16 November 2006

என்னுடைய ஐடியை ஹேக் செஞ்சிட்டாங்க.

மாசம் ஒன்று என்ற கணக்கில் பதிவு போடும் என்னைப் போன்ற சோம்பேறிகளின் ப்ளாக்கர் ஐடியை ஹேக் செய்வதனால் யாருக்கு என்ன லாபம்?

ஒண்ணுமே புரியலை...ஏதாவது அயல்நாட்டு சதியான்னு தெரியலை?

ஆகவே மக்கா,உங்க பதிவுகளில் ஏதாவது ஏடாகூடமான பின்னூட்டம் என்னோட பெயரில இருந்தாத் தெரியப் படுத்துங்க.அதை இட்டது யார்னு கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்.

Inconvenience caused is highly regretted.

"இறைவா.எனது நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று.எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" - ஜக்குபாய்

11 Comments:

லக்கிலுக் said...

Hack செய்யமுடியும் எனத் தோன்றவில்லை. வேண்டுமானால் உங்கள் பாஸ்வேர்டை தெரிந்துகொண்ட நண்பர் யாராவது குறும்பு செய்திருக்கலாம்.

என்னுடைய வலைப்பூவில் வந்த உங்கள் பெயரிலான கமெண்டினை நன்றாக Check செய்தேன்... உங்கள் முகவரியில் இருந்தே வந்திருக்கிறது....

எனினும் நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதை நீக்கியிருக்கிறேன்....

ILA (a) இளா said...

//"இறைவா.எனது நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று.எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" - ஜக்குபாய் //

பார்க்கிறேன் ஓமப்பொடியாரே,எப்படி நீங்க எங்ககிட்ட இருந்து தப்பிக்கிறீங்கன்னு.
பதிவு போட நேரமில்லாம இப்படி ஒரு டகால்டி பதிவு வேணுமா?

லஸ்ஸியும் நீர்மோரும் கலந்து சாப்பிடறீங்களோ? ஜி.ரா வாரும்யா துணைக்கு, வசமா மாட்டிக்கிட்டாரு ஓமப்பொடி

கார்மேகராஜா said...

யாருங்க அது ஜக்குபாய்? எனக்கு தெரியலியே!
எந்த ஊருக்காரர்?

பொன்ஸ்~~Poorna said...

கிசுகிசுன்னு, சே, சுறுசுறுன்னு எழுதிகிட்டிருந்த உங்க ஐடியவேயா?

என்னாச்சு??

இதுக்கு அயல் நாட்டு சதி வேறயா! ரொம்ப தான் நெனப்பு!!

G.Ragavan said...

யோவ் என்னய்யா சொல்றீரு...அப்ப இன்னைக்கு எனக்கு நீர் போட்ட ரெண்டு பின்னூட்டமும் ஹேக்கரோட பின்னூட்டமா? அப்புறம் இந்தப் பதிவு எப்படி வந்துச்சு? இல்ல...இதுவும் ஹேக்கரோட பதிவா! ஓமாயணா! ஓமாயணா!

Udhayakumar said...

என்ன ஆச்சுங்க???

நாமக்கல் சிபி said...

சொக்கா! முதலில் இவரிடம் இருந்தே இவரைக் காப்பாற்றூஊஊஊஊஊஉ........

Anonymous said...

அனாமதேயப் பின்னூட்டங்கள் அளிக்கும் வசதியைக் கொண்டிருக்கும் வலைப்பதிவுகளில் யாரும் யாருடைய பெயரிலும் பின்னூட்டம் போடலாம் (அவர்களது Profile இணைப்புடனேகூட). இதை ஹேக் என்று சொல்ல முடியாது.
அப்படித்தான் உங்களுக்கு நடந்துள்ளதென்று நினைக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

லக்கிலுக், எலிக்குட்டி சோதனையில் சரியான பதிவர் எண் வந்தது, சரி, அதே சமயம் சுதர்சன் கோபால் பதிவில் உள்ள ப்ரொஃபைல் போட்டோ வந்ததோ?

என்ன லக்கிலுக், அன்று உங்களுக்கு வஜ்ரா தன் பதிவில் செய்து காட்டினாரே, உங்கள் ஐ.டி. என்ணை வரவழைத்து. அதை மறந்து விட்டீர்களா?

நான் பலமுறை கூறியது போல அனானி மற்றும் அதர் ஆப்ஷனை எடுத்தால்தான் நிலைமை கட்டுக்கு வரும். அப்படியே போட்டோ எல்லாம் காப்பி எடுத்து வலைப்பூ உருவாக்கினாலும் எலிக்குட்டி சோதனை காட்டிக் கொடுத்து விடும்.

டோண்டு ராகவனின் மூன்று சோதனைகளை சரியாகச் செய்தாலே, போலி பின்னூட்டங்களை அவாய்ட் செய்யலாம்.

மூன்றாவது சோதனை? அதை இங்கே கூறி பலரது ரத்த அழுத்தத்தை அதிகரிக்க விரும்பவில்லை.

முதல் இரண்டை செய்தாலே பிளாக்கர் பின்னூட்டங்கள் உருப்பட்டுவிடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

////நான் பலமுறை கூறியது போல அனானி மற்றும் அதர் ஆப்ஷனை எடுத்தால்தான் நிலைமை கட்டுக்கு வரும். அப்படியே போட்டோ எல்லாம் காப்பி எடுத்து வலைப்பூ உருவாக்கினாலும் எலிக்குட்டி சோதனை காட்டிக் கொடுத்து விடும்.///

டோண்டு, என்ன கொடுமை சரவணன் இது...இந்த மேட்டரை கட் அண்டு பேஸ்டு செய்து கையிலேயே வைச்சிருப்பீங்களா ?? :))))

உங்கள் ஐடி பாஸ்வேர்டு எனக்கு தெரிந்தால் எலிக்குட்டி புலிக்குட்டி சோதனை எல்லா சோதனையும் வெற்றி பெறும்...

நான் வேண்டுமானால் ஒரு நான்காவது மேட்டர் சொல்கிறேன்...ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பின்னூட்டமிட்டவருடைய தொலைபேசி எண்ணை அழைத்து கேட்கவேண்டும்...அப்போதுதான் உருப்படியாகும்...

ஓவர் டு சுதர்ஷன்...ராசா, உன் பாஸ்வேர்டு ஒரு பொண்ணு பேருதானே...அதான் யாரோ தட்டிட்டாங்க ஹி ஹி

பொன்ஸ்~~Poorna said...

/ராசா, உன் பாஸ்வேர்டு ஒரு பொண்ணு பேருதானே...அதான் யாரோ தட்டிட்டாங்க ஹி ஹி
//
செந்தழல் ரவி, ப்ரொபஷனல் ஹேக்கரா நீங்க? :)))