1.நான் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசில் ஒரு அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறேன்.அனைவரும் மறந்த ஒரு விஷயம் நான் பாம்பே டையிங்-குக்கு மாடலிங் செய்தது தான்.நான் ஒரு பெண் என்பதையே சில நேரங்களில் மறந்து விடுகிறேன்.அமலா அக்கினேனியும் நானும் ஒரு விஷயத்தில் ஒரே நேர் கோட்டில் வருகிறோம்.நான் யார்?
2.ஏப்ரல் 1999 - அப்போது பிரபல மாடலாக இருந்த சரிதாவைக் கை பிடிக்க ட்ராக்சூட் அணிந்து கொண்டு, லான்ட்க்ரூஸரில் சர்ச்சிற்குச் சென்றது இன்னமும் நினைவில் இருக்கிறது.நான் நடத்தும் உணவகத்தின் பெயர் "கர்ரி லீவ்ஸ்".எனது பழைய பொழுதுபோக்கு கிரிக்கெட் விளையாடுவது தான்.இப்போது சொல்லுங்கள்,நான் யார்?
3.கர்னாடகாவைச் சார்ந்த நான் ஒரு சிறந்த பேங்கர் மற்றும் நிர்வாகி என்று இன்னமும் மக்கள் என்னை நினைவில் வைத்து இருக்கிறார்கள்.அது மட்டும் அல்ல,நான் மத்திய அரசில் ரயில்வே அமைச்சராகவும்,தொழில் துறை மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சராகவும் பணி புரிந்து இருக்கிறேன்.எனது நினைவாக ஒரு மேலாண்மைக் கல்விக்கூடம் பெயரிடப்பட்டுள்ளது.நான் யார்?
4.எனது தாத்தா "பர்மாவின் அரிசி அரசு"(The Rice king of Barma) என்று அழைக்கப்பட்டவர்.எனது தந்தையோ பாகிஸ்தானுக்கு வரும்படி அழைத்த ஜின்னாவின் வேண்டுகோளை நிராகரித்தவர்.நான் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மின்னியலில் பட்டம் பெற்றேன்.குடும்ப வியாபரத்தில் நுழைந்த நான் என் சிந்தனைகளைத் திறம்படச் செலுத்தி வெற்றி கண்டு வருகிறேன்.நான் யார்?
5.லண்டன் மிருகக் காட்சி சாலை இழுத்து மூடப்படுவதை நிறுத்த 1 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் கொடுத்த NRI நான்.இப்போது எனது மகளின் பெயரிடப்பட்டுள்ள அந்த ஜூவில் ஒவ்வொரு வருடமும் நான் பார்ட்டி தருவது வழக்கம்.மற்றவர்களால் வள்ளல் எனவும் அழைக்கப்படும் நான் யார்?
01 August 2005
நான் யார்? நான் யார்? நான் யார்?
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
2 - அரவிந்த டி சில்வா?
1, 3, 4, 5 - மற்றவர்களும் பதில் சொல்ல வேண்டுமல்லவா.. அதுக்குத்தான் பதில் சொல்லாம விட்டிருக்கிறேன்.. ;O)
1. மேனகா காந்தி
4. Azim Premzi
5. Lord Swraj Paul
3.george fernandez??
ஒரு விடை கூடத் தெரியாது என்றாலும் வினாக்கள் நன்றாக இருக்கிறது :> விடை எல்லாம் கரெக்ட்டா?
maneka gandhi - 1
T.A.Pai - 3
Premji - 4
Lord Swaraj Paul -5
??
முயற்சி செய்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்.
இதோ வினாவுக்கான விடைகள்:
1.மேனகா காந்தி
2.அரவிந்த டி சில்வா
3.T.Aபய்
4.அசிம் ப்ரேம்ஜி
5.லார்ட் சுவராஜ் பால்
Post a Comment