01 July 2005

21 ஆயிரம் கோடிக்கு எவ்வளவு சைபர்???

மிகச் சரியாகச் சொல்லப் போனால் 21,068 கோடிக்கு எவ்வளவு சைபர் என்று தான் கேட்க வேண்டும்.

இந்தத் தொகை தான் ஆண்டொன்றுக்கு ஒரு சராசரி இந்தியன் பல்வேறு அரசு எந்திரங்கள் இயங்க லஞ்சமாகக் கொடுக்கும் பணம் என்று சொல்கிறது ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்னேஷனல் என்ற அமைப்பு நேற்று தில்லியில் வெளியிட்ட "இந்தியா கரப்ஷன் ஸ்டடி 2005" அறிக்கை.

இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட 62% பேர் ஊழல் என்பது ஒரு நிதர்சனமான உண்மை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.மூன்றில் ஒரு பங்கு மக்கள் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஊழல் அதிகரித்திருப்பதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு...

http://economictimes.indiatimes.com/articleshow/msid-1157054,curpg-2.cms

3 Comments:

Muthu said...

///இந்தத் தொகை தான் ஆண்டொன்றுக்கு ஒரு சராசரி இந்தியன் பல்வேறு அரசு எந்திரங்கள் இயங்க லஞ்சமாகக் கொடுக்கும் பணம் என்று சொல்கிறது ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்னேஷனல் என்ற அமைப்பு நேற்று தில்லியில் வெளியிட்ட "இந்தியா கரப்ஷன் ஸ்டடி 2005" அறிக்கை.///

சுதர்சன் கோபால்,
யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
ஒரு சந்தேகம். இந்தப் பணம் ஒரு சராசரி இந்தியன் கொடுக்கும் லஞ்சமா?, மொத்த இந்தியர்கள் சராசரியாய்க் கொடுக்கும் லஞ்சமா ?

Sud Gopal said...

எக்கனாமிக்ஸ் டைம்ஸ் தளத்தினின்று எடுக்கப்பட்ட தகவல் இது.
இந்தப் பணம் மொத்த இந்தியர்களின் contribution தான்.

பிழை திருத்தியமைக்கும் பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி.

என்னை சுதர்சன் என்று விளித்தாலே போதும்.

லதா said...

இனிமேலாவது இந்தியாவை ஒரு ஏழை நாடு என்று யாரும் சொல்லமாட்டார்கள் அல்லவா