உலகின் பழமையான இனிப்புப் பண்டம் என்னவென்றால் பாயாசம் என்று தான் நான் அடித்துக் கூறுவேன்.தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்த போது கிடைத்த பாயாசத்தைப் பகிர்ந்துண்ட பிறகு தான் ராம,பரத,லக்ஷ்மண,சத்ருக்கன சகோதரர்கள் இப்புவியில் உதித்ததாகக் கூறுகிறது ராமாயணம்.இட்லியைப் போலவே மிக எளிய செய்முறையைக் கொண்டுள்ள பாயாசம் இல்லாத விருந்து ஒரு போதும் நிறைவு பெறுவதில்லை.ஜவ்வரிசி,சேமியா,கோதுமை,கடலை,பலாப்பழம் என்று பல்வேறு வேரியன்ட்ஸ் வந்த போதும் பால் பாயாசத்திற்கு(யம்மீ...) இருக்கும் மவுசே தனி தான்.
தமிழகத்திலுள்ள வைஷ்ணவத் திருத்தலங்களின் நைவேத்தியங்களில் சர்க்கரைப் பொங்கல்/அக்கார அடிசில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது போலவே கேரளாவிலுள்ள கிருஷ்ணன் கோவில்கள் பிரசாதங்களில் பாயாசத்திற்கு முக்கியத்துவம் தரப்படும்.குருவாயூரில் சோறூட்டலின் போது வழங்கப்படுவதும் அரிசிப் பாயாசமே.
அது சரி நீங்கள் அம்பலப்புழை(ஆலப்புழை மாவட்டம்,கேரளா) கிருஷ்ணன் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா?கேரளாவிலுள்ள மூன்று பெரிய கிருஷ்ண பரமாத்மாவின் கோவில்களுள் இதுவும் ஒன்று.இந்தக் கோவிலில் வழங்கப் படும் பாயாசப் பிரசாதத்தின் பின்னணி வரலாற்றைக் கேட்டால் என்னைப் போலவே நீங்களும் ஆச்சரியமடையக் கூடும்.
அதாகப்பட்டது கிருஷ்ண பரமாத்மா ஒருமுறை ஒரு முனிவரின் வடிவில் சதுரங்கப் பிரியனான அந்தப் பிரதேசத்து அரசரின் சபைக்கு வந்தாராம்.வந்ததும் அரசனை ஒரு சதுரங்கப் போட்டிக்கும் அழைத்தாராம்.போட்டி துவங்கும் முன்னரே பரிசை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற முனிவரின் நிபந்தனையை மன்னரும் ஏற்றுக் கொண்டார்.முனிவர் போட்டியில் வென்றால் அவருக்குக் கொஞ்சம் அரிசி மணிகள் தரப்பட வேண்டும் என்பது தான் அந்தப் பரிசு.ஆனால் தரப்பட வேண்டிய அரிசி மணிகளின் எண்ணிக்கை சதுரங்கக் கட்டத்திலிருந்து கீழ்க்கண்ட முறையில் கணக்கிட வேண்டும் என்றார்.
அதாவது சதுரங்கத்தின் முதல் கட்டத்தில் 1,அதையடுத்துள்ள இரண்டாம் கட்டத்தில் 2,மூன்றாம் கட்டத்தில் 4,நான்காம் கட்டத்தில் 8 என்று தொடர்ந்து செல்லும்.அதாவது ஒவ்வொரு கட்டமும் அதனுடையே முந்தைய கட்டத்தின் எண்ணிக்கையைப் போல இரட்டிப்பு மடங்கு அரிசி மணியைப் பெறும்.
ie. பத்தாம் கட்டத்திலுள்ள மணிகளின் எண்ணிக்கை = 2 x (ஒன்பதாம் கட்டத்திலுள்ள மணிகளின் எண்ணிக்கை).
போட்டியும் விறுவிறுப்பாய்ச் சென்றது.முடிவில் முனிவர் தான் வென்றார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.போட்டியில் தோற்ற மன்னனும்,முன்னரே ஒப்புக் கொண்டது போலப் பரிசினை வழங்க ஆயத்தமானான்.முன்னர் பார்த்த கணக்கீட்டின் அடிப்படையில் அரிசி மணிகளைக் கூட்டிக் கொண்டு வந்த போது தான் முனிவரின் நிபந்தனையின் உண்மையான அர்த்தம் புரிந்தது.
இருபதாவது கட்டம் வந்த போது அரிசி மணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனையும்,நாற்பதாவது கட்டத்தை அடைந்த போது ஒரு ட்ரில்லியனையும் அடைந்தது.வெகு சீக்கிரமே -தானிய நிலவறையில் இருந்த மொத்தக் கையிறுப்பும் காலியாகிவிட்டது.தனது நாட்டில் மட்டுமல்ல,பக்கத்திலுள்ள நாடுகளில் இருந்து அரிசியைக் கொணர்ந்தாலும் முனிவருக்குத் தரப்பட்ட தனது வாக்கை எப்போதும் காப்பாற்ற முடியாது என்பதை அந்த மன்னன் உணர்ந்தான்.
ஜ்யாமெட்ரிக் ப்ரோக்ரஷனில் அதிகரித்துக் கொண்டு சென்றது அரிசி மணிகளின் எண்ணிக்கை.64 கட்டங்கள் உள்ள சதுரங்கக் கட்டத்தை நிரப்பத் தேவையான அரிசி மணிகள் எவ்வளவு தெரியுமா?
18,446,744,073,709,551,615 [ (2^64)-1 ].இது கிட்டத்தட்ட பல ட்ரில்லியன் டன்கள் மதிப்பாகும்.அரசனின் குழப்பத்தை உணர்ந்த கிருஷ்ண பரமாத்மா தனது நிலையை வெளிப்படுத்தினார். மேலும் அந்தக் கடனை உடனே தர வேண்டியதில்லை எனவும்,கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாயாசமாக்கி தனது பக்தர்களுக்குப் பிரசாதமாய்த் தந்தால் போதும் எனவும் கேட்டுக்கொண்டார்.அந்த வழக்கம் இன்னமும் தொடர்ந்து வருகிறது.
இது புனைக்கதையோ இல்லை உண்மை நிகழ்வோ தெரியாது.ஆனால் அந்தக் கோவிலின் பாயாசத்திலிருக்கும் சுவையில் எந்த ஒரு ஐயமும் கொள்ளத் தேவையில்லை.
அப்புறம் தெருவில் எத்தனையோ சாமான் கூவல்கள்! ஆனால் என்ன சொல்லிக் கத்துகிறான் என்பது நூற்றுக்கு நூத்திரெண்டு சதவிகிதம் யாருக்கும் தெரியாது.எனக்குத் தெரியும் என்பவர்களுக்குக், கீழே கொஞ்சம் கூவல்கள் சவால்களாகத் தரப்பட்டுள்ளன.எங்கே முயற்சி செய்து தான் பாருங்களேன்???
1.ம்ல்லி,கதம்ப்பா,சம்ந்தி....
2.சான்யாப்டிக்கலியா...க்திக்கி..
3.பளே பேய் வாங்கர்தூ...
4.யாப் பாத்ர சேமே....
05 June 2006
அம்பலப்புழை பாயாசம்,G.P & சில சவால்கள்
Subscribe to:
Post Comments (Atom)
13 Comments:
என்ன அண்ணே! இது கூட தெரியாதா?
//1.ம்ல்லி,கதம்ப்பா,சம்ந்தி....//
மல்லி, கதம்பம், சாமந்தி
//2.சான்யாப்டிக்கலியா...க்திக்கி..//
கத்திக்கு சானம் புடிக்கலியோ (சானத்துக்கு ன-வா இல்லாட்டி ண-வா?)
//3.பளே பேய் வாங்கர்தூ...//
பழைய பேப்பர் வாங்குறது...
//4.யாப் பாத்ர சேமே....//
அய்யா, பாத்திரம் சாமான்....
இதெல்லாம் கரெக்ட் தானுங்களேன்னா?
சரியான விடை தந்தவர்களுக்கு நன்றி.உங்கள் பின்னூட்டங்களை மாலையில் பிரசுரிக்கிறேன்.
Quite interesting.
From where have you got this story??
உங்க பின்னூட்டப் பெட்டி வேலை செய்யலையேப்பா.
கொஞ்சம் பார்க்கறது.....
சரி. பொறுமை இல்லாததால் விடைகளை இப்படியே அனுப்பறேன்.
அம்பலப்புழைப் பால் பாயஸத்துக்கு ஈடுஇணை கிடையவே கிடையாது.
ஆனா, இந்தக் கதை புதுசு. இப்பத் தெரிஞ்சுக்கிட்டேன்.
1. மல்லி கதம்பம் சாமந்தி
2. சாணைப் பிடிக்கலையா.. கத்தி..
3. பழைய ( பேய்!!!)பேப்பர் வாங்கறது
4. பாத்திரம் சாமான்......
என்றும் அன்புடன்,
துளசி
பாயாசமா.........ஆகா....சுதர்சனும் சமையல் தொடங்கீட்டாருய்யா...நடக்கட்டும் நடக்கட்டும். அதுவும் மலையாளக் கரையோரம்...ஏதோ நடக்கிறது..
ஆமா...நான் வர்ரதுக்குள்ள எல்லாரும் எல்லாக் கேள்விக்கும் விடை சொல்லீட்டாங்க...ம்ம்ம்ம்...பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ராகவா....
சுதாகர்..வாங்க...வாங்க...
//அய்யா, பாத்திரம் சாமான்....//
ஈயப் பாத்திரம் சாமி....
இதைத் தவிர எல்லாம் கரீட்டா சொல்லீட்டீங்க...
//From where have you got this story?? //
Been there and done that :-)
தேங்ஸ் அனானி.
//உங்க பின்னூட்டப் பெட்டி வேலை செய்யலையேப்பா.கொஞ்சம் பார்க்கறது.....//
சரி செஞ்சிட்டேன் துள்சீக்கா...
//அம்பலப்புழைப் பால் பாயஸத்துக்கு ஈடுஇணை கிடையவே கிடையாது.//
ரைட்டே...
//பாத்திரம் சாமான்......//
ஈயப்பாத்திரம் சாமீ...
அருவி...வாங்க...வாங்க....
//இதுக்கு recipe கிடைக்குமா ப்ளீஸ்?//
ஓவர் டூ ஜீ.ராகவன்....
//சுதர்சனும் சமையல் தொடங்கீட்டாருய்யா...நடக்கட்டும் நடக்கட்டும்//
இல்லை.இல்லை...இல்லவே இல்லை...
//அதுவும் மலையாளக் கரையோரம்...ஏதோ நடக்கிறது//
இது உமக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலை...
// சுதர்சன்.கோபால் said...
அருவி...வாங்க...வாங்க....
//இதுக்கு recipe கிடைக்குமா ப்ளீஸ்?//
ஓவர் டூ ஜீ.ராகவன்.... //
இது நல்ல கூத்தாயிருக்கே......ம்ம்ம்...பெங்களூர் வந்து கவனிச்சுக்கிறேன்.
// சுதர்சன்.கோபால் said...
//சுதர்சனும் சமையல் தொடங்கீட்டாருய்யா...நடக்கட்டும் நடக்கட்டும்//
இல்லை.இல்லை...இல்லவே இல்லை...//
ஏன் இல்லை. ஏன் இல்லை...ஏன் இல்லவே இல்லை...
// //அதுவும் மலையாளக் கரையோரம்...ஏதோ நடக்கிறது//
இது உமக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலை... //
அய்யா...உமக்குத் தெரிய வேண்டியத எனக்குத் தெரிய வேண்டியதுன்னு சொல்லலாமோ......இது நியாயமாகுமோ.......உண்மையை இல்லையென்பேனா? பொய்யை உண்டு என்பேனா? ஏன் தேன் செக்கச் சிவப்பில் இருக்கிறது? புளியைக் கரைத்தால் இனிக்குமா? உறைப்பு உப்பு ரெண்டு கிலோ என்ன விலை?
//பெங்களூர் வந்து கவனிச்சுக்கிறேன்//
சார்வாள் அடுத்தவாரம் இங்கன வார போது, ஐயாம் த எஸ்கேப்.
//உண்மையை இல்லையென்பேனா? பொய்யை உண்டு என்பேனா? ஏன் தேன் செக்கச் சிவப்பில் இருக்கிறது? புளியைக் கரைத்தால் இனிக்குமா? உறைப்பு உப்பு ரெண்டு கிலோ என்ன விலை?//
மெட்ராசில இந்த வாட்டி வெய்யில் ரொம்ப சாஸ்தியோ??
Post a Comment