தமிழ்த்திரையுலகின் மறக்கமுடியாத தலை பத்து நபர்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த கலைவாணரது பிறந்த நாள் இன்று.இது பற்றி நினைவு கூர்ந்த தருமிக்கும்,பாலபாரதிக்கும் நன்றிகள்.
இவரது ஆரம்பகாலத்திரைப்படங்களைப் பற்றிய ஒரு கதம்பம் தான் இந்தப் பதிவு.
1935:- ராஜா சாண்டோவின் இயக்கத்தில் வெளியான "மேனகா" என்னும் திரைப்படம் தான் என்.எஸ்.கே நடிப்பில் வெளியான முதல் படம்.இதில் தீய குணம் கொண்ட சாமா ஐயர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
1936:- திரும்பவும் ராஜா சாண்டோவின் இயக்கத்தில் "சந்திரகாந்தா" என்ற திரைப்படத்தில் நடித்தார்.நயவஞ்சகச் செயலுக்குத் துணை போனதால் சிறிது லாபம் அடைந்து தனது பழைய நிலையை மறந்த நாவித முனியன் பாத்திரத்தில் கலக்கியிருந்தார்.
1936:- இந்த ஆண்டு வெளியான "சதி லீலாவதி" தான் இவர் நடிக்க ஒப்புக்கொண்ட முதல் படம் என்றாலும் "மேனகா" முந்திக்கொண்டது.எல்லீஸ்.ஆர்.டங்கனின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தான் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரனுக்கும் முதல் படம்.
1937:- முதன்முதலில் மதுரம் அவர்களுடன் சேர்ந்து நடித்த படமான "வசந்தசேனா" வெளியானது.ராஜா சாண்டோவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின்போது தான் என்.எஸ்.கே மதுரத்தைச் சந்தித்தார்.இருவரும் ராஜா சாண்டோவின் தலைமையில் தம்பதிகளாக சேர்ந்து வாழ முற்பட்டனர்.
1937:- எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் "அம்பிகாபதி".
1938:- ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் "தக்ஷயக்ஞம்".
1939:- ராஜா சாண்டோ இயக்கத்தில் "திருநீலகண்டர்",ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் "மாயா மச்சீந்திரா",ராவ் இயக்கத்தில் "ரம்பையின் காதல்",ரகுநாத் இயக்கத்தில் "ஜோதி (அ) ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகள்".
(தொடரும்)
29 November 2006
Remembering N.S.K - ஸ்பெஷல் "ஓ"மப்பொடி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
கலக்குங்க சார்... இது அவரது சினிமா வாழ்க்கை பற்றிய தொகுப்புதானா?
அவர் நடித்து நான் பார்த்தக் காட்சிகள் இதில் எந்தப் படத்தில் இடம்பெற்றது எனத் தெரியவில்லை... ஆனால் அந்தக் காலத்தில் மட்டுமல்ல இப்போதும் கூட நகைச்சுவையோடு சிந்திக்கவும் வைக்கும் காட்சிகள் அவை!!!
தொடருட்டும் இந்த தொடர் பதிவு :)
Post a Comment