"ஏங்கண்ணு.புது வீடு பரவாயில்லையா?தண்ணீ எல்லாம் ஒழுங்கா வருதா?சமையலுக்கும்,துணி துவைக்கறதுக்கும் அங்கனயே புதுசா ஏதாவது ஒரு வேலையாளைப் புடிச்சு போட்டுக்க வேண்டியது தானே?ஆமா.இந்தவாட்டியாவது பால் காய்ச்சினீங்களா?"
"அம்மா.தோசை எனக்குப் போதும்.உன் அருமை மகனை நல்லாக் கவனி.அது சரி ப்ரதர்.உங்க புது வீட்டுக்கும் ஆஃபீசுக்கும் எவ்வளவு தூரம்? ஆஃபீஸ் CAB எதாவது வருமா?இந்த வீட்டிலயாவது உன்னோட அருமை செல்ஃபோன்ல சிக்னல் ஒழுங்காக் கிடைக்குமா?"
"அட தம்பிய சாப்பிட விடாம ஏன் இப்படி ஆள் ஆளுக்கு கேள்வி மேல கேள்வியாக் கேட்டுட்டு இருக்கீங்க.எம்பா,இந்த வீட்டுக்கு வாடகை எவ்ளோ வருது?டூ வீலர் பார்க்கிங் ஸ்பேஸ் பரவாயில்லையா? அப்புறம்,மெஜஸ்டிக்குக்கு பஸ் கனெக்டிவிட்டி எப்படி இருக்கு?" என்று அம்மாவும் தங்கையும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார் அருமை அப்பா.
நான்கு பேர்களாய் இருந்த நாங்கள் சமீபத்தில் இருவராய் சுருங்கிபோனோம்.நான்கைந்து வார இறுதிகளில் மேற்கொண்ட வீடு தேடலுக்குப் பலனாய் தற்போது குடியிருக்கும் வீட்டைத் தேர்ந்தெடுத்தோம்.(சே..ஆனாலும் DownTownல வீடு கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம்பா).வீடு மாறுதலின் முதற்கட்ட நடவடிக்கையாய்ப் புது வீடு பார்த்து அதற்கு டோக்கன் அட்வான்ஸ் தந்து ஃபிக்ஸ் செய்ய வேண்டும்.வீட்டுத்தரகர் மூலம் சென்றால் அதற்கு வேறு தனியாக அழ வேண்டும்.தற்போது குடியிருக்கும் வீட்டுக்காரருக்கு முன்னர் பேசியபடி நோட்டீஸ் தர வேண்டும்.முகவரி மாற்றம் பற்றி வங்கி,க்ரெடிட் கார்டு,அந்த வீதியில் குடியிருக்கும் அழகான நங்கையர்,தொலைபேசிக் கம்பெனிகள்,வேலை செய்யும் அலுவலகம்,கோடை கால வார இறுதிகளை குழப்படியாக்கும் ஒன்று விடாத சொந்தக்காரர்கள்,நண்பர்களிடையே பேச்சுலர் பார்ட்டி நடத்த இந்த வீடே சிறந்தது என்று எம் வீட்டின் மேல் தீராதக் காதல் கொண்டுள்ள காம்ரேடுகள் என்று ஒரு பெரும் பட்டாளத்திற்கே அறிவிக்க வேண்டும்.
பால்காரர்,பேப்பர்காரர்,கேபிள்காரர்,அப்பப்போ ஓசி தம்முக்கு உதவும் பொட்டிக்கடைக்காரர் இத்யாதி இத்யாதிக்கெல்லாம் அந்த மாதத்தோடு கணக்கைத் தீர்ப்பது பற்றி அறிவிக்க வேண்டும்.புதிதாய்ப் போகும் வீடும் அதே லொக்காலிட்டியில் அமைந்து விட்டால் பரவாயில்லை.இல்லை என்றால் ஆஃபீஸ் ட்ரான்ஸ்போர்டேஷன் ஒரு பெரும் பிரச்சினையாய் மாறும்.சொந்த வண்டியென்றால் புதிய வழித்தடமும் அதிலுள்ள எண்ணிலடங்கா ஒன்வேக்களும்,பாட்டம்லெஸ் பிட்டுக்களும் வயிற்றைக் கலக்கும்.அலுவலக வண்டியென்றால் அதிகாலைப் பயணத்தில் நம் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தவாரே நம் தோள்பட்டையைத் தலையனையாய்ப் பாவித்துத் தூக்கத்தில் சலைவாவை வழியவிடும் கடங்காரன் முகம் தான் நினைவுக்கு வரும்.
உஸ்ஸ்ஸ்ஸ். யாரங்கே???!!! ஜோடா ப்ளீஸ்ஸ்....
இத்தனையும் கடந்து வீடு மாற வேண்டிய நாள் வந்ததும், இங்கே இருக்கும் அனைத்துப் பொருட்களையும் சரியான முறையில் பேக் செய்ய வேண்டும்.அதனை புது வீட்டுக்குக் கொண்டு செல்ல ஒரு வேனோ,மினி டோர் லாரியோ பிடிக்கவேண்டும்.லிஃப்ட் வசதி இல்லாத குறுகலான படிக்கட்டுகள் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து ரிஃப்ரிஜிரேடர் முதற்கொண்டு எல்லாவற்றையும் கீழே கொண்டு வர வேண்டும்.("இந்த இம்சையை வாங்கீட்டு வந்தப்போ எப்படி மேலே ஏத்தினோம்? "ஓ அதுவா..அன்னைக்கு நம்ம பெருசும்,ஒச்சுவும் ஃபுல் டைட்ல வந்திருந்தாங்க.என்ன பாடரதுன்னு தெரியாம சாமியே அய்யப்பா அய்யப்போ சாமியே பாடியே ஏத்தீட்டாங்க").அப்பாடா எல்லாத்தையும் ஒரு வழியா வண்டியில ஏத்தியாச்சா.வெரி குட்.
அரசியல் வியாதிகளுக்குப் பாதுகாப்பாய்ச் செல்லும் கருப்புப் பூனைகள் போல பொருட்கள் ஏற்றிய வண்டியில் ஒருவர் வழிகாட்டியாகவும்,வண்டியில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் ஏதேனும் கீழே விழுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்காக டூவீலரில் ஒருவர் வண்டியைப் பின் தொடர்ந்தும் செல்ல வேண்டும்.அப்பாடா..ஒரு வழியாய்ப் புது வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு.
புது வீட்டை அடைந்ததும் அங்கே பொருட்களை அன்பேக் செய்து உரிய இடங்களில் வைக்க வேண்டும்.அங்கே சென்றதும் மீண்டும் தொடரும் அதே பால்காரர்,பேப்பர்காரர்,கேபிள் கனெக்ஷன் அடாவடிகள்.("என்னது ஒரு ரூவாப் பேப்பர் இங்க கிடைக்காதா? ஞாயித்துக்கிழமை கேபிள் பசங்க வேலைக்கு வர மாட்டங்களா? கஸ்டமர் சர்வீஸ் ரொம்பவே நன்னா இருக்கு.") மன்டே ப்ளூஸ் மாதிரி புது வீட்டு ப்ளூஸ் குறையாத நிலையில் ஒரு வார இறுதியில் நான் ஊருக்குச் சென்ற போது தான் மேற்கண்ட உரையாடல் நடந்தது.
வீடுகளை மாற்றுவது என்பது என் போன்ற பணியிட நிரந்திரமில்லாத பேச்சுலர்களைப் பொறுத்த மட்டிலும் இயல்பான ஒரு நிகழ்வு.அது போலவே இங்கே எந்த வீடும் நிரந்தரமல்ல என்று உணர்ந்திருப்பதால் குடிபுகும் வீடுகளின் மேல் எந்த ஒரு எமோஷனல் அட்டாச்மென்டும் வருவதில்லை.
"வருசத்துக்கு ஒருக்கா வீட்டை மாத்திக்கிட்டு இருக்கிறதுனால உங்களுக்குப் பழைய வீட்டை இழந்திட்டோங்கற நினைப்பே இல்லை.வீடுங்கறது வெறும் சுவர்,தரை,கூரை மட்டுமில்லப்பா.பல நினைவுகள்,சம்பவங்களோட உணர்ச்சிக் குவியல்.உங்கிட்ட போய் இதப் பத்திப் பேசி...."என்ற என அம்மாவின் அங்கலாய்ப்பு "வீடென்று எதனைச் சொல்வீர்?" என்னும் கவிதையை நினைபடுத்தியது.
11 May 2006
வீடு விட்டு வீடு மாறும் வித்தை
Subscribe to:
Post Comments (Atom)
22 Comments:
//நான்கு பேர்களாய் இருந்த நாங்கள் சமீபத்தில் இருவராய் சுருங்கிபோனோம்// புரியுது.. புரியுது! சீக்கிரமே இந்த ஒருத்தனையும் கழட்றிவிட்டுட்டு "ஒருத்தி"யோடு குடித்தனம் நடத்த பிராப்திரஸ்து!!!! :)
வீட்டுக்கு வீடு வாசப்படி.. உமக்கு மினிடோர்.. நமக்கு மினிலாரி.. நாலு தடியனுக இல்ல..
நல்ல வேளை ப்ரிஜ் இல்லை ஆனா அந்த அவஸ்தைய வாஷிங்மிஷன் குடுத்திருச்சு... ('இதுக்குத்தான் ட்ரையர் எல்லாம் வேஸ்ட்டுன்னு நான் வாங்கும்போதே சொன்னேன்'னு சொல்லி வேற வாங்கிகட்டிகிட்டேன்)
//வீடுங்கறது வெறும் சுவர்,தரை,கூரை மட்டுமில்லப்பா.பல நினைவுகள்,சம்பவங்களோட உணர்ச்சிக் குவியல்.// எடுத்துசொல்லுங்க.. நமக்கு வீதி முக்குல தான் உணர்ச்சிகுவியல் கொட்டி கிடக்குதுன்னு.. அதுக்காக அங்கயே இருந்திட முடியுமா.. என்ன ?
//நண்பர்களிடையே பேச்சுலர் பார்ட்டி//
//ஓசி தம்முக்கு உதவும் பொட்டிக்கடைக்காரர்//
//வீதியில் குடியிருக்கும் அழகான நங்கையர்//
இப்போ சொல்லு இதெல்லாம்.. அன்னைக்கு இளவஞ்சி வூட்டுல உக்காந்து சப்பாத்தியும் தயிர்சாதமும் சாப்டுட்டு, படத்துக்கும் போக முடியாது.. அப்புறம். அப்புறம்.. ஆளாளுக்கு இழுத்தமே.. அப்ப சொல்லாம ;)
//சீக்கிரமே இந்த ஒருத்தனையும் கழட்றிவிட்டுட்டு "ஒருத்தி"யோடு குடித்தனம் நடத்த பிராப்திரஸ்து//
தன்யனானேன் மகாப்பிரபூ...
//அப்புறம். அப்புறம்.. ஆளாளுக்கு இழுத்தமே.. அப்ப சொல்லாம ;) //
அது என்ன மேட்டர்னா நாங்க அதுக்கு முன்னாலேயே வூடு மாத்தீட்டோம்.
நல்ல பதிவு!!
நல்ல பதிவு!!
//அதுக்கு முன்னாலேயே வூடு மாத்தீட்டோம்.//
யோவ்.. நீ வூடு மாத்தினதை பத்தியா நான் சொன்னேன்.. :(
அண்ணே இளவஞ்சி அண்ணே.. இவுங்கெல்லாம் நிசமாவே இப்படித்தானா.. இல்ல சும்மாங்காட்டியும் நடிக்கறாங்களா??
//நல்ல பதிவு!!//
நன்றி சிவபாலன்.மொதத் தபா என்ர ஊட்டுப் பக்கம் வந்திருக்கீங்க.அடிக்கடி வந்து போங்க.
//அண்ணே இளவஞ்சி அண்ணே.. இவுங்கெல்லாம் நிசமாவே இப்படித்தானா.. இல்ல சும்மாங்காட்டியும் நடிக்கறாங்களா?? //
ஹி..ஹி..உலகமே ஒரு நாடக மேடை.இப்போதைக்கு அம்புட்டுதேன்.
வரவேற்பிற்கு நன்றி!!
---வீடுகளை மாற்றுவது என்பது என் போன்ற பணியிட நிரந்திரமில்லாத ---
பணியை மாற்றுவது கூட உங்க (:P) ஜெனரேஷனுக்கு ரொம்ப செண்ட்டியாகாத சமாச்சாரம்தானே (ஏதோ... மனைவியிடம் அட்டாச்மெண்ட் வந்தா சரீங்க :-D)
ராசா!
//இவுங்கெல்லாம் நிசமாவே இப்படித்தானா.. இல்ல சும்மாங்காட்டியும் நடிக்கறாங்களா??
Downtown மக்களை நம்பாதீகன்னு அன்னைக்கே சொன்னேன்! கேட்டீங்களா?!
****
SudG,
//சே..ஆனாலும் DownTownல வீடு கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம்பா//
வீடுன்னு சிலதாவது இருந்தானப்பு கிடைக்கும்?! காடுக்குள்ள இருந்துக்கிட்டு வீடு கீடுன்னுகிட்டு!!! ஏதாவது நல்ல மரக்கிளையா பார்த்து செட்டிலாவுங்க!! இல்லைன்னா BTM மாதிரியான டவுன் ஏரியாவுக்கு வந்து சேருங்க! :)))))))
அறிவிக்கவேண்டிய பட்டாளத்தில் >> அழகான நங்கையர் << இதெல்லாம் வேறயா.. நடத்துங்க ராசா.. :-))
>>> வீடுங்கறது........
என்னதான் வருசத்துக்கொருக்கா வீடு மாத்துனாலும் எல்லா வீட்டுலயும் அதை கடந்து போகும்போது திரும்பி பார்க்க வைக்குற மாதிரி ஒரு சம்பவம் கூட இல்லையா.. அப்புறம் என்னையா அவ்வளவு பெரிய பட்டாளத்துக்கு அறிவிக்குறீங்க.. ? ;-)
இளவஞ்சி தல தொடர் எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாரு, அதுக்கான ரீடர்ஷிப் சேக்குறதுக்காக உங்கள இப்படி வாழ்த்துறாறா :-))
வருசத்துக்கொருக்கா வீடு மாறுவதா?
இது என்ன பிரமாதம்? நாங்க ஆறுமாசத்துக்கொரு வீடு மாறுவம்லெ:-))))
ஒரு மணி நேரம் போதும், சாமாஞ்செட்டைக் கட்ட!
ஒருதடவைதான் காட்ரெஜ் பீரோவை மாடிக்கு ஏத்தினோம். அதுலே ஒருபக்கம் கண்ணாடி வேற!
அக்கம்பக்கம் ஆளுங்க எல்லாம் கத்திக்கிட்டே கயிறு போட்டுத் தூக்கிட்டாங்கெல்லெ.
ஆனா அங்கிருந்து வேற இடத்துக்கு( நாட்டுக்கு)ப் போனதாலே அதை வீட்டுச் சொந்தக்காரருக்கே
வித்துப் போட்டு வந்த கில்லாடிங்களாச்சேப்பா நாங்க.
சரி. அடுத்தமுறை நாங்க வர்றொம் வீடு மாத்த உதவிக்காக.
இளவஞ்சி சொன்னாப்படி, ஒரு டிக்கெட்டைக் கழட்டி விட்டுட்டா நல்லது.
ஏற்கெனவே 'விக்கெட்' வுழுதுன்னு அங்கே ஒரே ஆட்டம்.
நல்லா எழுதி இருக்கீங்க.. நாங்களும் வெளியூர்ல தனியா இருந்தப்போ வீடு மாத்தும் போது இப்படித்தான் சென்டியாவோம்.,.
//பால்காரர்,பேப்பர்காரர்,கேபிள்காரர்,அப்பப்போ ஓசி தம்முக்கு உதவும் பொட்டிக்கடைக்காரர் இத்யாதி இத்யாதிக்கெல்லாம் அந்த மாதத்தோடு கணக்கைத் தீர்ப்பது பற்றி அறிவிக்க வேண்டும்//
பசங்களுக்குக் கூட இத்தனை கமிட்மென்ட்ஸ் இருக்கா என்ன? எங்க கூட வேலை செஞ்சு தனியாத் தங்கி இருந்த பசங்க, இப்படி எல்லாம் கஷ்டப்பட்டா மாதிரி தெரியலையே.. கொஞ்ச நாள் ஏதோ சமைக்கிற மாதிரி ஆக்ட் குடுத்துட்டு அப்புறம் வெளில சாப்ட ஆரம்பிச்சு வீடு மாத்தும் போது அவங்கவங்க விருப்பமான மெஸுக்குப் பக்கத்துல வீடு பார்த்து.. அப்படித் தான் கேள்விப்பட்ருக்கேன்.
//பணியை மாற்றுவது கூட உங்க (:P) ஜெனரேஷனுக்கு ரொம்ப செண்ட்டியாகாத சமாச்சாரம்தானே//
ஹி..ஹி..ஹி...நோ காமென்ட்ஸ் பாபா.
//(ஏதோ... மனைவியிடம் அட்டாச்மெண்ட் வந்தா சரீங்க :-D)//
சார்,பாயின்ட் வெல் டேகன்.
//DownTown மக்களை நம்பாதீகன்னு அன்னைக்கே சொன்னேன்! கேட்டீங்களா?!//
ஜீரா..எங்கே இருக்கீரு ???? ஒத்தாசைக்கு வாருமைய்யா...
//இல்லைன்னா BTM மாதிரியான டவுன் ஏரியாவுக்கு வந்து சேருங்க!//
ஹூம்.புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதய்யா....
//என்னதான் வருசத்துக்கொருக்கா வீடு மாத்துனாலும் எல்லா வீட்டுலயும் அதை கடந்து போகும்போது திரும்பி பார்க்க வைக்குற மாதிரி ஒரு சம்பவம் கூட இல்லையா//
இருக்கு கோல்கத்தா இளவரசரே.நிறையவே இருக்கு.
//அதுக்கான ரீடர்ஷிப் சேக்குறதுக்காக உங்கள இப்படி வாழ்த்துறாறா//
ஓ.அந்தப் புதுத் தொடர் தானா மேட்டர்...!!!
//நாங்க ஆறுமாசத்துக்கொரு வீடு மாறுவம்லெ:-))))//
நீங்க இந்தியாவில இருந்தப்போ நடந்த விஷயமா,என்ன???
//ஒரு மணி நேரம் போதும், சாமாஞ்செட்டைக் கட்ட!அதை வீட்டுச் சொந்தக்காரருக்கே வித்துப் போட்டு வந்த கில்லாடிங்களாச்சேப்பா நாங்க.//
அது....
//சரி. அடுத்தமுறை நாங்க வர்றொம் வீடு மாத்த உதவிக்காக.//
தன்யானேன்...
//இளவஞ்சி சொன்னாப்படி, ஒரு டிக்கெட்டைக் கழட்டி விட்டுட்டா நல்லது.ஏற்கெனவே 'விக்கெட்' வுழுதுன்னு அங்கே ஒரே ஆட்டம்.//
அதுக்கு எப்படியும் இன்னும் ஒரு மூணு வர்ஷம் ஆகலாம்.அவ்ளோ சீக்கிரமா என்னைப் பலியாடாப் பார்க்க எங்க அப்பாவுக்கு விருப்பமில்லை :-) (இங்கே நான் ஸ்மைலி போட்டிருப்பதைக் கவனிக்கவும்)
//நல்லா எழுதி இருக்கீங்க.. நாங்களும் வெளியூர்ல தனியா இருந்தப்போ வீடு மாத்தும் போது இப்படித்தான் சென்டியாவோம்//
பொன்ஸ் மேடம், ரொம்ப நன்னீ.அப்புறம் வீட்டுக்கு வீடு வாசப்படி தானே???!!!
//பசங்களுக்குக் கூட இத்தனை கமிட்மென்ட்ஸ் இருக்கா என்ன?//
நாங்க ரொம்ப நல்லவங்கன்னு சொல்றாங்க.(கிரி-வடிவேலு இஷ்டைலில் வாசிக்கவும்)
அப்படியே பக்கத்துல ஒரு வீடு பாருங்க...நானும் வீடு மாற வேண்டிய நிலைமைலதான் இருக்கேன்...
Post a Comment