15 July 2005

குழலினிது யாழினிது என்பர்...

"காபா,காபா" "பாகா,பாகா" என்று இருபது தடவை கத்தவும்.

ஷூ பாலீஷ் டின்னை சீப்பால் ஓங்கி ஓங்கித் தட்டவும்.(சுமார் 101 முறை).

கதவு மேல் ஏறுக.

அங்கிருந்து "ஊய்" என்ற சத்தத்துடன் கீழே குதிக்கவும்.(இது மாதிரி நாலு முறை செய்யவும்)

"மே.மே.மே","லொள்,லொள்" என்று மாறி மாறி இரண்டு நிமிடங்களுக்கு ஊளையிடவும்.

ஆறு குட்டிக்கரணங்கள் போடவும்.

நாக்கினை வளைத்து மூக்கு நுனியினைத் தொடவும்.

வீட்டில் சப்பாத்தி தயாரிக்கச் சொல்லி ஒரு சப்பாத்தியினை வலது கை ஆள் காட்டி விரலில் மாட்டிக் கொண்டு விஷ்ணு சக்கரம் போலே சுற்றவும்.

ஊதுவத்தியை ஏற்றி அதை வாய்க்குள் நெருப்புடன் வைத்துப் புகையை ஊதவும்.(சுமார் பத்து நிமிடங்களுக்கு,அல்லது நாக்கில் நாலு தடவை சுட்டுக்கொள்ளும் வரை)

ஷேவ் செய்து கொள்ளும் சோப்பை முகமெல்லாம் தடவிக் கொண்டு வீட்டுக்குள் குதிக்கவும்.

சைக்கிள் சக்கரத்தைப் பலம் கொண்ட மற்றும் சுற்றி அதில் ஒரு சன்ன மரக்கட்டையைக் கொடுக்கவும்.(மூன்று ஸ்போக் உடைகிறவரை இதனை செய்யவும்)

மனைவியின் தலையில் ஓங்கிக் குட்டவும்.

உங்கள் தலையில் 13 குட்டுகள் குட்டிக் கொள்ளவும்.

ஓட்டையிருக்கும் சாவி ஒன்றை எடுத்து மூச்சைப் பிடித்துக் கொண்டு அதில் தெரிந்த சினிமாப் பாட்டை விசில் அடிக்கவும்.

அரை டஜன் கொக்கொ கோலா வாங்கி வந்து அதனை ஓப்பனர் மூலம் உடைத்துக் காட்டவும்.

மாடு மாதிரி கத்திக் கொண்டு ஆனால் தவளை மாதிரி தத்தித் தத்தி வீட்டினுள் 30 ரவுண்ட் வரவும்.

கட்டட வேலை நடந்து கொண்டிருக்கும் பக்கத்து ஃப்ளாட்டில் போய் ஏணி இரவல் வாங்கி வந்து வீட்டின் நடுவே வைக்கவும்.ஒரு கயிற்றில் பெட் பாட்டிலைக் கட்டி ஏணியின் மேல் படியில் போட்டு,கீழேயிருந்து இழுக்கவும்.

இவ்வளவு செய்தும் உங்களிடம் விட்டு விட்டுச் செல்லப்பட்ட பக்கத்து வீட்டுக் குழந்தை தனது அழுகையை நிறுத்தவில்லையென்றால்,நீங்களும் சேர்ந்து அழுங்கள்.வேறு வழியே இல்லை....

தகவல் உபயம்:புதியதாய்த் திருமணமாகியிருக்கும் என் சோக்காளி

6 Comments:

U.P.Tharsan said...

ஓ..........நான் நினைத்தேன் பைத்தியம் எண்டு (அப்ப மொத்தத்தில் பைத்தியம்தான்.) :-))

neyvelivichu.blogspot.com said...

எதற்கு இவ்வளவு கஷ்டஙள் சுதர்சன்,

டி வி யில் கார்டூன் சானல் போடவும்.

அவ்வளோ தான்.. 99 % குழந்தைகள் பிரச்சினை முடிந்தது..

(எல்லம் அனுபவம் தான்)

அன்புடன்

விச்சு

Anonymous said...

எதற்கு இவ்வளவு கஷ்டஙள் சுதர்சன்,

டி வி யில் கார்டூன் சானல் போடவும்.

அவ்வளோ தான்.. 99 % குழந்தைகள் பிரச்சினை முடிந்தது..


அப்புறம் சுதர்சன் அதையேதான் பார்த்துக்கொண்டிருப்பார், வேலைக்குப் போகமாட்டார் :)

Anonymous said...

You have good humour sense SUDARSAN GOPAL. I like this blog posting very much.

REKHA RAGHAVAN

Sud Gopal said...

தர்சன்,
"(அப்ப மொத்தத்தில் பைத்தியம்தான்.)"
அய்யோ ஒண்ணும்மே விளங்கலை.கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லுங்களேன்.தூக்கத்தில் டைப் செய்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

விச்சு:
"டி வி யில் கார்டூன் சானல் போடவும்..."
நல்ல யோசனை.கண்டிப்பாய் அடுத்த முறை முயற்சி செய்து பார்க்கச் சொல்கிறேன்.

அனானிமஸ்:
"அப்புறம் சுதர்சன் அதையேதான் பார்த்துக்கொண்டிருப்பார், வேலைக்குப் போகமாட்டார்"
ஹா..ஹா.ஹா...அனுபவம் பேசுதோ என்று கேட்டால் என்ன உண்மையா சொல்லப் போகிறீர்கள்

REKHA RAGHAVAN:
பாராட்டுதலுக்கு நன்றி.உங்க ஆதரவு தொடரணும்னு கேட்டுக்கறேன்.

Unknown said...

இன்று தான் உங்கள் பதிவிற்கே வருகிறேன்.

ஒவ்வொரு பதிவிலும் ரசிக்க வைக்கிறீர்கள்.