25 June 2005

ஈஸ்வரி உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசப்பட்ரேன்...

ஹலோ...தலைப்பப் படிச்ச உடனே உங்க கற்பனைக் குருதய கண்டபடி ஓட விட்டா அதுக்கு நான் பொறுப்பு கிடையாதுங்ணா.


நேத்து தூங்கப் போகும்போதே முடிவு செஞ்ச மாதிரி இன்னைக்கு காலையில கொஞ்சம் சீக்கிரமா எழுந்து என்னொட புத்தக,ஒலி நாடா குருந்தட்டுகள் இருக்கிற ரேக்-ஐ சுத்தம் செய்யும் போது தான் இந்த கிடைச்சது மேற்கண்ட பாடலும் இருக்கற 5 ஸ்டார் படத்தோட ஒலி நாடா குருந்தட்டு(தமிழாக்கம் கரெக்டுங்ளாங்ணா??).

இந்தப் படம் மூலமா தமிழ் சினிமாவுக்கு ஒரு புது இரட்டை இசை அமைப்பாளர்கள்,ஒரு புது டீன் ஹீரோ,ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்(அதாம்பா நம்ம பிலானி புகழ் கனிகா)கிடைச்சாங்க.

சுமாரா ஓடின படம்.சுசி.கணேசனுக்கு ஒரு நல்ல break through கொடுத்த படம்.எல்லாப் பாட்டும் நல்லாவே இருக்கும்.சுபா முத்கல் அம்மா கூட ஒரு பாட்டைப் பாடியிருப்பாங்க.

இந்த "திரு திருடா" பாட்ட முதல்ல எங்க ரூமில் கேட்கும் போதே(படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாலேயே),கேட்கும் எல்லாரையும் கட்டிப் போட்டிடுச்சு.நம்ம சோக்காளிக எல்லாருக்கும் இந்தப் பாட்டை எப்படி எடுத்திருப்பாங்கன்னு ஒரே ஆவலாதி.

படமும் ஒரு வழியா செப்டம்பர் 2002-ல் ரீலீஸ் ஆச்சு.நம்ம உதயம் காம்ப்ளெக்ஸ்-ல ரீலீஸ் பண்ணியிருந்தாங்க.சோக்காளிக கூட வழக்கம் போல ஞாயித்திக் கிழமை ரெண்டாம் ஆட்டம் போனோம்.(ஹி..ஹி...நாங்க எப்பவுமே ஞாயித்திக் கிழமை ரெண்டாம் ஆட்டம் தான் போவோம்.)

நடுவில ஒரு சோக்காளிக்கு படம் புடிக்காமே போய் தூங்க ஆரம்பிச்சுட்டாரு."திரு திருடா" பாட்டு வந்த உடனே மறக்காம எழுப்பணும்னு இதில கண்டசன் வேற.

இந்தப் பாட்டு இன்டெர்வெல்லுக்கு அப்பால தான் வந்தது.பாட்டுக்கு கொடுத்த visual build-up பார்த்து எல்லாருமே கணேசு கலக்கிட்டான்யா அப்படின்னு நினச்சப்ப தான் நம்ம கனிகாம்மா(கனிகா-வோட அம்மா இல்லீங்ணா)திடீர்னு ஜான்ஸி ராணி லக்ஷ்மி பாய் மாதிரி குருத மேல ஏறினாங்க.

அவ்வளவு தான் நம்ம ஜிங்குச்சா பாட்டு லிஸ்ட்ல ஒரு புது வரவுய்யான்னு நெனச்சிட்டு அப்படியே அப்பவே தியேட்டர விட்டு வெளி நடப்பு செஞ்சிட்டோம்.

அதென்ன ஜிங்குச்சா பாட்டு லிஸ்ட்னு கேக்கறவங்களுக்கு...
1.கண்ணோடு காண்பதெல்லாம் - ஜீன்ஸ்
2.பூங்காற்றிலே என் சுவாசத்தை - உயிரே
3.எங்கே எனது கவிதை - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
4.எகிறி குதித்தேன் - பாய்ஸ்
5.கவிதை இரவு,இரவு கவிதை - சுள்ளான்.

இந்த லிஸ்ட்ல இருக்கும் எல்லாப் பாட்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.அதக் கண்டு பிடிச்சீங்கன்னா நான் "ஜிங்குச்சா பாட்டு"ன்னு எதை சொல்றேன்னு புரியும்.

குழம்பிப் போனவங்க எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க...

வர்ட்டா....

5 Comments:

Anand V said...

Do you know this song is
Heavily inspired by Aaliyah's 'We need a resolution'.
I know what the "Jingucha " you talking about :)

Sud Gopal said...

Oh.is that so???
Well,thats a news to me...

Anyway,thanks for ur visit and feeback.

Glad to know that you've got the "Jingucha" funda.

Keep visiting and commenting.

குழலி / Kuzhali said...

//"Jingucha " //
என்னது இது எனக்கு தெரியாதே எனக்கும் சொல்லுங்களேன்

வீ. எம் said...

/// "ஜிங்குச்சா பாட்டு" ///

நீங்க ஏன் இப்படி இளைய தளபதி ரசிகருங்களுக்கு எதிரா இருக்கீங்கனு புரியலை சுதர்சன் :)
சரி சரி ஜிங்குசா பாட்டுனா என்ன, சீக்கரம் சொல்லுங்க
வீ எம்.

Sud Gopal said...

"ஜிங்குச்சா பாட்டு"
மேலே இருக்கற லிஸ்டில் உள்ள எல்லாப் பாடல்களுக்கும் பொதுவா ஒரு ஒற்றுமை இருக்கு.இந்தப் பாடல்களைக் கேட்கும் போதே இவற்றோட இசையினாலயும்,பாடல் வரிகளினாலயும் நம்மக் கட்டிப் போட்டு விடும்.
ஆனா இந்தப் பாடல்களோட திரை வடிவம் பார்த்தோம்னா இந்தப் பாட்டைப் பார்க்கவா இவ்வளவு ஆவலாதியா இருந்தோம்னு நமக்கே நம்ம மேலே ஒரு எரிச்சல் வந்திடும்.
எடுத்துக்காட்டா,பூங்காற்றிலே என் சுவாசத்தை - உயிரே
உயிரே படம் வருவதற்கு முன்னாடி இந்தப் பாட்டைக் கேட்டவங்கா எல்லோருமே கண்டிப்பா மணி இந்தப் பாட்டை எப்படி எடுத்திருப்பார்னு பயங்கரமா யோசிச்சிருப்பாங்க.ஆனா திரையில ஒரு லேடியோப் பொட்டியில இந்தப் பாட்டு பாடற மாதிரி வரும்.அதுவும் முழுசா வராது.
அதனால இந்தப் பாட்டு எங்க சோக்காளிக மத்தியில ஒரு "ஜிங்குச்சா பாட்டு".
ஹி..ஹி...ஹி..
அய்யோ V.M அண்ணா...எனக்கு யாரு மேலயும் கோவம் இல்லீங்ணோ.
மத்தப்படி பின்னூட்டம் கொடுத்த உங்க எல்லார்த்துக்கும் நன்றி...நன்றி...நன்றி...