11 October 2006

மால்குடியும் சில கேள்விகளும்

R K நாராயண் (அக்டோபர் 10, 1906 - மே 13, 2001)

இவரது முழுப்பெயர் ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயணசுவாமி.ஆரம்ப காலங்களில் R K நாராயணசுவாமி என்ற பெயரில் எழுதி வந்த இவர் கிரஹாம் கிரீனின் ஆலோசனைப்படி "Swami and Friends" என்ற படைப்பின் வெளியீட்டிலிருந்து தனது பெயரை "R K நாராயண்" என்று சுருக்கி வைத்துக் கொண்டார்.

பாடப்புத்தகம் போரடிக்கிறது என்ற காரணத்தால் கல்லூரியில் ஆங்கில நுழைவுத் தேர்வில் முதல் முறை எழுதும்போது கோட்டைவிட்டார்.ஆனால் ஒரு வருடம் கழித்து திரும்பவும் எழுதி மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டமும் பெற்றார்.

இவருடைய படைப்புகள் ஹீப்ரு மற்றும் அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.

1958ல் சாஹித்ய அகாதமி ,1964ல் பத்ம பூஷன்,1980ல் ராயல் சொசைட்டி ஆஃப் லிட்டரேச்சர் அமைப்பால் பென்சன் விருது, 2000ல் பத்ம விபூஷன் என்று இவருக்குக் கிடைத்த விருதுகள் ஏராளம்.


---------------------------------------------------------------------------------------------------


இதோ இவரைப் பற்றியும் படைப்புகள் பற்றியும் ஒரு சில கேள்விகள்.சரியான பதில் தருவோருக்கு "மால்குடி கொண்டான்" என்ற பட்டமும் அவரவரது கட்சி சார்புக்கு ஏற்றவாறு மஞ்சள்/பச்சை/கருப்புத் துண்டுகளோ வழங்கப்படும்.

1) "Swami and Friends" தொகுப்பில் வரும் சுவாமியின் நண்பர்கள் பெயர் என்ன?

2) R K நாராயணின் முதல் புத்தகம் வெளியாக உதவியவர் யார்?

3) தென் இந்தியாவின் எந்த கற்பனை நகரத்தினை அடிப்படையாகக் கொண்டு இவரது கதைகள் எழுதப்பட்டன?

4) எந்த ஆண்டு "The Vendor of Sweets" வெளியானது?

5) "The Guide" என்ற நாவலின் கதை நாயகன் யார்?

6) மால்குடியின் மூன்று முக்கிய லேண்ட்மார்க்குகளைக் குறிப்பிடவும்.

7) R K நாராயண் எந்த ஊரில் தனது "The Guide" நாவலை எழுதினார்?

8) முதன் முதலில் வெளியான R K நாராயணின் படைப்பு எது?

9) இவரது படைப்புகளுக்குப் பாந்தமான ஓவியங்களை வரைந்த இவரது சகோதரர் பெயர் என்ன?

10) இவர் எழுதிய இரண்டு பயணக் குறிப்புகளின் பெயரைக் கூறவும்.

15 Comments:

துளசி கோபால் said...

3. மால்குடி

9. R.K. லக்ஷ்மண்

மத்தது ஒண்ணூம் ஞாபகம் இல்லை. ஆனா எல்லாவற்றையும் படிச்சிருக்கேன் இங்கே நியூஸி வந்தபிறகு .

பொன்ஸ்~~Poorna said...

ஐயா... எப்படிய்யா இப்படி எல்லாம்!! .. உங்க காலைக் காட்டுங்க _/\_

Udhayakumar said...

2. Graham Greene
3. மால்குடி
4. 1967
5. ராஜூ
9. RK Lakshman

Unknown said...

இவரது சிறுகதைகளை ஆங்கில வகுப்புகளில் முன்பு பாடமாக கொடுப்பார்கள். ஆனால் இவரது எந்த நாவலையும் முழுக்க படித்ததில்லை.

Sud Gopal said...

உதய்,உங்களோட பதில்கள் எல்லாம் சரியே.

பொன்ஸ்~~Poorna said...

//இவரது சிறுகதைகளை ஆங்கில வகுப்புகளில் முன்பு பாடமாக கொடுப்பார்கள்//
செல்வன், இங்கயும் பாடபுத்தகம் மட்டும் தானா :)))))))))

Unknown said...

பொன்ஸ்

அங்கே ஒண்ணு, இங்க ஒண்ணுன்னு பேசுபவன் இல்லை நான்:))

பொன்ஸ்~~Poorna said...

1. ராஜம், மணி
2. Graham Grene (இப்போ தான் விக்கியில் பார்த்தேன். ஒரு பூர்ணாவும் உதவி இருக்காங்க இதுக்கு ;))
3. மால்குடி
4. 1960?
5. ராஜு
6. சரயூ நதி, லாலி எக்ஸ்டன்ஷன், மார்கெட்
7. கூகிளாண்டவருக்கே தெரியலை நைனா..
8. Swami and Friends
9. RK Laxman
10. My Dateless Diary, The Emerald Route

Sud Gopal said...

பொன்ஸ்.... எப்படி இப்படி எல்லாம் ???

விடைகள் சரியே.

மேலும் முயற்சி செய்ய விரும்புவோரின் சுவாரஸ்யத்தைக் கெடுக்கக் கூடாது என்பதற்காக உங்கள் பின்னூட்டம் கொஞ்ச நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.

G.Ragavan said...

சரயு நதிக்கரையும் அதோட பக்கத்துல இருக்குற மாந்தோப்பும் சுவாமியின் வீடும் பள்ளிக்கூடமும் ரயில்வே ஸ்டேஷனும் இன்னும் எத்தனையெத்தனையோ இருக்குதே.

ஆர்.கே.நாராயணின் கதைகளில் எளிமை இருக்கும். மெல்லிய நகைச்சுவையும் இருக்கும். அவருக்கு நோபல் பரிசு கிடைக்காதது வருத்தத்திற்குரியதே.

பொன்ஸ்~~Poorna said...

சரி, ஏழாவது கேள்விக்குப் பதிலும் சொல்லிடுங்க.. நாலாவது பதிலும் சரியா?

Sud Gopal said...

வாங்க டீச்சர்,

ரெண்டையும் கரீக்டா சொல்லீட்டீங்க.டீச்சருக்குக் தெரியாத மால்குடியா??

Sud Gopal said...

செல்வன்:

//அங்கே ஒண்ணு, இங்க ஒண்ணுன்னு பேசுபவன் இல்லை நான்:))//

ஓக்கே..ஒக்கே...போலாம்..போலாம்..ரைட்...

Sud Gopal said...

பொன்ஸ்:

கலக்கீட்டிங்க.போங்க.எழுவது மார்க் வாங்கி "மால்குடி கொண்டான்" அப்படீங்கற பட்டத்தையும் தட்டீட்டுப் போயிட்டீங்க.

விடுபட்ட சரியான பதில்கள்:
4)1967
7)கலிஃபோர்னியாவிலுள்ள பெர்க்லி
8)"Development of Maritime Laws of 17th-Century England" என்னும் புத்தகத்தின் மீதான விமரிசனம்

Sud Gopal said...

ஜீரா:

//ஆர்.கே.நாராயணின் கதைகளில் எளிமை இருக்கும். மெல்லிய நகைச்சுவையும் இருக்கும். அவருக்கு நோபல் பரிசு கிடைக்காதது வருத்தத்திற்குரியதே//

அதே...அதே...சபாபதே...