23 June 2005

இப்படி நடந்து இருந்தால் எப்படி இருக்கும்..????!!!!!

நாம் அனைவருமே கண்டிப்பாக சில நேரங்களில் நினைத்திருப்போம்.

சே,இந்தக் கேள்விக்கு பதிலா காலையில் படிச்ச அந்தக் கேள்வி வந்திருந்தா எப்படி இருந்திருக்கும்.

சே,இந்த கோர்ஸ் எடுக்காமே அந்தக் கோர்ஸ் எடுத்திருந்தா எப்படி இருந்திருக்கும்.

சே,இந்த சம்பந்தத்திற்கு பதிலா அந்த உடுமலைப்பேட்டை சம்பந்தத்தை முடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்.

நடந்து முடிந்த நிகழ்வுகளை மாற்றிப் போட விரும்பாத மனிதரே இல்லை இங்கே.நம் வாழ்வில் நடந்த இத்தகைய சாதாரண நிகழ்வுகளையும் அதன் பின் விளைவுகளையும் மாற்றிப் போடுவதனால் மிகப் பெரிய மாறுதல்கள் வரப் போவதில்லை. இதுவே ஒரு சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளை மாற்றிப் போட்டால் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த பதிவு பகிர்கிறது.

ராஜேந்திர ப்ரசாதிற்கு பதிலாக ராஜாஜி முதல் குடியரசுத் தலைவராகியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?

தனது கணவர் பட்னி கம்ப்யூட்டர்சை விட்டு விலகும் போது சுதா மூர்த்தியிடம் வீட்டில் அந்த 12,000 ரூபாய் பணம் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

ராஜீவ் காந்தி அரசியலுக்கு வர மறுத்து வேலையைத் தொடர்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

விஜய் அம்ரித்ராஜ் 1973 விம்பிள்டனில் வென்று இருந்தால் எப்படி இருந்திருக்கும்?

மாதவ்ராவ் சிந்தியா விமான விபத்தில் இறக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

ஹரி ப்ரசாத் சௌராஸியா ஒரு மல்யுத்த வீரராகவே தொடர்ந்து இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

மு.கருணாநிதி M.G.R -ஐ தி.மு.க.வை விட்டு விலக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

சிவாஜி கெய்க்வாட் தனது செல்லுலாய்ட் கனவுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு பேருந்து நடத்துனராகவே தனது வாழ்க்கையினைத் தொடர்ந்து இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

P.V.நரசிம்மராவ் தனது அமைச்சரவையில் மன்மோகன் சிங்கிற்கு இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

இந்தியா திரும்ப நினைக்காமல் திருபாய் அம்பானி ஏமானிலேயே தனது பெட்ரோல் பங்க் அஸிஸ்டென்ட் வேலையினைத் தொடர்ந்து இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

இப்படி இன்னும் பல...

ஹ்ம் மனிதனின் மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.

6 Comments:

Anonymous said...

இதை நீங்கள் எழுதாமலோ, இல்லை நான் படிக்காமலோ இருந்த்தா என்ன ஆயி இருக்கும் ?

NambikkaiRAMA said...

திருக்கி சொல்வதுபோல் நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?...(ஹி..ஹி.ஹி)

Sud Gopal said...

திருக்கி மற்றும் PositiveRAMA...
மிக்க நன்றி...உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்.

இதை நான் எழுதாமல் இருந்திருந்தால், திருக்கி நீங்கள் இதைப் படித்திருக்க மாட்டீர்கள்.

இதை நீங்கள் படிக்காது போயிருந்தால், எனது வலைப்பதிவிற்கு முதல் வாசகர் கிடைத்திருக்க மாட்டார்.

Boston Bala said...

நல்லா இருக்குங்க... தி புக் ஆஃப் க்வெஸ்டின்ஸ் என்று ஆங்கிலத்தில் இதே மாதிரி சிந்தையைக் கிளறும் புத்தகங்கள் வெளி வருகிறது. தொடருங்கள்

லதா said...

//தனது கணவர் பட்னி கம்ப்யூட்டர்சை விட்டு விலகும் போது சுதா மூர்த்தியிடம் வீட்டில் அந்த 12,000 ரூபாய் பணம் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? //

ஏதாவது ஒரு வலைப்பூவில் நம்மைப்போல் ஏதாவது எழுதிக்கொண்டிருப்பார் :-))

//மு.கருணாநிதி M.G. -ஐ தி.மு.க.வை விட்டு விலக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?//

ஓ பி எஸ் மற்றும் செரினா சுதந்திரப் பறவையாகப் பறந்துகொண்டிருந்திருப்பர் (தனித் தனியாகத்தான்) ;-))

//சிவாஜி கெய்க்வாட் தனது செல்லுலாய்ட் கனவுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு பேருந்து நடத்துனராகவே தனது வாழ்க்கையினைத் தொடர்ந்து இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?//

தனுஷ் மற்றும் மருத்துவர் அய்யா சற்றே வருத்தப்பட்டிருப்பர் :-))

Sud Gopal said...

நன்றி லதா மேடம்.
நீங்க குறிப்பிட்டதில 2-ம் விஷயம் நடந்திருந்தா ரொம்பவே நன்னா இருந்திருக்கும்...