எனது முந்தைய பதிவுக்குக்(நான் யார்? )கிடைத்த அமோக ஆதரவினை முன்னிட்டு(எத்தனை பேரு வந்து பார்த்தாங்கன்னு மனசாட்சி கேக்கறது சத்தியமா என் காதில விழவே இல்லை),இதோ மற்றுமொரு வினாடி-வினா பதிவு.நீங்க கொடுக்கும் ஆதரவைப் பொறுத்து இந்தப் பகுதியை நான் தொடரலாம்னு நினைச்சிட்டு இருக்கேன்.
இதோ இன்றைய கேள்விகள்.
1.பிரபல இந்திப் பாடகர் கிஷோர்குமார் மாடலிங் செய்த ஒரெ பொருள் எது?
2.டில்பெர்ட் நகைச்சுவைத் துணுக்குகளில் கொடூரமாகச் சித்தரிக்கப்படும் மனித வள மேம்பாட்டு(HR) இயக்குனரின் பெயர் என்ன?
3.சுமார் 550 நாட்களுக்கு மேல் நீடித்த இந்தியாவின் மிக நீளமான ஸ்ட்ரைக்கினை முன்னின்று நடத்தியவர் யார்?
4."லக்ஸ்:சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்" என்று விளம்பரங்களில் கூவிய முதல் இந்திய நடிகை யார்?
5.அமெரிக்கா எந்த நாட்டிடம் இருந்து வர்ஜீனியத் தீவுகளை வாங்கியது?
6.ஆசியாவில் இந்த நாட்டில் மட்டும் தான் வெளியிடப்படும் கரன்ஸி நோட்டுகள் அனைத்தும் ஒன்பதால் வகுபடக் கூடியவைகளாக இருக்கும்.நான் குறிப்பிடும் நாடு எது?
7. #700,19-வது தெரு
NW, வாஷிங்டன்(D.C)20431
மேலே சொன்ன முகவரியின் சிறப்பம்சம் என்ன?
8.மேடம் துஸ்ஸாடின் காட்சியகத்தில் பொம்மையாக வைக்கப்பட்ட முதல் சூப்பர் மாடல் யார்?
02 August 2005
நான் ரெடி.நீங்க ரெடியா???
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
2. Dogbert
5. Denmark
7. IMF head quarters ( 19th St, NW not newyork ;) )
3. Dr.Datta Samanth
1. Eagle Flasks
4. Leela Chitnis
???
முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி.
இதோ சரியான விடைகள்:
1.ப்ரில் க்ரீம்
2.டாக்பெர்ட்
3.ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்
4.லீலா சிட்னிஸ்
5.டென்மார்க்
6.மியான்மர்
7.IMFன் தலைமையிடம்
8.நவோமி காம்பெல்
Post a Comment