"நல்லாத் தெரியுமா,அது அவ தான்னு" என்றவாரே தண்ணீரை விழுங்கினான் சர்த்தன்.எங்கள் அலுவலக மின்னஞ்சல் பயனர் உருவாக்க(Mail id creation) விதிமுறைப்படி அவனது ஸ்ரிநிவாசன் அர்த்தனாரி(Srinivasan arthanari) என்ற முழுப்பெயர் 8 எழுத்துகளுக்கு சுருக்கப்பட்டு சர்த்தன் ஆகினான்.
"ஆமாம் சர்த்தன்.அது அவளே தான்.அந்த லெமன் எல்லோ கலர் சூடிதார் அவ்ளோடோடது தான்.எனக்கு நல்லாவே தெரியும்"இது அடியேன்."தென் வாட்.நீ போய் பேசியிருக்கணும் சுட்.அல்மோஸ்ட் 4 வருஷம் ஆகப் போகுது.இன்னும் பழச நெனச்சுட்டு இருக்கறது வேஸ்ட்.என்னமோ போ"என்றவாரே எங்கள் மதிய உணவுக்குப் பின்னால் வழக்கமாகப் பயிலும் சிறு நடைக்குத் தயாரானோம்.
"ஏன் சுட்.அந்தப் பொண்ணு இப்பொ உன்னப் பார்த்தா ஞயாபகம் வச்சிருப்பாளா??தேர்ட் ஃப்ளோர் காஃபிடேரியால பார்த்தேன்னு தான சொன்னே.நாம இன்னைக்கு சாயங்காலம் ஸ்னேக்ஸ் சாப்பிட அங்கே போவோம்.கண்டிப்பா ஷீல் கம் தேர்.ஏன்னா கழுதை கெட்டா குட்டிச்சுவர் வந்து தானே ஆகணும்"என்று கலாய்த்துக் கொண்டு சென்ற சர்த்தனின் பேச்சுக்கு நான் செவி மடுத்தாலும்,நினைவெல்லாம் அந்த லெமன் எல்லோ தேவதை பற்றியே இருந்தது.உத்யோகப் பளுவினால் மேற்கொண்டு நடையைத் தொடர முடியாமல் இருக்கைகளுக்குத் திரும்பினோம்.
அது நிவேதா.மூன்றாண்டுகளுக்கு நாங்கள் ஒலம்பஸ் அருகில் வசித்த போது எங்கள் வீட்டுப் பக்கத்தில் குடியிருந்த சத்தியமூர்த்தி அங்கிளின் இரண்டாவது உயிர்.எங்கள் வீட்டுப் பக்கம் குடியிருந்ததும்,காலெஜில் எனது ஜூனியராய் இருந்ததும் எங்கள் நட்பு வளரக் காரணமாயிருந்தது.
நிவேதா தனது வகுப்புத் தோழனைக் காதலிப்பது தெரியாமல் அவள் மீது மனத்தை செலுத்தியது என் தப்புத் தான்.ஆனால் உண்மை தெரிந்ததுமாவது நான் அவள் மீதான என் நாட்டத்தினைத் திசை திருப்பியிருக்க வேண்டும்.என்னை நம்பகமானவன் என்று நம்பிச் சொன்ன இந்த விஷயத்தை அவர்கள் வீட்டில் போட்டுக் கொடுத்தது,நிவேதாவின் காதலை சத்தியமூர்த்தி அங்கிள் பிரித்தது,நாங்கள் சொந்த வீட்டுக்குக் குடி பெயர்ந்தது,நான் அந்த வருஷம் வேலை கிடைத்து மும்பாய் சென்றது...சே எவ்ளோ நடந்துடிச்சி இந்த மூணு வருஷத்தில...
இன்னமும் மறக்க முடியவில்லை.நான் தான் அந்த விஷயத்தை அவளது தந்தையிடம் போட்டுக் கொடுத்தேன் என்று தெரிந்ததும்,நிவி என்னைப் பார்த்த அந்தக் கடைசிப் பார்வை.அந்தக் குற்ற உணர்ச்சினால் நான் மனம் புழுங்காத நாட்களே இல்லை என்று சொல்லலாம்.
"சே இன்னைக்குப் பார்த்து நான் என்னோட 6610 கொண்டு வர்லை.மோகினி அடிக்கரதப் பத்தி கேள்விப்பட்டுருக்கேன்.இன்னைக்கு நேர்லயே பார்த்திட்டேன்.சுட்,நம்ம ரெட்டி சொல்ரான்.அவனுக்கு உன்னோட லெமன் எல்லோவைத் தெரியுமாம்"சர்த்தன் என்னை எழுப்பிய போது மணி 3.30.
"சே..சே..ஐ வாஸ் ஜஸ்ட் திங்கிங் அபௌட் த அப்ரய்சல்"என்றவாறு இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.
சர்த்தனுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியும்.ஒரு நம்பிக்கைத் துரோகத்தினால் என் மனம் படும் வேதனையும் தெரியும்."சுட்,பழச நினச்சுக் கவலப் பட்டுட்டு இருக்கிறதுல எந்த லாபமும் இல்லை.இந்த உலகத்திலே தப்பு செய்யாத மனுஷனே கிடையாது.உன்னோட பொசிஷன்லா யார் இருந்தாலும் அப்படித் தான் செஞ்சிருப்பாங்க.பழச மறந்திட்டு இன்னைக்கு மேடம் கிட்ட போய் மனசு விட்டு பேசு.நான் நினைக்கிறேன் அந்த ஆண்டவனே உன்னோட வேதனையைப் புரிஞ்சிட்டு தான் மேடத்தை இங்கே அனுப்பியிருக்கான்.கம்மான்.சியர் அப் மேன்."
"என்கு நிவேதாவைத் தெரியும்.ஷீ இஸ் ஸ்டயிங் வித் ஹர் பேரென்ட்ஸ் இன் 13த் மெயின்"இது அதே ஏரியாவில் தன் மாமனாரின் வீட்டை வைத்திருக்கும் ரெட்டி,என் மற்றுமொரு சகா.நாங்கள் கேஃப்டீரியாவினுள் நுழைந்த சிறிது நேரம் கழித்து வந்தது எலுமிச்சை மஞ்சள் நிற தேவதை.இரண்டு டீ மற்றும் ஒரு காபிக்குப் பிறகு என்னை சற்று தைரியப்படுத்திக் கொண்டு நான் அவள் அருகிலே சென்றேன்.சர்த்தனையும்,ரெட்டியையும் கழற்றி விட்டுத்தான்.
"ஹல்லோ நிவேதா,என்னைத் தெரியுதா???"
"ஹல்லோ சுட்.ஓ வாட் எ சர்ப்ரைஸ்.உங்கள மறக்க முடியுமா?? எப்படி இருக்கீங்க?? நேத்து ஈவினிங் தான் உங்க க்ளாஸ் வெண்ணிலா அக்காவைப் பார்த்தேன்.ஷீ டோல்ட் மீ தட் யூ ஆர் வொர்க்கிங் ஹியர்.நான் இன்னைக்குத் தான் இங்கே ஜாயின் செஞ்சேன்.வெட்டியா ரொம்ப நேரம் உக்கார முடியலை.சோ,மதியத்தில இருந்து இதோட மூணு வாட்டி கேஃப்டீரியா வந்தாச்சு.என்ன அமைதியா இருக்கீங்க??"
"ஒண்ணும் இல்லை நிவி.க்ளேட் டு மீட் யூ.ரொம்ப நாள் ஆச்சில்ல பார்த்து.வீட்டுல எல்லாம் நல்லா இருக்காங்களா? எனக்கும் வேலை ஒண்ணும் ஜாஸ்தியில்லை இன்னைக்கு."வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தோம்.
இருவருக்கும் இடையில் இருந்த பனித்திரையை உடைக்க முடிவு செய்து ஆரம்பித்தேன்,"என்னை மன்னிச்சிரு நிவி.நான் அன்னைக்கு உங்க அப்பா கிட்ட உங்க விஷயத்தை சொல்லாம இருந்திருக்கணும்.என்னை முழுசா நம்பி உன்னோட காதலைப் பத்தி நீ சொன்ன.ஆனா,உனக்கு நான் நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டேன்.இத்தனை நாளும் இந்த விஷயத்தை மனசில போட்டு புழுங்கிட்டு இருந்தேன்.ஐம் சோ சாரி."
இதனைக் கேட்டதும் சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தது தேவதை."அய்யோ சுட்,இன்னுமா அதை நினைச்சு ஃபீல் செஞ்சிட்டு இருக்கீங்க.எனக்கும் கொஞ்ச நாள் கஷ்டமா இருந்தது.அப்புறமா மத்த விஷயங்கள் ஆக்கிரமிச்சுட்டதால அந்த ஃபீலிங்க்ஸ் எல்லாம் போயிடுச்சு.
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா,நான் லவ்வீட்டு இருந்த அந்த பாலா அவங்க மாமா பொண்ண நாங்க ஃபைனல் இயர் படிக்கும் போதே கல்யாணம் செஞ்சிட்டான்.இந்தக் கல்யாணம் சின்ன வயசிலேயே அவங்க வீட்டுல பேசி வச்சதாம்.அவனுக்கு அந்த விஷயம் தெரிஞ்சும் என்னை லவ் செஞ்சிருக்கான்.கேட்டா எப்படியும் உங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க-ங்கற தைரியத்தில தான் என்ன லவ் செஞ்சேன்னு சொல்றான்.இவனப் போய் நான் நம்பியிருக்கேன் பாருங்க.
இதெல்லாம் தெரிஞ்ச பிறகு நான் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெளிஞ்சேன்.இதுக்கு அப்புறமா இதப் பத்தி உங்க கிட்ட மனசு விட்டு பேசணும்னு கூட நினைச்சேன்.பட்,நீங்களோ மும்பாய் போய்ட்டீங்க.நானும் ப்ரொஜெக்ட் அது இதுன்னு ரொம்ப பிசி ஆகிட்டேன்.
இந்தச் சுடிதார் ஞயாபகம் இருக்கா??இன்னைக்கு இங்கே வரும் போது எப்படியாவது மீட் செய்வேன்னு மனசில ஒரு குருவி சொல்லிச்சு.அதனால தான் பழசானாலும் பரவால்லைன்னு இதையே போட்டுட்டு வந்தேன்."
என்று தொடங்கிப் பல விஷயங்களைப் பேசிவிட்டும்,எங்களது முகவரி மற்றும் செல்போன் எண்களைப் பரிமாரிக் கொண்டும் இருக்கைக்குத் திரும்பும்போது மணி 5.30.எல்லாவற்றையும் கேட்டு விட்டு "அப்புறம் என்ன சுட்.நிவேதா உன் மேல வச்சிருந்த அன்பு,நம்பிக்கை எல்லாம் கூடியிருக்கு.ஏஸ் டிஸ்கஸ்டு இந்த வாரம் சனிக்கிழமை அவங்க வீட்டுக்கு போய்ட்டு வா.நான் அப்பவே சொன்னேன் இல்லையா?நத்திங் டூ வொர்ரி.காலேஜ் படிக்கும் போது தான் மிஸ் பண்ணிட்ட.இந்த முறையாவது உன் மனசில இருக்கறத சொல்லிடு..."என்றார் சர்த்தன்.
என்ன செய்யலாம்??
நீங்களும் சொல்லுங்களேன்...
18 July 2005
எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் ஒரு காதல்
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
இந்த மூணு வருஷத்துலே நிவேதா கிட்டே என்ன என்ன மாற்றங்கள், அன்னைக்கு பிடிச்ச விஷயங்கள் இன்னைக்கும் பிடிச்சிருக்கா இல்லே have you both grown, evolved and moved on அப்படின்னு கொஞ்ச நாட்கள் பேசிப் பார்த்துட்டு காதலை சொல்லலாம். இல்லே இப்போ நிவேதாக்கு வேறோரு காதலன் இருக்கான்னா மறுபடியும் போட்டுக் கொடுக்கலாம் :-)
over to anuratha ramanan
dinamalar varamalar
பெயர் முதற்க்கொண்டு, சில சூழ்நிலைகள்யும் சேர்த்து , அனைத்தும் ஒத்து போகின்றது :-)) என்ன ஒரு ஒற்றுமை.
எழுத்து சரியான சின்னனா இருக்கு. கொஞ்சம் பெரிசாக்கினீங்கள் என்றால் நல்லாயிருக்கும்.
ரம்யா மேடம்:
"அன்னைக்கு பிடிச்ச விஷயங்கள் இன்னைக்கும் பிடிச்சிருக்கா இல்லே have you both grown, evolved and moved on அப்படின்னு கொஞ்ச நாட்கள் பேசிப் பார்த்துட்டு காதலை சொல்லலாம்"
இந்த சம்பவம் உண்மைதான்.ஆனா இதில சொன்ன கேரக்டர்ஸ் மட்டும் உல்டா.(சுட் இடத்தில Mr.X மற்றும் சர்த்தன் இடத்தில சுட்).அதனால நீங்க சொன்ன இந்தப் பாயின்ட்ஸை அங்கே பாஸ் செஞ்சிடரேன்.நிஜமாவே யோசிக்க வச்ச வரிகள்.நன்றி...
"இல்லே இப்போ நிவேதாக்கு வேறோரு காதலன் இருக்கான்னா மறுபடியும் போட்டுக் கொடுக்கலாம்"
ஆனாலும் உங்களுக்கு நக்கல் ஜாஸ்தி :)
அனானிமஸ் நெ.1:
"over to anuratha ramanan
dinamalar varamalar"
அவிங்க ரொம்ப பிசியா இருப்பாங்கன்னு ஒரு பச்சி சொல்லிச்சி.அதனால தான் உங்க கிட்ட கேக்கலாம்னு நெனச்சேன்.வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
அனானிமஸ் நெ.2:
"பெயர் முதற்க்கொண்டு, சில சூழ்நிலைகள்யும் சேர்த்து , அனைத்தும் ஒத்து போகின்றது :-)) என்ன ஒரு ஒற்றுமை"
ஹி..ஹி...நீங்க நிவி அவிங்க அப்பா கிட்ட போட்டுக் கொடுத்ததச் சொல்ரீங்களா என்ன???
இந்த சம்பவம் உண்மைதான்.ஆனா இதில சொன்ன கேரக்டர்ஸ் மட்டும் உல்டா.(சுட் இடத்தில Mr.X மற்றும் சர்த்தன் இடத்தில சுட்).
வதனா மேடம்:
ரொம்ப நன்றி.உங்க ஆலோசனைப்படி எல்லாப் பதிவுகளிலும் எழுத்துறுவைப் பெரிசு பண்ணிட்டேன்.எல்லாத்தையும் திரும்பப் படிச்சு உங்க பின்னூட்டங்களைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அனானிமஸ் நெ.2:
இல்லைங்க, அந்த பொண்ணு பெயர், சுருக்கமா கூப்பிடுற பெயர், நானும் காதலிச்சது, போட்டுக்குடுதது (ஆனால் அப்பாகிட்ட இல்ல), என்ன , இன்னும் அந்த ஜோடி பிரிஞ்ச மாதிரி தெரியல, முன்ன விட முன்னேற்றம் தான் :-(
ரம்யா சொன்னதை நானும் வழி மொழிகிறேன்....இப்போ வேற யாரையாச்சும் லவ்வுறாங்களா பாருங்க, ஆனா பட்சி சொல்றது பார்த்தா பழய சுடிதார் எல்லாம் போட்டு வந்து இருக்கறதையும் பார்த்தா, ஒர்கவுட் ஆயிடும் போலத்தான் தோனுது....வாழ்த்துக்கள் சுதர்சன்...:)
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...
சுதர்ஸன், நீங்க சொல்ற கதையை(!!??!!) படிக்கிறப்போவே அந்த சர்த்தன் தான் நீங்கள் என்று தெரிந்துவிட்டது. சொந்தக்கதையை இவ்வளவு விளக்கமாக சொல்லும் அளவுக்கு நம்ம ஆளுங்க அவ்ளோ விவரம் இல்லாதவங்களா என்ன?
ரம்யா சொன்ன முதல் விஷயம் மனசுல வச்சிக்கோங்க. ரெண்டாவது விஷயம் கூட முயற்சிக்கலாம்ன்னு தோணுது ;-).
அனானிமஸ் நெ.2:
//முன்ன விட முன்னேற்றம் தான்:-(//
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா,உண்மைக் காதல் மாறிப் போகுமா???
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
ஸ்ரீஷிவ்:
//வாழ்த்துக்கள் சுதர்சன்...:)//
அய்யோ முன்னாடிக் கொடுத்த டிஸ்க்ளெய்மரை நீங்க படிக்கலையா???
இந்த சம்பவம் உண்மைதான்.ஆனா இதில சொன்ன கேரக்டர்ஸ் மட்டும் உல்டா.(சுட் இடத்தில Mr.X மற்றும் சர்த்தன் இடத்தில சுட்).
KVR:
//சொந்தக்கதையை இவ்வளவு விளக்கமாக சொல்லும் அளவுக்கு நம்ம ஆளுங்க அவ்ளோ விவரம் இல்லாதவங்களா என்ன?//
உங்க சொந்த அனுபவம் பேசுதுங்களான்னு கேட்டா மட்டும் என்ன உண்மையா சொல்லீடப் போரீங்க???
அனானிமஸ் நெ.2:
என்னை காதலிக்காம போனது கூட எனக்கு வருத்தமில்லீங்கன்னா.. போன்ல பேச ஆரம்பிச்ச ரெண்டு மாசத்துல.. உயிருக்கு உயிரா அம்மணி காதலிக்கிறாங்கலாம்.. ரெண்டு மாசத்துல.. என்ன தெரிஞ்சி இருக்கும்.... தப்பான முடிவு எடுக்குறாங்கன்ற எண்ணத்துல அவங்க கிட்ட பேசினா...முன்பு இருந்த நட்பை கேவலபடுத்தினாங்க.. ஹீம்.. பட்டு தான் திருந்தனும்னு இருக்கு.. போய்த்தொலையுது.... தோழி ஆச்சே.. பட்டுறக்கூடாதுனு நினைச்சேன்.. ஹீம்....
Post a Comment