"மூணு பேர்த்த லவ் பண்றானாம்.கடைசியில நாலாவதா ஒரு பொண்ணக் கல்யாணம் செஞ்சிக்கிறானாம்.என்ன கத இது.கனிகாவுக்குப் பதிலா சினேகாவைக் கல்யாணம் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும் இல்லையா அண்ணா??"என்று கேட்ட எனது தங்கை(cousin sister)அப்போது படித்துக் கொண்டிருந்தது ஏழாம் வகுப்பில்.
நாங்கள் ஆட்டோகிராஃப் படத்தைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது தான் மேற்கண்ட சம்பாஷனை நடந்தது.நானும் சித்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம்."நந்து,படத்தில மூணு பேர சேரன் லவ் பண்ணல.சினேகா அவரோட ஃப்ரெண்ட் மட்டுமே" என்ற எனது பிரசங்கத்தினை ஆரம்பித்த போது,சித்தி மெல்ல நந்தினிக்குத் தெரியாமல் டாபிக்கை மாற்றுமாறு சைகை காட்டினார்.
வீட்டுக்கு வந்தபின் சித்தி "நந்தினிக்கு இந்த உணர்வு பூர்வமான விஷயங்கள் தெரிய வர இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலாம்.நேத்து கூட ஒரு ஹிந்தி படத்தை பார்த்துட்டு இப்படித்தான் ஏதோ சொல்லிட்டு இருந்தா.சினிமா பார்த்து எதக் கத்துக்கறாங்களோ இல்லையோ இதப் பத்தி மட்டும் நல்லாத் தெரிஞ்சுக்கறாங்க.ஆமாம்,நீ கூட புது வசந்தம் படம் வந்த புதிசில அதைப் பார்த்திட்டு சித்தாரா முரளியை ஏன் கல்யாணம் பண்ணலைன்னு கேள்வியாக் கேட்டிடு இருப்பியே,அதெல்லாம் இப்போ ஞாபகம் இருக்கா??
அது சரி.படம் பார்த்திட்டு இருந்தப்போ ஒரு சில காட்சிகள்ள நீ லேசா கண்ணக் கசக்கின மாதிரித் தெரிஞ்சது.என்ன உன்னோட மல்லிகா,கோபிகா எல்லாம் ஞாபகத்திற்கு வந்திட்டாங்களோ" என்றவாறு என்னிடம் போட்டு வாங்க ஆரம்பித்தார்.
நான் மெல்லமாய்ச் சிரித்துக்கொண்டே தலையை ஆட்டி வைத்தேன்.
காதல் என்ற உணர்வு ஒரு முறை கூட தனது வாழ்வில் வாராத மனிதர் இருக்க முடியாது.காதல் எனப்படுவது யாதெனின்....ஹல்லோ.யாரும் ஓடிடாதீங்க.என்னோட கதை எல்லாம் போட்டு நான் உங்களைத் துன்பப்படுத்த விரும்பலை.
அது சரி,காதல்னா என்ன???
தான் அன்பு செலுத்தற சக மனிதனை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல்.எதனையும் எதிர்பாராமல் பேரன்பு செலுத்துதல்.எங்கேயோ படிச்சது இப்போ ஞாபகத்துக்கு வருது.காதலிக்கும் போது நாம நம்மளோட வீட்டின் முகப்பை மட்டுமே நமது சகாவிற்குக் காட்டுவோம்.நம்ம வீட்டிலும் கழிப்பறை இருக்குங்கறத திருமணத்திற்குப் பிறகே அவங்க அறிய அனுமதிப்போம்.
என்னோட கல்லூரிக்காலங்களில் ஆயிரம் காதல் கதைகள் பார்த்திருப்பேன்.அதில மறக்கமுடியாத ஒரு கதை தான் இப்போ நான் உங்க கூட பகிர்ந்துக்கப் போறது.எந்த ஒரு உறவும் சிறந்து விளங்க அடிப்படைப் பொருளாய் அமைவது ஒருவர் மற்றவரிடத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கையே. இந்த சித்தாந்தத்தின் மேல நான் வச்சிட்டு இருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கைக்கு காரணமான நிகழ்வு தான் இது.
என்னோட கிளாசில ஒரு பையன்.அவன் பேரு ஈஸ்வர்னு வச்சிக்குவோம்.ஒரு பொண்ணு.அந்தம்மா பேரு பிரேமான்னு வச்சிக்குவோம்.ரெண்டு பேரும் முத வருஷம் தொட்டே ரொம்ப ஆழமா லவ்வீட்டு இருந்தாங்க.DDLJஐ பார்த்த நம்ம ஹீரோ சார் அதில வர்ர மாதிரி ஹீரோயினி வீட்டுல அவிங்க அப்பா,அம்மா,தங்கச்சி,கஸினுக,ஒண்ணு விட்ட சித்தப்பா,ரெண்டு விட்ட அத்தை இப்படி எல்லார்த்தையும் சினேகம் பண்ணிட்டாரு.இதில அடிக்கடி ,"ப்ரேம்ஸ் வீட்டுக்கு நான் மருமகனாப் போகப் போறது கிடையாது.பையன் இல்லாத வீட்டுக்கு ஒரு பையனாத்தான் போகப் போறேன்" அப்படின்னு டயலாக் வேற விடுவாரு.
ஹீரோயினி வீட்டிலயும் இவிங்க மேல ஒரு நல்ல மதிப்பு வளர்ந்திட்டு வந்தது.
இப்படியா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா அவிங்க காதல் சோதி வளர்ந்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சது.எங்க கல்லூரியில யாரைக் கேட்டாலும் இந்த ரெண்டு பேரும் தான் தங்களோட ஆதர்ஷ காதல் சோடிகள்னு சொல்லுவாங்க.ஹூம் அதெல்லாம் ஒரு காலம்.
எஞ்சினீயரிங் முடிச்சு எல்லாம் திசைக்கு ஒரு பக்கமாப் பிரிஞ்சு போய்ட்டோம்.நாங்க முடிச்ச வருஷத்தில தான் அமெரிக்க ரெஸிஷன்,டாட் காம் பர்ஸ்ட்,கிரகம் புடிச்ச செப்டம்பர் 11 அப்படின்னு தொடர்ச்சியான துன்பியல் நிகழ்வுகள்.எந்த சாஃப்ட்வேருக் கம்பெனியும் ஃப்ரஷர்களை எடுக்கலை.நாங்க ஒரு 10 பேர் கேம்பஸில் தேர்வாகியிருந்ததால் உடனே வேலைக்குச் சேர்ந்துட்டோம்.நம்ம ஹீரோ வேலை தேடி ரொம்பக் களைச்சிப் போயிருந்தார்.ஹீரோயினி ஒரு நிகர் நிலை பல்கலைக்கழகத்தில முதுகலைப் படிப்புக்கு சேர்ந்துட்டாங்க.ஹீரோவை ரொம்பவும் மோட்டிவேட் செஞ்சாங்க.
பாவம் ஹீரோ சார்.விதி விளையாட அவர் என்ன பண்ணுவார்.வீட்ல திடீர்னு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள்,தனக்கு இன்னும் வேலை கிடைக்காத சூழ்நில.தன்னோட வயதொத்த சினேகிதிமார் எல்லாம் கல்யாணம் கட்டீட்டு அமெரிக்கா,ஐரோப்பான்னு பறக்கரதப் பார்த்து முதுகலை படிக்கப் போன நம்ம ஹீரோயினி இன்னமும் ஹீரோவையே நம்பியிருந்தா வேலைக்கு ஆகாதுன்னு முடிவு செஞ்சிட்டாங்க.இப்படி ஒரு வருஷமும் முடிஞ்சு போச்.இப்பொ எப்படியோ ஹீரோ ஒரு அரசாங்கக் கம்பெனியில வேலைக்கு சேர்ந்திட்டார்.ஆனா நம்ம ஹீரோயினிக்கோ சாபுட்வேரு மாப்பிள்ளைங்க மேல தான் இப்ப நாட்டம்.அப்புறம் என்ன நடந்ததுன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.
ஹீரோயினி வீட்டுல அவிங்க காதலப் பத்தி சொல்லியிருந்தா கண்டிப்பா அவிங்க ஒத்துட்டி இருந்திருப்பாங்க.ஆனா வெளி நாடு பறக்கும் ஆசையானது கண்ணை மறச்சிட்டதனால ஹீரோயினி டபுள் கேம் ஆடிட்டாங்க.வீட்டுல தங்களோட காதலுக்கு அங்கீகாரம் கிடைக்காதுன்னு ஹீரோ கிட்ட பொய் சொல்லிட்டு,வீட்டுல இவிங்க காதலைப் பத்தித் தெரியாத பேரன்ட்ஸ் பார்த்து வச்ச ஒரு அமெரிக்க மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லிட்டாங்க.வெவரம் தெரியாத ஹீரோ கொஞ்ச நாளைக்குத் தேவதாசு மாதிரி சுத்தினாரு.கலியாணத்துக்கு எல்லோருக்கும் அழைப்பு வந்தது.
ஹீரோ வீட்டுல இருந்திட்டு "எங்கிருந்தாலும் வாழ்க"ன்னு ஆசிர்வாதிச்சிட்டாரு.அதுக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு நம்ம ஹீரோயினி அம்மா ஆகிட்டாங்க.ஆனா அவிங்க பையனுக்கு நியூமராலஜி எல்லாம் பார்த்து மிலிந்த் கார்த்திகேயன்னு தான் பேர் வச்சாங்க.இத்தக் கேள்விப்பட்ட நம்ம ஹீரோ இனியும் ப்ரேம்ஸை நினச்சு வாழ்க்கயத் தொலைக்கறதுல அர்த்தம் இல்லைன்னு முடிவு செஞ்சிட்டாராம்.என்னை அவரோட கலியாணத்துக் கூப்பிட வந்தப்போ தான் இத்தனை கதயும் சொன்னாரு.ஹீரோயினி டபுள் கேம் ஆடின மேட்டர் ஹீரோயினோட ஜிகர் தோஸ்த்து ஹீரோ மேல பரிதாப்பட்டு ரகசியமா சொன்னதாகவும் சொன்னாரு.
ஆகவே மக்கா,திரும்பவும் சொல்றேன்.காதல்னா என்ன???
தான் அன்பு செலுத்தற சக மனிதனை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல்.எதனையும் எதிர்பாராமல் பேரன்பு செலுத்துதல்.அது மட்டுமல்ல,எந்த ஒரு உறவும் சிறந்து விளங்க அடிப்படைப் பொருளாய் அமைவது ஒருவர் மற்றவரிடத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கையே (Trust is the basic entity between any relationship).
காதல் என்பது விட்டுக்கொடுத்தல்.
சில சமயம் காதலையே...
05 July 2005
சில சமயம் காதலையே....
Subscribe to:
Post Comments (Atom)
13 Comments:
//காதல்னா என்ன???//
ஆகா இந்த திரைப்படங்கள்ள விஜய்ல ஆரம்பிச்சி சுள்ளான்,சிம்பு வரை காதல்னா என்னனு அறுத்ததே தாங்கலை நீங்க வேற அறுக்க ஆரம்பிச்சிட்டிங்களானு நினைத்தேன்....
ஆனால் கதை மனசை தொட்டுடிச்சிங்க...
அந்த பொன்னு மேல ஒரு தப்புமில்லை...
காதலுக்குதான் தலைவா கண்ணு மூக்கு வாயிலாம் இல்லை, கல்யாணத்துக்கு அப்படியெதுவுமில்லையில்ல...
*****************
காதல் என்பது விட்டுக்கொடுத்தல்.
சில சமயம் காதலையே
*******************
kaathalukkaaga
pal thiyaagankaL seythEn
avaLaiyum thaan - yaaRo
enRum anbagalaa
Haiku - Ganesh :-)
*****************
காதல் என்பது விட்டுக்கொடுத்தல்.
சில சமயம் காதலையே
*******************
காதலுக்காக
பல தியாகங்கள் செய்தேன்
அவளையும் தான் ! - யாரோ
என்றும் அன்பகலா
ஹைக்கூ கணேஷ்
Sudharsan, Good blog. In 80's or 90's you might have read lot of failures and suicides. Now thats all come to nil, ippo lovers kooda sincere-a irukkara maathiri theriyala. Ellame take-it-easy thaan. So guys, chose it correctly.
......Balakumaran?
குழலி:
"காதலுக்குதான் தலைவா கண்ணு மூக்கு வாயிலாம் இல்லை, கல்யாணத்துக்கு அப்படியெதுவுமில்லையில்ல... "
அப்பட்டமான உண்மை.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஹைக்கூ கணேஷ்:
"காதலுக்காக
பல தியாகங்கள் செய்தேன்
அவளையும் தான் ! - யாரோ"
நல்ல முயற்சி.
வடி:
"In 80's or 90's you might have read lot of failures and suicides. Now thats all come to nil, ippo lovers kooda sincere-a irukkara maathiri theriyala. Ellame take-it-easy thaan"
இப்போ மக்கள் எல்லாம் ரொம்ப பிராக்டிக்கலா மாறிட்டு வராங்க.பின்னூட்டத்திற்கு நன்றி.
அனானிமஸ்:
ஆம்.கீழ்க்கண்ட வரிகளுக்குச் சொந்தக்காரர் பாலகுமாரனே...
"காதல் என்பது விட்டுக்கொடுத்தல்.
சில சமயம் காதலையே"
""காதல் என்பது விட்டுக்கொடுத்தல்.
சில சமயம் காதலையே"
வாவ்...என் குரு பாலகுமாரனின் வைர வரிகள் சிலிர்க்க வைத்தன...சில சொந்த அனுபவங்களும் நினைக்கவைத்தன....அருமை தோழர்....:)
ஸ்ரீஷிவ்...
//--காதல் என்பது விட்டுக்கொடுத்தல்.
சில சமயம் காதலையே... --//
பள்ளி வயசில எல்லாரும் இப்படித்தான் காதல் ஒரு பசனா இருக்கும் அப்ப. வாழ்க்கை என்ன என்று புரியவெளிக்கிட்ட பின்னர் தான் அறிஞ்சுக்குவினம். அதுக்காக இந்தம்மா செய்தது சரி என்று சொல்ல வரல பாவம் ஹீரோ அவரும் திருமணம் செய்திட்டார் அதுவரை தப்பிச்சு. இந்த காதல் தோல்வியா? அங்க சரியா காதல் வளர்ந்திருக்கா? அன்பு மரிமாறப்பட்டிருக்கா? :(
வினோத்,
என்னை விளித்ததுடன் அமைதியாகி விட்டீர்கள்.தங்கள் கருத்துகளைத் தயக்கமின்றிப் பதிவு செய்யவும்.
ஷ்ரீஷிவ்,
பாலகுமாரனின் காதல் பற்றிய எல்லாப் புத்தகங்களும் படித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.மெர்க்குரிப் பூக்கள் முதல்,அகல்யா,பயணிகள் கவனிக்கவும்,ஆசை என்னும் வேதம், இனிது இனிது காதல் இனிது,இது தான் வயசு காதலிக்க என்று சங்கிலித் தொடர் போலே நீளும் புத்தக வரிசை...
நன்றி மீண்டும் வருக
கயல்விழி,
"இந்த காதல் தோல்வியா? அங்க சரியா காதல் வளர்ந்திருக்கா? அன்பு பரிமாறப்பட்டிருக்கா? :( "
நிறையக் கேள்விகள் எழுப்பியிருக்கிரீர்கள்.
இந்தக் காதல் சரியா,தவறா என்று ஒரு முடிவுக்கு என்னால் முடிவுக்கு வர இயலாது.திருமணத்தில் முடிந்த காதல்கள் தான் வெற்றி பெற்றன என்று கூற முடியுமா என்ன??
திருமணத்திற்குப் பிறகு இருவரும் மகிழ்வுடனே இருப்பதாகத்தான் எனக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி மீண்டும் அடிக்கடி வருக...
இதுபோல ஒரு கதை எங்க கல்லூரியிலயும் நடந்தது சுதர்சன்…ம்ம்ம் வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போங்க
எனக்காக விட்டுக் கொடு
என்னை விட்டுக்கொடுத்திடாதே
- ரசிகவ் ஞானியார்
//காதலிக்கும் போது நாம நம்மளோட வீட்டின் முகப்பை மட்டுமே நமது சகாவிற்குக் காட்டுவோம்.நம்ம வீட்டிலும் கழிப்பறை இருக்குங்கறத திருமணத்திற்குப் பிறகே அவங்க அறிய அனுமதிப்போம்.//
காதலிக்கிறவங்க நம்ம வீட்டுக்கு ஒரு நாள் வர்ரப்போ அவசரம்ன்னா எங்கே போவாங்க. வந்த முதல் நாளே வீட்டுல அதது எங்கெங்கே இருக்குன்னு அறிய வச்சிட வேண்டியது தானே!
ரசிகவ் ஞானியார்-
//வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போங்க//
அது சரி...உங்க வீட்டிலயும் இந்தக் கத நடந்துச்சோ..
:-)
KVR-
நன்றி..
Post a Comment