தன்னுடைய அந்தரங்கத்தின் மென்மையும் மேன்மையும் தெரியாதவன் தான் பிறர் அந்தரங்கத்தில் நுழைய விரும்புகிறான்.நாலு பேருடன் அதை அலச முற்படுகிறான்.எங்கேயோ படித்த வார்த்தைகள் அவை.
சமீபத்தில் எக்கனாமிக் டைம்ஸில் "அலுவலகங்களில் மீட்டிங் ரூம்கள் இருப்பத்தைப் போலவே காசிப் அறைகளுக்கான தேவையைப் பற்றி"ய ஒரு சுவையான அலசல் இருந்தது.வம்பு பேசுதல் என்பது உலகளாவிய ஒரு பழக்கமாய் தொன்று தொட்டு இருந்து வருகிறது.கொஞ்சமாய்க் கொஞ்சம் உண்மை,கொஞ்சம் நிறையவே பொய் சேர்த்துத் தயாரிக்கப்படும் காக்டெயிலான கிசுகிசுவுவை விரும்பாதார் உளரோ???சரி..சரி....மேட்டருக்கு வருவோம்.
தமிழ்ப்பதிவுகள் என்ற ஊடகத்தில் முதன்முறையாக் கிசுகிசுக்கள் சூடாக,சுவையாக.இந்தச் செய்தியில் சம்பந்தப் பட்டவர்கள் யார்,யார் என்று கண்டு பிடிப்பது மக்களே உங்கள் சமத்து.ஆனால் ...இவர் தானே ...அவர் என்பது போன்ற உங்களுடைய கேள்விகளுக்கு, என்னுடைய பதில் "நோ காமென்ட்ஸ்" என்று தான் இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் :-)
1) பிறந்தது வேறு ஊராயினும், தற்போது சென்னையில் மென்பொருளாளராய்க் குப்பை கொட்டிக்கொண்டே இரு வலைபூக்களை நடத்தி வரும் இவர் சமீபத்தில் காதல் வலையில் விழுந்துவிட்டதாய் தகவல்கள் வருகின்றன.இது இவரது முதல் காதலிக்குத் தெரியுமா என்பது மதுரை மீனாட்சிக்கும்,மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மனுக்கும் தான் வெளிச்சம்.
2) TN 41 - என்று ஆரம்பிக்கும் ஒரு வண்டியை வைத்துக் கொண்டு பைரசந்தரா.தாவர்கரே.மடிவாலா லே-அவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் இவரது விக்கெட் விரைவில் விழப்போகும் செய்தியென்னமோ அனைவரும் அறிந்த ஒன்றே.வரவிருக்கும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தே.தி.மு.க. சார்பாக இவர் போட்டியிடப்போகிறார் என்னும் செய்தி உங்களுக்குத் தெரியுமா?மேலும் அந்த கட்சியின் மென்பொருள் பிரிவின் மாநிலச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்படப் போகும் இவர் அக்கட்சியின் வெப்சைட்டை நிர்மாணிப்பதில் இப்பொது மிகவும் பிசியாக உள்ளாராம்.ஹூம்....அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.
3) மதர்லேண்ட் போயிருந்தேன்,லக்செம்பர்க் போறேன்,காரொக்கோ போறேன் என்று கலர் கலராய்ப் படம் காட்டிக் கொண்டிருக்கும் இந்தப் பரிதி அடுத்தச் செல்லவிருப்பது சந்திரனுக்காம்.அந்த 100-ஆவது ஆள் இவர் தான் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என் கேள்விக்கென்ன பதில் ???
<<இந்தக் கேள்விகளுக்கு சரியாக பதிலளிப்பவர்களுக்கு இங்கே கிசு-கிசு எழுத வாய்ப்பளிக்கப்படும்.>>
1) மால்குடி,நார்னியா,எல்ஸ்பிரிட்ஜ் இந்த மூன்று இடங்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன?
2) மல்லேஸ்வரத்திலிருந்து பசவண்குடி செல்லும் தடம் எண் 14. இது உங்களுக்கு எதையாவது நினைவூட்டுகிறதா?
30 May 2006
கொஞ்சம் கிசுகிசு..கொஞ்சம் கேள்விகள்..
Subscribe to:
Post Comments (Atom)
31 Comments:
Test.
கிசுகிசு 2: ஆ!!! அப்படியா? ஒரு பிரபல அரசியல்வாதி எனக்கு பிரண்டா?!! :))))
டெஸ்ட்.. ஓகே..
ஆமா யாருப்பா இதெல்லாம்..பொதுவுல வேண்டாம், எனக்கு மட்டும் தனியா சொல்லுவியாம்.. :)
இளவஞ்சி.. உங்களுக்கு மட்டுமா, இன்னும் பலருக்கு் அவர் நண்பர், அதிலும் 'தல'யானவர்.
// 1) மால்குடி,நார்னியா,எல்ஸ்பிரிட்ஜ் இந்த மூன்று இடங்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன? //
இவை மூன்றுமே இடங்கள். இந்த இடங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகள். ஆனால் இந்த மூன்று இடங்களும் கற்பனையூர்கள்.
(எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான். பொது அறிவுல ரொம்ப மட்டம் போல நான்.)
ரெண்டாம் கேள்விக்கு விடை ராசாதான்..
//அந்த கட்சியின் மென்பொருள் பிரிவின் மாநிலச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்படப் போகும் இவர் அக்கட்சியின் வெப்சைட்டை நிர்மாணிப்பதில் இப்பொது மிகவும் பிசியாக உள்ளாராம்//
இது தெரியாதே ராசா!@!!
இங்க உள்ள அரசியல்ல தல பேரு ரொம்ப அடிபடுதேன்னு பார்த்தேன்..
//வரவிருக்கும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தே.தி.மு.க. சார்பாக இவர் போட்டியிடப்போகிறார் //
கொங்கு நாடா, இல்லை வேற ஏதாச்சும் தொகுதியா தல?
சுதர்சன், உங்க முதல் கேள்விக்கு ராகவன் விடை சொல்லிட்டாரு..
//2) மல்லேஸ்வரத்திலிருந்து பசவண்குடி செல்லும் தடம் எண் 14. இது உங்களுக்கு எதையாவது நினைவூட்டுகிறதா? //
இது உங்களுக்கு எதை நினைவூட்டும்? தெரியலையே!!! பெங்களூரின் எந்த பஸ் நம்பர்/கார் நம்பர்/பைக் நம்பர் சொன்னாலும் எனக்கு நினைவுக்கு வருவது ஆங்காங்கே நிற்கும்.. நடுத் தெருவில் ரேடியோ சிடியிலேயே வாழ்க்கை நடத்தும் அளவுக்கு நிற்கவைக்கும் ட்ராபிக் தான் :)
//சென்னையில் மென்பொருளாளராய்க் குப்பை கொட்டிக்கொண்டே இரு வலைபூக்களை நடத்தி வரும் இவர் சமீபத்தில் காதல் வலையில் விழுந்துவிட்டதாய் தகவல்கள் வருகின்றன//
இது யாருன்னு தெரியலைன்னு தாங்க வருத்தம்.. இருந்திருந்து பெங்களூர்க் காரருக்குத் தெரிஞ்சது, சென்னைக்காரிக்குத் தெரியலியே :)
அரசியல்வாதிகள் கூட ப்ளாக்?
யார் அது?
//ஆ!!! அப்படியா? ஒரு பிரபல அரசியல்வாதி எனக்கு பிரண்டா?!! :)))) //
முன்னமே சொன்னா மாதிரி, "நோ காமென்ட்ஸ்" :-)
//இளவஞ்சி.. உங்களுக்கு மட்டுமா, இன்னும் பலருக்கு் அவர் நண்பர், அதிலும் 'தல'யானவர்.//
அனானி,வருகைக்கும் கருத்துக்கும் நன்னி.
//ஆனால் இந்த மூன்று இடங்களும் கற்பனையூர்கள்//
ஜீரா.கலக்கீட்டேள் போங்கோ.
//பொது அறிவுல ரொம்ப மட்டம் போல நான்//
ஆனாலும் உமக்கு இவ்வளவு தன்னடக்கம் ஆகாது ஓய்.
//ரெண்டாம் கேள்விக்கு விடை ராசாதான்..//
நோ காமென்ட்ஸ்.
//நடுத் தெருவில் ரேடியோ சிடியிலேயே வாழ்க்கை நடத்தும் அளவுக்கு நிற்கவைக்கும் ட்ராபிக் தான்//
இப்போ சக்கத் ஹாட் மகா! தான் பாப்புலர் தெரியுமா உங்களுக்கு.
//இருந்திருந்து பெங்களூர்க் காரருக்குத் தெரிஞ்சது, சென்னைக்காரிக்குத் தெரியலியே//
நெறையக் க்ளூ கொடுத்திருக்கேன்.
//அரசியல்வாதிகள் கூட ப்ளாக்?யார் அது?//
ரிஷி வாங்க.வாங்க...முதல் தடவையா வந்திருக்கீங்க.பதிலை முன்னமேயே கொஞ்சம் பேர் சொல்லீட்டாங்களே...
ஒண்ணுமே புரியல ஒலகத்துல..
//ஒண்ணுமே புரியல ஒலகத்துல..//
நம்பிட்டேன்.நம்பிட்டேன்.ஒம்மையும் அந்த மதுர மீனாச்சி தான் காப்பாத்தோணும்.
சுதர்சன் கோபால்,
நிங்க சொன்ன கிசுகிசுவில் இருந்த 3 நபர்களையும் கிட்டத்தட்ட அடையாளம் கண்டுகொண்டாலும், அந்த 3 வது நபருக்கு நீங்க இன்னும் கொஞ்சம் சுத்தலான வார்த்தைய தேர்வு செய்து இருக்கலாம் என்றும் / இப்படி சொன்னது தமிழ்மண பிராண்ட் உள்குத்து வகையில் சேர்ந்துவிட வாய்ப்புள்ளது என்றும் எனது குரு ராயபுரம் உட்டாலக்கடி சிக்கன் கறி சாமியார் தனது தீர்க்க திருஷ்ட்டியில் பார்த்ததை நான் குறிப்பால் உணர்ந்தேன் :-)
எனக்கு இந்த 'கிசுகிசு'வெல்லாம் படிக்கற வழக்கம் இல்லையேப்பா:-))))
அந்தக் காதல் வலையில் விழுந்த பட்சி ஒருவேளை நம்ம ராகவனோ?
சரி சரி.. க்ளூவெல்லாம் வேஸ்டு.. மேட்டர் என்னன்னு விவரமா சொல்லுங்க, நாள் பூரா அரிச்சி அரிச்சி தலைல இருக்கிற மண்ணெல்லாம் கொட்டியாச்சு!!
//பிறந்தது வேறு ஊராயினும், தற்போது சென்னையில் மென்பொருளாளராய்க் குப்பை கொட்டிக்கொண்டே இரு வலைபூக்களை நடத்தி வரும் இவர் சமீபத்தில் காதல் வலையில் விழுந்துவிட்டதாய் தகவல்கள் வருகின்றன.இது இவரது முதல் காதலிக்குத் தெரியுமா என்பது மதுரை மீனாட்சிக்கு//
The traveller???
// துளசி கோபால் said...
எனக்கு இந்த 'கிசுகிசு'வெல்லாம் படிக்கற வழக்கம் இல்லையேப்பா:-))))
அந்தக் காதல் வலையில் விழுந்த பட்சி ஒருவேளை நம்ம ராகவனோ? //
டீச்சர், இதென்னது புதுக்கூத்து........சுதர்சன் கொஞ்சம் உதவிக்கு வாங்க.
//மல்லேஸ்வரத்திலிருந்து பசவண்குடி செல்லும் தடம் எண் 14. இது உங்களுக்கு எதையாவது நினைவூட்டுகிறதா?//
ஹி...ஹி...ஒரு தபா,அந்த ரூட்டில டிக்கெட் வாங்காமப் போயிருக்கேன்....
கார்த்திக் ஜெயந்த்..வாங்க..வாங்க...
//அந்த 3 வது நபருக்கு நீங்க இன்னும் கொஞ்சம் சுத்தலான வார்த்தைய தேர்வு செய்து இருக்கலாம்//
இப்பதானே இந்தக் கிஸ்கிஸ் எல்லாம் ஆரம்பிச்சிருக்கோம். அப்பிரசண்டிக கிட்ட ரொம்பல்லாம் எதிர்பார்க்காதீங்கப்பூ.
//இப்படி சொன்னது தமிழ்மண பிராண்ட் உள்குத்து வகையில் சேர்ந்துவிட வாய்ப்புள்ளது என்றும் எனது குரு ராயபுரம் உட்டாலக்கடி சிக்கன் கறி சாமியார் தனது தீர்க்க திருஷ்ட்டியில் பார்த்ததை நான் குறிப்பால் உணர்ந்தேன் :-) //
ஓ.அது தான் மேட்டரா??!!! நடக்கட்டும்...நடக்கட்டும்.
//எனக்கு இந்த 'கிசுகிசு'வெல்லாம் படிக்கற வழக்கம் இல்லையேப்பா:-))))//
நம்பிட்ட்ட்டோம்ம்ம்ம்....
//அந்தக் காதல் வலையில் விழுந்த பட்சி ஒருவேளை நம்ம ராகவனோ? //
நோ காமென்ட்ஸ் :-) (ஸ்மைலியாக்கும்)
//மேட்டர் என்னன்னு விவரமா சொல்லுங்க, நாள் பூரா அரிச்சி அரிச்சி தலைல இருக்கிற மண்ணெல்லாம் கொட்டியாச்சு!!//
அது வந்து..அந்த நபர் யாருன்னா...ஹூம்.....கொஞ்சம் காதைக் கொடுங்களேன்..
//The traveller??? //
யாருய்யா...அந்தப் பிரியாணி???
//டீச்சர், இதென்னது புதுக்கூத்து........சுதர்சன் கொஞ்சம் உதவிக்கு வாங்க. //
வந்தோம்.வந்தோம்.
துள்சீ டீச்சர், ஜீரா உண்மைய யார் கிட்டயும் சொல்லாமலிருக்க கொஞ்சம் மால் வெட்டியிருக்காரு.நீங்க கொஞ்சம் அதை விட சாஸ்தி வெட்டினீங்கன்னா,உங்களிடம் உண்மை பகரப்படும்.
//ஹி...ஹி...ஒரு தபா,அந்த ரூட்டில டிக்கெட் வாங்காமப் போயிருக்கேன்.//
ஓ...
//ஜீரா உண்மைய யார் கிட்டயும் சொல்லாமலிருக்க கொஞ்சம் மால் வெட்டியிருக்காரு.//
முன்னாடி மயில வெட்டி விட்டாரு.. இப்போ மால்?!! அது சரி.. எனக்குக் கூட ஏதோ புரிகிற மாதிரி இருக்கு.. ம்ம்ம்
//முன்னாடி மயில வெட்டி விட்டாரு.. இப்போ மால்?!! அது சரி.. எனக்குக் கூட ஏதோ புரிகிற மாதிரி இருக்கு.. ம்ம்ம்//
புரிஞ்சாச் செரி தான்.
கிசுகிசுக்களைச் சரியான முறையில் டீகோட் செய்து கண்டுபிடித்த அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்.
கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளில்,ஒன்றனுக்கு ஜீரா சரியான விடையைத் தந்திருந்தார்.
இனி இரண்டாவது கேள்விக்கான சரியான பதில்:- சூப்பர் ஸ்டார் கண்டெக்டராய்ப் பணியாற்றிய போது அவர் சென்ற பேருந்து தான் அது.
Post a Comment