"வடக்கு வாழ்கிறது.தெற்கு தேய்கிறது" என்னும் கழகக் கண்மணிகளின் கோஷம் இனி செல்லுபடி ஆகாது.
இந்தியாவின் தலை சிறந்த பொருளாதார மேதைகளில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ள பிபேக் தெப்ராயும்,லவீஷ் பண்டாரியும் இணைந்து வெளியிட்டிருக்கும் "State of the states" என்னும் புத்தகத்தினை மேற்கோள் காட்டி பிஸினெஸ் டுடே இதழில் "செக்ஸி சௌத்" என்ற கட்டுரை வெளிவந்துள்ளது.அந்தக் கட்டுரையில் இருந்து சில துளிகள்.
இந்தியாவின் வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே உணரப்பட்ட ஒரு divide இந்த 2005-ஆம் ஆண்டு முதல் பெரிதாகத் துவங்கியுள்ளது.இங்கே வட மாநிலங்கள் என்று குறிப்பிடப்படுவது முறையே பீகார்,இராஜஸ்தான்,ம.பி மற்றும் உ.பி.தென் மாநிலங்கள் என்று குறிப்பிடப்படுவது முறையே ஆந்திரா,கர்நாடகா,தமிழ்நாடு மற்றும் கேரளா.இந்த ஆய்வுக்கு வசதியாக குஜராத் வட மாநிலங்களின் தொகுப்பிலும்,மஹாராஷ்ட்ரா தென் மாநிலங்களின் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஆய்வுகளின் மூலம் வட மாநிலங்கள் பொருளாதாரத்திலும்,சமூகக் குறியீடுகளிலும் பின் தங்குவது தெள்ளத் தெளிவாகத் தெரிய வருகிறது."வட இந்தியாவின் மாநிலங்களில் இன்னமும் விவசாயத்தில் பழைய முறைகளைப் பின் பற்றி வருவதனால் தான் அவர்கள் தென் மாநிலங்களை விட விவசாயத்தில் பின் தங்கி இருக்கிறார்கள்" என்று கூறுகிறார் இண்டிகஸ் அனாலிட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் லவீஷ் பண்டாரி.
வட மாநிலச் சந்தைகள் அளவில் பெரியதாக இருப்பினும் அவற்றின் சுழற்சியானது குறை மதிப்புப் பொருட்களையே பெரிதும் சார்ந்து உள்ளது.இதற்கு மாறாக தென் மாநிலஙளின் சந்தைகள் உயர் மதிப்புப் பொருட்களை முன்னிறுத்தத் துவங்கி இருக்கின்றன.ஆனாலும் இந்த ஆரோக்கியமான போட்டியில் தென் மாநிலங்களை முன்னுக்குத் தள்ளுவது IT & BPO துறைகளே.
"இந்தியாவின் மொத்த IT & BPO துறையின் ஏற்றுமதியில் 75 - 80 சதவிகிதம் பங்களிப்புத் தருவது தென் மாநிலங்கள் தான்" என்கிறார் சுனில் மேத்தா,வைஸ் ப்ரசிடெண்ட்,நாஸ்காம்.இனி ஒரு ஒப்பீடு.
தனிநபர் வருமானம் :
வடக்கு -8433.22 ரூ. தெற்கு-13,629.88 ரூ
எழுத்தறிவு :
வடக்கு -59.28% . தெற்கு- 73.94%
பொதுச்சுகாதார செலவினங்களில் தனிநபர் வருமானத்தின் பங்களிப்பு :
வடக்கு -91.91 ரூ.தெற்கு- 126.57 ரூ
மின்வசதி பெற்று இருக்கும் வீடுகள்:
வடக்கு -49.44% .தெற்கு- 74.32%
சிம்ப்ப்ளீ சௌத் சாரே....
27 June 2005
தெற்கு தேயவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்ற அண்ணாவின் கோஷம், அரசியல் லாபத்துக்கான போலியான கோஷம் என்றாலும், அதன் அர்த்தம் மத்திய அரசாங்கத்தின் பாரபட்சம் தொடர்பானது. தெற்கு ஒதுக்கப்படுகிறது என்பது அதன் உட்பொருள். தெற்கு வடக்கை விட வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்தால் அது பொய்யாகிவிடாது. வடக்கிற்கு அளிக்கபடும்(மொழிவளர்ச்சி, நிதி ஒதுக்கீடு தொடங்கி எல்லாவற்றிலும்) சலுகைகள் தெற்கிற்கு இல்லாதது மிக தெளிவானது, மிக வெளிப்படையானது. அவற்றையெல்லாம் மீறி தெற்கு வளர்ந்துள்ளது யதார்த்தம். அந்த யதார்த்ததை வைத்து, சம்பந்தமில்லாமல் ஒரு வாக்கியத்தை திரித்து முன்னதை மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை. அண்ணா முன்வைத்ததை விட வெற்றான கோஷமே இது. பலமுறை கேட்டு அலுத்துவிட்டதால் இதை எழுதுகிறேன்.
வாங்க சுதர்சன், கலக்குங்க.
பி.கு.: ஆம், அலுவலகம் லீலாவில் தான்
//வடக்கிற்கு அளிக்கபடும்(மொழிவளர்ச்சி, நிதி ஒதுக்கீடு தொடங்கி எல்லாவற்றிலும்) சலுகைகள் தெற்கிற்கு இல்லாதது மிக தெளிவானது, மிக வெளிப்படையானது. அவற்றையெல்லாம் மீறி தெற்கு வளர்ந்துள்ளது யதார்த்தம். அந்த யதார்த்ததை வைத்து, சம்பந்தமில்லாமல் ஒரு வாக்கியத்தை திரித்து முன்னதை மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை//
நானும் இதை ஆமோதிக்கின்றேன்
Post a Comment