10 October 2006

பசந்தீ,உன்னோட பேரு என்ன?

இருக்கையுடன் கட்டிப்போடும் திரைக்கதை,அற்புதமான நடிப்பு,தேர்ந்த நடிகர் தேர்வு,கதைக்கு மிகவும் பொருத்தமான ஒளிப்பதிவு,பாந்தமான இசை என்று ஒரு படம் வெற்றி பெறத் தேவையான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய"ஷோலே"வில் இடம்பெற்ற மேற்படி வசனத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.


1975ல் வெளியாகி சக்கை போடு போட்ட படமான "ஷோலே",திரும்பவும் ராம்கோபால் வர்மாவால் எடுக்கப்பட்டு வருகிறது.பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்திற்கு,"ராம் கோபால் வர்மாவின் ஷோலே" என்று பெயரிடப்பட்டு உள்ளது.தனது .ஃபேக்டரியிலிருந்து புதிய பொருட்களைச் சீரான கால இடைவெளியில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் ராம் கோபால் வர்மா இந்தப் படத்தை இயக்குவது ஆட்லேப்ஸுக்காக.

ஹேமமாலினி ஏற்று நடித்த பசந்தீ கதாபாத்திரத்தைத் தவிர மற்ற முக்கிய பாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு முடிந்த நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் ஆரம்பித்துவிட்டது.கப்பார்சிங்காக அமிதாப் பச்சன்,வீருவாக அஜய் தேவ்கன்,ஜெய்யாக மோஹித்,தாக்கூராக மோகன்லால்,விதவை ராதாவாக சுஷ்மிதா சென் என்று ஒரு கலவையான நட்சத்திரக் கூட்டமே இதில் தெறமை காட்டுகிறது.இடைவேளைக்குப் பின்னால் வரும் "மெஹ்பூபா" பாடலை யாராலும் மறக்க முடியாது எனலாம்.அந்தப் பாடலுக்கு ஆடவிருப்பவர் யார் தெரியுமா? வர்மாவின் உள்ளம் கவர் கள்ளி ஊர்மிளா தான்.

போன வாரம் கப்பார்சிங்கின் புதிய தோற்றம் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் அமிதாப்பினால் வெளிவிடப்பட்டது.அதைத் தான் போன பதிவில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஹூம்.தமிழில் இப்படிப் பழைய படங்களைத் திரும்ப எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

சூர்யா-ஜோ நடிப்பில் மிஸ்ஸியம்மா,சீயான் - சதா நடிப்பில் பலே பாண்டியா என்று எனது படத் தேர்வுகள் நீளும் ஒரு மைலுக்கு.தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகளில் எந்தப் படங்களை,யார் நடிப்பில் பார்க்க உங்களுக்கு விருப்பம்??

காசா..பணமா..சும்மா அடிச்சி ஆடுங்கப்பா...

4 Comments:

Boston Bala said...

மலைக்கள்ளன் : விக்ரம், அசின்
தூக்கு தூக்கி : சூர்யா, கோபிகா
பட்டணத்தில் பூதம் : பிரசன்னா, மீரா ஜாஸ்மின்
பலே பாண்டியா : விஜய், நந்தா (பாலாஜி), பூமிகா, உமா (நந்தாவிற்கு ஜோடி)

G.Ragavan said...

கர்ணன் - சூர்யா, அசின்
திருவிளையாடல் - விக்ரம், நயந்தாரா
காதலிக்க நேரமில்லை - சூர்யா, ஆர்யா அசின், பாவனா
முதல்மரியாதை - கமல், கமலினி (முத்து தமிழினின்னு சொல்ற மாதிரி இருக்கு). வடிவுக்கரசிக்குப் பதிலா செல்வீன்னு ஒரு நாடகத்துல உருண்ட முகத்தோட ஒருத்தர் நடிக்கிறாரே. அவரப் போடலாம். இசை..கண்டிப்பா ஏ.ஆர்.ரகுமான். இயக்கம்...பாரதிராஜாவேதான்.

Sud Gopal said...

பாபா:

--- தூக்கு தூக்கி : சூர்யா, கோபிகா ---

ஒரிஜினல் வர்ஷன்ல யாரு ஆகிட் கொடுத்தாங்க?

---- பலே பாண்டியா : விஜய், நந்தா (பாலாஜி), பூமிகா, உமா (நந்தாவிற்கு ஜோடி) ---

இது நல்லா இருக்கே!!!

Sud Gopal said...

ஜீரா:

--- திருவிளையாடல் - விக்ரம், நயந்தாரா ---

"சக்தியில்லையேல் சிவமில்லை" அப்படீன்னு சொல்லீட்டு சாவித்ரி மாதிரி தாண்டவம் ஆடுவாங்களா நயந்தாரா??

---- வடிவுக்கரசிக்குப் பதிலா செல்வீன்னு ஒரு நாடகத்துல உருண்ட முகத்தோட ஒருத்தர் நடிக்கிறாரே---

சரிதாவைத் தானே சொல்றீங்க??