1) பாரதியாரது பாடல்கள் முதன் முதலில் திரையில் ஒலித்தது எந்தப் படத்தில்?
2) "பல்லாண்டு வாழ்க" என்ற படத்தில் இடம் பெறும் "ஒன்றே குலம் என்று பாடுவோம்" பாடலுக்கு முன்னால் சில திருக்குறள்கள் இடம் பெற்றிருக்கும்.அவை எவை?
3) பட்டுக்கோட்டையார் இறுதியாக எழுதிய பாடல் எது?
4) கீழ்க்கண்ட இசையமைப்பாளர்கள், பாரதியாரின் எந்தப் பாடல்களுக்கு திரைப்படங்களுக்காக இசையமைத்து உள்ளனர்?
மெல்லிசை மன்னர்
இளையராஜா
வித்யாசாகர்
ஏ.ஆர்.ரகுமான்.
5)"முதல்வன்" படத்தில் அர்ஜூனுக்கும்,ரகுவரனுக்குமிடையிலான தொலைக்காட்சி பேட்டி நல்ல வசனங்களைக் கொண்டிருக்கும்.அந்தப் பேட்டியின் இடையில் ரகுவரன் திருக்குறள் ஒன்றை உதாரணமாய்க் கூறுவார்.அது என்ன?
நான் அடிக்கடி முணுமுணுக்கும் சில பாடல்களின் வரிகள் கீழே உள்ளன.
என்ன பாடல் ??? என்ன படம் ???
1) கன்று குட்டி துள்ளும் போது காலில் என்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக் கென்ன கட்டுப்பாடு
2)சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா
3)உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது
4)சோள காட்டு மூலையிலே ...பப்பம்...பப்பரப்பப்பா...
ஒரு சோடி ஒண்ணு சேர்ந்திருச்சு
5)காற்று நம்மை அடிமை என்று விலக்கவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லயே
6)உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
7)பிள்ளைக்கூட்டங்களைப் பார்க்கையிலே,
பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே
நல்லவரெல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது
8)இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய், ஒதுக்கீடு கேட்கிறாய்
9)நடமாடும் மேகம் நவ நாகரீகம்
அலங்காரச் சின்னம் அலை போல மின்னும்
வரும் பண்டிகை நாட்கள், அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளித்தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
19 October 2006
தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி - 3
Subscribe to:
Post Comments (Atom)
17 Comments:
//7.பிள்ளைக்கூட்டங்களைப் பார்க்கையிலே,
பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே
நல்லவரெல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது
//
Anbe Vaa
//உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது
//
Roja
//பாரதியாரது பாடல்கள் முதன் முதலில் திரையில் ஒலித்தது எந்தப் படத்தில்?
//
Naam iruvar
paadal padam
3. puthu vellai mazhai - roja
4. kombulley poovai suthi - virumaandi
5. atho antha paravai - aayirathil oruvan
6.Ennadi meenatchi - ilamai oonjal aadugirathu
7.puthiya vaanam - anbey vaa
1. கப்பலோட்டிய தமிழன்
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
தெய்வத்தாலா காதெனினும் முயற்சி தன்மெய்
வருத்தக் கூலி தரும்.
4. தீர்த்தக் கரையினிலே - வறுமையின் நிறம் சிவப்பு
அக்னி குஞ்சொன்று - பாரதி
வித்யாசாகர் - தெரியலீங்க?
சுற்றும் சுடர்விழி தான் கண்ணம்மா - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
உங்கள் பாடல்கள்
1. காற்றுக்கென்ன வேலி, அவர்கள்
3. புது வெள்ளை மழை, ரோஜா
4. அண்ணே அண்ணே சிப்பாயண்ணே, கோழி கூவுது
5. அதோ அந்த பறவை போல, அடிமைப் பெண்
6. என்னடி மீனாட்சி, இளமை ஊஞ்சலாடுகிறது
7. சிரித்து வாழவேண்டும், உலகம் சுற்றும் வாலிபன்
உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள்.
என்னுடைய பதிவில் மால்குடி டேஸ் பிஜிஎம் போட்டுருக்கேன். நேரம் கெடைக்கும் போது வாங்க.
http://kaipullai.blogspot.com/2006/10/blog-post_19.html
ஏதோ என்னால் முடிந்த பங்களிப்பு இதோ
1. நாம் இருவர் (ஏ.வி.எம் தயாரிப்பு)
2. அன்பில்லார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு, தெய்வத்தால் ஆகாதெனும் முயற்சி தன் மெய்வருந்தக்கூலி தரும்
3. படம் கலையரசி பாடல் தெரியாது
4.தீர்த்தக்கரையிலினே- வறுமையின் நிறம் சிகப்பு - எம்.எஸ்.வி, உன்னை சரணடைந்தேன், நல்லதோர் - பாரதி -இளையராஜா
சுட்டும் விழி -கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் - ரகுமான்,
பாடல்
3. புதி வெள்ளை மழை
4. அண்ணே அண்ணே
5 அதோ அந்த
6. என்னடி மீனாட்சி
9. பெண்ணொன்று கண்டேன்
-கூகுளான் துணையிலாமல் முயற்சி செய்தது, மீண்டும் வருகின்றேன் சுயமுயற்சியில் கண்டு பிடித்தால்
01. nAm iruvar
02. anpilAr ellAm thakkuriyar..., theivaththAn AkAtheninum muyaRsi..
03. --
04. MSV - nallathoR vInai
Ilaiyaraja - niRpathuvE nadappathuVe and so many.
Vidyasagar ---
A.R.Rehman - suttum vizhi sudarthAn
05. iyaRRalum Ittalum kAththtalum kAththa vakuththalum vallathu arasu
06. 01. kARRukkenna vEli
02. malarnthum malarAtha
03. puthu vellai mazhai
04. --
05. athO antha paRavai pOla
06. vArththai thavaRivittAi kaNNammA
07. puthiya vAnam
08. nI ANdavanA thAi thanthaithAn
09. ponnonRu kaNdEn
மூணு கேள்விகளுக்குச் சரியா பதில் சொன்ன வினையூக்கி,மீதி கேள்விகளையும் முயற்சி செய்து பார்க்கலாமே???
தேவ்...
நாலாவது கேள்விக்கு பதில் இது இல்லையே??
கைப்ஸ்,கலக்கீட்டிங்க.ஆனா ஏழாவது கேள்விய மட்டும் சாய்ஸில விட்டுட்டீங்களே?
கூகிளான் துணையில்லாமல் பெரும்பாலான விடைகளைச் சரியாகக் கண்டுபிடுத்த கானா பிரபாவுக்கு ஒரு பெரிய "ஓ".
அனானி அண்ணாச்சி...
வாங்க..வாங்க..நீங்க ஒருத்தர் தான் ஏழாவது கேள்விக்கு விடை சரியாச் சொல்லியிருக்கீங்க.
அது சரி முயற்சியைக் கை விடாதவங்களுக்கு ஸ்கை தான் லிமிட்டுன்னு சும்மாவா சொன்னாங்க...
1. நாம் இருவர்
2. 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு'
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்னை
வருத்த கூலி தரும்'
3.
4. இளையராஜா - நிற்பதுவே நடப்பதுவே
மெல்லிசை மன்னர் - தீர்த்தக் கரையினிலே
பாடல்:
1. காற்றுக்கென்ன வேலி - அவர்கள்
2. மலர்ந்தும் மலராத - பாசமலர்
3. புது வெள்ளை மழை - ரோஜா
4. அண்ணே அண்ணே - கோழி கூவுது
5. அதோ அந்தப் பறவை - அடிமைப் பெண்
6. என்னடி மீனாட்சி - இளமை ஊஞ்சலாடுகிறது
7.
8.
9. பொன் ஒன்று கண்டேன் - படிக்காத மேதை
1. பூவே நீ ஆடவா - கல்கி
2. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - பாச மலர்
3 புது வெள்ளை மழை - ரோஜா.
4. அண்ணே அண்ணே சிப்பாயண்ணே - கோழி கூவுது
5. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் - அடிமைப் பெண்
6. என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு - சிம்லா எக்ஸ்பிரஸ்
7. புதிய வானம் புதிய பூமி - அன்பே வா
:-)))o
தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!
:-)))o
அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்
ஞாயிறு மதியம் சன் டிவி உபயம்:
பொருட்பால் - அமைச்சியல் - மன்னரைச்சேர்ந்தொழுதல்
691.அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க்
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல் அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பர்.
1. நாம் இருவர் (1947) - இதுதான் என்று நினைக்கிறேன்.
2. அன்பிலார் எல்லாம் தமக்குறியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்
3. தெரியலையே...
4. நல்லதோர் வீணை செய்தே, தீர்த்தக்கரையினிலே - வறுமையின் நிறம் சிகப்பு - மெல்லிசை மன்னர்
சிந்து நதியின் மிசை நிலவினிலே - மெல்லிசை மன்னர்
வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் - மெல்லிசை மன்னர் - கௌரி கல்யாணம்
இன்னொரு பாட்டு கூட மெல்லிசை மன்னர் இசையில் இருக்கு. பி.சுசீலா பாடியது....நினைவுக்கு வர மாட்டேங்குது.
சொல்ல வல்லாயோ கிளியோ சொல்ல நீ வல்லாயோ வல்ல வேல் முருகன் - இளையராஜா - வரலட்சுமி பாடியது - கவரிமான்
பாரதி - எல்லாரும் சொல்லீட்டாங்க
ஏ.ஆர்.ரகுமான் - சுட்டும் விழிச்சுடர்தான்
5. இயற்றலும் ஈட்டலும்னு நெனைக்கிறேன்
6. பாடல்கள்
1. காற்றுக்கென்ன வேலி - மெல்லிசை மன்னர், கவியரசர், எஸ்.ஜானகி
2. மலர்ந்தும் மலராத - டீ.எம்.எஸ், பி.சுசீலா, மெல்லிசை மன்னர், கவியரசர்
3. புது வெள்ளை மழை - உன்னி மேனன், சுஜாதா - ரோஜா
4. அண்ணே அண்ணே சிப்பாயண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப் போச்சுண்ணே
5. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
6. என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
7. புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது
9. பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
Post a Comment