14 July 2005

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

"அம்மா.ரொம்ப நாளா இந்த பட்டுப் புடவையை ட்ரை வாஷ் பண்ணணும்னு சொல்லீட்டு இருந்தீங்களே..." என்று பெண்பிள்ளை ஆரம்பித்தால் அடுத்து வரப்போவதைத் தாராளமாக ஊகிக்கலாம் - "அந்தப் பட்டுப்புடவையும் திருமண பஃபே விருந்தில் கலந்து கொண்டு பசியாற்றியது" என்று.

அதே போல இவற்றைக் கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.

1.கல்யாணத்திற்குக் கெளம்பரப்ப தான் ஞயாபகம் வந்திச்சி இன்னைக்கு ஞயாயித்துக் கிழமைன்னு.இந்த ஊர்ல எவன் ஞயாயித்துக் கிழமையன்னிக்கு கடைய சீக்கிரமே தொறக்கப்போரான்... ஹி.ஹி..

2.நம்ம சூலூர் பிரேஞ்சில உங்களப் போல ஒரு அனுபவஸ்தர் இல்லாமத் தான் குட்டிச்சுவர் ஆகிப்போச்சு.

3.ஸ்போர்ட்சிலயெல்லாம் உங்க பையன் தான் ஸ்கூல்லயே முதல்..

4.அடடா..நீங்க சொல்ரது சரிதான் சார்.ரொம்பத்தான் ஒழுகுது.ரிப்பேர் செஞ்சிட வேண்டியது தான்.

5.ஏம்பா.உங்க பேனா உடையவே உடையாதுன்னு சொல்லீட்டு இருந்தீங்களே...

6.இஸ்திரிக்கு போட்டிருந்த அந்த புளூக் கலரு கட்டம் போட்ட சட்டை புதுசுங்களா???

7.ஆமாம்.காவிக்கலர்ல இந்தச் சேர்ல தான் இருந்தது.நீங்க தான் அந்த கர்ச்சீப்பைப் போட்டு வச்சிருந்தீங்களோ??

8.என்ன சார்.நீங்க ஏறும் போதே தெளிவா சொல்லியிருக்காலம்ல இன்னர் ரிங் ரோடு தான் போகணும்னு.

9.உப்பெல்லாம் புக்ல சொல்லியிருக்கிற அளவு தான் போட்டேன்.ஆனாக்கூட....

எங்க மேலே சொன்ன மேட்டர்கள்ள மெய்ப்பொருள் என்ன என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்...

13 Comments:

சினேகிதி said...

\\கல்யாணத்திற்குக் கெளம்பரப்ப தான் ஞயாபகம் வந்திச்சி இன்னைக்கு ஞயாயித்துக் கிழமைன்னு.இந்த ஊர்ல எவன் ஞயாயித்துக் கிழமையன்னிக்கு கடைய சீக்கிரமே தொறக்கப்போரான்... ஹி.ஹி..\\

hairpin vanganum athuva?

Anonymous said...

2. unnai ange transfer pannaporen da madaya

Anonymous said...

3. ana nalu subjectla fail. maga matti

4. nee tharum vadagaikku athe jasthi.

Sud Gopal said...

சினேகிதி.

நீங்க சொன்னத விட இந்த சூழ்நிலைக்கு இது எப்படி இருக்குன்னு பாருங்க.

\கல்யாணத்திற்குக் கெளம்பரப்ப தான் ஞயாபகம் வந்திச்சி இன்னைக்கு ஞயாயித்துக் கிழமைன்னு.இந்த ஊர்ல எவன் ஞயாயித்துக் கிழமையன்னிக்கு கடைய சீக்கிரமே தொறக்கப்போரான்... ஹி.ஹி..\\
பரிசு வாங்காமப் போகும் போது நமக்குத் தெரிஞ்ச யாராவது பரிசுப் பொருளோட அதே கல்யாணத்துக்கு வரும் போது இந்த டயலாக் அடிப்போம் பாருங்க.

முயற்சிக்கு நன்றி.

மீண்டும் அடிக்கடி இந்தப் பக்கம் வருக.

Anonymous said...

5. parunga naan udaichutten

Anonymous said...

6. shirt iron podumpothu eriju pochu...

Anonymous said...

))))

சினேகிதி said...

Sudharsan ippidi ethinai kalyana vituku parisu vangama poninga?

லதா said...

8 சூடேற்றப்பட்ட மீட்டர் உள்ள ஆட்டோ
9 அண்மையில் திருமணம் செய்துகொண்ட ஒரு கணவன் / மனைவி :-))

Anonymous said...

8. auto vera engeyo poi vittathu. driver sothappivittar

Sud Gopal said...

அனானிமஸ் அய்யா:
கலக்கீட்டீங்க போங்க.
ஆறு(out of 9)கேள்விகளுக்குத் தான் பதில் சொன்னாலும்,நீங்க சொன்ன எல்லா விடைகளுமே சரியானவை.

உங்கள் முயற்சிக்கு நன்றி.மீண்டும் அடிக்கடி இந்தப் பக்கம் வருக.

சினேகிதி:
இப்படி பப்ளிக்கா கேட்டிங்கன்னா நான் 'ஙே'ன்னு தான் முழிக்க வேண்டியிருக்கும்.சும்மா தமாசுக்கு சொன்னேன்.இது வரை இந்த டயலாக் அடிக்க சூழ்னிலை வரவில்லை.

லதா மேடம்:
8வது கேள்விக்கு அனானிமஸ் அய்யா சொன்ன விடை தான் ரொம்பப் பொருத்தமானது.

யாருமே முயற்சி செய்யாத 9வது கேள்விக்கு மிகச்சரியான பதில் சொல்லிப்போட்டீங்க.

உங்க சொந்த அனுபவம் பேசுதுங்களான்னு நான் கேட்டா மட்டும் என்ன சொல்லீடவா போரீங்க??

மீண்டும் அடிக்கடி இந்தப் பக்கம் வருக.

Anonymous said...

Thanks.

7th kelvikku vidai enna?

Sud Gopal said...

"7.ஆமாம்.காவிக்கலர்ல இந்தச் சேர்ல தான் இருந்தது.நீங்க தான் அந்த கர்ச்சீப்பைப் போட்டு வச்சிருந்தீங்களோ??"

பேருந்துகள்ல இருக்கைகளை முன் பதிவு செய்யரதுக்கு மக்கள் உபயோகிக்காத பொருட்களே இல்லைன்னு சொல்லலாம்.அப்படி ஒருத்தர் கர்ச்சீப் போட்டுப் புட்ச்சு வச்ச இடத்தை இன்னொருத்தர் வந்து ஆக்கிரமிச்சுட்டு தான் மேற்படி டயலாக் அடிக்கறார்.

சீட்டுக்குப் பதிலா நான் சேர்னு சொல்லப்போயி நீங்க குழம்பியிருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.