04 July 2005

கோவன்புத்தூர் தொடங்கி கோயம்புத்தூர் வரை.

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா..."
இந்தப் பாட்டைச் சின்ன வயசில கேட்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு தான் வரும்.

எப்படா கால் பரிச்சை,அரைப் பரிச்சை லீவு வரும்,எப்படி ஊர் சுத்தத் தாத்தா ஊருக்குப் போலாம்னு நெனக்கிற ஆளு நானு.

லீவு முடிஞ்சாலும் எனக்கு ஊருக்குத் திரும்ப மனசே இருக்காதாம்,சினிமாவுக்குக் கூட்டிட்டு போறேன்,சர்க்கஸுக்குக் கூட்டிடுப் போறேன்னு பொய் சொல்லிதான் என்னை அங்கே இருந்து இங்கே கிளப்பிட்டு வருவோம்னு இப்போ கூட எங்க மாமா கூட ஓட்டிட்டு இருப்பார்.அங்கென்னு சொல்றது எங்க தாத்தா ஊரான பழனியை.இங்கென்னு சொன்னது நம்மட ஊரான கோயம்த்தூரை.

"சென்னை மேரீ ஜான்"-அப்படின்னு எழுதிய ஒரு பதிவுக்கு வந்த வரவேற்பப் பார்த்து சரி நம்பட ஊரப் பத்தியும் அதே பாணியில ஒரு பதிவைப் போட்டுடலம்ன்னு முடிவு செஞ்சிட்டு இத்த ஆரம்பிச்சிருக்கேன்.

அதனால மக்கா உங்களது கோவை தினங்களை நினைவு படுத்தும் விதத்துல இந்த ஒரு போட்டி.இப்போவே சொல்லிப் புட்டேன் ஆனா prize எதுவும் கிடையாது.

1.கீழ்க்கண்ட இடங்களது பெயர்களை விரிவு படுத்தவும்.
Ex:P.N.பாளையம் - பாப்ப நாயக்கன் பாளையம்
(i)R.S.புரம் -
(ii)N.G.G.O காலனி -
(iii)D.B.ரோடு -

2."செவன் இஸ் ஹெவன்" என்றெல்லாம் சரித்திரப் புகழ் வாய்ந்த 7-ஆம் நெம்பர் பேருந்து செல்லும் பாதையில் உள்ள வழித்தடங்களைக் கூறவும்.

3.ஹோப் காலேஜ் : கோவையிலிர்ந்து அவினாசி மார்க்கமாகச் செல்லும் ஒரு முக்கியமான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பு.இந்தப் பகுதியினைச் சுற்றிலும் ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.ஆனால் இந்தப் பகுதில் ஒரு காலேஜும் இந்தப் பெயருடன் இல்லை.
பிறகு எப்படி இந்தப் பகுதிக்கு "ஹோப் காலேஜ்" என்ற பெயர் வந்தது?

4.நான் குறிப்பிடும் இத்திரை அரங்கம் கோவையில் உள்ள திரை அரங்குகளில் மிகச்சிறந்த ஒலி நுட்பம் கொண்டுள்ளது.இந்தத் திரையரங்கில் தான் மணிரத்தினத்தின் திரைப்படங்களில் 90%,ராஜ்கமல் நிறுவன வெளியீடுகளில் 90% ரிலீஸ் செய்யப்பட்டது.(அஞ்சலி,தளபதி,குணா...).இதனுடைய கான்டம்ப்ரரி நிறுவனங்கள் மருத்துவ,ஹோட்டல் துறைகளில் ஈடுபட்டு வந்தாலும் இந்த நிறுவனம் திரைப்பட வெளியீட்டுத் துறையினில் மட்டும் ஈடு பட்டு வருகிறது.
இந்தத் திரையரங்கினைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

5.கோவையில் தொடங்கி மற்ற நகரங்களிலும் வெற்றிக் கொடி கட்டி இருக்கும் வியாபார நிறுவனங்கள் 4 கூறவும்.

6.கோவை மாநகர எல்லைகள் யாவை?

அப்புறம்,ஒரு முக்கிய விஷயம்.உங்களோட பங்களிப்பு,ஆதரவப் பொறுத்து மத்த நகரங்களுக்கும் இந்தக் கேள்வித்தொடரைத் தொடரலாம்னு இருக்கேன்.

நான் போயிருக்காத ரசிக்க வாய்ப்புக் கிடைத்திருக்காத ஊர்கள் ஏராளமா இருக்கு.அதனால உங்க ஊர் பத்தியும் இப்படி ஒரு கேள்வித்தொடர் நடத்த ஆர்வம் இருக்கிற மக்கா எனக்கு ஒரு மெயில் போடுங்க...

10 Comments:

Kannan said...

ஏழாம் நம்பர் தடங்கள் மட்டும்: கோவையின் முழுப்பரப்பையும் ஒருமுறை மனத்தில் சுற்ற:

காந்திபார்க், ரத்தின விநாயகர் கோயில், சவிதா ஹால், வடகோவை, பவர் ஹவுஸ், நூறடி ரோடு, ஜீபி தியேட்டர், காந்திபுரம், பார்க் கேட், டிஎஸ்பி ஆஃபிஸ், கே ஜி காம்ப்ளக்ஸ், கவர்மெண்ட் ஆர்ட்ஸ் (காலேஜ்) தாமஸ் பார்க், புலியகுளம், ராமனாதபுரம், ஏர் இந்தியா, சுங்கம், ஸ்ரீபதி, ரெயின்போ, ஜிஹெச், ராயல், டவுன் ஹால், பி 1, செட்டி வீதி, சலிவன் வீதி, காந்திபார்க்

:-)

Sud Gopal said...

கலக்கிட்டீங்க கண்ணன்.
அப்படியே மத்த கேள்விகளுக்கும் பதில் சொல்லிப்போடுங்க...

Anonymous said...

[1] i. Rathina Sabapathy Puram
iii. Diwan Bahadur road
[2] Already answered
[3] Hope College - Residential Hostel facility for students
[4] Baba complex / Archana
[5] Pricol, LG Pumps, Santha Tilting grinders, UMS (Boosters /Stabilizers)
[6] Aathupaalam, Velandipalayam, Peelamedu?

.:dYNo:.

Kannan said...

ஆர்தர் ஹோப் என்ற கவர்னர்(?) பெயரில் அந்தவிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரி (இப்போது இல்லை) என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

Pavals said...

டைனொ!!.. ம்ம்..கலக்கல்,,
நான் எழுதலாம்னு நினைச்சேன்.. சரி. நம்மளவிட யாராவது வெளியூர்ல இருக்கிறவங்க.. யோசிச்சு எழுதினா நல்லா இருக்கும்னு விட்டுட்டேன்.. நீங்க அடிச்சிட்டீங்க.

Anonymous said...

வது கேள்விக்கு விட்டுபோன சில விடைகள்
ROOTS, Shanthi Gears, CRI Pumps, Lakshmi Mills,Sharp

மஞ்சூர் ராசா said...

கவுண்டம்பாளையம் தாண்டித்தானே மேட்டுப்பாளையம், ஊட்டி போகமுடியும்.

Sud Gopal said...

பதில்,பின்னூட்டம் கொடுத்த எல்லார்த்துக்கும் நன்றி.நன்றி.நன்றி.

எனக்கு 6வது கேள்விக்கான பதில் துல்லியமாத் தெரியாது :)

டைனோ,
கலக்கீட்டீங்ணா.3-வது கேள்வியைத் தவிர மத்த எல்லாக் கேள்விக்கும் கரீட்டா பதில் குடுத்தீட்டீங்க.

கண்ணன்,அந்த 3-வது கேள்விக்கு நீங்க சொன்னத பதில் தான் சரியானது.

அனானிமஸ் அய்யா:
"கோவையில் தொடங்கி மற்ற நகரங்களிலும் வெற்றிக் கொடி கட்டி இருக்கும் வியாபார நிறுவனங்கள் 4 கூறவும்".
இதுக்கு சென்னை சில்க்ஸ்(இப்பொ சென்னை,திருச்சி),கிருஷ்ணா ஸ்வீட்ஸ்(இப்பொ சென்னை,பெங்களூர்) ரேஞ்சில பதில எதிர் பார்த்தேன்.

ராசா:
ரொம்ப டாங்ஸுங்ணா.

மஞ்சூர் ராசா:
நீங்க சொன்ன தகவல் சரியானதே.

மாயவரத்தான் said...

கோயமுத்தூர்னாலே எனக்கு இப்பவெல்லாம் வேற என்னவோ வந்து பயமுறுத்துது!!!

Sud Gopal said...

மூர்த்தி:
கோவை மாநகரம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.அது சரி இன்னும் 2 மாசம் கழிச்சு வருவேன்னு சொல்லியிருக்கீங்களே,ஏதாச்சியும் விசேசம் உண்டா???

மாயவரத்தான்:
"கோயமுத்தூர்னாலே எனக்கு இப்பவெல்லாம் வேற என்னவோ வந்து பயமுறுத்துது!!! "
நிசமாவேங்களா???அப்படி நீங்க பயப்படற மாதிரி எங்கூர்ல என்னங்ணா இருக்குது???