24 June 2005

சென்னை மேரீ ஜான்...

என்னடா இவன் ஜான்,முழம்னு பிளிரிட்டு இருக்கான்னு பார்க்கரீங்களா??

ஒண்ணும் இல்லை.

சென்னப் பட்டினத்தை விட்டு வந்து கிட்டத்தட்ட 1.5 வருஷம் ஆனாலும் கூட ஒவ்வொரு வார இறுதியிலும் அதன் ஞயாபகம்(spelling correct-a??) வந்து என்னை வருத்துவதென்னவோ உண்மை தான்.

எனக்கு மட்டும் இல்லை இந்த வருத்தம்.

சென்னைய விட்டு வந்த என்னோட எல்லா சோக்களிகளும் இப்படிப் புலம்பி நான் கேட்டிருக்கேன்.

அதனால மக்கா உங்களது சென்னை தினங்களை நினைவு படுத்தும் விதத்துல இந்த ஒரு போட்டி.இப்போவே சொல்லிப் புட்டேன் ஆனா prize எதுவும் கிடையாது.

1.கீழ்க்கண்ட இடங்களது பெயர்களை விரிவு படுத்தவும்.
Ex:T.நகர் - தியாகராய நகர்
G.N.செட்டி தெரு -
K.K.நகர் -
T.T.K.சாலை -
2.கோடம்பாக்கத்திற்கும்,பல்லாவரத்திர்க்கும் இடைப்பட்ட தொடர்வண்டி நிலையங்களைக் கூறுக.

3.கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றைப் பிரிக்கவும்.
அடையார் ஆனந்த பவன்
கணபதி ஸ்வீட்ஸ்
அர்ச்சனா ஸ்வீட்ஸ்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ்

4.வடபழனி பகுதியில் உள்ள எதேனும் 3 திரை அரங்குகளின் பெயர் கூறுக.

5.மேற்கு மாம்பலம் இருப்பதைப் போலவே கிழக்கு மாம்பலம் என்று ஒன்று உண்டா?

8 Comments:

வீ. எம் said...

ஹா ஹா ஹா வித்தியாசமான வினாடி வினா பதிவு.. சுதர்சன்:)
நான் இப்போது சென்னைவாசியாக இருப்பதால் பதிலளிக்கவில்லை ! :)
வீ எம்

Sud Gopal said...

பரவாயில்லை V.M. நீங்களும் பங்கேற்கலாம்.
முயற்சி செய்து தான் பாருங்களேன்.

தங்களின் பின்னூட்ட்த்திற்கு மிக்க நன்றி.

Boston Bala said...

கலைஞர் கருணாநிதி நகர்

மாம்பலம் பகுதியில் கிழக்கு பக்கம் சென்றால் கிறுக்கு மா. தானே :-)

கமலா, ராம், :-?

அவ்வளவுதான் என்னுடைய நினைவில் வந்து போகிறது. மற்றவர்களும் ஒரு கை பார்க்கட்டும்....

Sud Gopal said...

நன்றி பாலா.பின்னூட்டம் இட்டதற்கும்,முயற்சி செய்தமைக்கும்.

கலைஞர் கருணாநிதி நகர்: சரியான பதில்.

கமலா- சரி.

ராம் - இதுதான் நீண்ட நாட்களுக்கு முன்னரே திருமண மண்டபமாக மாற்றப்பட்டு விட்டதே.

தாசரதி/Dhasarathy said...

1
a.G.நாராயண செட்டி தெரு
b.கலைஞர் கருணாநிதி நகர்
c. T.T. கிருஷ்ணமா(ஆச்சாரி) சாலை

2.தொடர்வண்டி (ரயில்??)
தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, மவுண்ட், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், குரொம்பெட், பல்லாவரம்

சரியா??

3.எல்லாருக்கும் தெரியும்...

4.ஏவி.எம் ராஜேஸ்வரி, கமலா.... ம்....அந்த பக்கம் போனா உதயம் காம்ப்ளெக்ஸ்...இந்தப்பக்கம் லிபர்டி...இன்னொரு பக்கம்..நேஷனல்....இன்னொரு பக்கம்... எஸ்.எஸ்.ஆர் பங்கஜம்..

5.இல்லைபா...மாம்பலம்தான்....

2.5 வருஷமாச்சு சென்னைய விட்டு வந்து.....அதான் முய்ற்சி செய்தேன்...ஹிஹி

Sud Gopal said...

கலக்கீட்ட்ங்ணா...
3-வது கேள்விக்கும் பதிலை அப்படியே சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும்.
நன்றி...நன்றி...நன்றி...

Anonymous said...

sudharshan kalakureenga ponga. that was really very good

Sud Gopal said...

நன்றி அனானிமஸ்.
நீங்க கேள்விகளுக்கு விடை சொல்லியிருந்தா இன்னமும் கொஞ்சம் அதிகமா சந்தோஷப்பட்டிருப்பேன்.