தமிழ்ப்பதிவுகள் என்ற ஊடகத்தில் முதன்முறையாக் கிசுகிசுக்களைச் சூடாக,சுவையாக தந்த போது சாம்புக்களும்,இரவுக்கழுகாரும் தோன்றியிருக்கவில்லை.இப்படியாகத் தானே உருவாக்கப்பட்ட ட்ரெண்ட்டினைத் தீபாவளி ஸ்பெஷலாய் மீண்டும் தருவதில் மெத்த மகிழ்ச்சியே...(ஹி...ஹி..தற்புகழ்ச்சி எல்லாம் எனக்குப் புடிக்காதுங்ணா)
இந்தச் செய்தியில் சம்பந்தப் பட்டவர்கள் யார்,யார் என்று கண்டு பிடிப்பது மக்களே உங்கள் சமத்து.ஆனால் ...இவர் தானே ...அவர் என்பது போன்ற உங்களுடைய கேள்விகளுக்கு, என்னுடைய பதில் "நோ காமென்ட்ஸ்" என்று தான் இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் :-)
1)அத்துவானக் காட்டில் தேன் தேடிய தனித்துவமான சிட்டு, இப்போது கடல் கடந்து சூரியன் மறையாத நாட்டில் இருக்கிறதாம்.யங் ஜிஞ்சரான டீச்சர் இல்லாத வகுப்பில் எலிகள் துள்ளிக்குதித்து விளையாடுகின்றனவாம்.
"எப்போ வருவாரோ...எங்கள் கலி தீர......???"
2) பெரிய டேமேஜரும்,பெரும்பாலான இனிப்புகளின் அடிப்படையுமான நம்ம ராஜீயின் படைப்புகள் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிவலம் வரவிருக்கின்றன.தெலுங்கில் வரவிருக்கும் இந்தத் தொடர் ப்ளேக் மாரியம்மனைப் பற்றி இருக்கலாம் என்று நெம்பத்தந்த வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
"....ரமணா...ரகுநாதா...பாற்கடல் வாசா...ஜானகி நேசா...."
3)சோள தோசை சாப்பிட்டேன்,அச்சாபீஸ் போனேனே தவிர வேற எங்கேயும் போகலை என்று தல மேல் அடித்துக் கூறும் கிங்கானவருக்கு மஞ்சத்தண்ணி தெளித்தாயிற்று.கர்நாடக ராஜ்யோத்சவத்தன்று இவரது விக்கெட் போல்டாகவிருக்கிறது. ஏணுங்ணா...அதுக்குப் பொறவாலை எழுதுவீங்ளா?
" ....க்கொடியிலே முத்துகள் கோர்த்தால் புன்னகை என்றே பேர் ஆகும்..."
4)தங்கமணியார் வீட்டுக்குப் போன பின் சங்கங்களில் பிளிறிக்கொண்டிருந்த "ஏக் காவ் மே..ஏக் கிஸான்" நடுவில் இண்டர்வெல் விட்டதற்கான காரணம்,ஊருக்குத் திரும்பியுள்ள ஜூனியருடன் அதிக நேரம் செலவிடத்தானாம்.சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இந்தச் சிங்கம் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஷயம் உங்களுக்குத் தெரியுமா??
5)நான் ஒரு பாவி..சாரி...ஆவி என்று கூட இருப்பவர்களை மிரட்டிக்கொண்டிருப்பது நாமக்கோளாறு பிசியின் கல்லூரிக்கால குறும்புகளில் ஒன்று.அமானுஷ்ய ஆவியாருக்கு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா?
"நானே வருவேன்..அங்கும் இங்கும்...."
உங்களது ஆதரவுடன் தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி தொடரும்.
17 October 2006
தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி - 1
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
//சாம்புக்களும்,இரவுக்கழுகாரும் தோன்றியிருக்கவில்லை//
சாம்புவே நீங்க தானோன்னு எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு சுதர்சன்..
ம்ம்..
இப்போ விடைகள்:
1. வாத்தியார் இளவஞ்சி.. நானும் சொல்லிக்கிறேன்..
"எப்போ வருவாரோ, எங்கள் கலி தீர!"
2. ஜி ரா, அவுனா?!! ம்ம்ம்.. கலக்குங்க!!!
3. ராசாவா? அதான் ஏற்கனவே தெரியுமே!
4. ஜீவா? உள்ளாட்சித் தேர்தல்ல போட்டி இட்டாரா? எந்தத் தொகுதியில்?
5. இது கூட லேட் நியூஸ்..எங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச சங்கதி தானே..
ஜஸ்ட் மிஸ்! :)
அதென்னையா கொங்கு மக்களுக்கான கிசு கிசுன்னு போட்டு இருக்கலாமல..
அடுத்த தடவை வீட்டுக்கு வரும்போது சரியான விதத்தில கவனிக்கப்படுமென எச்சரிக்கிறாராம், நீங்க சொன்ன கிஸான்
1 இளவஞ்சியார்.
2. வாழ்த்துக்கள் ஜிரா
3. அட நம்ம ஆல் இன் ஆல் அழகு கிங்
4. எங்காளு எந்தச் சின்னத்திலே நின்னார்.
5. ஆகா "மோகா ஜெகா"ஜாலக் கில்லாடி
மரமண்டை நான். கடைசி ஓமப்பொடி மட்டும் புரிந்தது. அந்த ஓமப்பொடியை எல்லாருமே குடுக்குறாங்களே. அதனால. :-)
4. ஒருவேளை தேவோ?
//அதென்னையா கொங்கு மக்களுக்கான கிசு கிசுன்னு போட்டு இருக்கலாமல..
அடுத்த தடவை வீட்டுக்கு வரும்போது சரியான விதத்தில கவனிக்கப்படுமென எச்சரிக்கிறாராம், நீங்க சொன்ன கிஸான்//
PONS NOTE THE POINT
//நாமக்கோளாறு பிசியின்//
தமிழ் படிச்சுப்பாருங்க. பிசி, சிரசாசனம் அதாங்க தலைகீழா பாருங்க தேவு.
நான் ஏதோ தீபாவளிக்கு ஓமப்பொடி புதுமாதிரியா செய்ய சொல்லித்தரபோறீங்கன்னு நினச்சா என்னப்பா இப்டி குமுதம் பாணில கிசுகிசு போட்டு...?:)
என்னவோ போங்க நான் உங்கள மாதிரி ஊருவிட்டு ஊருவந்திருக்கிற பாய்ஸுக்காக தீபாவளி ஸ்வீட்ஸ் காரவகைகள் ரெசிப்பீ கொஞ்சம் பதிவுல போடலாமான்னு பாக்றேன்..என்ன சொல்றீங்க?
ஷைலஜா
// 2) பெரிய டேமேஜரும்,பெரும்பாலான இனிப்புகளின் அடிப்படையுமான நம்ம ராஜீயின் படைப்புகள் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிவலம் வரவிருக்கின்றன.தெலுங்கில் வரவிருக்கும் இந்தத் தொடர் ப்ளேக் மாரியம்மனைப் பற்றி இருக்கலாம் என்று நெம்பத்தந்த வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
"....ரமணா...ரகுநாதா...பாற்கடல் வாசா...ஜானகி நேசா...." //
// பொன்ஸ் said...
2. ஜி ரா, அவுனா?!! ம்ம்ம்.. கலக்குங்க!!! //
// தேவ் | Dev said...
2. வாழ்த்துக்கள் ஜிரா //
அட முருகா! இதென்ன கூத்து...பொன்ஸ் தேவ் அவசரப்படாதீங்க. இதுல ஏதோ உள்குத்திருக்குன்னு நெனைக்கிறேன். மாரியம்மன் தமிழ்ப் பெயர். அத வெச்சுச் சுந்தரத் தெலுங்கினில் வசனம் நான் எழுதுனா மொத்த ஆந்திரம் ஆத்திரம் ஆகி என்னைத் தேடி வந்து அடிப்பாங்க.
லாஜிக்கலா நான் ரெண்டு கேள்வி கேக்குறேன்.
1. இனிப்புகளுக்கு அடிப்படை சர்க்கரையா, வெல்லமா, ஜிராவா? எல்லா இனிப்பும் இனிப்பல்ல ஜிரா கலந்த இனிப்பே இனிப்புன்னு சொல்ல முடியாதே. ஆக இதுல வெல்லமும் சேரலாம் இல்லியா?
2. என்.டி.ராமராவ் தான் கிருஷ்ணரா ராமரா நடிச்சிருக்காரு. அதான் ரமணா ரகுநாதா பாற்கடல் வாசா ஜானகி நேசான்னு பாட்டு வேற போட்டிருக்காரு. அப்ப அவரு ராவுன்னு தெரிஞ்சி போச்சு. அந்த வெல்ல ராவ் யாருன்னு நம்ம எல்லாரும் கண்டுபிடிக்கனும்.
//அதென்னையா கொங்கு மக்களுக்கான கிசு கிசுன்னு போட்டு இருக்கலாமல//
தேவ், இதுனால தான் கோயமுத்தூர் மாப்பிள்ளையைச் சந்தேகப்பட வேண்டியதாப் போய்டிச்சு :)
இளா நீங்க சொன்ன அதே ரிவர்சலை மோகா ஜெகாவுக்கு பண்ணிப் பாருங்க புரியுதா?
பொன்ஸ் அப்படி போகுதா கதை...
கிசான் அப்படின்னு சுதர் ஒரு க்ளூ கொடுத்து இருக்காரே.. கிசான் அப்படின்னா ஜாம் பாட்டில்ன்னு நினைச்சீங்களாக்கும்:)
ஆமா கிசான் எந்தச் சின்னத்துல்லப்பா நின்னார்?
ஜிரா... யப்பா சாமி.. இது ஓலக மகா துப்பறியும் கேஸாக்கிட்டீங்க... ஆனா எனக்கு இன்னும் ஓங்க மேலத் தான் டவுட்டு
Post a Comment