல்லாத நேரம் பார்த்துக் கொட்டாயின் கதவைத் தட்டியது.ஆட்டுக்குட்டிகள் கதவை உடனே திறக்கவில்லை.சற்று நேரம் தாமதித்தன.

"இந்த ஓநாய்களின் தொல்லை பெரிசா இருக்கு!ஓநாய்கள் தொலைந்தால்தான் நிம்மதி.சீக்கிரமாய் கதவைத் திறங்கள்"என்ற வழக்கமான டயலாக் அடித்தது ஓநாய்.புத்திசாலியான ஆட்டுக்குட்டிகள்,"யார் அது?இங்கே வந்து இந்த சந்து வழியாக் உன் முகத்திலுள்ள தாடியைக் காட்டு!"என்று ஓர் ஆட்டுக்குட்டி கூறியது.

ஓநாய் திகைத்துவிட்டது.இந்த ஆட்டுக்குட்டிகளை ஏமாற்ற முடியாது என்றும் தெரிந்து கொண்டது.அது மட்டுமா?ஆட்டுக்கு மட்டும் தாடி இருப்பது இதற்குத் தானா என்றும் புரிந்து கொண்டது.

7 Comments:

Vetri Thirumalai said...

//சென்ற பிறவியில் ஆடாக இருந்து இப்பிறவியில் ஒரு எருமை மாடாய் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் எனது ஒரு சகாவிடம் இருந்து//

இதுதான் கோயமுத்தூர் குசும்புங்கலானா...

U.P.Tharsan said...

//ஆடுகளுக்கு வால் மட்டுமின்றி தாடி கூட இருக்கிறது.ஆட்டுத் தாடியின் உபயோகம் பற்றிப் பல பேருக்குப் பல முறை சந்தேகம் வந்திருக்கும்.நம் தமிழ்நாட்டில் சிலர் அதனை ஒரு குறிப்பிட்ட பதவியுடன் ஒப்பிட்டு முனைவர் பட்டம் கூட வாங்கிருக்கின்றனர்.//

அது யாரங்கோ ?

நல்லா கதை எழுதுறிங்கோ (விடுறிங்கோ)

:-))

Vijayakumar said...

ஓ....... ஹோ........

NambikkaiRAMA said...

அட ஆட்டுக்குட்டிக்கும் அர்த்தம் சொல்லும் அன்பரே நீ வாழ்க! சிறுவர்களுக்கு ஏற்ற கதை..

Sud Gopal said...

வெற்றி திருமலை:
"இதுதான் கோயமுத்தூர் குசும்புங்கலானா.."
ஹி..ஹி..ஹி..

தர்சன்:
"அது யாரங்கோ?"
நமது கழகக் கண்மணிகளைக் கேளுங்க சரியாய்ச் சொல்லுவாங்க.
"நல்லா கதை எழுதுறிங்கோ (விடுறிங்கோ)"
நெம்ப டாங்க்ஸுங்கண்ணா...

அல்வாசிட்டி.விஜய்:
வூட்டுக்கு வந்ததுக்கு ரெம்ப நன்றி...அடிக்கடி வந்துட்டு போங்க.

PositiveRAMA:
"அட ஆட்டுக்குட்டிக்கும் அர்த்தம் சொல்லும் அன்பரே நீ வாழ்க! சிறுவர்களுக்கு ஏற்ற கதை.."
ஆமாம்.இந்தக் கதை நான் சின்னப் பய்யனா இருக்கச் சொல்லோ என்னோட சித்தி சொன்ன கத.இன்னும் நிறைய இஸ்டாக் இருக்கு.அப்பப்போ எடுத்தி உடரேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Anonymous said...

அப்பிடியா சங்கதி!

Unknown said...

சூஊஊஊஊஊஊப்பர்